search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151061"

    • பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தட்டிக்கேட்டவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் அவதூறாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இது உறவினர்களுக்கு தெரியவரவே,அதை கந்தனிடம் நல்லதம்பி (29), சோமையாபுரம் சாந்தகுமார் (31) ஆகியோர் மாணவியிடம் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 4 பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் தாக்கினர்.

    இதில் நல்லதம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.இதனை தடுக்கச் சென்ற சாந்தகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர். காயமடைந்த நல்லதம்பி, சாந்தகுமார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    • நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
    • தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 33) இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த செந்தில் (27) இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்னதாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்திலுக்கு முத்துவிற்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செந்திலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த காடம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    • ரெஜினா மாகாணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்று துணை கமிஷனர் பிளாக்மோர் தெரிவித்தார்.
    • கனடா வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.

    ரெஜினா:

    கனடாவின் ரெஜினா மாகாணம், ஜேம்ஸ் ஸ்மித் கிரீ நேசன் மற்றும் வடக்கு சஸ்காடூனில் உள்ள வெல்டன் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 2 பேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரெஜினா மாகாணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்றும். 13 இடங்களில் இந்த தாக்குதல் நடத்திருப்பதாகவும், துணை கமிஷனர் பிளாக்மோர் தெரிவித்தார்.

    சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள்
    சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள்

    கனடா வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று. கடந்த 2020ம் ஆண்டு போலீஸ் அதிகாரி போல் மாறுவேடமிட்ட நபர் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். 2019 இல் டொராண்டோவில் ஒரு நபர், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது வேனை ஏற்றியதில், 10 பேர் கொல்லப்பட்டனர்.

    • மகளை காதலித்த வாலிபரை மாணவியின் தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து விசாரித்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர்.

    கோவை, :

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஜூலை மாதம் மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் வெளியே சென்றார். பள்ளிக்கு செல்லாததால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி பள்ளிக்கு வராதது குறித்து ஆட்டோ டிரைவரான அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாணவி மற்றும் வாலிபர், அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

    வாலிபர் மீது மாணவியின் தந்தைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

    சம்பவத்தன்று மாணவியின் தந்தை வாலிபரை உன்னிடம் பேச வேண்டும் என ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தியேட்டர் அருகே வருமாறு அழைத்தார். அதன்படி வாலிபர் அங்கு சென்றார். அங்கு மாணவியின் தந்தை தனது நண்பர்கள் 2 பேரும் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசி வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மாணவியின் தந்தை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வாலிபரை குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

    மகளை காதலித்த வாலிபரை மாணவியின் தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொன்னைப் பட்டியைச் சேர்ந்த சேவுகன் மகள் பானுமதி (வயது 30) இவருக்கும், கண்டிக்க பட்டியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    துபாயில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். அவர் நண்பர்களுடன் மது குடிக்க பழகினார். போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் வேதனை அடைந்த பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அவர் தனது 2 மகன்களையும் அழைத்து சென்றதால் செல்வம் ஆத்திரம் அடைந்தார். மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார்.இதனை கண்ட மாமியார் செல்வமணி அவரை தடுக்க முயன்றார்.

    அப்போது செல்வம் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் செல்வமணி பரிதாபமாக இறந்தார். மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வத்தை தேடி வருகின்றனர்.

    • நல்லூரில் இருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என 2 பேர் கூறினர்.
    • 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகேசனின் தலையில் குத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45).

    ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த போது 2 பேர் வந்தனர். அவர்கள் நல்லூரில் இருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என கூறினர். இதனையடுத்து முருகேசன் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். பாலக்காடு ரோட்டில் 2 பேரையும் இறக்கி விட்டார். அப்போது அவர்களிடம ஆட்டோ பயண கட்டணம் ரூ.100 கொடுக்கும்படி கேட்டார்.

    ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகேசனின் தலையில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அந்த 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    முருகேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள். 

    • மதுரையில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழைய விளாங்குடி, செம்பருத்தி நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 28). இவரது நண்பர் காசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. அருண் பாண்டியன், காசி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவு விளாங்குடி நேருஜி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த யுவராஜ் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த யுவராஜ் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக அருண் பாண்டியன், கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜை தேடி வருகின்றனர்.

