search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்யுத்தம்"

    • பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னியிடம் தோல்வியடைந்தார்
    • 61 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பங்கஜ் முதல் சுற்றிலேயே வெளியேறினார்

    பெல்கிரேடு:

    செர்பியாவின் பெல்கிரேடு நகரில் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா கலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னி டயகோமிஹாலிசிடம் தோல்வியடைந்தார். எனினும் யான்னி

    டயகோமிஹாலிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், பஜ்ரங் புனியாவுக்கு ரெப்பேஜ் சுற்றில் விளையாடி வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இந்திய இளம் வீரரான சாகர் ஜக்லான், 74 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார். அவர் மங்கோலியாவின் சுல்ட்கு ஓலோன்பயாரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்தார். இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஈரான் வீரர் யோனசை சந்திக்க உள்ளார்.

    97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் விக்கி தகுதிச் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் சாமுவேல் ஷெரரிடம் 2-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் பங்கஜ் (61 கிலோ) பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அசில் அய்டகினிடம் தோல்வியடைந்தார்.

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளனர்.
    • மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

    பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மல்யுத்த வீரர் மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றதன் மூலம், மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

    இந்நிலையில் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் மல்யுத்த வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பமுடியாத வடிவம். பதக்கப் பட்டியலில் மோஹித் கிரேவால் இணைந்துள்ளார். அவர் ஒரு வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வரும்போது அவரது கூர்மையான கவனம் தனித்து நிற்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவார் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஆண்கள் மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார்.
    • காமல்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்க பதக்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடை பெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   

    கனடா வீராங்கனை அனா கொடினஸ் கோன்சலசை வீழ்த்திய அவர், நடப்பாண்டிற்கான காமல்வெல்த் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் தங்கப் பதக்கம் 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னாக இன்று இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    உலக மல்யுத்தம் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரரான பஜ்ரங் புனியா முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #BajrangPunia
    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 65 கிலோ எடைப்பிரிவில் சமீப காலமாக சிறப்பான வகையில் சண்டையிட்டு வருகிறார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளனர்.
    ×