என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 152997"
- பாதிக்கப்பட்ட 47 பேருக்கு ரூ5.83 லட்சம் நிதிஉதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை திருமோகூரில் திருவிழாவின் போது நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை கலெக்டர் சங்கீதா நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி உடல்நலம் விசாரித்தார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளுக்கு அதிகாரி களிடமிருந்து சேதமதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் 8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.14,800/-மும், 34 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கரங்கள் (மொத்தம் 35 வாகனங்கள்) சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 200-ம், பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு நிதி உதவித் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும்– என மொத்தம் 47 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா , ஆதிதிராவிடர் நல அலுவலர் கோட்டூர் சாமி, கிழக்கு வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மழையின் காரணமாக பலத்த சேதம் அடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது
- ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட நீர்வளத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் - திரு வனந்தபுரம் ரெயில் பாதையில் பேயன்குழி ரெயில்வே பாலம் அருகில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக பலத்த சேதம் அடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இப்பகுதியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பழுதடைந்த பகுதி களை சீரமைத்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்தி பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் துறை களுக்கு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் ரூ.2.25 கோடி மதிப்பில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று, பாலத்தின் மேலும் கீழும் நிரந்தர வெள்ளத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது ஆய்வு செய்யப் பட்டது.
அதனைத்தொடர்ந்து சித்திரங்கோடு - சுருளக்கோடு சாலையில் காயக்கரை பகுதியில் ஓடும் கால்வாய்க்கு மேல் நெடுஞ்சாலை துறை சார்பாக ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டதோடு, ஆற்றில் நீர் தேங்காமல் அவ்வழியாக நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளு மாறும், பணிகளை விரைந்து முடித்திடவும் நெடுஞ் சாலைத்துறை அலுவலர் களுக்கு அறிவுறுத் தப்பட்டது.
மேலும் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் பகுதி வழி யாக செல்லும் நெய்யாறு பிரதான கால்வாயில் கன மழையினால் பாதிக்கப்பட்ட சாலை பக்கச்சுவரை ரூ.34 லட்சம் மதிப்பில் நீர்வளத்துறையின் சார்பில் நிரந்தரமாக புனரமைப்பு செய்யும் பணிகள் நடக்கிறது.
இதனை பார்வையிட்ட தோடு, குமாரகோவில் வழியாக செல்லும் பத்மநாப புரம் புத்தனார் கால்வாயில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் முடிக் கப்பட்ட பணியினையும் பார்வையிட்டு, முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது நீர் வளத்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் லாரன்ஸ், மெல்கி சதேக் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.]
- வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
- வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காங்கயம் :
திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகள், கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் எஸ்.என்.எம். சாலை முதல் படியூா் வரை சாலை மேம்படுத்துதல், சிவன்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைத்தல், ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் என ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், விமலாதேவி ஆகியோா் உடனிருந்தனா்
- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
- திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.70லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்குபல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்பணிகள்பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில்கணக்கம்பாளையம் மீனாட்சி நகரில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்ரூ.6.31 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் காலணி முதல் பி.என் சாலை வரை கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6.86 லட்சம் மதிப்பில் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிநிறுத்துக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகட்டும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் தண்டக்காரம்பாளையம் ரோடு முதல் பெரியபள்ளம்வரை சங்கன்பிட் அமைக்கும் பணியினையும்,
விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்கணக்கம்பாளையம் பொன்விழா நகரில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41.25லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கனிமங்கள் மற்றும்குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.0.79 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் சமையலறை பழுதுபார்க்கும் பணிகளையும், பள்ளி உள்கட்டமைப்புமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்கும் பணிகளையும்,
நாதம்பாளையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.11லட்சம்மதிப்பீட்டில் நாதம்பாளையம் விநாயகர் கோவில் முதல் சமத்துவபுரம் வரை நடைபெற்றுவரும் சாலை பணிகளையும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் வாவிபாளையம் ரோடுமுதல் விக்னேஷ்வரா நகர் பிரிவு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும் எனமொத்தம் ரூ.84.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஸ்ரீதர்,உதவிப் பொறியாளர் கற்பகம், மேற்பார்வையாளர் லதா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்கள் பெறப்பட்டது.