    மதுரை முல்லை நகர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பை சேர்ந்தவர் இளையராஜா (42). அந்தப் பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. சம்பவத்தன்று இளையராஜா வீட்டின் முன்பு 3-க்கும் மேற்பட்டோர், நின்று சத்தமாக பேசிக் கொண்டு இருந்தனர் இதனை இளை யராஜா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளையராஜாவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக இளையராஜா தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பி.பி குளம் நேதாஜி மெயின் ரோடு, செல்லபாண்டி மகன் ஜோதிபாசு (வயது 19), முல்லைநகர் செல்வராஜ் மகன் கணேசன் (வயது 20), பி.பி.குளம் இந்திரா நகர், முனியாண்டி கோவில் தெரு வேல்முருகன் மகன் பொன்பாண்டி (வயது 21) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    • நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர்.

    கோவை 

    கோவை நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2-வது, 3-வது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.


    இதில் ஆத்திரம் அடைந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து சிங்காநல்லூர், பீளமேடு போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இரண்டு குடும்பத்தினர் வேண்டுதல் முடித்து வாகனத்தில் கிளம்பும்போது உள்ளூரை சேர்ந்த ஒரு பெண் வாகனம் செல்ல வழிவிடவில்லை.
    • 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் வீரனார் கோவிலில் வேண்டுதல் நிறைவேற்றி மனை பூஜை போடுவதற்காக முத்துப்பேட்டை மங்களூர் பகுதியில் இருந்து வந்த இரண்டு குடும்பத்தினர் வேண்டுதல் முடித்து மாலை 5 மணிக்கு வாகனத்தில் கிளம்பும்போது, உள்ளூரை சேர்ந்த ஒரு பெண் வாகனம் செல்ல வழிவிடவில்லை என சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது வாகனத்தில் இருந்தவர்களுக்கும் அங்கு நின்ற ஆலத்தார் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜதுரை (வயது35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (30) என்பவர்க ளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சத்தம் போட்டு உள்ளூர்கார ர்களை கூட்டிய ராஜதுரை, தேவேந்திரன் மற்றும் சிலர் ஓடிவந்து அரிவாளால் வெட்டியதில் முத்துப்பேட்டை மங்களூர் பகுதியில் இருந்து வந்திருந்த 2 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ–க்கல்லூரி மருத்துவ–மனைக்கு கொண்டு செல்லபட்டனர்.

    ஆலத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கத்தியால் குத்தியதில் அதிராம்பட்டினம் அருகே உள்ள மன்னங்காடு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (32), முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (32), பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    அதே பகுதியை சேர்ந்த வீரையன் மகன் கோபி (27), மெய்யப்பன் மகன் கரன் (25), பெரியசாமி மகன் சரவணகுமார் (34) ஆகிய 5 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டதில் கார்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    கோவிலுக்கு வந்தவர்களிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய ராஜதுரை மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் முரளி (வயது22). இவரது சகோதரர் ஜோதி குமார். இவரது குழந்தை நேற்று மாலை எஸ்.எம்.பி காலனி, மாரியம்மன் கோவில் அருகே விளையாட சென்றது. அந்த குழந்தைக்கும், இதே பகுதியில் வசிக்கும் இன்னொரு குழந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே முரளி சமரசம் செய்வதற்காக சென்றார்.

    அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டி (40), அவரது மகன் தமிழ்ச்செல்வன், காளிதாஸ் ஆகியோர் முரளியை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். இதே வழக்கில் துரைப்பாண்டி மனைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முரளி, அவரது சகோதரர் ஜோதிகுமார், வளையாபதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார்.
    • நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார்

    கோவை:

    கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 24). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து மதுகுடித்தார்.

    அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

    பின்னர் பரத்குமார் தனது நண்பரை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த அந்த நபர் அவர்களது பின்னால் வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

    பலத்த காயம் அடைந்த பரத்குமாரை அவரது நண்பர் ரமேஷ் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து பரத்குமார் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42). தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அரித்துவாரமங்கலம் கடைத்தெரு பகுதியில் சூர்யா என்ற வாலிபர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
    • கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிகண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து விட்டு வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் என்பவர் மீது அரித்துவா ரமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா (24) என்ற நபர் கத்தியால் காது மற்றும் கழுத்தை கீறியுள்ளார்.

    அரித்துவா ரமங்கலம் கடைத்தெரு பகுதியில் சூர்யா என்ற வாலிபர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியுள்ளார், இதுகுறித்து பொதுமக்கள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரை ஏற்றுக்கொண்டு, அங்கு வந்த காவலர் மணிகண்டன், சூர்யாவை வீட்டுக்குப் போகும்படி கூறியுள்ளார், அப்போது "என்னை கேட்க நீ யார்"? என்று, தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு காவலர் மணிக ண்டனின் கழுத்து மற்றும் காதுமடல் பகுதியை கிழித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

    இதுகுறித்து அரித்துவா ரமங்கலம் கா வல்து றையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் மேல்சிகி ச்சை க்காக காவலர் மணிகண்டன் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    ×