search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தத்தில் 17 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • இதுதவிர Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இந்திய சந்தையில் 25 மில்லியன் யூனிட்கள் எனும் விற்பனை இலக்கை எட்டியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி இந்த மைல்கல் எட்டியதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. 1983 வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் கார், மாருதி 800 மாடலை அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 25 ஆவது மில்லியன் யூனிட் ஆக கிராண்ட் விட்டாரா மாடல் அமைந்துள்ளது. மாருதி 800 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது 17 வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    இவற்றில் பெட்ரோல் மற்றும் CNG மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் பத்து லட்சம் CNG கார்களை விற்று அசத்தியது.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இரு மாடல்களின் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹைரைடர் CNG மாடல் 26.06 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது அர்பன் குரூயிசர் CNG மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 23 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹைரைடர் CNG மாடல் S மற்றும் G என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் CNG மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக், 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், டொயோட்டா i-கனெக்ட், ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள், ஆட்டோ டிம்மிங் IRVM, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்கார்பியோ மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ N மாடலை கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து புது ஸ்கார்பியோ N வாங்க பலரும் விருப்பம் தெரிவித்தனர். முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வந்த ஸ்கார்பியோ N வினியோகம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்கார்பியோ N மட்டுமின்றி இரண்டாம் தலைமுறை தார், முற்றிலும் புதிய XUV700 உள்ளிட்ட மாடல்களுக்கும் கடும் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த கார்களின் காத்திருப்பு காலம் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ N எண்ட்ரி லெவல் மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 85 முதல் 90 வாரங்களாக இருக்கிறது. Z4 வேரியண்டிற்கான காத்திருப்பு காலம் 90 முதல் 95 வாரங்கள் ஆகும்.

    ஸ்கார்பியோ N டீசல் Z6 மாடலுக்கான காத்திருப்பு காலம் 100 முதல் 105 வாரங்களாக உள்ளது. Z8 பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கும் இதே போன்ற காத்திருப்பு காலம் உள்ளது. Z8 லக்சரி வேரியண்ட் ஆட்டோமேடிக் வெரிஷனுக்கான காத்திருப்பு காலம் 20 முதல் 25 வாரங்களாக உள்ளது. டாப் எண்ட் வேரியண்ட்-ஆன Z8 L மேனுவல் வாங்க 70 முதல் 75 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்ஹாக் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பெட்ரோல் என்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 203 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் மாடல் 203 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 175 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வழங்குகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 175 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    • பிஎம்டபள்யூ நிறுவனத்தின் 2023 பிஎம்டபள்யூ X1 மாடல் இந்திய வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
    • புதிய பிஎம்டபள்யூ X1 மாடல் பெட்ரோல், டீசல் என இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபள்யூ நிறுவனம் அடுத்த தலைமுறை X1 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 பிஎம்டபள்யூ X1 மாடலின் விலை ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய X1 மாடல் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டீசல் வேரியண்ட் வினியோகம் மார்ச் மாதத்திலும், பெட்ரோல் வேரியண்ட் வினியோகம் ஜூன் மாதத்திலும் துவங்க இருக்கிறது.

    புதிய பிஎம்டபள்யூ X1 மாடல் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 136 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 150 ஹெச்பி பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இரு என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய 2023 பிஎம்டபள்யூ X1 மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புது எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிட்னி கிரில், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், புதிய முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் பெரிய வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய ஐடிரைவ் 8 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் செண்டர் கன்சோலில் ஃபுளோடிங் ஆர்ம்ரெஸ்ட், செங்குத்தாக பொருத்தப்பட்ட வயர்லெஸ் சார்ஜர் உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
    • விலை மாற்றத்தில் இந்த முறை எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதிக்கப்படாது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது IC என்ஜின் கொண்ட பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப 1.25 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட இருக்கிறது.

    "ஒழுங்குமுறை மாற்ங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்சினையில் எதிர்கொள்ளும் நோக்கில் விலை உயர்வை அறிவிக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்- டாடா நெக்சான், டாடா சஃபாரி, டாடா பன்ச், டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ரோஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களை IC என்ஜின் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் டாடா நெக்சான் EV சீரிஸ் விலையை டாடா மோட்டார்ஸ் மாற்றியமைத்தது.

    அதின்படி டாடா நெக்சான் EV மாடலின் விலை ரூ. 31 ஆயிரமும், டாடா நெக்சான் மேக்ஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 85 ஆயிரம் வரை குறைக்கப்பட்டது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது கார் மற்றும் கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு வைத்தது.

    இதில் கர்வ் மற்றும் சியெரா EV மாடல்கள் ப்ரோடக்ஷன் நிலையை எட்டியுள்ளன. இத்துடன் டாடா அல்ட்ரோஸ் CNG மற்றும் டாடா பன்ச் CNG மாடல்கள் டுவின்-சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    • டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா க்ரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா மாடலை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைகிராஸ் உடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்த மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின், நான்கு வேரியண்ட்கள், இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா க்ரிஸ்டா மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு, அதிகளவு க்ரோம் ஹைலைட்களை பெற்று இருக்கிறது. இதன் முன்புற கிரில் பகுதியில் கிடைமட்டமான க்ரம் ஸ்டிரைப், பம்ப்பரில் க்ரோம் இன்சர்ட், ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது.

