என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 153764"
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடைபெறும் கூட்டங்களில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.
நாளை மறுநாள் (10-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் பேசுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ராயக்கோட்டையிலும், 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து பேசுகிறார். #KamalHaasan
தருமபுரி:
தருமபுரி காந்தி நகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பிரகதீஸ்வரன் (வயது 14). இவன் காந்திநகர் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும். மாணவன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் உங்கள் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மாணவரை ஆட்டோவில் அழைத்து சென்றார்.
பின்னர் ஆட்டோ டிரைவர் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனின் தந்தை ராஜாவிடம் பேசினார்.
உங்கள் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினான். இந்த பேச்சை கேட்ட மாணவன் வெங்கடம்பட்டி அருகே ஆட்டோ சென்ற போது அதில் இருந்து குதித்து ஊருக்குள் சென்று, அந்த பகுதி மக்களிடம் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்தி வந்ததாகவும், அதில் இருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறினார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் மாணவனை கடத்திய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள். மாணவனிடமும் விசாரணை நடந்து வருகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த தகவல் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து தருமபுரி பஸ் நிலையம், 4 ரோடு, கடைவீதி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, எஸ்.வி.சாலை, முகம்மது அலி கிளப் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ராஜகோபால் கவுண்டர் தெரு, ஆர்.பி.சுந்தரம் தெரு, நேதாஜி பைபாஸ்ரோடு, பென்னாகரம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு, பாரதிபுரம், ஒட்ப்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 7 மணிமுதல் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.
இதேபோன்று பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்ட புறநகர் மற்றும் நகர அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் ரத்து செய்யப்பட்டது. வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் மீண்டும் தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பவில்லை. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணி மனையில் நிறுத்தப்பட்டன.
பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஷேர் ஆட்டோக்கள் மூலம் அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் சென்றனர்.
இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும், ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கும் நேற்று இரவு முதல் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. வெளிமாநிலத்துக்கு செல்ல கூடிய பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொண்டர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பஸ் நிலையம், ஒட்டப்பட்டி முதல் 4 ரோடு வரை ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று அதியமான்கோட்டை, காரிமங்கலம், மதிகோண் பாளையம், தொப்பூர், கிருஷ்ணாபுரம், பழைய தருமபுரி ஆகிய பகுதிகளிலும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கடைகள் முழுவதம் அடைக்கப்பட்டன.
பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்தந்த பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார், பாகலூர் சாலை, தாலுகா அலுவலகம் சாலை, பழைய பெங்களூரு ரோடு, ஏரிரோடு ஆகிய பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு 7 மணி முதல் நிறுத்தப்பட்டன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தினசரி ஆயிரக்கணக்கனோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.
இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஓசூருக்கு வந்த தமிழக பஸ்கள் பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தினமும் 800 கர்நாடக அரசு பஸ்கள் இன்றும் இயக்கப்படவில்லை.
இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை ஆட்டோக்களில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோன்று அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆட்டோ மூலம் அத்திப்பள்ளி வரை வந்தனர்.
ஊத்தங்கரை பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இதேபோன்று மத்தூர், சிங்காரபேட்டை, கல்லாவி ஆகிய பகுதி களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஏதும் இயக்கப்படாத தால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப் பட்டன.
போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு முதல் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. போச்சம்பள்ளி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும், 4ரோடு, திருப்பத்தூர்-தருமபுரி மெயின்ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. பாரூர், அரசம்பட்டி, புலியூர், நாகரசம்பட்டி, இருமத்தூர், சந்தூர், மஞ்சமேடு, கண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. கிராமங்கள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயக்கவில்லை. இரவு 7 மணிக்கு பஸ் நிலையம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.
சூளகிரி தாலுகா சூளகிரி, பேரிகை, வேப்பனஅள்ளி, உத்தனபள்ளி பகுதிகளில் நேற்று மாலை கருணாநிதி இறந்த தகவலை அறிந்த வுடன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வாகன போக்குவரத்துகள் குறைந்தது, கடைகள் அடைக்கப்பட்டன. சூளகிரி யில் இன்று காலை முழுவதும் கடை அடைக்கப்பட்டது.
ஓசூர்-கிருஷ்ணகிரி சாலை, சூளகிரி பேரிகை சாலை, பஸ நிலைய சாலை, கீழ் தெரு சாலை, நெஞ்சாலையில் உள்ள உள்ள பெரிய அளவில் உள்ள ஓட்டல்கள் போன்ற கடைகள் மூடப் பட்டன. சூளகிரியில் பஸ் நிலையத்தில் எந்த பஸ்கள் ஒடாததால் வெறிச்சோடி காணப்பட்டன. வீடுகள் முக்கிய வீதிகளில் கருணா நிதி உருவபட பேனருக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வருமான வரித்துறை சோதனை சாவடி அருகே தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சோதனை சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும் வந்தது.
