என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாசு"
- தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதையொட்டி, சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று காலை தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மருந்து பொருட்கள் வெடித்து சிதறின.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாமாக இறந்தனர். அவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோனில் வெடிவிபத்து நடந்தது 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்ட தடயவியல் துறை ஆய்வு செய்ததில் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த விபத்து நடந்தது என்று அமைச்சர் கூறினார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் பட்டாசா? கியாஸ் சிலிண்டரா? என்பது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்ததால் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழையபேட்டையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அப்போது சம்பவம் குறித்து தகவல்களை ஐ.ஜி. சுதாகர், மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார். மேலும், பட்டாசு குடோன் வெடித்து பலியானவர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார். மேலும், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.
இதேபோன்று சென்னையில் இருந்து தடயஅறிவியல் துறை இயக்குனர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குனர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடிவிபத்து நடத்த கிருஷ்ணகிரிக்கு இன்று நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வெடிவிபத்து நடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
- சிலைகள் வைக்க போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளின் அனுமதி தேவை
- மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்ல கூடாது
கோவை,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் விநாயகர் சிலைகளை பிரதி ஷ்டை செய்து வழிபட இந்து அமைப்பினர் தயாராக வருகிறார்கள். அவ்வாறு விநாயகர் சிலை வைக்க கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள கட்டுப்பாடு விவரம் வருமாறு:-
1. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் சிலைகள் வைக்க விரும்பும் அமைப்பினர், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
2. கோவை மாநகரில் சிலை வைக்க அந்தந்த பகுதியில் உள்ள உதவி காவல் ஆணையரிடமும், மற்ற இடங்களில் சார்ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடமும் தடையில்லா சான்று பெற்று இருக்க வேண்டும். சிலை வைக்கும் இடம் தனியாருக்கு சொந்தமானது எனில், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமும், அரசு புறம் போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும்.
3. ஒலி பெருக்கிகள் பயன்படுத்த காவல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
4. சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதிகள் ஆகியவை குறித்து தீயணைப்பு அலுவலரிடமும் சான்று பெற வேண்டியது அவசியம்.
5. தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்காக தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.
6. விநாயகர் சதுர்த்தி விழவையொட்டி நிறுவப்படும் சிலைகள் தூய களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு. வாரியம் தடை செய்த பொருட்கள் மற்றும் வண்ணங்களை கொண்டு சிலைகள் உருவாக்கக்கூடாது. எளிதில் நீரில் கரையும் நச்சு அல்லாத இயற்கை வண்ணங்களை உபயோகப்படுத்த வேண்டும். ரசாயன சாயங்களை பயன்படுத்தக் கூடாது.
7. சிலைக்கான பந்தல் அமைக்கும் போது எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த கூடாது. பந்தல் அருகே தற்காலிக முதலுதவி மற்றும் அவசர கால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வழிபாட்டு பகுதிகளை சுற்றிலும் எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருட்களை வைத்திருக்க கூடாது.
8. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்து வமனை, கல்வி நிறுவ னங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிலைகள் வைக்கக் கூடாது. கூம்பு வகை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. பெட்டி வகை ஒலிபெருக்கிகளை மட்டும் பயன்படுத்தவேண்டும்.
9. சிலை நிறுவப்பட்ட இடங்களில் போதிய மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும். அங்கு தீ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை தீயணைப்பு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
10. நான்கு சக்கர வாகனங்கள், மினி லாரி மற்றும் டிராக்டர் ஆகியவற்றில் சிலைகளை கொண்டு செல்லலாம். ஆனால் மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது. விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
11. விநாயகர் சிலை உள்ள இடங்கள் மற்றும் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு, வெடிபொ ருட்களை பயன்படுத்த அனுமதியில்லை. சிலைகளை நீரில் கரைப்பதற்கு முன்பாக மலர்கள், துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை தனியாக பிரித்து விட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உத்தரவில் கூறி உள்ளார்.
- தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.
- பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து பட்டாசு விற்பனையா ளர்கள், தயாரிப்பாளர்கள், தீயணைப்பு துறை பணியாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது.
தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்ச் பாக்ஸ் வைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் தொட்டியில் 200 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
இருவழி பாதை கட்டாயம் இருக்க வேண்டும். உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.
அனைவரும் விழிப்புடனும் கவனமாகவும் இருந்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
பெரியவர்கள் மேற்பார்வையில் தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
பட்டாசை மிகவும் ஜாக்கிரதையாக வெடிக்க வேண்டும்.
நனைந்த பட்டாசுகளை எரிந்து கொண்டிருக்கும் கியாஸ், விறகு அடுப்பின் அருகே வைத்து உலர வைக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- பட்டாசுகள் என்றாலே நினைவில் வருவது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தான்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகள் தற்போது நேரடி விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன.
சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அனைத்து ரக பட்டாசுகளும் crackersindia.com மூலம் 85 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் என்றாலே நினைவில் வருவது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தான்.
குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவுக்கு பட்டாசுகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனை, வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன. சிவகாசியில் பட்டாசுகள் வாங்க மக்கள் அலைமோதுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகள் தற்போது நேரடி விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன.
சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன.
கைகளில் சுத்தி விளையாடும் கம்பி மத்தாப்பு, தரையில் வேடிக்கை காட்டும் சங்கு சக்கரம், கண்களுக்கு விருந்து அளிக்கும் வாண வேடிக்கைகள் பொதுமக்கள் ஆர்வமாக வாங்குவதால்
இந்த தீபாவளி பட்டாசுகளும் மத்தாப்புகளும் நிறைந்த கொண்டாட்ட தீபாவளியாக இருக்கும் என்பதே உண்மை.
கூட்ட நெரிசலை தவிர்க்கவே வந்துவிட்டது.
பட்டாசுகள் அனைத்தும் ஆர்டர் கொடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள்ளே, டோர் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட்டில் பிக் அப் செய்யப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.crackersindia.com/shop
85% சிறப்பு தள்ளுபடில சும்மா சூப்பரான www.crackersindia.com/shop Rs. 2500/- ரூபாயிலே பட்டாசு கிடைக்குது Rs. 6000/-க்கு மேல் வாங்கினீங்கனா இலவச டோர் டெலிவரி கிடைக்கும்.
முந்துங்கள்.
ஆர்டர் செய்ய :
Whats app மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு. WhatsApp no.99949 17010
தீபாவளிக்கு வாண வேடிக்கை காண
புக் செய்ய கடைசி தேதி 05.11.2023
- பட்டாசுகள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி அருகே மேட்டமலை வாடியூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடை ஒன்றின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி வி.கே.எஸ்.தெருவை சேர்ந்த விஜயன் (38), ஜெனார்தனன் (42) ஆகியோரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை பகுதியில் வங்கி அருகே தகர செட்டு ஒன்றில் 3 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
- உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
நீடாமங்கலம்:
கடந்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிர் இழந்தனர். இதையடுத்து பட்டாசு தயாரிக்கும் இடங்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வலங்கைமான் பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் மற்றும் அக்ரஹாரம், உப்புக்கார தெரு, கீழத்தெரு, வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட சட்ட விதிகளின் படி உரிய ஆவணங்களுடன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா? உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையில் விதி முறைகளை மீறி பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள், பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அனுமதி க்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெடிபொருட்கள் வைத்திருந்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தனர்.
- வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
மன்னார்குடி:
சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேர்ந்த வெடி விபத்துக்களில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி வருவாய் கோட்டாசியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது வெடியின் தரம், ஆபத்துகால முன்னெச்சரிக்கை பணிகள்,வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மன்னார்குடி வட்டசியர் கார்த்திகேயன் தீயனைப்பு துறை அதிகாரி சீனிவாசன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தேஷனாமூர்த்தி வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சேலம்:
பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
குழு அமைப்பு
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
11 நிறுவனங்கள்
சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
643 விண்ணப்பங்கள்
இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.
- விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி அலகுகள் மற்றும் பட்டாசு விற்ப னைக்கடைகள் வெடிபொ ருள் சட்டத்தின்படி தீய ணைப்புதுறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகா ப்புத்துறை யின் தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.
உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இடத்தில் மட்டும் உரிம அளவின்படி உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருப்பு வைத்து க்கொள்ள வேண்டும். அனைத்து பாது காப்புகள் குறித்த நட வடிக்கைகளை தவறா மல் கடைபிடிக்க வேண்டும்.
உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.
உரிமம் பெறாத இடங்க ளில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொண்டு கைது செய்யப்படுவார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத இடங்களில் மொத்தமாக பட்டாசுகள் பதுக்கிவைத்துல் இருப்பு வைத்தல் போன்றவைகள் தெரியவந்தால் பொது மக்கள் 9865437801 என்ற எண்ணில் தகவல் அளிக்க லாம்.
பொதுமக்கள் பட்டாசு பண்டில்கள், பட்டாசு கிப்டு பாக்ஸ்களை பேருந்துகள் மற்றும் ரெயில் பயணங்க ளின் போது உடன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசு கிடங்குகளில் நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவி டப்பட்டுள்ளது.
தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் ெரயில், பஸ்கள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறினால் கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பா ளர்கள், விற்பனை யாளர்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
- அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.