search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
    • பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சாா்பில் பெண்கள் ஆரோக்கியம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்சனி பேசியதாவது:- பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

    இதன் மூலமாக மாா்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் வராமல் தடுக்க இயலும். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.இதற்கு அவா்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து முக்கியமானதாகும்.ஆகவே கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவு வகைகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.இக்கருத்தரங்கில் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • ஈரோட்டில் இருக்கும் கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.
    • பெண்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    ஓணம் பண்டிகை இன்று கேரளா மக்களால் உற்சா கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மகாபலி மன்னரை வரவேற்பு முகமாக கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான கேரளா வாழ் மக்கள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். பெரும்பாலான கேரளா மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளா சென்று விட்ட நிலையில் ஈரோட்டில் இருக்கும் கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.

    ஈரோடு செட்டிபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். இன்று ஓணம் பண்டிகை முன்னி ட்டு அதிகாலை யிலேயே எழுந்து குளித்து பாரம்பரிய உடைகள் அணிந்து ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.

    பெண்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

    பின்னர் தங்களது பாரம்பரிய நடனமாடி அசத்தினர். இதனால் அந்த பகுதியே விழா கோலம் கொண்டது. இதைத் தொடர்ந்து பல வகையாக உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டன.

    • எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
    • ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.

    மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.
    • மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வனத்தில் சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்த அளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன. அதில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூர், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆனால் இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான எந்திரம் இல்லை. இதனால் பயிற்சி பெற்றும் சிறுதொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு கிராம கூட்டமைப்பு வாயிலாக எந்திரம் மற்றும் தொழில் துவங்க கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது வன உரிமைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் மற்றும் இதர சாகுபடிகளை மலைவாழ் மக்கள் துவக்கியுள்ளனர்.எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான பயிற்சி வழங்கவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • விருதுநகரில் பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • இந்த சம்பவங்கள் குறித்து வண்ணம்பட்டி, கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 2 மகள்கள் உள்ள னர். மூத்த மகள் அபிராமி (வயது 20). சிவகாசி கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்துள்ளார்.

    சம்பவத்தன்று முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து திரும்பி வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் வெளியே ஒரு கடிதம் இருந்தது. அதில் அவரது மூத்த மகள் அபிராமி வீட்டின் சாவி தங்கையிடம் இருப்பதாக எழுதி இருந்தார்.

    பள்ளியில் இருந்த இளைய மகளிடம் சாவியை வாங்கி வீட்டை முத்துக்குமார் திறந்தார். அப்போது டி.வி.யின் மேல் மற்றொரு கடிதம் இருந்தது. அதில் கூறியிருந்தபடி இளைய மகள் செல்போன் வாட்ஸ்-அப்பில் பார்த்தபோது தான் ஒருவருடன் சென்று விட்டதாக அபிராமி கூறியிருந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அபிராமியை பல இடங்களில் தேடினார். இந்நிலையில் நள்ளிரவில் போனில் பேசிய அபிராமி, தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    தனது மகள் மாயமானது குறித்து வண்ணம்பட்டி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அபிராமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 22). சிவகாசியில் உள்ள தனி யார் கல்லூரியில் எம்.ஏ. படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கிவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தனது மகள் மாயமானது குறித்து ஆமத்தூர் போலீஸ் நிலை யத்தில் காளீஸ்வரி புகார் செய்தார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரது 17 வயது மகள் ராஜபாளையம் அருேக உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமா னார்.

    தனது மகள் மாயமானது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் தாய் பரமேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்களாக திகழவேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வளாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாடக விழா நடந்தது. இதை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கவுரவிக்கும் வகையிலும் இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    வீரமங்கை வேலுநாச்சியாரின் இசை நாடகம் அவர் வாழ்ந்த அரண்மனை வளாகத்தில் நடைபெறுவது, சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்க்கப்பதாகும். வெள்ளையனை வீரப்போர் புரிந்து எதிர்த்து, எதிரிகளை துவம்சம் செய்த காட்சிகளை கண் முன் எடுத்துக்காட்டும் நிகழ்வு சிறப்பாக இருந்தது.

    இளைய தலைமுறை யினரான எதிர்காலச் சந்ததியினர் வேலுநாச்சியார் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நாடகம் இருந்தது. வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த இசை நாடகத்தை அனைவரும் கண்டு களித்து, வீரம், நாட்டுப்பற்று மிக்கவராகவர்களாகவும், குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் வீரமிக்கவர்கள் என்பதை நிருபிக்கும் வகையிலும் வீரப்பெண்மணிகளாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), ராணி மதுராந்தகி நாச்சியார், ராஜ்குமார் மகேஷ்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் சமத்துவ தினமாக அறிவிக்கப்பட்டு உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பின் மூலம் இத்தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாப்பட்டது.

