என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 150002
நீங்கள் தேடியது "ஆளுநர்"
திருவாரூர் மாவட்டத்தில் இன்று புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த ஆளுநர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றபோது அவரது காரை மறிக்க பொதுமக்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GajaCyclone #BanwarilalPurohit #Thiruvarur
திருவாரூர்:
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார்.
புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #GajaCyclone #BanwarilalPurohit #Thiruvarur

இந்நிலையில் ஆளுநரின் வாகனம் மேட்டுப்பாளையம் கிராமத்தைக் கடந்து சென்றபோது அவரது காரை மறிக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தனர். அதற்குள் ஆளுநரின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. பின்னால் அதிகாரிகள் வந்த காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #GajaCyclone #BanwarilalPurohit #Thiruvarur
ஜம்மு காஷ்மீரில் பிடிபி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.
ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த ஜூன் மாதம் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக மெகபூபா முப்தியின் பிடிபி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆலோசனை நடத்தின.
3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிடிபி கட்சியின் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் பிடிபி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் இருப்பதால், இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK

இந்த ஆலோசனையின் முடிவில் பிடிபியும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிடிபி கட்சியின் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் பிடிபி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் இருப்பதால், இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
சென்னை:
இந்நிலையில் தீபாவளி கொண்டாடும் தமிழக மக்களுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. மக்களை வதம் செய்த கொடிய அசுரனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழித்து வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியதும் அவருக்கு பட்டாபிஷேகம் செய்த தினமாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி கொண்டாடும் தமிழக மக்களுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை புகார் அளித்ததின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். #NakkeeranGopal
சென்னை:
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலை கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவர்னர் மாளிகை சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ் அவுஸ் ஜானிஜான்கான் தெருவில் நக்கீரன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது 124-ஏ ஐ.பி.சி. (ராஜதுரோக குற்றம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக வெறுப்பையும் உணர்ச்சியையும் எழுத்தால் தூண்டி விடுவதாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.#NakkeeranGopal
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை தலைவர் துரைமுருகன், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் இப்போது கூறியிருப்பதில் ஏதோ சூட்சமம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #DuraiMurugan
சென்னை:
சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் திமுக திமுக துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை எனவும், இறந்தவர்களின் பெயர்களில் ஓட்டுப்போட திட்டமிடப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைப்பதற்கு பின்னணியில் ஏதோ நடக்கிறது என கூறியுள்ளார்.
முன்னதாக 2 துணை வேந்தர்களை நியமித்தபோது ஊழல் குறித்து பேசாத ஆளுநர், தற்போது திடீரென துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவதில் ஏதோ சூட்சமம் இருப்பதாகவும், விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல், ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #DuraiMurugan
பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ளார். #TNRain #RedAlert #TNGovernor #EdappadiPalaniswami
சென்னை:
அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டார். மேலும், மழை பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இதற்கிடையே, இன்று மாலை 7 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் பருவமழை மற்றும் கனமழை தொடர்பான ரெட் அலர்ட் எச்சரிக்கை, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளிப்பார் என தெரிகிறது. #TNRain #RedAlert #TNGovernor #EdappadiPalaniswami #MonsoonPreparedness
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டார். மேலும், மழை பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இதற்கிடையே, இன்று மாலை 7 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் பருவமழை மற்றும் கனமழை தொடர்பான ரெட் அலர்ட் எச்சரிக்கை, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளிப்பார் என தெரிகிறது. #TNRain #RedAlert #TNGovernor #EdappadiPalaniswami #MonsoonPreparedness
தெலுங்கானா சட்டசபையை கலைக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடரும்படி சந்திரசேகர ராவிடம் கேட்டுக்கொண்டார். #TelanganaAssembly
ஐதராபாத்:
அதற்காக கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்த அவர், இன்று அமைச்சரவையை கூட்டினார். இதில் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார்.
அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார். #TelanganaAssembly
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.
அதற்காக கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்த அவர், இன்று அமைச்சரவையை கூட்டினார். இதில் சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார்.
அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார். #TelanganaAssembly
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி ஆலையை மூட அரசாணை வெளியிட்டப்பட்டது. அரசியல் காரணங்களினாலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
ஒடிசா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #OdishaGovernor #MizoramGovernor
புதுடெல்லி:
பீகார் மாநில ஆளுநரான சத்ய பால் மாலிக், ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் கணேஷி லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக கேரள மாநில முன்னாள் பா.ஜ.க. தலைவர் கும்மணம் ராஜசேகரனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #OdishaGovernor #MizoramGovernor
விருதுநகருக்கு ஆளுநர் சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest
சென்னை:
இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன் ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ்ராஜ்யம்"தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விருதுநகரில் ஆளுநருக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் தான் தி.மு.க.வினரை காவல்துறை கைது செய்தது என தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தையும் தொடங்கி வைத்து வருகிறார். கவர்னரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விருதுநகர் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன் ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ்ராஜ்யம்"தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விருதுநகரில் ஆளுநருக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் தான் தி.மு.க.வினரை காவல்துறை கைது செய்தது என தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest
×

X