search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழக்கம்"

    பழனி பகுதியில் 5 ரூபாய் போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு, குறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பழனி:

    பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். பேன்சி மற்றும் மளிகை பொருட்கள், புத்தகம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த கடைகளுக்கு வரும் சிலர் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் கவனம் செலுத்தும் வியாபாரிகளும் அந்த நாணயத்தின் வடிவம், எடையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் தான் என நினைத்து வாங்கிக்கொண்டு பொருட்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.

    அதன் பின்னர் நாணயங்களை கணக்கெடுக்கும் போது தான், சிலர் கொடுத்த 5 ரூபாய் நாணயங்களில் பல போலியானது என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் வியாபாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பழனியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 50 பைசா நாணயங்கள் தற்போது செல்லாதவை ஆகும்.

    அந்த நாணயங்களின் வடிவம் தற்போது உள்ள 5 ரூபாய் நாணயங்கள் போன்று தான் இருக்கும். ஆனால் அவற்றின் தடிமன் குறைவாக இருக்கும். ஆனால் சில மோசடி நபர்கள் 50 பைசா நாணயங்கள் 2-ஐ சிங்கமுக தலைகள் தெரியும்படி இணைத்து ஒட்டிவிடுகின்றனர்.

    பின்னர் அந்த நாணயங்களை எங்களிடம் கொடுத்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். அதனை பார்க்கும் எவரும் அது போலியான 5 ரூபாய் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நாணயத்தை நன்றாக சரிபார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

    இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை கோவையில் கைதான கும்பல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38), கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2 மாதங்களாக சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், கோவை மேட்டுப்பாளையம் மார்க்கெட், ஈரோடு ஜவுளி மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். இங்கு வழக்கமாக லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என்பதால் கள்ள நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுள்ளனர்.



    மேலும் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என சுற்றுலா தலங்களை குறி வைத்தும் இந்த கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கமி‌ஷன் அடிப்படையில் ஊழியர்களை நியமத்து கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். அந்த ஊழியர்கள் யார்-யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிதர் முகமது ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி, போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவை மற்றும் ஈரோட்டில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் மூலம் தற்போது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த கும்பலின் பின்னணி பற்றி முழு தகவல்களும் தெரியவரும். இவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    இருவரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடைசியாக யார்-யாரிடம்? பேசினார்கள் என பட்டியல் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கிதர் முகமது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியவர். தற்போது இந்த கும்பல் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர். அதிலும், யாரும் எளிதில் கண்டுபிடித்து விடாதபடி, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    குஜராத்தில் இருந்து இந்த கும்பலுக்கு நவீன காகிதங்களை சப்ளை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதன்பின்னணயில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கள்ள நோட்டு வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. #fakecurrency

    ×