search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவின் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
    • அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

    பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ் நாட்டிலும் 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

    ஆவின் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.

    இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

    அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

    அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்.

    எனவே, உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார்.
    • பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

    என்றாலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது விரிவான தகவல்களை வெளியிட்டார்.

    அமித்ஷா கூறுகையில், "1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்" என்று தெரிவித்தார்.


    புதிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார். அந்த செங்கோல் பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் தமிழக செங்கோல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த தமிழக செங்கோல் அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை புதுப்பித்து டெல்லிக்கு கொண்டு வர உள்ளனர்.

    அந்த செங்கோலை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் நிறுவும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் அடையாளமாக நேருவிடம் அந்த செங்கோல் எத்தகைய நிகழ்ச்சிகளுடன் வழங்கப்பட்டதோ அதே போன்ற நிகழ்ச்சிகளுடன் வருகிற 28-ந்தேதியும் விழாவை நடத்த மத்திய அரசு அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக தமிழக செங்கோலை நிறுவும் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க தமிழக கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி அதிகாரம் மாற்றங்கள் செங்கோல் வழங்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக மூதாதையர்களின் அந்த பாரம்பரிய சிறப்பை பாராளுமன்றத்தில் நவீன முறையில் பிரதமர் மோடி நிகழ்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

    28-ந்தேதி காலை பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அலகாபாத் மியூசியத்தில் இருந்து எடுத்து வரப்படும் அந்த செங்கோல் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்படும். பிறகு அதை ஆதீனங்கள் புடைசூழ பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை பகுதிக்கு எடுத்து செல்வார்கள்.

    அப்போது தமிழர்களின் கலாசார சிறப்பை கொண்ட மேளதாளங்கள் இசைக்கப்படும். அந்த மேளதாளங்கள் முழங்க பிரதமர் மோடியும் அழைத்துச் செல்லப்படுவார். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே வந்ததும் அந்த செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.

    இதையடுத்து கோளறு பதிகத்தில் இடம் பெற்றுள்ள "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்ற பாடல் வரிகள் பாடப்படும். அந்த சமயத்தில் தமிழக செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவுவார்.

    அப்போது ஓதுவார்கள் தொடர்ந்து கோளறு பதிகம் பாடிக்கொண்டே இருப்பார்கள். நாதசுவரமும் இசைக்கப்படும். இதன் மூலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக கருதப்படுகிறது.

    இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார். பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.

    • டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
    • 8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இணைக்க பாராளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.

    8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.

    பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது. அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமரிடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.
    • கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாமின் கவுகாத்திக்கு வருகை தர உள்ளதால், அம்மாநில தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், அங்கு அசாம் அரசு பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கிட்டத்தட்ட 45,000 பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கப்படுகிறது.

    ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை விநியோகிக்கவுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்க இருக்கும் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியை கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், "வெற்றி பெற்ற 44,703 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார். அதே நாளில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டுவார்" என்றார்.

    மாநில அரசின் 22765 பதவிகளுக்கான கூடுதல் விளம்பரங்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசு வெளியிடும் என்றும் அசாம் முதல்வர் கூறினார்.

    • கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
    • இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி அமித்ஷா பேசியதை தொலைக்காட்சி சேனல்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் வீடியோ எடுக்க கூடாது என்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் கூறினார்கள்.

    இதனால் கோபம் அடைந்த அமித்ஷா, வீடியோ எடுக்க அனுமதிக்கும்படி மத்திய ஆயுதப்படை வீரர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கர்நாடகத்தில் சாதி மற்றும் மதங்களுக்கு இடையே காங்கிரஸ் தலைவர்கள் சண்டையை ஏற்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதே காங்கிரசின் வேலையாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இரட்டை என்ஜின் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பாகும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தான் உத்தரவாத அட்டையே கொடுக்கின்றனர். வருகிற 10-ந் தேதி அனைத்து மக்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.
    • காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை.

    மங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கடலோர மாவட்டமான உடுப்பியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் உடுப்பியில் திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நடத்தினார். சாலையின் இருப்புறங்களிலும் ஏராளமானோர் திரண்டு அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் நடந்த பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    கர்நாடகத்தில் வருகிற 10-ந்தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள், காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசுக்கு பதிலாக பா.ஜனதாவுக்கு வாக்களித்து இரட்டை என்ஜின் ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்துக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 418 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகத்துக்கு ரூ.99 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது.

    காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசு கர்நாடகத்தை அவர்களின் ஏ.டி.எம்.மாக பயன்படுத்தியது. செழிப்பு, வளர்ச்சி மற்றும் அமைதியை உறுதிப்படுத்த பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.

    அரசியல் ஆதாயத்திற்காக ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரித்த காங்கிரசை மக்கள் நம்ப வேண்டாம். பா.ஜனதா அரசு அந்த அமைப்பை தடை செய்து, அதன் தலைவர்களை சிறையில் தள்ளியது. பா.ஜனதாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை பயங்கரவாத செயல்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாதது. அதேநேரத்தில் காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.

    காங்கிரஸ் வெளியிட்ட உத்தரவாத அட்டை கர்நாடகத்தில் வேலை செய்யாது. காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை. இதில் அவர்களின் ஆட்சிக்கு உத்தரவாத அட்டையை யார் நம்புவார்கள், ஊழல், சமாதான அரசியல், குடும்ப ஆட்சி மட்டுமே காங்கிரசின் உத்தரவாதங்கள்.

    அசாம், திரிபுரா, மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் காலத்தில் வெளியிட்ட காங்கிரஸ் உத்தரவாத திட்டங்களை மக்கள் நிராகரித்து விட்டனர். கர்நாடக மக்களும் இதை பின்பற்றுவார்கள்.

    பா.ஜனதா அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. லிங்காயத், ஒக்கலிகர், ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி சமத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. அம்பேத்கர் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை.

    மாநில மக்கள் கட்சியான ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். ஜனதாதளம்(எஸ்) கட்சி காங்கிரசின் பி 'டீம்'. அவர்களுக்கு வாக்களிப்பது, காங்கிரசுக்கு வாக்களிப்பது போன்றதாகும். 2023-ம் ஆண்டு பா.ஜனதாவுக்கு வாக்களிப்பது இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த வெற்றி 2024-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு அடித்தளமிடும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது.
    • பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார்.

    பெங்களூரு

    கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் நேற்று 2-வது நாளாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பாகல்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வளர்ச்சி பின்னோக்கி செவ்லும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னிலைக்கு வரும். ஊழல் அதிகமாக நடைபெறும். குறிப்பிட்ட சமூகத்தை கவரும் அரசியலை அக்கட்சி செய்யும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வன்முறையால் கர்நாடகம் பாதிக்கப்படும். பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரால் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்காது.

    கர்நாடகத்தில் லிங்காயத் தலைவர்களை காங்கிரஸ் எப்போதும் அவமதித்து வந்துள்ளது. லிங்காயத் சமூகத்தில் வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பா ஆகிய 2 தலைவர்களுக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்கியது. அவர்களையும் அக்கட்சி அவமதித்து கட்சியை விட்டு நீக்கியது. அக்கட்சி நீண்ட காலம் ஆட்சி செய்தது.

    பா.ஜனதாவில் இருந்து வந்த தலைவர்களை வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. இதை பார்க்கும்போது, அக்கட்சியில் தலைவர்கள் இல்லாமல் திவாலாகிவிட்டதை காட்டுகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சியை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு அகற்றியது. இப்போது காங்கிரஸ் கட்சி எங்கள் கட்சியின் சில தலைவர்களுடன் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. ஆனால் இதை வட கர்நாடக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது வட கர்நாடகத்தில் கலசா-பண்டூரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி வந்த பிறகு நாங்கள் செய்த பணிகளில் 10 சதவீதத்தை காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யவில்லை.

    கர்நாடகத்தில் லம்பானி, குருபா மலைவாழ் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரத்தை வழங்கினோம். அந்த மக்கள் வசித்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றியுள்ளோம். இதை இந்த இரட்டை என்ஜின் அரசு தான் செய்து காட்டியுள்ளது. காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சண்டை போட்டு கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராது.

    பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடக முதல்-மந்திரியாக வருவார். ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். அந்த கட்சிக்கு நீங்கள் போடும் ஓட்டு காங்கிரசுக்கு செல்லும். காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், கர்நாடகத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம். பிரதமர் மோடி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்துள்ளார்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
    • கட்சி அந்தஸ்து குறித்து உள்துறை மந்திரியிடம் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் குற்றம் சாட்டினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது.

    இதற்கிடையே, கட்சி அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மம்தா பானர்ஜி போனில் பேசியதாக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டி இருந்தார்.

    மேலும், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மேற்கு வங்காள மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரியில் பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், நாட்டில் மீண்டும் மோடி பிரதமர் ஆவதை உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களைத் தரவேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எங்களது கட்சி தொடர்ந்து, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றே அழைக்கப்படும்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அந்தஸ்து தொடர்பாக அமித்ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் நான் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது என தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது.
    • சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப்படைகளில் ஆட்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் முடிவால் காவலர் பணிக்கு தேர்வு எழுத உள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் அமித்ஷா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும்.
    • மாநிலத்தின் இளைஞர்கள் பற்றி மம்தாவுக்கு கவலை இல்லை.

    கொல்கத்தா :

    பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மேற்கு வங்காள மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரியில் நேற்று பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும், அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியையும் கடுமையாக சாடினார்.

    அவர் பேசியபோது கூறியதாவது:-

    நாட்டில் மீண்டும் மோடி பிரதமர் ஆவதை உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களில் (மொத்த இடங்கள் 42) வெற்றி தேடித்தருவார்கள்.

    சட்ட விரோத குடியேற்றங்களை, பசுக்கள் கடத்தப்படுவதை, ஊழலை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும். தீதி-பாட்டிஜா (மம்தா மற்றும் அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி) குற்றங்களை அகற்ற ஒரே வழி பா.ஜ.க.தான். பயங்கரவாதத்தில் இருந்து இந்த மாநிலத்தை விடுவிக்க ஒரே வழி பா.ஜ.க. 2024 தேர்தலில் எங்களுக்கு 35 இடங்களைத் தாருங்கள். 2025-ம் ஆண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை. 2025-க்கு முன்னதாகவே மம்தா பானர்ஜியின் அரசு வீழ்ந்து விடும்.

    மம்தா பானர்ஜி அரசின் சமரச கொள்கைகளால்தான் ராமநவமியின் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வரும். ராமநவமி பேரணிகளை தாக்கும் தைரியம் யாருக்கும் வராமல் போகும்.

    மாநிலத்தின் இளைஞர்கள் பற்றி மம்தாவுக்கு கவலை இல்லை. அவரது ஒரே குறி, தனது சகோதரர் மகனை மேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆக்குவதுதான். மத்திய அரசு திட்டங்களில் மம்தா தனது படத்தை ஒட்டுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்.
    • மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவார்.

    அருணாசலபிரதேசம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு திப்ருகரில், பா.ஜ.க அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக இருந்தன. ஆனால், சமீபத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றபோதிலும், 3 வடகிழக்கு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

    ராகுல்காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தினார். அவர் தொடர்ந்து இதேபோல் பொய்களால் இந்தியாவையும், அரசையும் இழிவுபடுத்தினால், வடகிழக்கு மாநிலங்களில் துடைத்து எறியப்பட்டதுபோல், நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் விரட்டி அடிக்கப்பட்டு விடும்.

    அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் மோடியை மோசமாக விமர்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பா.ஜ.க வளரும். மோடி பிரதமர் அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவார்.

    முன்பெல்லாம் அசாம் என்றாலே போராட்டம், பயங்கரவாதம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அமைதி தவழ்கிறது. அதனால், மக்கள் இசைக்கேற்ப நடனம் ஆடுகிறார்கள். அசாம் மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அண்டைமாநிலங்களுடனான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சி.ஆர்.பி.எப். வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன.
    • தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்.) 9,212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன்.

    நமது அரசமைப்புச்சட்டத்தின் 8-வது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சி.ஆர்.பி.எப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

    ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிபெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்.

    விருப்பு வெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுட னும், அவர்கள் நாட்டின் துணைராணுவப்படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

    ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித்தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

    எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஆர்.பி.எப்-யில் பணியாற்ற சம வாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×