search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் டிசைன்கள் சமீபத்தில் வெளியாகின.
    • அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வுக்கு முன் புதிய வெர்னா மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வெர்னா மாடலுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் மற்றும் ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய வெர்னா மாடலின் டிசைன் படங்கள் வெளியிடப்பட்டன.

    இதுதவிர 2023 ஹூண்டாய் வெர்னா புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன்படி புதிய கார் ரிடிசைன் செய்யப்பட்ட வெளிப்புறம், ஸ்போர்டினஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எலாண்ட்ரா மற்றும் இதர ஹூண்டாய் செடான் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

     

    காரின் முன்புறம் அகலமான கிரில், பிளாக் இன்சர்ட்கள், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், செங்குத்தான எல்இடி ஃபாக் லேம்ப்கள் உள்ளன. ரிடிசைன் செய்யப்பட்ட காரின் பொனெட்டின் கீழ் நீளம் முழுக்க எல்இடி லைட்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், க்ரம் விண்டோ, பாடி நிறத்தால் ஆன டோர் ஹேண்டில்கள் உள்ளன.

    பிளாக் ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் விண்ட்ஷீல்டு, கனெக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்கிட் பிளேட், வெர்னாவுக்கு மாற்றாக அக்செண்ட் எழுத்துகள் இடம்பெறுகின்றன. காரின் உள்புறம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், பவர்டு இருக்கைகள், ஆறு ஏர்பேக், புதிய லேயர் டேஷ்போர்டு, செண்டர் கன்சோல், ADAS போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய வெர்னா மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் புதிய மாடலில் நிறுத்தப்படுகிறது. மேலும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது.

    Source: GaadiWaadi | Naver.com 

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபெண்டர் 130 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் டிஃபெண்டர் 130 மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்மோக்டு டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன.

    லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டிஃபெண்டர் 130 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிஃபெண்டர் 130 மாடல் விலை ரூ. 1 கோடியே 31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி மாடல் HSE மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில், இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 மாடல் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 394 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 296 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு வேரியண்ட்களிலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

     

    110 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய டிஃபெண்டர் 130 மாடலின் நீளம் 340mm ஆக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் இரண்டு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்மோக்டு டெயில் லைட்கள், 20 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 11.4 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, HUD சரவுண்ட் வியூ கேமரா, மெரிடியன் மியூசிக் சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், லெதர் இருக்கை மேற்கவர்கள், செண்டர் கன்சோல், 14 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், ஹீடிங் மற்றும் கூலிங் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் 2023 இக்னிஸ் மாடல் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
    • என்ஜின் மட்டுமின்றி 2023 மாடலில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் 2023 இக்னிஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மாடல் பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. என்ஜின் மட்டுமின்றி இந்த மாடலில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்போதைய இக்னிஸ் உடன் ஒப்பிடும் போது புதிய மாடலின் விலை ரூ. 27 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் பொருந்தும். விலை மாற்றத்தின்படி புதிய ஹேச்பேக் விலை ரூ. 5 லட்த்து 82 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 01 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    2023 மாருதி இக்னிஸ் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக: எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் (ESP) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சங்களாக உள்ளன.

    புதிய மாருதி இக்னிஸ் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • கிராண்ட் விட்டாரா 6 மற்றும் 7 சீட்டர் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல்.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இரண்டு 7 சீட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராண்ட் விட்டாரா மாடலின் மூன்று அடுக்கு இருக்கை கொண்ட வெர்ஷன் இந்த தசாப்தத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட் கிராண்ட் விட்டாரா XL என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    7 சீட்டர் மட்டுமின்றி மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராண்ட் விட்டாரா 6 சீட்டர் வேரியண்டிலும் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இரு வேரியண்ட்களும் குளோபல் C பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் TNGA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

     

    புதிய எஸ்யுவி தற்போதைய விட்டாரா மாடலை விட தோற்றத்தில் வித்தியாசப்படும் என எதிர்பார்க்கலாம். இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 25 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் இந்த மாடல் மஹிந்திரா XUV700, ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    பெரிய கிராண்ட் விட்டாரா வெளியீட்டு முன் மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கிராஸ்-பேட்ஜ் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த பிரீமியம் எம்பிவி மாடல் டொயோட்டா மாருதி சுசுகி நிறுவனத்திற்கு வழங்கும் முதல் பேட்ஜ் என்ஜினியரிங் செய்யப்பட்ட மாடலாக இருக்கும்.

    இத்துடன் ADAS சார்ந்த டிரைவர் அசிஸ்டன்ஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய முதல் மாருதி சுசுகி மாடலாகவும் இது இருக்கும். இந்த மமாடல் மாட்யுலர் TNGA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இது முன்புற டிரைவ் வசதி கொண்ட எம்பிவி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹைகிராஸ் போன்றே இந்த மாடலும் 7 மற்றும் 8 சீட்டர் வெர்ஷன்களில் கிடைக்கலாம்.