    இவை தவிர புதிய க்ரிஸ்டா மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த கார் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் பவர்டு டிரைவர் சீட், ரியர் ஏசி வெண்ட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, செட்பேக் டேபிள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா மாடலில் ஏழு ஏர்பேக், முன்புறம் மற்றும் பின்புற பார்கிங் சென்சர்கள், பிரேக் அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய க்ரில்சா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. வரும் வாரங்களில் இந்த மாடலுக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடல் N10 வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
    • புதிய பொலிரோ நியோ மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் எஸ்யுவி டாப் எண்ட் N10 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் ஸ்கை-ரேக், ஃபாக் லைட்கள், ஹெட்லேம்ப் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டீப் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் டூயல் டோன் ஃபௌக்ஸ் லெதர் இருக்கைகள், லம்பர் சப்போர்ட், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, சில்வர் ஆர்ம்-ரெஸ்ட் கொண்ட செண்டர் கன்சோல், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், புளூசென்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

    புதிய மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலிலும் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ N மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா தனது ஸ்கார்பியோ N காரின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், அறிமுக சலுகை நிறைவு பெற்றதை அடுத்து ஸ்கார்பியோ N விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வு காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வின் படி மஹிந்திரா ஸ்கார்பியோ N பேஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 13 லட்சத்து 24 ஆயிரம் என துவங்குகிறது. அறிமுக விலைகளுடன் ஒப்பிடும் போது Z2 மற்றும் Z4 வேரியண்ட்களின் விலை ரூ. 75 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு ஐந்து கூடுதல் வேரியண்ட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர Z6 டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 65 ஆயிரமும், Z8 மற்றும் Z8L பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 65 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஸ்கார்பியோ N Z8L மேனுவல் மற்றும் 4WD பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 65 ஆயிரம் அதிகரித்துள்ளது. Z8L மேனுவல் மற்றும் 4WD மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 01 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. Z8L ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் உயர்ந்துள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 198 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 173 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4WD ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N வினியோகத்தில் டாப் எண்ட் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் மிட் ரேன்ஜ் மாடல்களின் வினியோகம் சமீபத்தில் துவங்கியது. டாப் எண்ட் Z8L வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்களின் காத்திருப்பு காலம் தற்போது 25 மாதங்கள் வரை உள்ளது. இது ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும்.

    • மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இந்தியாவில் ரிகால் செய்யப்படுகின்றன.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரு கார்களும் இதுவரை மூன்று முறை ரிகால் செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா இந்தியா நிறுவனங்கள் தங்களின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளன. இரு கார்களின் ரியர் சீட் பெல்ட் மவுண்ட் பிராகெட்-இல் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ரிகால் செய்யப்படுகின்றன.

    மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் 11 ஆயிரத்து 177 யூனிட்களும், டொயோட்டா ஹைரைடர் மாடலின் 4 ஆயிரத்து 026 யூனிட்களும் ரிகால் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 8, 2022 முதல் நவம்பர் 15, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளன.

    இரு நிறுவன உற்பத்தியாளர்கள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர், அவற்றை சரி செய்ய சர்வீஸ் மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ரிகால் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை விரைந்து சரி செய்வது பெரும் ஆபத்தை தவிர்க்க உதவும்.

    முன்னதாக இரு எஸ்யுவி மாடல்களும் இருமுறை ரிகால் செய்யப்பட்டுள்ளன. ஒருமுறை காரின் முன்புற சீட் பெல்ட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் மறுமுறை ஏர்பேக் கண்ட்ரோலர் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் இரு கார்களும் ரிகால் செய்யப்பட்டன. ரிகால் நடவடிக்கைகள் கார்களின் நீண்ட நாள் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முயற்சி ஆகும். 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியணட்களில் கிடைக்கிறது.
    • புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆரா காரின் விலை ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புது ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறுவித நிறங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் E, S, SX மற்றும் SX (O) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் CNG வேரியண்ட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பிளாக் கிரில், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், பூட் லிட் மீது க்ரோம் இன்சர்ட் உள்ளது. இந்த கார் போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டியல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்டாரி நைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் நான்கு ஏர்பேக், TPMS, ABS மற்றும் EBD, ESC, VSM, HAC, 3.5 இன்ச் கிளஸ்டர் மற்றும் MID, ஃபூட்வெல் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், டைப் சி போர்ட்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெகக்னீஷன், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் அட்ஜஸட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

    • பெண்ட்லி நிறுவனத்தின் புதிய பெண்ட்யகா EWB மாடல் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது பெண்ட்லி EWB காரின் உற்பத்தி பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.

    பெண்ட்லி நிறுவனம் தனது பெண்ட்யகா EWB வெர்ஷனை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB விலை ரூ. 6 கோடி, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் உற்பத்தி அக்டோபர் மாதம் துவங்கியது.

    புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB (எக்ஸ்டென்டட் வீல் பேஸ்) வெர்ஷன் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட 180mm வரை அதிகரித்து இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2995mm-இல் இருந்து 3175mm-ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது காரின் ஒட்டுமொத்த நீளம் 5322mm ஆகும். இதன் காரணமாக இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைத்திருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் "ஏர்லைன் சீட்ஸ்" வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆட்டோ கிளைமேட் சென்சிங் சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள பிஸ்னஸ் சீட் அம்சம் அதன் தனித்துவம் மிக்க நிலைக்கு மாறிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ரிலாக்ஸ் மோட் கொண்டு இருக்கையை 40-டிகிரி அளவுக்கு ரிக்லைன் செய்து கொள்ள முடியும்.

    பெண்ட்யகா EWB மாடலில் பவர் க்ளோசிங் கதவுகள், ஹீடெட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் டோர், ஆல் வீல் ஸ்டீரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மூன்று வித இருக்கை அமைப்புகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கிடைக்கிறது.

    புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 ஹெச்பி பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிவிடும்.

    • திருப்பத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் உதயஅரசன். இவர் தனது மனைவி மேனஸ்கா, 2 வயது மகன் ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பு பகுதி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது மேனஸ்கா, அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    ×