search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.
    • வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    மதுரை

    மதுரை பசுமலையில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு செயலர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வருகிற ஜூன் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் கட்சிக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள முன்வரும் நிலையில் வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.
    • ஜூன் 15-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமான விழாவாக நடத்தப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டனர்.

    தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியை வலுப்படுத்த மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை செய்து வருகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க 234 சட்டசபை தொகுதிக்கும் 234 பேரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதால் இவர்கள் ஒன்றிய பகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பல்வேறு ஆலாசனைகளை வழங்கி வந்தனர்.

    வார்டு கவுன்சிலர்கள் மூலம் 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் கட்சியில் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்தான் அந்த 100 ஓட்டுகளையும் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த 100 ஓட்டில் தி.மு.க. ஓட்டு எவ்வளவு, அ.தி.மு.க. ஓட்டு எவ்வளவு எந்தக் கட்சியையும் சாராத மக்கள் எவ்வளவு பேர் என்ற பட்டியலையும் சேகரித்து வைத்து உள்ளனர். வாக்குச்சாவடி வாரியாக பி.எல்.ஏ. 2 முகவர்களையும் தி.மு.க. தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. மேலும் 'பூத்' வாரியாக 21 பேர் வீதம் கட்சி பணியாற்றவும் 'லிஸ்ட்' எடுத்து வைத்து உள்ளனர்.

    இந்த பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று உள்ளது என்பது பற்றி ஆலோசிக்க தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

    அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக கட்சியில் நியமிக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

    மாவட்ட கழக செயலாளர்களின் செயல்பாடு இன்னும் வேகமாக இருக்க வேண்டும். அப்போது தான் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற முடியும். கட்சியில் உழைக்காதவர்களுக்கு இடமில்லை. தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை, திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதை வேகப்படுத்துங்கள். வெற்றியே நமது குறிக்கோள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்த வார்டு வாரியாக கூட்டங்களையும் நடத்த வேண்டும்.

    உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த வேண்டும். 'பூத்' கமிட்டி 'லிஸ்ட்' சரியில்லை என்றால் அதை மாற்றி அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் ஒவ்வொரு அணிகளிலும் நியமிக்க வேண்டிய நிர்வாகிகளை நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

    கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று வட சென்னையில் (புளியந்தோப்பு) மிகப்பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சியினர் தோழமை கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

    5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்து கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு பிரிவு ஆஸ்பத்திரியை திறந்து வைப்பதுடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். ஜூன் 15-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமான விழாவாக நடத்தப்படுகிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்று பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து திரளாக வந்து பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை ஒழுங்காக செய்யாவிட்டால் மாற்றப்படுவீர்கள் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
    • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. 

    • சோழவந்தான் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • சமுதாயக்கூடத்தில் பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் பஸ் நிலையம் கட்டி முடிக்கப் பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் நேற்று சமுதாயக்கூடத்தில் நடந்த பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டத்திற்கு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் பேரூராட்சி வரவுசெலவு உள்ளிட்ட 14 தீர்மானங்களை மன்றம் அங்கீகரிக்கக்கோரி வாசித்தார். இதில் 2-வது தீர்மானமான திறக்கப்படாத பேரூராட்சி பஸ் நிலையத் திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என பெயர் சூட்டப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரூராட்சி 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதன் பின்னர் பஸ் நிலையத்திற்கு முதல்-அமைச்சர் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் கையொப்பமிட்டு மனுவை செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசினிடம் கொடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட தலைவர் ஜெயராமன் தி.மு.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் மெஜாசாரிட்டி பலம் உள்ள தால் பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட மன்றம் அங்கீகரிப்பதாக கூறியதையடுத்து பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கணேசன், வசந்தி ரேகா, சரண்யா, கணேசன், சண்முக ராஜா பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில் 3-வது தீர்மானமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ெரயிவே மேம்பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்ட மன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என நிபந்தனை
    • மக்களின் கருத்தினை அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என சீமான் காட்டம்

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னையில் நடுக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

    பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

    மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத -சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது.

    இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

    பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என்று ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    • தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    • மணிமுத்தாறு பாலம் இருபுறமும் அலங்கார விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவி ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். பஸ் நிலையத்தின் இருபுறமும் நுழைவு வாயிலை பொது நிதியில் இருந்து கட்ட வேண்டும், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், செயல் அலுவலர், கணிணி அறைகளை மராமத்து செய்ய வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் மாலை நேர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை பழைய பஸ் நிலையம், கைக்குளவர் ஊரணி அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

    சரக்கு வாகனங்களை காலை 11 மணி முதல் 3 மணி வரை இயக்க வேண்டும். மணிமுத்தாறு பாலம் இருபுறமும் அலங்கார விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை.
    • பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் அறிவித்துள்ளார்.

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது பேசிய அவர், "விராலிமலை தொகுதி அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஓடி வந்த இந்தி பெண்ணே கேள் நீ தேடி வந்த நாடு இதுவல்லவே என்று தன்னுடைய 13-வது வயதில் போர் பாவை பாடி, 86-வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்த கலைஞரின் நூற்றாண்டு ஒட்டி, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், பணியை குறிக்கும் விதத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் வருகிறது என்றார்.

    மேலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை. மேலும், பயன்பாடற்ற காவல் நிலைய குடியிருப்பு மற்றும் பொதுப்பணித்துறை சாலையாக இருப்பதாலும் பள்ளிக்கு இடம் வழங்க ஏற்றதாக இல்லை.

    எனவே பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டவுடன் நபார்டு திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்யப்படும்", என்றார்.

    • ஏரி, நீர் நிலங்களை தவிர பயனற்ற நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.
    • கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மெய்க்கால் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசியதாவது:-

    மக்களின் குறை தீர்ப்பதில் தமிழ்நாட்டின் பங்கு பாராட்டத்தக்கது என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    தமிழகத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் இணைய தளத்தில் வெப் சைட்டில்- ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அரசு நிலத்தில் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப பல ஏரிகள் குடியிருப்புகளாக மாறி விட்டன. எனவே அரசு இந்த சூழ்நிலையை உணர்ந்து நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும்.

    ஏரி, நீர் நிலங்களை தவிர பயனற்ற நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.

    எனது பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் கிராமத்தில் 693 பட்டாவும், பம்மலில் 2305, அனகாபுத்தூரில் 5660, திருநீர்மலையில் 29, ஜமீன் பல்லாவரத்தில் 394, அஸ்தினாபுரத்தில் 45, திருசூலத்தில் 1601 பட்டா என பல்லாவரம் தொகுதியில் மட்டும் 10 ஆயிரத்து 801 பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளது. அப்படி என்றால் 234 தொகுதிக்கும் எவ்வளவு இருக்கும்? இதை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

    கலைஞர் ஆட்சியின் போது காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழங்கப்பட்ட 25 ஆயிரம் பட்டாக்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கிராம பதிவேட்டில் ஏறவில்லை. இதனால் 12 வருடமாக பட்டாவை கிராம அடங்கலில் பதிவேற்றம் செய்ய கோரி மக்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

    அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மெய்க்கால் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். தொல்லியல் துறையில் பட்டா வழங்காமல் உள்ளது. 100 மீட்டர் தள்ளி இருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

    கலைஞர் ஆட்சியில்தான் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை முதலில் மெட்ரோ ரெயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தளபதி அப்போது நடந்தே வந்து அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    எனவே இப்போது மெட்ரோ ரெயில் எனது மீனம்பாக்கம் தொகுதியில் இருக்கிற காரணத்தால் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்.

