search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
    • ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், அதை முறையாக தொடர்ந்து பயின்று பின்பற்றும் வகையிலும் திட்டமிடப்பட்டு ள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க விழா கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.துணை மேயர் பாலசுப்ரம ணியம், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கல்விக்குழு தலைவர் திவாகர், உதவி கமிஷனர் செல்வநாயகம் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்து பேசுகை யில், யோகா வகுப்புகள் மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் துவங்கி ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்படும். மேலும், அனைத்து பள்ளிகளிடையே யோகாசன போட்டிகள் நடத்தி சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசளிக்கப்படும் என்றார்.

    பயிற்சியை துவக்கி வைத்து மேயர் தினேஷ்குமார் பேசுகையில், யோகா உடலையும், உள்ளத்தையும் சீராக வைத்திருக்க உதவும் அற்புத கலை.இதை இளம் வயதிேலயே மாணவர்கள் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ளமுடியும். இதைக் கற்றுக் கொள்ள உலக நாடுகளில் வாழும் பலரும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    • 32 ஆயிரத்து171 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
    • அறை கண்காணிப்பாளராக 1780 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது. இதுபோல் பிளஸ்-1 தேர்வு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்க ல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 106 மையங்க ளில், 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பா ளர்களாக 106 தலைமை ஆசிரியர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக 1780 ஆசிரியர்களும் நியமிக்கப்ப ட்டுள்ளனர். மேலும், காப்பி அடித்தல் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். தேர்வு மையத்தில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்ப ட்டுள்ளது.

    • “சி “ அகாடமியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலை காவிரி நகர் விரிவாக்கம், பி.கே.ஆர்கேடு காம்ப்ளக்சில் '' சி" அகாடமி செயல்பட்டு வருகிறது.

    இந்த "சி " அகாடமியில் இரண்டாம் ஆண்டாக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் - 2023 பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    "சி" அகாடமி முதன்மை அலுவலர் காயத்ரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நீட் -2023 பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சிக்கு தேவையான புத்தகக் கையேடு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மாணவ பருவம் மிகவும் மகிழ்ச்சியான பருவம். கவலைகள் இல்லாத பருவம். சவால்கள் சில இருந்தாலும் அதையும் தாண்டி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை மாணவர் பருவத்தில் கிடைக்கும்.

    வரக்கூடிய நீட் தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து மருத்துவராக வேண்டும்.

    தலைசிறந்த மனிதநேயமிக்க மருத்துவராக திகழ வேண்டும்.

    தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியின் படித்தால் வெற்றி நிச்சயம். முதலில் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

    தேர்வுக்கு இன்னும் 30 நாட்கள் தான் உள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியம்.

    நேரத்தை வீணாக்காமல் படிக்க வேண்டும்.

    செல்போன் , டி.வி. பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் அனைவரையும் நான் மருத்துவராக தான் பார்க்க வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.

    படிக்கும்போது மன அழுத்தம் தேவையில்லை.

    மனதை ஒருமுகப்படுத்தி நன்றாக படியுங்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், தாசில்தார் சக்திவேல் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ- மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினர்.

    இதையடுத்து "சி " அகாடமி நிறுவன இயக்குனர் ஸ்ரீராமுலு பேசும்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மையத்தில் படித்த மூன்று பேர் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.

    2021-ம் ஆண்டு 5 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு கலெக்டர் பேசிய தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் தேர்ச்சி வீதம் அதிகரித்து 23 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த ஆண்டு கலெக்டர் பேசிய ஊக்க வார்த்தைகளால் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இதைவிட அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

    மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் பேசிய கலெக்டருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தாசில்தார் ஆகியோருக்கும் நன்றிகள். அனைவரும் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் 22-2023- ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் 2022-2023- ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த 15641 மாணவர்கள், 15474 மாணவிகள் என மொத்தம் 31115 மாணவ-மாணவியரும், 865 தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    இதில் 452 மாற்று திறனாளி மாணவர்களும் அடங்கும்.

    மாவட்டத்தில் மொத்தம் 136 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    காலையிலேயே தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகள் வநதனர்.

    பலர் அவரவர் வழிபாட்டு தலங்களில் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். மேலும பெற்றோரிடம் ஆசி வாங்கினர்.

    தேர்வு மையத்துக்குள் செல்போன், காலகுலேட்டர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடும் சோதனை செய்யப்பட்ட பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    மாற்றுதிறனாளி மாணவர்கள் எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தேர்வுப் பணியில் 136 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 136 துறை அலுவலர்கள், 8 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 28 வழித்தட அலுவலர்கள் 195 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1872 அறைக்க ண்காணிப்பாளர்கள், 399 சொல்வதை எழுதுபவர்கள், 272 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இது தவிரதேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பஸ்கள் இயக்கபட்டன.

    • ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.
    • பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



    ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குவதற்கு முன்பு வளாகத்தில் மாணவிகள் படிப்பதை படத்தில் காணலாம்.

     விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கி யது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.உற்சாகம்

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்க ளிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.


    • மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாணவர்கள் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா? என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரே னும் தொடர்ந்து வருகை தராமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த மாண வரின் படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க தேவையான இடங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

    அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கத்தில் வருகை தந்த மாணவ -மாணவிகள் முழு ஆண்டு தேர்வு முடியும் வரை வருகை தருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதே போல பள்ளிக்குத் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும்.

    குடிநீர் வசதி, கழிப்பறை கட்டிடங்கள் போதிய அளவு அமைத்திட வேண்டும். மேலும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கி மாண வர்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், பிரின்ஸ், முருகவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் பாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகை வழங்கல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை சார்பில் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அலுவ லகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சையில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் தந்தையை இழந்த மாணவிக்கு ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.

    இதே போல், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தை சேர்ந்த தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கும் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டது.

    மேலும், சலவை தொழிலாளி ஒருவருக்கு சுயமாக தொழில் செய்ய புதிய இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-

    கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அறக்கட்டளை தற்போது வரை மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகையாகவும், விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்த வரையில் சுமார் ரூ. 34 லட்சம் வரையில் செலவிடப்பட்டுள்ள தாகவும், விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்கும் வகையில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபடும் என்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணப்பாறையை அடுத்த புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 140 மாணவர்கள் உள்பட சுமார் 320 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.
    • முதல்கட்ட விசாரணையில் 4 மாணவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    மணப்பாறை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதில் சிலர் பேனா மையை தெளித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    இதற்கிடையே திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 140 மாணவர்கள் உள்பட சுமார் 320 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். நேற்று தேர்வு முடிந்ததும் மாணவர்கள் சிலர் 25 வகுப்பறை கட்டிடங்களில் சுமார் 17 வகுப்பறைகளை சூறையாடினர்.

    அப்போது அந்த கட்டிடங்களில் இருந்த மின் விசிறிகள், மின் விளக்குகள், கதவு, மேஜை, நாற்காலி என பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பாக தேர்வு மைய கண்காணிப்பாளர் புத்தானத்தம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 4 மாணவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த செயல் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

    • கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை 9 நாட்களுக்கு தமிழக அரசின் திருவாரூர் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலான மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசுத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை இணைந்து நடத்தினர்.

    கல்லூரி, பள்ளி மாணவர்கள், ஏராளமான பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனர்.

    தினந்தோறும் சிறந்த தமிழறிஞர்களைக் கொண்டு புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது.

    மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேச்சுப்போட்டி ஓவிய போட்டி விமர்சனப் போட்டி கள் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பரிசுகள் வழங்கினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் புத்தக சேகரிப்பு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது இதில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் புத்தகங்களை வழங்கினர் சுமார் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.
    • போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் செயின்ட் ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட் 13-வது ஆண்டு விழா நடந்தது.

    விழாவில் கல்லூரி தாளாளர் ஜோசப் லயனல் மற்றும் முதல்வர் மேரி கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் அமுதா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

    பின்னர், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாணவிகள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.

    தொடர்ந்து, தேர்வு, வருகை பதிவு, மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும், கலந்துகொண்ட வர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    • ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.
    • முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்காலடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பி ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், கொக்காலடி ஊராட்சி தலைவர் வசந்தன் முன்னிலையில் நடந்தது.

    விழாவுக்கு ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜ சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியை செல்லத்தாய்க்கு நினைவு பரிசை தலைமை ஆசிரியர் அருள் அரசு வழங்கினார். ஆசிரியர் தேவிபாலா ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் சிறந்த சேவையாற்றி வரும் துரை ராயப்பன் மற்றும் ராஜ சரவணன் ஆகியோருக்கு கொக்காலாடி ஊராட்சி மன்றம் சார்பில் டெல்டா நாயகன் என்று விருது வழங்கப்பட்டது.

    விழாவில் திரைப்பட புகழ் அகிலன் மேஜிக் செய்தார்.

    முடிவில் ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.

    • 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர்.
    • திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்,

    திருப்பூர் :

    திருப்பூர் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் திருப்பூர் சேவா சமிதி மஹாலில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் ரேங்கிங், ஸ்பெஷல் மற்றும் சாம்பியன்ஷிப் போன்ற பல்வேறு பிரிவுகளில் 50 க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வெற்றி வாகை சூடி கோப்பைகளை வென்றனர். மிகச்சிறந்த பங்கேற்பிற்கான விருதினையும் பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி பெற்றது.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்கு னர் சக்திநந்தன், துணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன் மற்றும் தலைமை ஆசிரியை சியாமளா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ×