search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார்"

    தென்கொரியாவில் 8 பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டு தொடர்பாக பாதிரியாருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார். #SouthKorea #Pastor #LeeJaerock
    சியோல்:

    தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

    1982-ம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

    அந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுக்கு அழைத்து, வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டார் என புகார் செய்தனர்.

    அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அவர் அரசரை விட மேலானவர். அவர்தான் கடவுள். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை” என்று கூறினார்.

    இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது போலீசில் கற்பழிப்பு புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான கற்பழிப்பு புகார்களை மறுத்தார்.

    இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக கற்பழித்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார். 
    சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமி‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
    சேலம்:

    ‘மீ டு’ வில் பிரபல நடிகர்கள், கவிஞர்கள் உள்பட பலர் மீது நடிகைகள், பாடகிகள் உள்பட பலர் புகார் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு பாதிரியார் மீது இளம்பெண் ஒருவர் சேலம் கமி‌ஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    அந்த புகாரில் சேலத்தை சேர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்தின் பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாவும், அப்போது தான் மறுத்ததால் ஆடைகளை கிழித்து தொந்தரவு செய்ததாகவும் கூறி இருந்தார்.

    அந்த புகார் குறித்து மாநகர உதவி கமி‌ஷனர் ஒருவரை விசாரிக்குமாறு கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமி‌ஷனர் அந்த பெண்ணை அழைத்து விசரணை நடத்தினார். அப்போது கண் கலங்கிய அந்த பெண் கதறி அழுதார். மேலும் அந்த பாதிரியாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவில் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்த கன்னியாஸ்திரியை மிரட்டி புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்திய தலைமை பாதிரியாரிடம் விசாரிக்க கேரள போலீசார் விரைந்துள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாதிரியாரால் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகாரின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

    இதையடுத்து இந்த புகார் மீதான விசாரணை கேரள போலீசாரால் முடுக்கி விடப்பட்டது. இந்த புகாருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனிப்பட்ட பகையை மனதில்கொண்டு கன்னியாஸ்திரி பெண் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் அந்த பாதிரியார் தரப்பில் கூறப்படுகிறது.

    சமீபத்தில் அந்த கன்னியாஸ்திரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஜலந்தர் பகுதியின் தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தைல், புகாரை வாபஸ் பெருமாறு மிரட்டியுள்ளார். மேலும், தனது பேச்சைக் கேட்டு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால், 10 ஏக்கர் நிலமும், தனி மடம் ஒன்றும் அமைத்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கன்னியாஸ்திரி, பாதிரியாரின் செல்போன் உரையாடலைக் கொண்டு அவர்மீதும் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தலிடம் விசாரணை நடத்துவதற்காக டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான தனிப்படை ஜலந்தர் பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மூன்றாவது பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் செய்த தவறுக்கு மனம் வருந்தி பாவ மன்னிப்பு கேட்பதற்காக கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாவமன்னிப்பு கேட்பதற்காக நடந்தவற்றை கூற, அதனை பதிவு செய்த பாதிரியார், அதனை வைத்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    அவர் மட்டுமன்றி, இன்னும் 4 பாதிரியார்களும் இதேபோன்று அந்த பெண்ணை பயன்படுத்தியுள்ளனர். அவரது கணவர் மூலம் வெளியான இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, கேரள குற்றப்பிரிவு போலீசார் 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜான்சன் மேத்யூ எனும் பாதிரியார் பதனம்திட்டா மாவட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, பாதிரியார்களின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  #Kerala
    பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார்களுக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என கேரள ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #KeralaHighCourt #KeralaPriests
    கொச்சி:

    கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.  #KeralaHighCourt #KeralaPriests #tamilnews

    கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக பாதிரியார்களை கைது செய்ய போலீசார் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பு பாதிரியார் ஒரு வரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடைபெற்றது. தன்னை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததை பாவமன்னிப்பு அறிக்கை செய்ய அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று பாதிரியாரிடம் நடந் தவைகளை கூறி பாவமன்னிப்பு கேட்டார்.

    ஆனால் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி அந்த ஆலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகிய 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இது பற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் அது பற்றி வாட்ஸ்-அப்பில் தகவல் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து அந்த 4 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தங்கள் மீதான புகாரை மறுத்த பாதிரியார்கள் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    முதலில் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோரும் அதைத் தொடர்ந்து ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    இதற்கிடையில் பாதிரியார்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி பாதிக்கப்பட்ட பெண் திருவல்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார். இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது.

    அடுத்த கட்டமாக பாதிரியார்கள் 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறியதாவது:-

    இளம்பெண்ணை 4 பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். ஆதாரங்கள் கிடைத்த பிறகு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் கைது நடவடிக்கையை தாமதபடுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்த சம்பவம் நடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆதாரங்களை சேகரிக்க போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். #tamilnews
    கேரளாவில் பாலியல் பலத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.

    அந்த பாதிரியார் இந்த வி‌ஷயத்தை பெண்ணின் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மேலும் 4 பாதிரியார்களுக்கு அவர் அனுப்பியதால் அந்த பாதிரியார்களும் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.

    தனது மனைவிக்கு நடந்த இந்த கொடுமையை அறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆலய நிர்வாகிகளிடம் அவர் புகார் செய்ததால் 5 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்தவர் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும். நான் பணிபுரியும் ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர் என்மீது பாலியல் குற்றம் சுமத்தி என்னை மிரட்டுகிறார்கள். நான் அந்த பெண்ணை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்திருந்தால் எனது செல்போனை சோதனை செய்து அதை கண்டுபிடிக்கலாம் என்றார்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது நான் யாரையும் மிரட்டுவதற்காக புகார் செய்யவில்லை. எனது மனைவிக்கு நடந்த கொடுமை தெரியவந்ததும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே புகார் செய்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இதில் உண்மை தெரியவரும். #tamilnews
    கேரளா அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணுக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்.

    திருவல்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்தார். தான் இப்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் வசித்து வருவதாகவும், திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த பாவ அறிக்கையை ரகசியமாக வைக்க வேண்டிய அந்த பாதிரியார் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அவர் மேலும் 4 பாதிரியார்களிடம் கூறி உள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சியையும் ரகசியமாக படம்பிடித்து அதையும் மற்ற பாதிரியார்களுக்கு அனுப்பினார். இதனால் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    பாதிரியார்கள் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தனது கணவரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரிடம் தனது மனைவிக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி புகார் செய்தார்.

    மேலும் இதுபற்றிய விவரங்களை ஆடியோவாக பதிவு செய்த கணவர் அதை வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டார். உருக்கமாக பேசியிருந்த அவரது ஆடியோ பலருக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆலய நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து 5 பாதிரியார்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

    அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்து உள்ளது. #KeralaPriests
    தூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விடமாட்டோம் என காயம் அடைந்த பாதிரியார் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.

    கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×