அப்போது அங்கு நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த 2 மினிலாரிகளையும் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரிகளில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 லாரிகளில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகரைச் சேர்ந்த டிரைவர் புஷ்பராஜ் (வயது 32) என்பவரையும், போச்சம்பள்ளி அணைகொடி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (36) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் 2 மினிலாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை 309 அட்டை பெட்டிகளில் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மதன்பாய் என்பவரிடம் இருந்து இந்த குட்கா பொருட்களை லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் 2 மினி லாரிகளின் டிரைவர்களை கைது செய்து 309 அட்டைபெட்டிகளில் இருந்த 7 லட்சத்து 24 ஆயிரத்து 500 குட்கா பாக்கெட்டுகளையும், 2 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள மதன்பாய் மற்றும் மினிலாரிகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்கள் மதுரையில் எந்த வியாபாரிக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தனர் என்றும், அதன் உரிமையாளர் யார்? என்ற விபரம் குறித்தும் போலீசார் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை மினிலாரிகளில் கடத்திவந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தம்பாடியை அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராணி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். ராணி கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழட்டி மேசை மீது வைத்து விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மேசையின் மீது வைத்திருந்த 2பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் புகுந்து மேசையின் மீதுவைத்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். #tamilnews
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் முழு உயரத்துக்கும் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை நீரையும் சேர்த்து கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,068 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக நேற்று மாலை 4 மணி அளவில் அணையில் 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும் பாசனக் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி அணையில் தரைபாலம் மூழ்கி விட்டதால், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த மல்லைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 51). கொத்தமல்லியை மொத்த விற்பனைக்கு வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்தார்.
இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பகுதியில் கொத்தமல்லி வாங்குவதற்காக காரில் வந்தார். நேற்று மாலை மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தடங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென்று இடதுபக்கத்தில் இருந்து வலது பக்கமாக திரும்பியது.
இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் கார் ரோட்டில் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Tamilnews
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெரிய கம்மாலப்பட்டியை சேர்ந்த பூபதி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுக்காக காத்திருந்த விக்னேஷ் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தருமபுரி மாவட்டத்தில் பஸ் நிலையம், சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, சேலம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, ஆகிய பகுதிகளில் வழக்கம்போல் ஓட்டல்கள், டீக்கடைகள், துணிக்கடைகள், பழக்கடைகள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டன.
ஆனால் தருமபுரி ரூட் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ளே மட்டுமே மருந்து கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள் உள்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.
மேலும் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழக்கம் போல் டவுன் பஸ்களும் இயங்கின. இதேபோன்று தருமபுரியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் இயங்கின.
பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், பொம்மிடி, காரிமங்கலம் உள்பட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. ஆட்டோகளும், பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ் நிலையங்களில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பூக்கடை, ஓட்டல்கள், மருந்து கடை, டீக்கடை உள்பட கடைகள் திறந்திருந்தன. மேலும் பஸ் நிலையத்தில் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
இதுபோன்று ராயக்கோட்டை, ஓசூர், வேப்பன அள்ளி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்து இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் மூடியிருந்தன.
தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் 209 அரசுபள்ளிகள் உள்பட மொத்தம் 308 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 11 ஆயிரத்து 187 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 545 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 731 பேர் 80 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.
தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி வெளியிட்டார்.
இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 652 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 146 பேரும் என மொத்தம் 20 ஆயிரத்து 798 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 209 அரசு பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 785 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 932 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர்களில் 95.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 94.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 94.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் கண் தெரியாதவர்கள் 8 மாணவர்கள் எழுதியதில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாத, வாய் பேசாத மாணவ, மாணவிகள் 29 பேர் தேர்வு எழுதியதில் 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் 30 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோன்று கை மற்றும் உடலில் காயம் அடைந்தவர்கள் போன்ற மாணவர்கள் 36 பேர் தேர்வு எழுதியதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் மாவட்டத்தில் 481-க்கு மேல் மதிப்பெண்கள் 393 பேர் பெற்றுள்ளனர். 450-க்கு மேல் மதிப்பெண்கள் 1564 பேர் பெற்றுள்ளனர். 426-க்கு மேல் மதிப்பெண்கள் 1367 பேர் பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 20 இடம் பெற்ற தருமபுரி மாவட்டம் இந்த ஆண்டு 16-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
தருமபுரி மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 154 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 747 மாணவர்களும்,10 ஆயிரத்து 267 மாணவிகளும் என மொத்தம் 21ஆயிரத்து014 பேர் 64 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது உடன் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பொன்முடி உடனிருந்தார்.
தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 804 மாணவர்களும், 9 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் கண் பார்வையற்றவர்கள் 5பேர் தேர்வு எழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாதவர்களில் 15 பேர் எழுதி 13 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். ஊனமுற்றவர்களில் 46 பேர் தேர்வு எழுதி 37 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கையால் எழுத முடியதாவர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட 12 பேர் தேர்வு எழுதி 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 92.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.56 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 பேர் 1180க்கும் மேல் மதிப் பெண்களும், 78 பேர் 1151க்கு மேல் மதிப்பெண்களும், 196 பேர் 1125-க்கும்மேல் மதிப்பெண்களும், 315 பேர் 1000-க்கும் மேல் மதிப் பெண்களும் பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
தருமபுரி , பாரதிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயராஜன். இவர் தருமபுரியில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இவருக்கும் மெய்சேரி அடுத்த கட்ட புளியமரம் பகுதியை சேர்ந்த சுகுணா என்பவருக்கும் திருமணம் ஆகி 19 நாட்களே ஆகிறது.
நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் கட்ட புளியமரம் கிராமத்தில் இருந்து மனைவியை அழைத்து கொண்டு பாரதி புரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
பாளையம் புதூர் அருகே பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது இவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே விஜயராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். சுகுணாவுக்கு கால் முறிந்தது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்