search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சி"

    டெல்லியில் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். #ChandrababuNaidu #BJP
    ஐதராபாத் :

    தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா ஆட்சியில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பா.ஜனதா கட்சியின் தவறான கொள்கையால் மக்கள் மீது தேவையில்லாத சுமை ஏற்பட்டு இருக்கிறது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பினரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

    மேலும் சி.பி.ஐ., அமலாக்க துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இதன் மூலம் எந்த பதவிக்கும் வர நான் ஆசைப்படவில்லை. அதற்கு தகுதியான தலைவர்கள் நாட்டில் உள்ளனர்.



    பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் டிசம்பர் (அடுத்த மாதம்) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக நான் அழைப்பு விடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான பா.ஜனதாவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன்.

    இதற்கு முன்பு மாறுபட்ட அரசியல் கொள்கைகளை கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நான் எதிர்த்து உள்ளேன். ஆனால் தற்போது நாட்டின் நலனுக்காக பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணி அமைவது ஜனநாயகத்தின் கட்டாயம் ஆகும். இது அரசியல் கட்டாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #BJP
    எந்த கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல என்றும் தொகுதி பங்கீடு செய்தால்தான் கூட்டணி என்றும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். #DMK #DuraiMurugan

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் தோழமை கட்சிகளே” என்று கருத்து தெரிவித்தார்.

    துரைமுருகனின் இந்த கருத்து தி.மு.க. கூட்டணி விவகாரத்தில் கடும் சலசலப்பையும், சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது. ம.தி.மு.க.வையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க. சற்று தொலைவில் வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைமுருகனின் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினோ மற்ற மூத்த தலைவர்களோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் மன வேதனையை உண்டாக்கி இருக்கிறது.

    நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தொடர்ந்து மவுனமாக உள்ளார்.

    என்றாலும் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி வருகிற 3-ந்தேதி கவர்னர் மளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ள ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது ம.தி.மு.க.வினரிடம் நிம்மதியைக் கொடுத்துள்ளது.


    இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்து சரியானது தான் என்பதை வலியுறுத்தி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பொதுநல நோக்கத்துடன் பல்வேறு கட்சிகள் எங்களுடன் வந்து ஒன்று சேர்ந்துள்ளன. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மணமகளாகவும் மணமகனாகவும் இருக்கிறோம்.

    ஆனால் நாங்கள் இன்னமும் கணவன்- மனைவி ஆகவில்லை. இன்னமும் திருமணம் நடக்காததால் திரு மணபந்தம் ஏற்படவில்லை.

    தி.மு.க.வுடன் பல கட்சிகள் நல்ல நட்புடன் உள்ளன. அந்தத் தோழமைக் கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல.

    ஆனால் எனது அரசியல் அனுபவத்தில் கூட்டணி என்பது, ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan

    ரஜினிக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். #Rajinikanth #EVKSElangovan
    ராயபுரம்:

    நேரு பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்தின் பேச்சு இரட்டைவேடம் போடுவது போல உள்ளது. அவர் முதல் நாள் பேசியது சொந்தக்கருத்து. இரண்டாம் நாள் குருமூர்த்தியை பார்த்து விட்டு பேசியுள்ளார்.

    ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். ஒருவேளை கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன்.



    மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டிபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும்.

    கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய வேண்டும். கமல் மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ளவராக இருக்கின்றார்.

    தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    ரபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை முறைகேடுகள் நடந்திருப்பதால்தான் உச்சநீதிமன்றமே ரபேல் தொடர்பான ஆவணங்களை ராணுவ அதிகாரிகளே கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

    ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் என கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அது தேர்தலுக்காக அல்ல. மதசார்பற்ற நாடாக இந்த நாடு நீடிக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #EVKSElangovan
    நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்பு இல்லை என செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார். #Rajini
    சென்னை:

    பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தாம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டது.

    மேலும், அடுத்தடுத்து அதிரடியாக அவரது அரசியல் வரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரைப்படங்களிலேயே ஓய்வின்றி இருந்தார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பதும், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதுமாய் இருந்துவந்தார்.

    இதையடுத்து, சமீபத்தில் அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அவர் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கட்சி பணிகளில் தீவிரமாக இறங்குவார் எனவும், தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சிப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார்.

    ஆனால், டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்புகள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். #Rajini
    தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். #VCK #Thirumavalavan
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் ராஜாமணி- கனிமொழி திருமணம் இன்றுகாலை நடைபெற்றது.

    இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-


    கேள்வி: ரஜினிகாந்த் ஜாதி ரீதியாகவும், தனி அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்கு எனது கட்சியில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

    பதில்: அமைப்பு ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    கேள்வி: நடிகர் விஷால் புதிய அமைப்பு தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டு உள்ளனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். #annadravidarparty
    திருவாரூர்:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பாஜக போன்ற பெரிய கட்சிகள் முதல் கமல், ரஜினி என அனைவரும் முயற்சித்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக அதிமுகவை கைப்பற்ற முயன்று தோல்வியடைந்த சசிகலாவின் சகோதரர் தினகரன் புதிய கட்சி ஒன்றை துவங்கினார். இவரது இந்த புதிய கட்சி அறிவிப்பில் அவருடன் இருந்த நாஞ்சில் சம்பத் உட்பட பலரும் அதிருப்தி அடைந்து அவரை விட்டு விலகினர்.

    அதே சமயத்தில், தினகரன் உடனிருந்த அவரது சகோதரர் திவாகரன், பல்வேறு கருத்து வேறுபாடுகளினால் தினகரனை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும், தாம் புதிய கட்சி துவங்குவதாகவும் அறிவித்தார்.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார்.



    அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளதாகவும், கட்சிக்கான கொடி கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் நடுவில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் விமர்சித்து வருகின்றனர். #annaadravidarparty
    ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #CauveryManagement
    சென்னை:

    ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்து விட மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினைக்காக தன்னெழுச்சியாக போராடிய தமிழக மக்களுக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

    * தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் காவரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு. அணைகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து கட்டுப்படுத்தும் தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமல் கோட்டைவிட்ட அ.தி.மு.க. அரசுக்கும், தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    * ஜூன் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை திறந்துவிட மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு உரிய நீரை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

    * குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மத்திய பா.ஜ.க. அரசு இந்த பிற்போக்கு கல்வி திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் பிரசார மற்றும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

    * ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே நீடிக்க வேண்டும். தவறினால் சமூக நீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்த இந்த கூட்டம் முடிவு செய்கிறது.

    போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து நீர் விட வேண்டுமென்று எல்லா கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழக அரசு உடனடியாக அதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை ஆணையத்துக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 800 அரசு பள்ளிகளை மூடப்போவதாக அரசு தெரிவித்து இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ‘தமிழக அரசு எந்தளவுக்கு செயலிழந்து போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக உள்ளன’ என்றார். 
    ×