search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
    • நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது.

    திருப்பூர் :

    கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுதியான மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும். பெற்றோரின் வருமான சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.நாளை (26ந் தேதி) முதல் நவம்பர் 5-ந் தேதி வரை தலைமை ஆசிரியர் உதவியுடன் மாணவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர் விபரங்களை 28ந் தேதி முதல், நவம்பர் 8 க்குள் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விட வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெற்குப்பையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,பேரூராட்சி சேர்மன் அ.புசலான், துணைச் சேர்மன் கே.பி.எஸ். பழனியப்பன், செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவிலேயே முதன்முதலில் மன்னார்குடியில் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகம்.
    • 91 ஆம் ஆண்டின் நிறைவு விழா மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றன.

    மன்னார்குடி:

    இந்தியாவிலேயே முதன்முதலில் மன்னார்குடியில தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகத்தின் 91 ஆம் ஆண்டின் நிறைவு விழா மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றன.

    நூலகர் அன்பரசு தலைமை வகித்தார்.

    கூத்தாநல்லூர் கிளை நூகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    தமிழக தமிழறிஞர்களின் மாவட்ட தலைவர் புரவலர் முனைவர் இருளப்பன் நடமாடும் நூலகத்தை உருவாக்கிய பொறியாளர் எஸ்.வி. கனகசபைபிள்ளை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் நூலக பணியாளர் சமூக ஆர்வலர் சரவணகுமார், போட்டி தேர்வு பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர் அஜித் நன்றி கூறினார்.

    • 26 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
    • நெடுவாக்கோட்டை பள்ளி மாணவிகள் வசீகா, ரித்திகா ஸ்ரீ, நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் துளிர் வினாடி வினா போட்டி மன்னார்குடி ஒன்றிய அளவில் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர்.எஸ்.அன்பரசு தலைமை வகித்தார்.

    அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவரும் துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஆர்.கே. சரவண ராஜன் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியை மா.தேவி வாழ்த்துரை வழங்கினார். மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் வினாடி- வினா போட்டிகளில் பங்கேற்றனர். 6, 7, 8 இளநிலை பிரிவுகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுவாக்கோட்டை மாணவிகள் தே.வசீகா, மா. ரித்திகா ஸ்ரீ, அ.நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசையும், புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ச.சிவஸ்ரீ.ரா ஹர்ஷினி, க.ஹனிஸ்காஸ்ரீ ஆகியோர் இரண்டாம் பரிசையும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ. ஹரிஷ் குமார், கா.இனியன் பிரசாத், கு.தி யுகேஸ்வரன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும், 9, 10 ம் வகுப்பு உயர்நிலைப் பிரிவில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கு.சுபஸ்ரீ, பா. வைத்தீஸ்வரன், ஆர். ஹரிஹரன் ஆகியோர் முதல் பரிசினையும்.

    தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏ.ஆர். ஹர்ஷிதா, கு. சிவகனேஷ்வர், மு. மாதேஷ் ஆகியோர் இரண்டாம் பரிசினையும், பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. தேச தேவன், டி. கிஷோர் ஆகியோர் மூன்றாம் பிரச்சினையும் பெற்றனர். 11,12ஆம் வகுப்பு மேல்நிலை பிரிவில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரசன்ன வெங்கடேஷ், ஆர்.வி. ஸ்ரீராம், ஜி. மோகேஷ் ஆகியோர் முதல் பரிசையும், பரவக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. பிரவீன், ஆர்.சூரிய பிரகாஷ், எம் சரவணா ஆகியோர் இரண்டாம் பரிசினையும் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் வரும் 29ம் தேதி திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிக்கு பங்கேற்கத் தகுதி பெறுகின்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்னார்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் டி. தனபால் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்திப் பேசினார். நிறைவாக அறிவியல் இயக்க செயலாளர் டி.இமானுவேல் நன்றி கூறினார்.

    • மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
    • முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் தாலுகா, வாய்மேடு போலீஸ் நிலையத்தில், போலீசார் சார்பில் தகட்டூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

    போட்டியில் மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், போலீசார் பணி பற்றிய ஓவிய போட்டியும் நடத்தப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி. முருகவேல், வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா, சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், கார்த்திகேயன், எஸ்ஐ செல்வராசு, சிறப்பு இன்ஸ்பெக்டர் வாசு, நிலைய எழுத்தர் மதியழகன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    • விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வு.
    • துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வட்ட சட்டப்பணி குழு மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    முகாமில் பாபநாசம் மாவட்ட உரிமையல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி கலந்துகொண்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    பாபநாசம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென அறிவுத்தினார்.

    விழாவில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • கொல்கத்தாவில் நடந்த தேசிய ஹேக்கத்தான் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தது.
    • இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம், இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.

    கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை மாணவர்கள் எம்.இசக்கிமுத்து, கே.ஹரி தினேஷ்குமார்,

    எம்.மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ''டாப்-5'' இடம் பெற்று சாதனை படைத்தனர்.

    போட்டியின் முதல் சுற்றில் மாணவர்கள் தங்கள் செயல்திட்டத்திற்கான விளக்கத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தனர்.அதில் இருந்து மொத்தம் 95 அணிகள் மட்டுமே ேதர்வு செய்யப்பட்டனர்.இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ''பங்குச் சந்தை கணிப்பு'' என்ற தலைப்பில் செயல் திட்டத்தை வெளியிட்டனர்.

    தொடர்ந்து 30 மணி நேரம் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, முதல்வர் மாரிச்சாமி, துறைத்தலைவர் வளர்மதி, பேராசிரியர்கள் கருப்பசாமி, மதினா, விமலா ஆகியோர் பாராட்டினர். 

    • பள்ளிப்படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு நாளை வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • சிறுபான்மையின மாணவ- மாணவிகள் மேற்படி காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை ( தொழில்கல்வி தொழில்நுட்பக் கல்வி மருத்துவம் உட்பட ) படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ -மாணவிகளிடமிருந்து 2022-23-ம் ஆண்டுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேல் படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் ஆன கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பள்ளிப்படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு நாளை வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி மேற்படிப்பு உதவி தொகைக்கு வருகிற 31-ந் தேதியும், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 31-ந் தேதியும், பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகைக்கு நாளை வரையும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெ டுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் கருப்பூரில் உள்ள தாய் அருவி வீட்டில் தங்க வைத்து பிரியா தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு மோனீஸ்வரன் (10), பூவரசன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சேலம் கருப்பூரில் உள்ள தாய் அருவி வீட்டில் தங்க வைத்து பிரியா தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார். இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு 2 பேரும் இல்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஈரோடு மாவட்டம் பாப்பம்பாளையத்தில் உள்ள குமாரின் பெற்றோர் வீட்டுக்கு பஸ்சில் சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டனர். 

    • எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள்.
    • விழாவில் 296 மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு குறித்து ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரியின் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    வணிகவியல் துறை தலைவர் திருநாராயணசாமி வரவேற்றார்.

    கருத்தரங்கில் சிதம்ப ரம் அண்ணாமலை பல்கலை க்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதன் திட்டங்களையும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறை களை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கருத்துக்களை வழங்கினார்.

    இதில் பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களும், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் 296 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை தமிழ் துறை தலைவர் அனுசியா தொகுத்து வழங்கினார்.

    கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் குமார் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் செய்திருந்தனர்.

    • ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.
    • கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு தஞ்சை தழிழ்ப்பல்கலை கழக துணை வேந்தர் திருவள்ளுவன் பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழா

    மன்னார்குடி அருகே இடையர்நத்தத்தில் உள்ள ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.

    விழாவிற்கு ஏ.ஆர்.ஜெ கல்வி குழும தலைவி ராஜகுமாரி தலைமை தாங்கினார்.

    துணைதலைவர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பொறியியல் கல்லூரி முதல்வர் டி. வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் தஞ்சை தமிழ்ப்பல்கலைகழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் உள்பட 475 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், 75 நிர்வாக மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 380 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    கிராமப்புறங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் சாதாரண கிராமத்து மக்களின் பிள்ளைகளும் பொறியியல் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கி

    சிறப்பாக நடத்தி வரும் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    மேகம் கீழே உள்ள நீரை எடுத்து மேலே கொண்டு சென்று மழையாக பொழிவது தனக்காக அல்ல.

    அதே போல தாங்கள் கற்கும் கல்வியும், அறிவும் தங்களுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.

    அதனை நீங்கள் நல்ல முறையின் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் உங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

    போட்டிகள் நிறைந்த தற்போதைய உலக சூழலில் உங்கள் திறன் மேம்பட்டு இருந்தால் மட்டும் தான் நீங்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.

    அதற்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்பதற்கு முயற்சிக்க வேண்டும். புத்தக வாசிப்பு நல்ல மனிதனை உருவாக்குகிறது.

    மிகச் சிரமமான சூழ்நிலையில் வளர்த்து கல்வி கொடுத்து ஆளக்கிய பெற்றோருக்கும், சிறந்த கல்வி தந்து உங்களை பொறியியல் பட்டதாரியாக்கிய இந்த கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வளர்ந்து வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை நிறுவன இயக்குனர் கே‌. செல்வராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×