search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • குரவப்புலம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடித்தனர்.
    • தேர்வில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    தேசிய வருவாய் வாரியான திறனாய்வு தேர்வில் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் சீதாலெட்சுமி உயர்நி லைப்பள்ளி மாணவர்கள் விஸ்வபாலா 123/180 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலிடமும், ஆகாஷ் 119/180 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும் பிடித்தனர்.

    மேலும், சஞ்சய், ஈஸ்வரன், மணியரசன், காவியா, கீர்த்தனா உள்ளிட்ட மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் சீதாலட்சுமி, பத்மஸ்ரீ, பவித்ரா, அர்ஜித், அற்புதம், ஜெயசுதன் ஆகிய மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவ- மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளி செயலாளர் கிரிதரன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பப்பிதாபானு, சீதாலெட்சுமி உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ரெட் கிராஸ் வரலாறு, குறிக்கோள், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசினார்.
    • யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட கிளை மேலாண்மைக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ரெட் கிராஸ் வரலாறு, குறிக்கோள், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசினார்.

    இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நிதியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவரும், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும், மாவட்ட அமைப்பாளருமான பேராசிரியர் முருகானந்தம் செய்திருந்தார்.

    • பேரணியை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
    • தீயணைப்பு நிலைய வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அலுவலர் சரவணபாபு முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் மணிமாறன் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் யுரேகா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மரகதவல்லி செந்தில், மணிமேகலை, சுமதி கண்ணன், குத்தாலம் சிறப்பு நிலை நிலைய அலுவலர் சீனிவாசன், கவிஞர் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், சமுதாயக் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு வளாகத்தில் புறப்பட்ட மிதிவண்டி உட்பட்ட பேரணி நகர முக்கிய வழியாக கச்சேரி சாலை, காந்திஜி சாலை, பட்டமங்கல தெரு, பெரிய கடை தெரு, மகாதான தெரு, கண்ணார தெரு வழியாக பேரணியாக சென்று தீயணைப்பு நிலையம் வந்தனர்.

    இதில் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் கலந்துக்கொன்டனர்.

    • கல்லூரிகளில் பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நடைபெற்றது.
    • தொழில்நுட்ப வினாடிவினா, கட்டுரை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை சார்ந்த 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவ மாணவியர்கள், இந்திய தொழில் நுட்பக் கழகம்- சென்னை, தேசிய தொழில் நுட்பக்கழகம்-திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகம்- காரைக்கால் மற்றும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்டனர்.

    அதில் தொழில் நுட்ப நிகழ்வுகள் பிரிவில் நடைபெற்ற தொழில் நுட்ப வினாடிவினா, திட்ட விளக்கக் காட்சி, கட்டுரை சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

    போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களை கல்லூரியின் செயலர் செந்தில்குமார், இணை செயலர் சங்கர் கணேஷ், கல்வி சார் இயக்குனர் மோகன், நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், முதல்வர் ராமபாலன், துறைத் தலைவர் தேவராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
    • நிகழ்ச்சியில் 6 முதல் முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சித்த மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் உடல் நலத்தை பேணி பாதுகாப்பதற்கான நெறிமுறைகள் பற்றி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள ட்ரஷர் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன
    • இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன. தலைவர் புஷ்பராஜ் தலைமையில் ஆசிரியர்கள் கருணாகரன், அன்பகம், , வள்ளி, கீதா கிருத்திகா ஆகியோர் தமிழக அரசின் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் , தொடக்கக் கல்வி,மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வாழைக்கொல்லை குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மாணவர்களின் இல்லங்களிலேயே மாணவர்கள் சேர்க்கையை செய்தனர். இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்

    • பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பூதலூர் வட்டார கல்வி அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி பள்ளி செயல் பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். பூதலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்பு சுப்பிரமணியன், திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடக்க த்தில் ஆசிரியர் தேசிகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா அலங்கார வாசலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்றார். பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்னர் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தேசிய பசுமை படை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி , தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் முகமது காஜி, நகர் மன்ற உறுப்பினர் பத்ருநிஷா, சமூக ஆர்வலர் நாகூர் சித்திக், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் ரமேஷ் ஐயர் தேசிய பசுமை படை ஆசிரியர்கள் செல்வகுமார் சக்திவேல் மற்றும் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் முதல்கட்ட நிகழ்வு நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்களான காற்றோட்டமான வகுப்ப றைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி, தமிழ் வழி பிரிவுகளுடன் ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதும் விளக்கப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அலுவலர் கூறினார்.
    • நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பள்ளியின் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத மாணவர்களைச் சேர்ப்பதற்கு 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர்சேர்க்கை 20.04.2023 முதல் 18.05.2023 வரை இணைய வழியில் நடைபெற உள்ளது.

    பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையமுகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் குழந்தை யின் வயது 31.7.2023 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 4 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

    அதாவது 1.8.2019 முதல் 31.7.2020-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் 5 பள்ளி களுக்கு விண்ணப்பி க்கலாம்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தை களை சேர்ப்பதற்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கு வதற்காக அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும் உதவி மையம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணையவழி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

    உதவி மைய ஆலோ சகர்களாக கோபால், மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்) தொலைபேசி எண் 76399 54011 நியமனம் செய்யப்ப ட்டுள்ளார். உதவி வேண்டு வோர் அலுவலக நேரங்க ளில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளி மாணவர்கள் எளிய பொருட்களின் உதவியால் கண்டு களித்தனர்.
    • வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவ தற்காக இது போன்ற நிகழ்வுகள் ஊக்கப்படுத்த படுகிறது.

    உடுமலை :

    சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக்கு றைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும்.ஓர் வருடத்தின்இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில்காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காணஇயலா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது.இந்த அரிய வானியல் நிகழ்வை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளி மாணவர்கள் எளிய பொருட்களின் உதவியால் கண்டு களித்தனர்.

    அறிவியலில் உற்றுநோக்கும் திறனை மேம்படுத்து வதற்காகவும் வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவ தற்காகவும் இது போன்ற நிகழ்வுகள் ஊக்கப்படுத்த படுகிறது.ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

    • தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • . இதனை மயிலம் வட்டார கல்வி அலுவளர் மதன்குமார் தொடங்கி வைத்தார்,

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மயிலம் அருகே உள்ள சித்தனி அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதும இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகள ஏந்தி சேர்ப்போம், சேர்ப்போம், அரசு பள்ளிகளிள் தமிழ் வழியில் மாணர்களை சேர்ப்பபேம் என கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வந்தனர்.       

                   நிகழ்ச்சியில் முன்னதாக சித்தனி அரசு நடுநிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தேசிய மக்கள் நேய நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க புரவளருமான சித்தனி ஏழுமலை ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 பீரோ, மின்விசிறி ஆகியவற்றை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகதிர்காமன், துணை தலைவர் அமர்நாத், ஊராட்சி செயலாளர் முருகன், ஆசிரியர்கள் அருளப்பன், தட்சினாமூர்த்தி, பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×