    இந்த மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் TNGA ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 21 கிலோமீட்டர்களுக்கும் அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சஃபாரி மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய 2023 டாடா சஃபாரி மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஹேரியர் மாடலுடன் சஃபாரி மாடலையும் அறிமுகம் செய்தது. புதிய 2023 டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 65 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாடா சஃபாரி XE, XM, XMS, XT+, XZ மற்றும் XZ+ வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய 2023 டாடா சஃபாரி மாடலில் உள்ள என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ADAS அம்சங்களுடன், கூடுதலாக புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி ரெட் டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

     

    2023 சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் 2.0 லிட்டர் பிஎஸ்6 2 டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    வேரியண்ட்களை பொருத்து புதிய சஃபாரி மாடலில் 10.24 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் வியூ சிஸ்டம், எலெக்ட்ரிக் டிரைவர் சீட், வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், மூட் லைட்னிங் வசதி வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு 2023 டாடா சஃபாரி மாடலில் ஆறு ஏர்பேக், எலெக்டிரானிக் பார்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, மேம்பட்ட ESP மற்றும் 17 அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ADAS அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சஃபாரி மாடல் டாப் எண்ட் விலை ரூ. 24 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட கார் மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய டாடா எஸ்யுவி மாடலில் புதிய அப்டேட்களுடன், 10 ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டாடா ஹேரியர் விலை ரூ. 15 லட்சம் என துவங்குகிறது. சஃபாரி விலை ரூ. 15 லட்சத்து 65 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய ஹேரியர் மாடல் XE, XM, XMS, XT+, XZ, XZ+ XZA+ (O) என ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ராயல் புளூ, ட்ராபிக்கல் மிஸ்ட், கலிப்சோ ரெட், ஆர்கஸ் வைட் மற்றும் டேடோனா கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை 2023 ஹேரியர் மாடல் 360 டிகிரி கேமரா, ADAS, புதிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை, வெல்கம் ஆப்ஷன் உள்ளது.

     

    இந்த மாடலில் தொடர்ந்து பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் ORVM, ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், EPB, iRA கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆறு ஏர்பேக், டிரைவ் மோட்கள், டெரைன் மோட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிஃபயர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 200-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்கள் ஆறு மொழிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டாடா ஹேரியர் மாடலிலும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் RDE மற்றும் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் மாடல் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 07 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M சீரிஸ் மாடல்களில் முதல் முறையாக 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
    • புதிய சக்திவாய்ந்த எஸ்யுவி மாடல்கள் இந்த ஆண்டு கோடை காலத்தில் விற்பனைக்கு வருகின்றன.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்பட்ட X5 மற்றும் X6 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் X5 M மற்றும் X6 M காம்படிஷன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களின் விற்பனையும் இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்குகிறது.

    தற்போதைய அப்டேட் மூலம் இரு எஸ்யுவி மாடல்களிலும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், அதிகளவில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பெறும் முதல் M சீரிஸ் மாடல்களாக இவை உள்ளன.

     

    இரு எஸ்யுவிக்களிலும் 4.4 லிட்டர், வி8 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இவை 617 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 8 ஸ்பீடு M ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் திறனை 12 ஹெச்பி வரை அதிகப்படுத்துகிறது.

    புதிய எஸ்யுவிக்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. இந்த கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர்கள் ஆகும். M டிரைவர் பேக் தேர்வு செய்யும் பட்சத்தில் கார்களின் வேகம் மணிக்கு 290 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்படுகிறது.

     

    இவை தவிர ரியர் ஆக்சிலில் ஆக்டிவ் M டிஃபெரன்ஷியல், X டிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கார்களில் பிரமாண்ட தோற்றம், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய பிளாக்டு-அவுட் கிட்னி கிரில், ஆம்பியண்ட் லைட் பார், உள்புறம் M லோகோ, M லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், கார்பன் ஃபைபர் பேடில் ஷிஃப்டர்கள், செண்டர் கன்சோலில் M மோட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர், சஃபாரி, நெக்சான் ரெட் டார்க் எடிஷன்கள் அறிமுகம்.
    • ஹேரியர் மற்றும் சஃபாரி ரெட் டார்க் எடிஷன் மாடல்களில் ADAS அம்சங்களை கொண்டிருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ரெட் டார்க் எடிஷன் நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களின் விலை முறையே ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சத்து 65 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விலை விவரங்கள்:

    நெக்சான் பெட்ரோல் ரெட் டார்க் எடிஷன் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரம்

    நெக்சான் டீசல் ரெட் டார்க் எடிஷன் ரூ. 13 லட்சத்து 70 ஆயிரம்

    ஹேரியர் டீசல் ரெட் டார்க் எடிஷன் ரூ. 21 லட்சத்து 77 ஆயிரம்

    சஃபாரி 7 சீட்டர் டீசல் ரெட் டார்க் எடிஷன் ரூ. 22 லட்சத்து 61 ஆயிரம்

    சஃபாரி 6 சீட்டர் டீசல் ரெட் டார்க் எடிஷன் ரூ. 22 லட்சத்து 71 ஆயிரம்

     

    முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கப்பட்ட ரெட் டார்க் எடிஷன் மாடல்களின் கிரில் ஒபெரான் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஃபெண்டர்களில் டார்க் எடிஷன் பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் பிரேக் கேலிப்பர்களும் ரெட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. காரின் உள்புள கேபின் பிளாக் மற்றும் ரெட் தீம் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ரெட் டார்க் எடிஷன் ஹேரியர் மற்றும் சஃபாரியில் புதிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய தலைமுறை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம், ADAS அம்சங்கள் உள்ளது. இரு எஸ்யுவிக்களிலும் பவர்டு டிரைவர் சீட், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள் உள்ளன.

    நெக்சான் ரெட் டார்க் எடிஷன் மாடலிலும் ஒபெரான் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு முன்புறம் ரெட் அக்செண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. கேபினிலும் டார்க் எடிஷன் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ கார் மாடல் 2010 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த பிரிவில் மாருதி இகோ மாடல் மட்டும் 94 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து விற்பனையில் 10 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 2010 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி இகோ மாடல் அதிகம் விற்பனையாகும் வேன் எனும் பெருமையை பெற்று இருக்கிறது.

     

    இதுதவிர சந்தையில் இந்த பிரிவில் 94 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போது மாருதி இகோ மாடல் 13 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரும் இருக்கை அமைப்புகளில் கார்கோ, டூர் மற்றும் ஆம்புலன்ஸ் வடிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மாருதி இகோ வேன் மாடல் 1.2 லிட்டர் K சீரிஸ் டூயல் ஜெட், பெட்ரோல் என்ஜின் மற்றும் இதே என்ஜின் CNG கிட் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இவை மறையே 80 ஹெச்பி பவர், 104.4 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி விலையை மாற்றியது.
    • சமீபத்தில் இந்த மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG G63 விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வில் மெர்சிடிஸ் AMG G63 விலை தற்போது ரூ. 75 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெர்சிடிஸ் AMG G63 விலை ரூ. 2 கோடியே 55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தற்போது இதன் விலை ரூ. 3 கோடியே 30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதத்திலேயே மெர்சிடிஸ் நிறுவனம் தனது AMG G63 மற்றும் GLS மேபேக் 600 மாடல்களுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது. முன்பதிவுகள் முதற்கட்டமாக மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நடைபெற்றது.

    மெர்சிடிஸ் AMG G63 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 577 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் G கிளாஸ் மாடல் G350d வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது.

    • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய இ-ஸ்பேஸ் மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை லே-அவுட்களில் கிடைக்கும்.
    • சர்வதேச சந்தையில் புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாக இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலின் முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஆறாவது தலைமுறை மாடலாக உருவாகி வரும் ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் வரும் மாதங்களில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரெனால்ட் இ-ஸ்பேஸ் கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.

     

    புதிய இ-ஸ்பேஸ் மாடல் எம்பிவி பாடி ஸ்டைல் கொண்டிருக்கிறது. அளவில் இந்த கார் 4.72 மீட்டர் நீளம், உள்புறம் 2.48 மீட்டர் நீளமாக உள்ளது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இ-ஸ்பேஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் சி வடிவ டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர இந்த எஸ்யுவி மாடல் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், ஃபிளாட் ரூஃப்லைன், ஷார்க் ஃபின் ஆண்டெனா கொண்டிருக்கிறது.

    ரெனால்ட் இ-ஸ்பேஸ் மாடல் மைல்டு அல்லது ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடல் 1.2 லிட்டர் அல்லது 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவை முறையே 140 ஹெச்பி பவர், 200 ஹெச்பி என வெவ்வேறு செயல்திறன் வெளிப்படுத்தும் என தெரிகிறது. 

    • மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • மஹிந்திரா தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் நான்கு மாதங்களாக உள்ளது.

    மஹிந்திரா தார் ஆஃப் ரோடர் மாடலின் ரியர் வீல் டிரைவ் (RWD) வெர்ஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தார் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் RWD வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார் 4WD வேரியண்ட்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. இவற்றில் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 60 ஆயிரம் வரையிலான அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் போனஸ், ரூ. 15 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் இன்சூரன்ஸ் பலன்கள், மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும், இந்த பலன்கள் MY2022 LX பெட்ரோல் AT 4WD வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா தார் 4WD MY2022 LX பெட்ரோல் AT வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இதுதவிர மஹிந்திரா தார் RWD மற்றும் 4WD வெர்ஷன்களின் காத்திருப்பு காலம் முறையே 18 மாதங்கள் மற்றும் நான்கு மாதங்களாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஒவ்வொரு பகுதி, மாடல், விற்பனை மையம் என பல்வேறு விஷயங்களை பொருத்து வேறுப்படும்.

    ×