என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூசாரி"
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, பீம நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குப்பபோயன் (வயது 65).
இவர், அதே ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூசாரியாகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (50) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
குப்பபோயன் கோவிலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருவதால் அவரை மாற்றக்கோரி குப்புசாமியும் (50) இவரது தம்பிகள் ஏழுமலை(45), மணிகண்டன் (40) ஆகியோர் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு பூசாரி குப்பபோயனுக்கு சாதகமாக வந்தது. இதனால் குப்புசாமியும், அவரது தம்பிகளும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், அவர்களுக்குள் முன்விரோதம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.
கடும் ஆத்திரத்தில் இருந்த குப்புசாமி மற்றும் அவரது தம்பிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோர் அரிவாளுடன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குப்பபோயன் வீட்டிற்குள் புகுந்தனர்.
அவர்களை கண்டு குப்பபோயன், அதிர்ச்சி அடைந்தார். பல முறை கூறியபிறகும் கேட்கவில்லை. இனிமேல் உன்னை விட மாட்டோம் என்றபடி குப்பபோயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க குப்பபோயன் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறியபடி ஓடினார். ஆனால் அவரது தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.
பின்னர் குப்புசாமியும், அவரது தம்பிகளும் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள், ஊர் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகிறார்கள். #tamilnews
லாலாப்பேட்டை:
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா (வயது 45). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்தார்.
இந்த நிலையில் மாலதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்ததாக உணர்ந்தார். ஒரு சில வாரங்களுக்கு பின்னர் மருத்துவ மனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கோகிலா கர்ப்பம் அடைய வில்லை என்று தெரிந்தது. ஆனால் அதனை கோகிலா ஏற்கவில்லை.
தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார். அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளும் வந்தது. அன்று மாலையே ஒரு கோவிலில் பூசாரி உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்துள்ளார். நாகப்பாம்பு பிறக்க போவதாக வந்த தகவலால் கோகிலாவின் வீட்டு முன்பு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.
தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் கோமதி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். பூசாரி சரியாக நள்ளிரவு 12.20 மணிக்கு நாகப்பாம்பு பிறக்க போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த நிமிடத்தை எதிர்நோக்கி அனைவரும் திக், திக் என்று காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. ஆனால் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கலைய தொடங்கினர்.
இதற்கிடையே போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து கோகிலாவை ஏற்றிக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை என தெரிவித்துள்ளனர். என்றாலும் அந்த பெண்ணின் உடலை முழுமையாக பரி சோதித்து சிகிச்சை மேற் கொள்ள டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை மருத்துவமனைக்கு கோகிலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற காரணபெருமாள் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக சேரன் நகரை சேர்ந்த வாசுதேவன் (வயது 35) இருந்தார். நேற்று காலை 9 வயது மகளுடன் ஒரு பெண் சாமி கும்பிட வந்தார். கோவிலுக்குள் சிறுமியை விட்டு விட்டு சாமிக்கு பூ வாங்க சென்றார்.
அப்போது பூசாரி வாசுதேவன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பூ வாங்கிக்கொண்டு வந்த தாய் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பூசாரியை திட்டிவிட்டு மகளை வெளியே அழுதுகொண்டே அழைத்து வந்தார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது கோவிலுக்குள் நடந்தவற்றை அவர் கூறினார். ஆத்திரமடைந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பூசாரிக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் கோவில் பொறுப்பாளர் சிவசாமி சம்பவ இடத்திற்கு வந்து பூசாரியிடம் இருந்து சாவியை வாங்கிக்கொண்டு பூசாரி வாசுதேவனை வெளியேற்றினார். பின்னர் கோவிலை பூட்டி சாவியை எடுத்துச்சென்று விட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
அவரது தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம் சென்று சிகிச்சை அளித்தபோதும் அவர் குணமடையவில்லை.
இதற்கிடையில் உறவினர்கள் சிலர் கோவில்களுக்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்தால் மாணவியின் உடல்நலம் சீராகும் என்று கூறினர். இதனால் அவரது தந்தை பல கோவில்களுக்கும் அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தார். அவர்கள் வீடு அருகே உள்ள ஒரு கோவிலுக்கும் மாணவியை அடிக்கடி பரிகார பூஜைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தனது வீட்டில் இருந்த மாணவி திடீரென்று மாயமாகிவிட்டார். வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது பற்றி கொற்றிக்கோடு போலீசில் தந்தை புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார்.
போலீசாரும் மாயமான மாணவி பற்றி தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது அந்த மாணவியை அவரது வீடு அருகே உள்ள கோவிலில் பூஜைகள் செய்யும் பூசாரியே கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் பூசாரியும், மாணவியும் போலீசில் நேற்று மாலை தஞ்சம் அடைந்தனர்.
அந்த பூசாரியும் தானும் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தனது படிப்பு முடியும் நிலையில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் பூசாரியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சித்திரங்கோடு பகுதியில் வசித்து வந்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.
பூசாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளதும், மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அது பற்றி மாணவியிடம் போலீசார் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்கள். மேலும் அவர்களின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பூசாரியுடன்தான் வாழ்வேன் என்று மாணவி பிடிவாதமாக கூறிவிட்டார். பெற்றோர் அவரை தங்களுடன் வரும்படி கண்ணீருடன் கேட்டுக்கொண்ட போதும் மாணவி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவர் மேஜர் என்பதால் அவரை பூசாரியுடன் போலீசார் அனுப்பிவைத்தனர். முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதை பதிவு செய்து தங்களிடம் காட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்