search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரியும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது. 

    இதில், கெஜ்ரிவாலின் மனுக்களுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசரணையின்போது, கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இல்லை, அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "பஞ்சாப்பில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அவரது உடல் நலம் பரப்புரைக்கு தடையாக இல்லை.

    அமலாக்கத்துறை பதில் அளிக்காத வகையில் ஜாமின் கோரி இறுதி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்" என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.

    ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    சென்னை:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    • கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • ஜூன் 2-ந்தேதி சரணடைந்து ஜெயிலுக்கு போக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா அடங்கிய பெஞ்ச் "விவாதங்கள் கேட்கப்பட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2-ந்தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம்.
    • எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது.

    இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.

    நான் மீண்டும் ஜூன் 2-ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

    கெஜ்ரிவால் இவ்வாறு பேசியிருப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளை மீறிவிட்டார். இதனால் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில் "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்காது என்பது அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமானம். அதைப்பற்றி நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. எங்களுடைய உத்தரவு (அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2-ந்தேதி ஜெயிலுக்கு திரும்ப வேண்டும்) மிகவும் தெளிவாக உள்ளது. இது நீதிமன்றம் உத்தரவு. நாங்கள் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படுகிறோம்.

    எங்களுடைய முடிவு குறித்த விமர்சனத்தை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் செல்லவில்லை. எங்களுடைய உத்தரவு தெளிவாக உள்ளது. நாங்கள் தேதி நிர்ணயித்துள்ளோம். இடைக்கால ஜாமின் வழங்கியதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

    • நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.
    • நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது, "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம், ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டாமா? என்ற விமர்சனத்தை எழுப்பியது. அமித் ஷாவும் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் பேச்சு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.
    • அவரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி பெறவேண்டும்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமின் மனு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் உஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

    சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைதுசெய்ய முடியாது.

    குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும்.

    காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து அமலாக்கத்துறை மனு மீது சிறப்பு நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும்.

    நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் கீழ் ஆஜரானவர்கள் ஜாமினுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராவதால் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ஜூலை 10-ந்தேதிக்கு ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது.

    • நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
    • இன்று 2-வது நாள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக உள்ளார்.

    ஆலம்கீர் ஆலமின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் அவருடைய வீட்டு உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து ஆலம்கீர் ஆலம் மீது அமலாக்கத்துறை ஒரு கண் வைத்திருந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) ஆலம்கீர் ஆலம் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரது அறிக்கையை பதிவு செய்து கொண்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அமலாக்கத்துறை ஆலம்கீர் ஆலம்-ஐ கைது செய்துள்ளது.

    • சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.
    • நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர், அலம்கீர் ஆலம். காங்கிரசை சேர்ந்த இவரது தனி செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது மந்திரி அலம்கீர் ஆலமை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
    • 5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

    டெல்லியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறையில் வைத்து இன்று 3-வது நாளாக வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று வாக்குமூலம் வாங்கிய போது ஜாபர்சாதிக் தாக்கப்பட்டு மிரட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஜாபர்சாதிக் தரப்பில் அவரது வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அமலாக்கத்துறை விசாரணையின் போது ஜாபர் சாதிக் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து உள்ளனர்.

    5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறையினருக்கு பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • நீதிமன்ற காவல் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ ஜெயிலில் வைத்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிபிஐ அவரை கைது செய்துள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது கே. கவிதா பத்திரிகையாளர்களிடம் "பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது" என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதே வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கில் ஜாமின் கேட்டு கவிதா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 15-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின் சிபிஐ ஏப்ரல் 11-ந்தேதி கைது செய்தது.

    ×