    சேலம்:

    பெண்களுக்கான சமத்துவம் மற்றும் ஓட்டு ரிமை வழங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதியை நினைவுகூறும் விதமாக பெண்கள் சமத்துவ தினமாக அறிவிக்கப்பட்டு உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணர்திறன் அமைப்பின் மூலம் இத்தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர்.செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட நகர்புற மாவட்ட கல்வி அதிகாரி டாக்டர்.உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் ஆலோசகர்கள் அன்னம் மற்றும் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு அரசின் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலும் இத்தினம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வலியு றுத்தும் நோக்கத்தோடு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடி வில் அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்சு டர் நன்றிகூறினார். இதற்கான அனைத்து ஏற்பாட்டி னையும் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர்.தனசேகர் மற்றும் உதவி பேராசிரியை வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
    • சாமி தரிசனத்திற்கு கோவில் நுழைவுவாயிலை விட்டு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகரா ஜருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏராள மானோர் குடும்பத்தோடு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடனும் வந்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெ ண்கள் மஞ்சள் பொடி,பால் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு வசதியாக பால் பாக்கெட்டுகள் மற்றும் மஞ்சள் பாக் கெட்டுகள் கோவில் வளாகத்துக்குள்ளும் கோவில் உள்புறத்திலும் விற்பனை செய்யப்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர் கள் வருகை தந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. சாமி தரிசனத்திற்கு கோவில் நுழைவுவாயிலை விட்டு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு வசதியாக குடிதண்ணீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் அங்கு செய்யப்பட்டிருந்தது.போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலுக்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய அனுமதி வழங்கப்படாததையடுத்து நாகராஜா திடலில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர்.

    • போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • பெண்கள் நலப்பிரிவில் 15 படுக்கைகள், குழந்தைகள் நலப்பிரிவில் 10 படுக்கைகள், டாக்டர், நர்சு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது

    தேனி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், போடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெண்கள் நலப்பிரிவில் 15 படுக்கைகள், குழந்தைகள் நலப்பிரிவில் 10 படுக்கைகள், டாக்டர், நர்சு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவு கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன், போடி நகர்மன்றத்தலைவர்ராஜராஜேஸ்வரி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) பரிமளாசெல்வி, மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
    • இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜ குல ராமன் கண்மாயில் போர்வெல் அமைத்து கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனுமதி பெறாமல் ஒருவர் போர்வெல் அமைத்து குடிநீர் எடுப்பதால் கீழ ராஜகுல ராமன் கிராம மக்களுக்கு சரியாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இதனால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் இன்று காலை கீழராஜகுலராமன் சாலையில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது குடிநீரை அனுமதியின்றி எடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாசில்தாரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் தாசில்தார் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் சப்ளை சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஓடும் ஆட்டோவில் பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர பிறப்பித்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகம் உள்ளது. இதனை போலீசார் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரையில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர பிறப்பித்துள்ளார்.

    இதனடிப்படையில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் தல்லாகுளம் பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது மதுரை பி.பி.குளம் பஸ் நிறுத்தத்தில் ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்த ஒரு பெண், 'என் மணிபர்சை காணவில்லை' என்று கூறினார்.

    இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர் மதுரை குலமங்கலம், மஞ்சமலை நகர் பச்சமுத்து மனைவி ஆறுமுகம் (வயது 54) என்று தெரியவந்தது. அவர் கருங்காலக்குடியில் உள்ள வங்கியில் மாட்டு லோனுக்கு உரிய தவணைத் தொகையை செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.1,300 ரொக்கத்தை பர்சில் வைத்திருந்தார்.

    அதனை அவருடன் ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் திருடிருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன்பேரில் ஆட்டோவில் வந்த 2 பெண்களிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெண்ணிடம் ஆறுமுகத்தின் மணி பர்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மதுரை மேலூர் மில்கேட், சிங்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த பகவதி மனைவி ருக்மணி (50), ஆத்திகுளம் மாயன் மனைவி வேணி (57) என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மணி பர்ஸ் திருடியதாக 2 பெண்களையும் தல்லா–குளம் போலீசார் கைது செய்தனர்.

    • கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த பாசி விற்கும் பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் தர்மமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கீழச்சாக்குளம், ஏனாதி, கண்டிலான், பூங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அப்போது பெண் பக்தர்கள் சிலர், தாங்கள் அணிந்திருந்த நகைகளை காணோம் என கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கீழச்சாக்குளம் போஸ் மனைவி குருவம்மாளின் 11 பவுன் நகையும், ஏனாதி முத்து மனைவி பாரதியின் 1¼ பவுன் நகை, கீழச்சாக்குளம் பூச்சி மனைவி பாண்டியம்மாளின் 2 பவுன் நகை, பரமக்குடி கருப்பையா மனைவி காளிமுத்துவின் 3½ பவுன் நகை என மொத்தம் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்்த சம்பவம் தொடர்பாக பாசி விற்பனை செய்யும் 10 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×