search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை வருகிற 31-ந்தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
    • விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள் மாவட்ட கலெக்டர் மூலம் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். உரிமம் இல்லாமல், பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் நடத்தக்கூடாது.

    பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்தல் வேண்டும்.

    தமிழக அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை வருகிற 31-ந்தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் இல்லங்களுக்கு உரிமை பெற திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்திலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திலும், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்ய தொடர்பு கொள்ளலாம்.

    இதனை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின் பொழுது குறைபாடுகளை கண்டறியும்பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் விடுதிகள், இல்லங்கள் நடத்தி வரும் அனைத்து நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல், புதுப்பித்தல் பணியினை வருகிற 31-ந்தேதிக்குள் முடித்திட வேண்டும். விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் சுப்பிரமணியர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றல் எளிமையாக நடந்தது.

    இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 7:40 மணிக்கு 1610 திருப்பால் குடங்களை ஏராளமான பெண்கள் எடுத்து சென்றனர். ஊர்வலம் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக சென்றடைந்தது.

    காலை 11 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் தொடங்கியது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் பால் குடங்களில் இருந்த பால்களை வேத மந்திரங்கள் ஓத சுப்பிரமணிய பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். இதை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர்.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் அதை அடுத்து உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியால் இன்று அதிகாலை முதலே சென்னிமலை முருகன்கோவில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது.

    பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம்.
    • உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும், திருமண தடை விலகவும் விளக்கிற்கு பெண்கள் மஞ்சள், குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    தரங்கம்படி:

    மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிமாத 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும் நுற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றான இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம். பல்வேறு சிறப்புகளையுடைய இங்கு ஆடிமாத 3-வது வெள்ளியை முன்னிட்டு வாள்நெடுங்கண்ணி சன்னதியில் அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும், திருமண தடை விலகவும் திருவிளக்கிற்கு பெண்கள் மஞ்சள் குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இதேபோல் பொறையார் குமரக்கோவிலில் திருவிளக்கு பூஜைசெய்தனர். மயிலாடுதுறை மூவலூர் மார்க்கசகாய சுவாமி கோவிலில் கவுமாரி துர்க்கா பரமேஸ்வரிக்கு 33ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் கிராமம் செழிக்கவும் வாழ்வு ஒளிபெறவும் வழிபட்டனர். முடிதிருச்சம்பள்ளி அங்காளபரமேஸ்வரி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை உருமாண்டம்பா–ளையம் பண்ணாரியம்மன் கோவிலில் 3-வது ஆடி–வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் காலை 10 மணியளவில்கல்யாண விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடைபெற்றன.

    அதற்கு பிறகு மதியம் 1 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், விரளி மஞ்சள், மஞ்சள் அரிசி, தாலி மஞ்சள் சரடு, வளையல், மிட்டாய், பூக்கள், துணிப்பைகள் வைத்து அணிக்கூடையில் கு–ழந்தைகள் எடுத்துச்செல்ல சிறப்பு பூஜை–கள் செய்யப்பட்டன.

    அதில் விநாயகர், வில்வ–மரம், சுற்றுப்பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு உகந்த கொம்பு ஊதுதல் மற்றும் மத்தளம் அடிக்கப்பட்டன. பூசாரி வாய்க்கட்டு பூட்டு போட்டு சிறப்பு வரலட்சுமி நோன்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசா–தங்கள் வழங்கப்பட்டன.

    மேலும் ஊரில் உள்ள பேரன், பேத்தி எடுத்த 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வரலட்சுமி பூஜையின்போது, அணிக்கூடையில் கொண்டு–வரப்பட்ட எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளை மஞ்சள் பையில் போட்டு வழங்கப்ட்டன. மேலும் வயதான தம்பதிகள் வந்திருந்த சுமங்கலி பெண்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் பச்சரிசி மற்றும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி நிறுவனம் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற் சாலைகள் தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் தற்காலிக மாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப் பிரிவின்படி 2 ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

    வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    பதிவு உரிமம் தொடர் பான கூடுதல் விவ ரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவல கத்தை (தொலைபேசி எண்: 04652-278404) தொடர்பு கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு 3-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்தி பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற வளையல்களை கோவில் காணிக்கையாக வழங்கினர்.

    அதில் 10ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக பால், பன்னீர் ,சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது .

    அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீவிஜேந்திரசுவாமிகள் செய்திருந்தார்.

    • காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
    • கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள்.
    • தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்று சொல்கிறார்கள்.

