search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143591"

    • அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
    • இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள். இவரது மகன் செல்வகுமார்(வயது33). இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களை விடுமுறை நாட்களில் செல்வகுமார் பார்க்க செல்வதுண்டு. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு செல்வ குமார் மோட்டார் சைக்கி ளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மது குடித்திருந்த தாக தெரிகிறது. சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது செல்வகுமார் சாலை யோரத்தில் மோ ட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரது தந்தை நாராயண பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு மூலம் செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் பலியானார்.
    • சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் உள்ளது.

    இந்தத் தெப்பக்குளம் அருகில் பாலம் உள்ளது. அதில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க நபர் மது போதையில் படுத்து இருந்தார். அவர் திடீரென தவறி தெப்பக்குளத்தில் விழுந்து விட்டார்.

    இதனை கண்ட துப்புரவுத்தொழிலாளர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலியானவர் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து சேத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகணபதி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த கவுதமாலா நாட்டைச் சேர்ந்த அகதிகளில் 7 வயது சிறுமி ஒருத்தி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள்.
    வாஷிங்டன் :

    ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றின் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    அவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்து அகதிகளாக தஞ்சம் கேட்க முடியாதபடிக்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டார். ஆனால் அதற்கு, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை போட்டது. இருப்பினும் அமெரிக்காவினுள் நுழைகிற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கவுதமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமி ஒருத்தியும், அவளது தந்தையும் அடங்குவர்.

    ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள். அவள் பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில்தான் மரணம் அடைந்திருக்கிறாள் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை எல்லை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

    இருப்பினும் அந்தச் சிறுமியின் மரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், அகதிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×