search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பளம்"

    கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். #GajaStorm #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395 ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹர்மந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.



    இதே போன்று, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி ஆகியோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினர். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் செயலாளர் விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் ஆகியோர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 74 லட்சத்து 62 ஆயிரத்து 221 ரூபாய்க்கான காசோலையை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களுடன் வக்கீல்கள் ஆர்.பாலசுப்பிரமணியா, சி.பரமசிவம், வினோத் கன்னா, சியாமளா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

    ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்த சந்திப்பின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் இளமஞ்சி பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர். 
    வில்லியனூரில் சம்பளம் கிடைக்காத விரக்தியில் கூட்டுறவு நூற்பாலை ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் வசந்தம்நகர் பாரதியார் தெருவை கிருஷ்ணமூர்த்தி, (வயது55). இவர் திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 9 மாதங்களாக கூட்டுறவு நூற்பாலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் கிருஷ்ணமூர்த்தி குடும்பம் நடத்த முடியாமல் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அன்றாட செலவுக்குகூட பணம் இல்லாமல் திண்டாடி வந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கெள்ள முடிவு செய்தார். நேற்று மனைவி பிரேமா மற்றும் மகன்-மகள் வெளியே சென்றிருந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பிரேமா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.

    சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது. சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள்.

    இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம் மாறி வேலையில் சேரமாட்டார்கள்.

    இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும். ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.

    அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    ரெயில்வே தொழிற்சங்க மான எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. துணைப்பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீர சேகரன் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாற்றியமைக்க வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, ஆர்.ஏ.சி. 1980 முறைப்படி அகவிலைப்படியை உயர்த்தி 1.1.2016 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    20 ஆண்டுகள் பணி காலத்திற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்க நிபந்தனை விதிக்க கூடாது, மத்திய அமைச்சரவை குழு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி மேலாண் இயக்குனரை அறையில் பூட்டி ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    தங்களுக்கான மாத சம்பளத்தை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தின் சார்பில் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி இன்று தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் துறையின் மேலாண் இயக்குனர் அறைக்குள் வைத்து பூட்டு போட்டு பூட்டினர். பின்னர், அலுவலக அறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை முதல் கையெழுத்து போட்டு விட்டு வேலை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறினர். #tamilnews
    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று புதுவை சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

    மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என அதிரடியாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

    அதோடு விசாரணையின்போது நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட மன்றத்துக்குள் செயல்பட அனுமதிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்தை ஏற்ற சபாநாயகர் வைத்திலிங்கம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் கடந்த 2-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தின் எதிர் பார்ப்புக்கு இணங்க நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    மேலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

     நியமன எம்.எல்.ஏ. சாமிநாதனுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் செப்டம்பர் 11-ந் தேதி வரை மட்டுமே தகுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ள காட்சி.

    அதே நேரத்தில், பா.ஜனதாவின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அடையாள அட்டை, கார் பாஸ் போன்றவை அளிக்கப்பட்டு உள்ளது. இவை வருகிற 11-ந் தேதி வரை தகுதியுடையதாக அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க சட்டசபை செயலகம் பட்டியல் அனுப்பி உள்ளது.

    இதில் பா.ஜனதாவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஆகஸ்டு மாத சம்பளம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைக்காது என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சட்டசபை செயலகத்தில் கேட்டபோது, நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு மீண்டும் வருகிற 11 -ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இறுதி தீர்ப்பு வந்தபிறகே சம்பளம், சலுகைகள் குறித்து முடிவு எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் சாமி நாதனிடம் கேட்டபோது, தற்போதைய நிலையில் சம்பளம் முக்கியமில்லை. ஏற்கனவே வருகை பதிவேடு மற்றும் சட்டசபை ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

    ஏற்கனவே கூறியபடி எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்து விட்டோம். உச்ச நீதிமன்றமும் எங்களுக்கு நல்லதொரு தீர்ப்பை நிச்சயமாக வழங்கும் என கூறினார்.   #NominatedMLAs #PondicherryAssembly
    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

    போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.

    போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். #KeralaFlood #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கேரள வெள்ள சேதம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மூத்த அதிகாரிகள், வெங்கையா நாயுடுவின் செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.



    அவருடைய ஒரு மாத சம்பளம் ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளனர். #KeralaFlood #VenkaiahNaidu
    நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில கவர்னர், முதல்-அமைச்சர் இடையிலான மோதல் அவர்கள் வகிக்கும் பதவிகளின் மாண்பை சீர்குலைத்து வருகிறது. சட்டமன்ற நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை இருவரும் உருவாக்கியுள்ளனர்.

    அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்களின் தான்தோன்றித்தனமான செயல்களால் மக்களிடத்தில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவரை முடித்து வைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கான நிதிகள் விவாதிக்கப்பட்டபோது கவர்னர் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை முன்வைத்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளிப்பது என்பது நேர்மறையான செயலாகும்.

    கவர்னரின் செயலை பெரிதுபடுத்தாமல் சட்டமன்றத்தை மறுபடியும் கூட்டி இறுதி செய்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் தேவையான நிதி இருந்தும் ஜுலை மாதம் சம்பளத்தை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும். நிதிமசோதா தாமதத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை? என்றும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். நிதி ஒதுக்க மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கும் போது பல்வேறு நிபந்தனைகளை கவர்னர் விதித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்க அனுமதி உள்ளதா? இது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். கவர்னர் தன்னுடைய மாண்புகளை மறந்து அதிகார போதையில் செயல்பட்டு வருகிறார். புதுவை சட்டமன்ற வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கரும்புள்ளி.

    கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார். 31-ந் தேதிக்குள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் மீது தவறு இருந்தால் மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பபெற வேண்டும். இந்த அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் நடந்து வரும் வேலையில் எதிர்கட்சி தலைவரான ரங்கசாமி அமைதியாக இருப்பது சரியல்ல.

    முதுகெலும்பு உள்ள அரசாக இருந்தால் கவர்னர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பலாம். நாங்கள் அதை ஆதரிக்க தயார். மின் மீட்டர் புகார் தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. நான் அங்கு சென்று அவர்களிடம் முகாமை முதலில் தலைமை அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று கூறினேன்.

    வீடு வீடாக சென்று ரீடிங் எடுப்பது போல் மீண்டும் வீடு வீடாக சென்று கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரி முகாமை நிறுத்தியுள்ளேன். மின்துறையின் இந்த செயல் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகும். ஒருசிலரின் லாபத்திற்காக இதுபோன்ற மின் மீட்டரை பொறுத்தியுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் குறைவான வருமானமாக கருதப்படுகிறது. #America #SanFrancisco
    நியூயார்க்:

    இந்தியாவில் 5 இலக்க எண்களில் சம்பளம் வாங்குவதுதான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இலட்சியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆண்டு வருமானம் 80 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் ஏழைகளாக கருதப்படுவதாக வெளியிடப்பட்ட அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம் அந்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு வாழ்வதற்கான இயற்கை சூழலும், பாதுகாப்புடன் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையும் உள்ளது.

    அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் வசிக்கும் பகுதியும் சான் பிரான்சிஸ்கோதான். இங்கு ஆண்டு வருவாய் 80 லட்சத்துக்கும் மேலாக இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது. 80 லட்ச ரூபாய் வருமானம் பெருபவர்களை ஏழைகள் என்றும், அதற்கு குறைவாக 60 லட்ச ரூபாய் அளவில் வருமானம் பெருபவர்கள் மிக ஏழைகள் எனவும் அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

    குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 17.19 லட்சம் ரூபாய் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பண்ணை தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 12 லட்ச ரூபாயாகவும், குழந்தை பராமரிப்பு வேலை பார்ப்பவர்களுக்கு சுமார் 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் பிற பகுதிகளை காட்டிலும், இங்கு வருமான வரையறையில் வேறுபாடு காணப்படுகிறது. ஏனெனில், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் 2 அறைகள் கொண்ட வீட்டின் வாடகையே சுமார் 2.13 லட்ச ரூபாயாம்!

    இங்கு கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே நடுத்தர வசதி படைத்தோராக கருதப்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகும். #America #SanFrancisco
    7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையின்படி கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை 24 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் கணிசமான அளவுக்கு உயர உள்ளது.

    கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையின் பேரில் பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சம்பள உயர்வுக்கான அறிவிப்பையும் அரசாணையையும் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவின்படி அரசு கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் சம்பளம் 18 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயரும் என்று தெரிய வந்துள்ளது.

    தற்போது பேராசிரியர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் பெற்று வருகிறார்கள். சம்பள உயர்வுக்கு பிறகு அவர்கள் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.2.2 லட்சம் வரை பெறுவார்கள்.

    துணை பேராசிரியர்கள் சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயரும்.

    இந்த சம்பள உயர்வு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரியர்ஸ் தொகை கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    அரசு கல்லூரி பேராசிரியர்கள் சம்பள உயர்வு அமலுக்கு வந்தால் அது எம்.எல்.ஏ.க்கள் வாங்கும் மாத சம்பளத்தை விட 30 சதவீதம் அதிகமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×