- விசாரணை செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்களைபெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்துஅதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)அம்பாயிரநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், திட்டஇயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கரூர் மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
- கரூர் கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தல்
கரூர்,
கரூர் மாவட்ட துறை சார்ந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசும் போது, கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் அளிப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளும் போதும், மின் வாரிய பணியாளர்கள் மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும் போதும், கண்ணாடி இலை கேபிள் அமைக்கும் பணி மேற் கொள்ளும் போது சாலை யோரங்களில் மற்றும் பிற இடங்களில் குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகள் உள்ளனவா என்பதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் உறுதி செய்து சேதப்படுத்தாமல் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது ஏற்படும் சேதங்களை அந்த துறையினரே உடனடியாக சரி செய்து கொடுக்க நட டிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லலிதா, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள்.
- காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
திருப்பூர் :
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் பஞ்சாயத்துக்கு உடபட்ட காளிவேலம்பட்டி கிராமத்திலிருந்து செம்மிப்பாளையம் ஊராட்சி சாமிகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள். தினந்தோறும் இந்த பகுதிகளில் இருந்து நடந்தும் சைக்கிளிலும் சென்று வருகின்றனர்.
இதனால் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பகுதியில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் .
- வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
திருப்பூர் :
தாராபுரம் வேங்கிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மல்லிகா (வயது 42) என்பவர் திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது அண்ணன் முருகேசன் பெருந்தொழுவில் வசித்து வருகிறார். அவரது மனைவி தங்கமணி.
இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில் தங்கமணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதற்கான மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் . நானும் கொடுத்தேன். இந்தநிலையில் நான் கொடுத்த பணம் போதவில்லை. அதனால் பெருந்தொழுவில் உள்ள வீட்டை முருகேசன் விற்க முடிவெடுத்தார். அது குறித்து நான் கேட்டபோது வீட்டை நீ வேண்டுமானால் வாங்கி கொள் என்று சொன்னார். அதன்படி அந்த வீட்டுக்கு ரூ. 14 லட்சத்தை கிரயத்தொகையாக வங்கியில் செலுத்தியுள்ளேன். அந்த வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டை தங்கமணி அபகரிக்க முயல்கிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் மற்றும் ராமநாதபுரம் வட்டத்தில் பொதுப்பணித்துறையில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமக்குடி வட்டம், பாண்டியூர், சிறகிக்கோட்டை, தொருவர், காரேந்தல் ஆகிய பகுதிகளுக்கு சென்று வைகை ஆற்றில் இருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளில் கரைகள் வலுப்படுத்தும் பணி, தடுப்பணைகள் கட்டும் பணி மற்றும் பாசன கண்மாய்களில் கழுங்குகள், மடைகள் புதிதாக கட்டும் பணி ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து வரும் மழை கலத்திற்குள் முடித்திட வேண்டும்.
வைகை ஆற்றில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரக்கூடிய தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்க குறித்து சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.
மேலும் மழைக்காலம் துவங்குவதற்குள் கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைத்திட பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் சென்று முழு கொள்ளளவை எட்டியதும் அதனை ஒட்டி யுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாசன கண்மாய்க ளுக்கு தண்ணீர் கொண்டு சென்று முழுமையாக நிரப்பிட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுத்து விவசாயிகளுக்கு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்த் பாபு, வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள்ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.
- 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் ெகாழுக்கட்டை , கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்தகுழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைமேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டம்.இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 0-6வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள்ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை. தகுதியுடைய அனைவரும் தங்கள்இல்லத்திற்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்துபயன் பெறலாம். 2 முதல் 6 வயது வரையிலான மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளுக்குஆடிப்பாடி விளையாடு பாப்பா பாடத்திட்டத்தின் படி விளையாட்டு மூலம் மாதம் ஒருதலைப்பின் மூலம் உடல், மனம், அறிவு, மொழி, சமூக வளர்ச்சியை உருவாக்கும் கல்விவழங்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு உணவூட்டுதல், கணவன்மார்களுக்கான விழிப்புணர்வு, பொதுசுகாதாரம் ஆகிய சமுதாய நிகழ்வுகள் மாதம் இரு முறை மையத்தில்நடத்தப்படுகின்றது.
