என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 144986"
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது.
சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாயாக குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது.
கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட பச்சைப்பட்டானி தற்போது ரூ.35-க்கு விற்பனையாகிறது.
இதேபோல் சின்ன வெங்காயம், காலிபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் மிகவும் குறைந்து உள்ளன.
தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிக அளவில் உள்ளதால் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-
தக்காளி - ரூ.13
பெ.வெங்காயம் -ரூ. 10
சி.வெங்காயம் - ரூ.40
கத்திரிக்காய்-ரூ.15
வெண்டை- ரூ.15
பச்சை பட்டாணி-ரூ.35
கேரட்-ரூ.8
பீன்ஸ்-ரூ.30
முள்ளங்கி-ரூ.8
முட்டைகோஸ்-ரூ.8
கொத்தவரை- ரூ.15
இஞ்சி- ரூ.55
ப.மிளகாய்- ரூ.20
காலி பிளவர்- ரூ.10
உருளை- ரூ.25
காய்கறி விலை குறைந்தது பற்றி கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-
கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வழக்கமாக பச்சை காய்கறிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 75 முதல் 80 லாரி லோடுகளில் விற்பனைக்குவரும். விளைச்சல் அதிகம் மற்றும் சீசன் காரணமாக தற்போது 100 முதல் 120 லோடுகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
இதனால் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல் வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 50 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது. வரும் நாட்களில் காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் வீழ்ச்சி அடைந்திருந்த காய்கறிகள் விலை இப்போது உயர்ந்து வருகிறது.
புரட்டாசி மாதம் காய்கறி தேவை அதிகரித்துள்ள நிலையில் லாரி வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகமாகி விட்டது. அதிலும் குறிப்பாக காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை என வித்தியாசம் உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி ஒரு கிலோ விலை விபரம் வருமாறு:-
கத்தரிக்காய் -ரூ.25, தக்காளி -ரூ.12, நவீன்தக்காளி -ரூ.13, வெங்காயம் -ரூ.16
சின்னவெங்காயம் -ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.25, கேரட் -ரூ.40
பீன்ஸ் -ரூ.50, பீட்ரூட் -ரூ.14, சவ்சவ் -ரூ.18, முள்ளங்கி -ரூ.17, கோஸ் -ரூ.10
விலை அதிகமானது குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் முத்துகுமார் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் காணப்படுகிறது.
ஒரு கடைக்கு 4 லாரிகளில் காய்கறிகளை கொண்டு வந்தால் 2 லாரிகளை மட்டும் முதலில் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கிறார்கள். 2 லாரியை வெளியில் நிறுத்தி விடுகிறார்கள். காய்கறிகளை இறக்கி விற்ற பிறகே வெளியில் நிற்கும் லாரியை உள்ளே அனுமதிக்கிறார்கள்.
இதனால் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என விற்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. ஆடி மாதம் முடிந்து ஆவணி முகூர்த்த நாட்கள் தொடங்கி உள்ளதால் தேவை அதிகரிப்பால் காய்கறி விலை உயர தொடங்கி உள்ளன.
கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது ரூ.55-க்கு விற்கப்படுகிறது. இதே போல ரூ.25-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.35யாக உயர்ந்து உள்ளது.
அதிகபட்சமாக இஞ்சி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆனது. மற்ற காய்கறி விலை (கிலோவில்) விபரம் வருமாறு:-
காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெருமளவு காய்கறிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் காய்கறி வரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன.
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் அங்கிருந்து இஞ்சி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இஞ்சி விலை அதிகரித்து இருக்கிறது. தற்போது ஆவணி மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருமண முகூர்த்த நாள் அதிகம் என்பதால் காய்கறியின் தேவை அதிகரித்து விலை உயர்ந்து உள்ளன. இனிவரும் நாட்களில் காய்கறி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களே. இந்த பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, பச்சை மிளகாய் ஆகிய காய்கறிகள் மற்றும் செண்டுமல்லி, கோழிக்கொண்டை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களையும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டுமே ஓரளவுக்கு மழை பெய்கிறது. வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளை தொடர்ந்து மழை ஏமாற்றி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரமணாக காய்கறி மற்றும் பூக்கள் செடிகளிலேயே கருகுகின்றன. இதனை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பல்வேறு இன்னல்களுக்கிடையே தொடர்ந்து விவசாயம் செய்து வரும்இவர்களுக்கு இது மேலும் ஒரு இடியாக உள்ளது.
இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 600-ல் இருந்து 700 அடி வரை சென்று விட்டது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
போரூர்:
டீசல் விலை உயர்வு, வறட்சியால் உற்பத்தி குறைவு, லாரிகள் வேலை நிறுத்தம் ஆகிய காரணங்களால் கடந்த சில வாரங்களாக சென்னையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது.
தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனாலும், அதிக விலைவாசி காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை குறையத் தொடங்கி உள்ளது.
கோயம்பேடு மார்க் கெட்டில் இன்று தக்காளி ஒரு கிலோ ரூ.8-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.14-க்கும் விற்பனை ஆனது. இஞ்சி ரூ.70-க்கு விற்பனை ஆகிறது.
மற்ற காய்கறி விலை (ஒரு கிலோவில்) விவரம் வருமாறு:-
சின்ன வெங்காயம்-ரூ.30-40, கேரட்-ரூ.40, பீன்ஸ்- ரூ.30, வெண்டைக்காய்- ரூ.15, பீட்ரூட்- ரூ.12, உருளைக்கிழங்கு- ரூ.25, மாங்காய்- ரூ.30, பாகற்காய்- ரூ.40, முருங்கைக்காய்-ரூ.20, வெள்ளரி- ரூ.10, முள்ளங்கி- ரூ.8, அவரைக்காய்- ரூ.15, முட்டைகோஸ்- ரூ.6, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி- ரூ.70,கத்திரிக்காய்- ரூ.20. #KoyambeduMarketஆடிவெள்ளி, ஆடிக்கிருத்திகையொட்டி கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றது. வேலூர் மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள், முருகர்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதையொட்டி பொதுமக்கள் சைவ பொருட்கள் சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை களைகட்டியுள்ளது. ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிவரத்து உள்ளது. ஆனாலும் தேவை அதிகரிப்பால் வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
வரத்து மிகவும் அதிகரிப்பால் தக்காளி மட்டும் கிலோ ரூ.8 முதல் 10 வரை விற்பனை செய்யபடுகிறது. வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை 1 கிலோ விவரம் வருமாறு:
தக்காளி-ரூ.10, கத்தரிக்காய்-ரூ.50, கேரட்- ரூ.40, பீன்ஸ்-ரூ50, அவரைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.20, முருங்கை-ரூ.30, சின்னவெங்காயம்-ரூ.40, பெரியவெங்காயம்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20 க்கு விற்பனை செய்யபட்டது.
ஆடிக்கிருத்திகையொட்டி பூக்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை, முல்லைப்பூ கிலோ ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.30, கேந்தி ரூ.40, ரோஜா ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்னும் 3 நாட்கள் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்