    மக்களுடைய வாழ்க்கையில் பத்து வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று போல் அன்று அத்தனை பேரும் வீட்டிற்குள் ஆளுக்கொரு செல்போனுடன் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கவில்லை. `ஆப்'பில் ஆர்டர் செய்து ஆப்பிளை வரவழைக்கவும் இல்லை. அன்று ஓட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது என்பது தித்திப்பான மனநிலையை தந்தது. இன்று நினைத்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று புசிப்பது வழக்கமாகிவிட்டது. டவுனில் இருக்கும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதுகூட அப்போது ஒரு திருவிழா போன்றுதான் இருந்தது. இப்போது அந்த ஆர்வத்தையும் காலம் அடித்துச்சென்றுவிட்டது. இப்படி பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்

    படம் மாடல்

    `தனிக்குடித்தனத்திற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். மருமகள்களுக்கு, மாமியாரை பிடிக்காது' என்றுதான் பொதுவாக பெண்களை பற்றி சொல்வார்கள். ஆனால் இன்றைய பெண்களின் மனநிலை அதற்கு நேர்மாறாக இருந்துகொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்றும் சொல்கிறார்கள்.

    இது தொடர்பாக தென்னிந்திய பெருநகரங்களில் வசிக்கும் தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், 51 சதவீத பெண்கள் மட்டுமே கணவருடன் ஒன்றாக வசிப்பது தெரியவந்திருக்கிறது. கணவர் இன்னொரு இடத்தில் வேலைபார்ப்பது அதிகரித்துவருகிறது. 40 சதவீதம் பெண்கள், மாமியார் வீட்டில் அல்லது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வாழும் இளம் தாய்மார்கள் `மாமியார் அல்லது அம்மாவுடன் சேர்ந்து வசிப்பது தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியிருக்கிறது' என்று சொல்கிறார்கள்.

    இந்த சர்வேயில் பங்குபெற்ற இளந்தாய்மார்களில் ஒருவர் ''எங்கள் குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வளர்வது மிக நல்லது என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். என் கணவர் மும்பையில் வேலைபார்க்கிறார். நான் டெல்லியில் வேலைபார்த்தபடி இரட்டைக் குழந்தைகளுடன் வசித்தேன். எங்கள் குழந்தைகளை `டே கேர்' ஒன்றில் தினமும் விட்டுவிட்டு செல்வேன். பின்பு நான் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகரீதியான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அந்த நாட்களில் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் டே கேர் சென்று குழந்தைகளை அழைத்துவர என்னால் முடியவில்லை.

    இத்தகைய நெருக்கடிகளால் எங்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டது. அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும், சுபாவங்களிலும் மாற்றங்கள் உருவாகின. அதனால் குழந்தைகளை டே கேருக்கு அனுப்பவில்லை. எனது பெற்றோரும், எனது கணவரின் பெற்றோரும் மாறி மாறி வந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டார்கள். மாமனார்- மாமியார் ஒரு மாதம் வந்து தங்கியிருந்துவிட்டு சென்றதும், எனது பெற்றோர் வருவார்கள். பெரியவர்கள் வந்து குழந்தைகளை கவனிக்கத் தொடங்கியதும், குழந்தைகளிடம் நல்ல மாற்றம் உருவானது. அவர்களது குணாதிசயங்களும் மாறின. கூட்டுக் குடும்பத்தின் பெருமை இப்போதுதான் எனக்கு புரிகிறது'' என்கிறார். சர்வேயில் பங்குபெற்ற பெரும்பாலான தம்பதிகளின் கருத்து இதுபோல்தான் இருக்கிறது.

    குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. 45.3 சதவீத தம்பதிகள், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளால் தங்களுக்கு பல வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்களில் 40.2 சதவீத தம்பதிகளில் ஆண்- பெண் இருவருமே இனப்பெருக்கத்திறன் குறைபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் அதற்கான நிபுணர்களிடம் குழந்தையின்மைக்கான சிகிச்சையும் பெற்றிருக்கிறார்கள்.

    குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவு உயர்ந்துவிட்டதாக சர்வேயில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குறைபட்டிருக்கிறார்கள். 56.6 சதவீதம் பேர் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். 28 சதவீதம் பேர் 5 முதல்10 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். 8.2 சதவீதத்தினர் 10 முதல் 15 லட்சம் ரூபாயும், 7.2 சதவீதத்தினர் 15 லட்சத்திற்கும் மேலாக செலவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

    குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் விஷயத்திலும் தென்னிந்தியர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. `திருமணம் முடிந்த 6 மாதம் வரை தாய்மையை பற்றி சிந்திப்பதே இல்லை' என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. 24.3 சதவீத இளந்தாய்மார்கள் `தங்கள் பொருளாதார நிலை மேம்பட்ட பின்பே குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதால், தற்போதைக்கு தாய்மையை தள்ளிவைத்திருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்கள்.