தமிழக முதல்வர் முன்னோடி திட்டமானஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் பயனாளர்களான 0 மாதம் முதல்6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்குஇரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 0 மாதம் முதல் 6 மாதம் வரை மிதமானஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம்வழங்குவதும், மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையானஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு (56 நாட்களுக்கு) Ready to use Therapeutic Food வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினைமேம்படுத்துவதாகும். இத்திட்டமானது தமிழக முதல்-அமைச்சரால் 28-2-2023 அன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தினை அனைத்துமாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் திருப்பூர் மாவட்டகலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்குசிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை தமிழ்வளர்ச்சி மற்றும்செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 4.3.2023 அன்று துவக்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 0 மாதம் முதல் 6 மாதம் வரை கடுமையானஊட்டச்சத்து குறைபாடுள்ள 451 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 902எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், 0 மாதம் முதல் 6மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 549 குழந்தைகளின் தாய்மார்களுக்கு549 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் என மொத்தம் 1451ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 6 மாதம் முதல்6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2430 குழந்தைகளுக்கு Ready to use Therapeutic Food வழங்கப்பட்டுள்ளது. சத்துமாவு வழங்கபடும் அளவானது 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 125 கிராம் வீதம் மாதத்திற்கு 3.125 கி.கி., வழங்கப்படுகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டு தாய்மார்களுக்கு தினமும் 150 கிராம் வீதம் மாதம் 3,750 கி.கி. வழங்கப்படுகிறது. 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு 50 கிராம் வீதம் ெகாழுக்கட்டை , கஞ்சி மற்றும் உருண்டையாக வழங்கப்படுகிறது.
முட்ைட வழங்கப்படும் விதமானது 1-2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்தில் 3 முட்டை வீட்டில் வழங்கப்படும். 2-6 வருடம் வரையிலான குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் முட்டையுடன் மதிய உணவு குழந்தை மையத்தில் வழங்கப்படும். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை 60 கிராம், 2-6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 30 கிராம் வழங்கப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும் வகையில் பணி இருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
- முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தஹீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக்கல்வி துறை யின் மூலம் 'எண்ணும் எழுத்தும்" திட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
'எண்ணும் எழுத்தும்' என்னும் மாபெரும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப் பட்டு 1-ம் முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு அவர்க ளின் மனநிலைக்கேற்ப நாடக வடிவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வாயி லாகவும், நடன வடிவிலும், கருத்தரங்கம் மூலமாக என பல்வேறு நிலைகளில் குழந்தைகள் எளிதாக கல்வியை கற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது. அதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய திட்டம் குழந்தைக ளிடமும், பெற்றோர்களி டமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஆரம்ப கல்வி யில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது.
அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடப்பாண்டிற்கு 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவுப்ப டுத்தி எளிய முறையில் மாணவ, மாணவிகளின் மனநிலைக்கேற்ப கல்வி கற்பிக்க இத்திட்டம் தொடங்கி உள்ளது.
இதன் நோக்கம் சுற்றுச்சூழலை அறிந்து குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கி எதிர்காலத்தின் நிலையை உணர்ந்து கல்வியை கற்பதற்கு ஏது வாக உங்களுடைய பணி இருந்திட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் இந்த பணியால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப உங்கள் பணி அமைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
- பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.
அயன்கரிசல்குளத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் மயான சாலை, அசரப்பட்டியில் ரூ.1.99 லட்சம் மதிப்பில் நடக்கும் நூலக கட்டிட பராமரிப்பு பணி, ரூ.2.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.9.578 லட்சம் மதிப்பில் நடக்கும் பட்டத்தரசியம்மன் ஊரணி தூர்வாரும் பணி, தடுப்புச்சுவர், படித்துறை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இலந்தை குளம், ஆயர்தர்மம், மூவரை வென்றான் உள்ளிட்ட பகுதி களில் அரசின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, செயற்பொறி யாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்தியசங்கர், உதவி பொறியாளர்கள் வள்ளிமையில், ஜெயா, ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்