    இவ்வாறு இ.கருணா நிதி பேசினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை இல்ல விழாவாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., து.மூர்த்தி, விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். பின்னர் கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் நிர்வாக வரலாற்றில் பொற்கால ஆட்சியை தந்து விண்முட்டும் சாதனைகளால் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்று, கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி சரித்திரம் படைத்த மறைந்தும், மறையாமல், தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கருணாநிதி, இந்திய அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற அவரது நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த விழாவை வருகிற ஜூன் 3-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி வரை ஓராண்டு காலம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்களின் இல்லவிழாவாக கோலாகலமாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி நமது மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போருர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு 50 ஆயிரம் என மொத்தம் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்திடும் பணியில் அனைவரும் முனைப்புடன் செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அடங்கியுள்ள 2,374 வாக்குச்சாவடிகளுக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் பணிக்குழு உறுப்பினர் என தேர்தல் மணிக்குழுவை அமைத்து பூர்த்தி செய்யப்பட்ட அப்படிவங்களை வருகிற ஏப்ரல் 5-ந்தேதிக்குள் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

    • ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதிக்குள் தி.மு.க.வில் மேலும் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
    • தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 75 மாவட்ட கழக செயலாளர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை இந்த ஆண்டு பிரமாண்டமாக கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், பல்லாயிரம் ஆண்டு பழந்தமிழின் முத்தமிழ் அறிஞர், இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த சிற்பி, பல முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர், 95 ஆண்டு கால வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த ஓய்வறியா போராளி, போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சாதனை நாயகர், தாய்த்தமிழ் நாட்டினை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த தலைசிறந்த நிர்வாகி, அரைநூற்றாண்டு காலத் திரையுலகத்தின் திசையை தீர்மானித்த வசனகர்த்தா, எழுஞாயிறு எழும் நாளெல்லாம் எழுதித் தீட்டி இலக்கியமாய் இயங்கிய எழுத்து இலக்கணம், மேடையில் மெல்லிய பூங்காற்றாகவும் எரிமலைத் தீம்பிழம்பாகவும் காட்சியளித்த காந்த குரலுக்கு சொந்தக்காரர், நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர், நமக்கு உயிரானவர், நமக்கு கருவானவர், நமக்குத் திருவானவர், இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞருக்கு வரும் ஜூன் 3-ந்தேதி நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

    நம்மை நமக்கே அடையாளம் காட்டிய, உயிரினும் மேலான அன்புத் தலைவர் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருக்குவளையில் பிறந்து தரணியையே ஆட்சி செலுத்தும் தலைவராக வளர்ந்தார்.

    ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரைக் கண்டு, அவர் முகத்தைத் தரிசித்து, அவரது புன்னகையை ஏற்று, நம்மை நாமே உரமேற்றிக் கொண்டோம். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள் இயற்கை நம்மிடம் இருந்து அவரைப் பிரித்து வங்க கடலோரம் வாஞ்சை மிகு தாலாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் அவரை ஓய்வெடுக்க வைத்தது. அன்று முதல் காவிய தலைவர் கலைஞரின் கனவுகளை நிறைவேற்ற தினமும் நாம் பணியாற்றி வருகிறோம்.

    'பணியைத் தொடங்கி விட்டாயா? வெற்றிக்கு திட்டமிட்டு விட்டாயா?' என்று 'முரசொலி'யில் கலைஞரே எழுதிக் காட்டியதைப் போன்ற உத்வேகத்துடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உழைத்து வருகிறோம்.

    திராவிட நாயகர், தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, 2018-ம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி முகத்தைத் தொட்டோம். ஆறாவது முறையாக தாய்த்தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வழங்கினார்கள். தலைவர் கலைஞரின் வார்ப்பாக மட்டுமல்ல, தலைவர் கலைஞராகவே செயல்பட்டு வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    'சொன்னதைச் செய், செய்வதைச் சொல்' என்று இன்றும் கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்ப தால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப் பிடாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இந்திய நாட்டில் பரவி இருக்கும் பல்வேறு மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உச்சிக்கு கொண்டு சென்று மகுடத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க.வின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத் திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    கழகமும்-கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா வருவது மிகமிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.

    தமிழின தலைவர் கலைஞர் தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் ஜூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற இருக்கிறது.

    தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு "கலைஞர் கோட்டம்" வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை-கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும்-இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக "கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை" அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

    தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.

    வரும் ஜூன் 3-ம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன்-3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்தியத் திருநாடே திரும்பி பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

    தமிழ் மொழிக்காப்பு, தமிழின உரிமைகள், தமிழ்நாட்டின் உயர்வு, திராவிடச் சுயமரியாதை, மாநில சுயாட்சி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் நலன், சமூகநீதி, பெண்ணுரிமை, இலக்கிய வளர்ச்சி, கலைத்துறை மேம்பாடு என பலமுனைப் பங்களிப்புகளை தலைவர் கலைஞர் ஆற்றி இருக்கிறார்.

    எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே தலைவர் கலைஞர் ஒப்படைத்துக் கொண்டாரோ அந்த நோக்கத்துக்காக தலைவர் கலைஞரின் வழித்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேலும் ஒரு முக்கிய தீர்மானம் வருமாறு:-

    தமிழினத் தலைவர் கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3-ந்தேதியன்று தொடங்கி, ஜூன் 3,2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது.

    துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரசாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச்சென்றும் புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்திடுவோம்.

    • பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
    • கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    42 மீட்டர் உயரத்தில் இந்த நினைவு சின்னம் அமைகிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பாலம் வரை 6 மீட்டர் உயரத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டரும், கடல் பரப்புக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இந்த பாலம் அமைகிறது.

    இந்த பாலத்தின் அகலம் 9 மீட்டர் ஆகும். இதில் 2 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலமும் உள்ளது.

    மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் முதலாவதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்யாணராமன் பேசினார். அவர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும். கருணாநிதி சமூக மாற்றங்களை கொண்டு வந்தார்.

    கார்கில் நினைவு சின்னம், போர் நினைவு சின்னம் போல வருங்கால தலைமுறையினர் கருணாநிதி பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது. இதை வரவேற்கிறேன்" என்றார்.

    சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த அருள் முருகன் பேசுகையில், "கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இதை வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

    இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கலெக்டரும், போலீசாரும் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முன் இருக்கையில் இருந்த சிலர் கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை என்று வாக்குவாதம் செய்தனர். வாக்கு வாதம் காரணமாக கூட்டம் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது கலெக்டர் அமிர்தஜோதி, "சுற்றுச் சூழல் தொடர்பாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் பேசகூடாது. கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்றார்.

    பின்னர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை" என்றார். இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பதை நான் வரவேற்கிறேன். இதை கண்டிப்பாக அமைக்க வேண்டும். மெரினா கடற்கரைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்" என்றார்.

    அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர், "இங்கு அரசியல் பேசக்கூடாது. சுற்றுச்சூழல் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்" என்றனர்.

    நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

    நீலாங்கரையை சேர்ந்த பா.ஜனதா மீனவர் அணி தலைவர் முனுசாமி கூறுகையில், "மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்" என்று கூறி சில வார்த்தைகளை தெரிவித்தார்.

    இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை விலக்கிவிட்டனர். அப்போது கலெக்டர் அமிர்தஜோதி அவரிடம், "உங்களின் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள்" என்று கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன், முனுசாமியை கூட்டத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

    அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில், மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைக்ககூடாது. பேனா நினைவு சின்னம் வைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் பேனா நினைவு சின்னம் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதற்கும் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது.

    • கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புத்தாண்டையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் 'தலைநிமிர்ந்த தமிழகம்', 'மனங்குளிருது தினம் தினம்' என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை புத்தாண்டையொட்டி சந்தித்தார். அப்போது அவர்கள் புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரியகருப்பன், முத்துசாமி, சக்கரபாணி, ரகுபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மயிலைவேலு, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தி.நகர் ஜெ.கருணாநிதி மேயர் பிரியா.

    தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பணீந்திர ரெட்டி, சுப்ரியாசாகு, ராஜேஷ் லக்கானி, அமுதா, சிவதாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, நீரஜ்மிட்டல், கிரிலோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    ×