    இந்த சர்வேயில் இடம்பெற்றிருப்பவர்களில் 49.9 சதவீதத்தினர் ஒரு குழந்தையே போதும் என்ற கருத்தை பதிவுசெய்துள்ளனர். 39.2 சதவீதத்தினர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். 8.8 சதவீதத்தினர் மூன்று குழந்தைகளின் தாய்மார்கள். 2.1 சதவீதத்தினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்திருக்கிறார்கள்.

    ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்ட தாய்மார்களிடம், `இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது, 29.9 சதவீதத்தினர் `பெற்றுக்கொள்ளமாட்டோம்' என்று கூறியிருக்கிறார்கள். `குழந்தைகளே பெற்றுக்கொள்ளமாட்டோம்' என்றும் 3.9 சதவீதம் தம்பதிகள் கூறியிருப்பது இதில் கவனிக்கத்தகுந்த விஷயம்.

    செல்போன் குடும்பத்தினரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் 59 சதவீதம் பேர் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை செல்போனில் செலவிடுகிறார்கள். 24.6 சதவீதம் பேர் நான்கு மணி நேரத்திற்கு மேல் செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்கிறவர்கள் 16.4 சதவீதம்தான்.

    வீட்டில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுவதற்கு 63.9 சதவீதம் அளவுக்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்கின்றன என்று சர்வேயில் பங்குபெற்றவர்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். `அதிகமான நேரம் செல்போனை உபயோகிக்கிறார்கள்' என்பதும், `செல்போனில் பொழுதைக் கழிக்கும்போது பூமி அதிர்ச்சி வந்தால்கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள்' என்பதும் அவர்கள் மீது வீசப்படும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

    வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது குடும்பத்தினரிடம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்கும். அதனால் அதை கடைப்பிடிக்கவேண்டும் என்பது பெரும்பாலான குடும்பத்தினரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அந்த ஆசையை தற்போது 18.5 சதவீதம் வீடுகளில் உள்ளவர்கள்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான நேரம் கிடைப்பதில்லை என்பது 48 சதவீத குடும்பத்தினரின் ஆதங்கமாக இருக்கிறது. 33.5 சதவீத குடும்பத்தினர் எப்படியாவது, எப்போதாவது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் வெளியே ஓட்டலில் போய் உணவருந்தும் ஆசை ரொம்பவும் அதிகரித்திருக்கிறது. 55 சதவீதம் பேர் மாதத்தில் மூன்று தடவை குடும்பத்தோடு வெளியே சென்று உணவருந்துகிறார்கள். 9 சதவீதத்தினர் மாதந்தோறும் 6 தடவைக்கு மேல் வெளி உணவை சுவைக்கிறார்கள். அதனால்தான் தெருவெங்கும் ஓட்டல்கள் திறந்தபடி இருக்கின்றன. ஆனால் மக்களோ ஒரே ஓட்டலிலே நிரந்தரமாக சாப்பிடுவதில்லை.

    பெங்களூருவை சேர்ந்த தீபா சொல்கிறார்...

    ''வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தினரோடு வெளியே சென்று சாப்பிடுவோம். நிரந்தரமாக ஒரே ஓட்டலில் சாப்பிடுவதில்லை. நண்பர்கள் எந்த ஓட்டல் பற்றி நல்ல கருத்து சொல்கிறார்களோ அங்கு செல்வோம். சில ஓட்டல்கள் சிறியதாக இருந்தாலும் அங்கு ஹோம்லி பீல் கிடைக்கும். நம் முன்னாலே சமைத்து தரும் ஓட்டல்களும் இருக்கின்றன. சில இடங்களில் கியூவில் நின்று இடம் பிடித்து சாப்பிடவேண்டியதிருக்கும். ஆனாலும் ருசியாக இருந்தால், அங்கும் செல்லத்தான் செய்கிறோம்.

    குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டில் சாப்பிட வாய்ப்பு குறையும்போது, வெளியே சென்று சாப்பிட்டு அந்த குறையை தீர்த்துக்கொள்கிறோம். ஓட்டலில் சாப்பிடும்போது செல்போனை துழாவிக்கொண்டிருப்பதற்கெல்லாம் இடம்கொடுக்க மாட்டோம்" என்கிறார்.

    எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் உழைக்கவேண்டும் என்பது முந்தைய தலைமுறையின் கருத்தாக இருந்தது. இளைய தலைமுறையினரோ ஜாலியாக வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள். அதனால் சர்வேயில் பங்கேற்றவர்கள், "ஐம்பது வயதிலே வேலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு மகிழ்ச்சியாக ஓய்வு வாழ்க்கை வாழவேண்டும்" என்கிறார்கள். 60 சதவீதத்தினரின் கருத்து இவ்வாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    "70 சதவீத வேலைவாய்ப்புகள் இப்போது பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற துறைகளை சார்ந்தே இருக்கின்றன. அவர்களிடம் டார்கெட்டை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வேகம் உள்ளது. அதற்காக பரபரப்பான உழைப்பில் அவர்கள் இளம்வயதிலேயே களைத்துப்போகிறார்கள். வயது ஏறும்போது அவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதற்கு ஏற்றபடி பணிச்சுமையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதனால்தான் ஐம்பது வயதிலேயே அவர்கள் வேலையை விட்டுவிட்டு அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்கள்'' என்கிறார் நிதித்துறை ஆலோசகர் பிரமோத் சின்கா.

    எப்படியோ காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அத்தகைய மாற்றங்களை இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

    • குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தால் ஆர்.ஓ.வாட்டர் விநியோகிக்கப்படுகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இன்று காலை செட்டிப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

    அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை குடிநீர் இணைப்பிற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு 3 மடங்கு பணத்தை முறைகேடாக பெற்றுக்கொண்டு தற்போது வரை இணைப்பு வழங்காமல் மீண்டும் பணம் செலுத்த கூறுகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தால் ஆர்.ஓ. வாட்டர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    • மதுரையில் வீடு வாங்குவது தொடர்பாக மோசடி நடந்துள்ளது.
    • 2 பெண்கள் உள்பட 4 பேர்மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை தனக்கன்குளம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் சண்முகம் தெருவில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்க விரும்பினேன். இதற்காக குணசேகரன், ராஜபாண்டி, குணசேகரன் மனைவி பாண்டி மீனா, ராஜபாண்டி மனைவி பிரியா ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன்.

    அப்போது செக் பவுன்ஸ் மூலம் எனக்கு வீட்டை விற்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னசாமியிடம் மேற்கண்ட 4 பேரும் ஒப்பந்தம் வாயிலாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் திருநகர் போலீசார் கைது செய்தனர்.

    • பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்கலாம்.
    • மாவட்ட சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் அணிக்கானவர் தேர்வு செய்யப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி காங்கயம் ரோடு மாவட்ட கபடி கழக மைதானத்தில் வரும் 30-ந்தேதி நடக்கிறது.இதில், பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்கலாம்.

    போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் இல்லை.போட்டி காலை 9:30க்கு துவங்கும்.9 மணிக்கு முன் வரும் அணிகளுக்கு காலை உணவு பயண செலவுக்கு அணிக்கு, 500 ரூபாய் தரப்படும்.போட்டியில் பங்கேற்று விளையாடும் அணிகளில் இருந்து, மாவட்ட சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் அணிக்கானவர் தேர்வு செய்யப்படுவர். சீனியர் - வயது வரம்பு இல்லை. எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.ஜூனியர் -2002 செப்டம்பர் 4ந் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். 65 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.சப் - ஜூனியர் 2006, செப்டம்பர் 4ந் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். எடை 55 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.மாநில ஜூனியர் கபடி போட்டி திருவள்ளூரில் ஆகஸ்டு 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடக்கிறது. மாவட்ட அணியில் தேர்வாகும் வீராங்கனைகள் மாவட்ட போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    பள்ளி, கல்லூரிகள், மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவன அதிகாரியின் ஒப்புதலோடு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி செம்படாபாளையம் அடுத்துள்ள கரலாமணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடமும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நடை திறக்கப்பட்டது நாக ராஜருக்கு சிறப்பு அபி ஷேகங்களும் தீபாரா தனைகளும் நடந்தது. கோவிலில் சாமி தரி சனத்திற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால்ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது .நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.

    இந்த மேற்கூரை ஓலைகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் மாற்றப்படும். அதன்படி நேற்று ஆடி கிருத்திகை ஒட்டி நாகராஜர் சன்னதியின் மேல் கூரையை பூஜாரிகள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ×