search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்டாண்டர்டு 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் சார்ந்த மாற்றங்களை பெறுகிறது.
    • புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மேம்பட்ட வெர்ஷன் உள்புறம் M340i மற்றும் i4 மாடல்களில் உள்ளதை போன்ற வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரில் மேம்பட்ட நீண்ட வீல்பேஸ், காஸ்மெடிக் மாற்றங்கள், கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. M340i ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்ற அப்டேட்கள் புது காரிலும் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புது காரில் ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது.

    பம்ப்பர்கள் மாற்றப்பட்டு, புதிய அலாய் வீல்கள், பின்புறம் டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. உள்புறம் i4 செடான் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, வளைந்த டிஸ்ப்ளே, செண்ட்ரல் இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஏசி வெண்ட்களும் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புது காரில் 330i மற்றும் 320d மாடலில் உள்ளதை போன்ற 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 330i மாடலின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 254 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 320d டீசல் எனஜின் 187 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

    • கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது வாகனங்களை காட்சிப்படுத்த இருக்கிறது.
    • கியா சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பத்து புது வாகனங்களை கியா இந்தியா காட்சிக்கு வைக்க இருக்கிறது. இந்த பட்டியலில் கியா மோட்டார்ஸ் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி மாடல் இணைந்திருக்கிறது.

    முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் கியா சொரெண்டோ மாடலை இந்தியாவில் காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சொரெண்டோ மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சொரெண்டோ மாடல் அதன் நான்காவது தலைமுறையை சேர்ந்தது. இந்த கார் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த மாடல் தான் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

    கியா சொரெண்டோ மாடலின் வெளிப்புறம் கியாவின் டைகர்-நோஸ் கிரில், 3-பாட் எல்இடி ஹெட்லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்ரைட் எஸ்யுவி ஸ்டான்ஸ் மற்றும் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் செங்குத்தாக டெயில் லைட் செட்டப் மற்றும் டெயில்கேட் பகுதியில் சொரெண்டோ எழுதப்பட்டுள்ளது.

    சொரெண்டோ மாடல் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட், 1.6 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட், 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என நான்கு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், முன்புற வீல் அல்லது ஆல்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலசிங்கம் என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து காரையும், ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    ரேசன்அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடல் வினியோகத்தை துவங்க இருக்கிறது.

    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் டிசம்பர் 2022 மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தியுள்ளது. கடந்த மாதம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 40 ஆயிரத்து 045 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 35 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி விற்பனையில் 13.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 38 ஆயிரத்து 831 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது 2021 ஆண்டு டிசம்பரில் ஹூண்டாய் நிறுவனம் 32 ஆயிரத்து 312 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி வாகன விற்பனையில் 20.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனத்தை விட அதிக யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் விற்பனையில் ICE மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடல் வினியோகத்தை துவங்க இருக்கிறது. முன்னதாக டியாகோ EV காரின் டெஸ்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் EV மாடலை 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய AMG E53 கார் உள்புறத்தில் ஒற்றை டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் 3.0 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் AMG E53 காரின் விலை ரூ. 1 கோடியே 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இரு கதவுகள் கொண்ட சாஃப்ட்-டாப் E கிலாஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் E53 செடான் மாடலின் பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் ஃபேப்ரிக் ரூஃப், பின்புற கதவுகள் நீக்கப்பட்டு, தனித்துவம் மிக்க ரியர் டிசைன் உள்ளிட்டவை புதிய AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடலிலும் உள்ளது. புதிய கப்ரியோலெட் விலை AMG E53 செடான் மாடலை விட ரூ. 24 லட்சம் வரை அதிகம் ஆகும். இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் நான்காவது 53 பேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகவும், முதல் கப்ரியோலெட் மாடலாகவும் அமைந்துள்ளது.

    மற்ற AMG மாடல்களை போன்றே புதிய E53 மாடலிலும் மெர்சிடிஸ் பாரம்பரியம் மிக்க பானாமெரிகானா கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், பிராமண்ட பம்ப்பர் உள்ளது. கப்ரியோலெட் மாடல் அதன் இரு கதவுகள் கொண்ட லே-அவுட் மற்றும் மடிக்கக்கூடிய சாஃப்ட்-டாப் மூலம் தனித்துவ தோற்றம் பெற்று இருக்கிறது. இதன் பின்புறம் நீண்ட டெக், மெல்லிய டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் AMG E53 4மேடிக்+ கப்ரியோலெட் மாடல்- அப்சிடியன் பிளாக், ஸ்லெனைட் கிரே, டெசிக்னோ ஒபலைட் வைட் பிரைட், டிசைனோ ஸ்பெக்ட்ரல் புளூ மேக்னோ மற்றும் டிசைனோ படகோனியா ரெட் பிரைட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. உள்புறம் ஒற்றை டிஸ்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் செண்ட்ரல் டச் ஸ்கிரீன் போன்று செயல்படுகிறது.

    புதிய AMG E53 காரில் 3.0 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட, இன்-லைன் 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 430 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 48 வோல்ட் சிஸ்டம் 21 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் பூஸ்ட் வழங்குகிறது.

    இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா CNG மாடல் லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய கிராண்ட் விட்டாரா மாடலில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா CNG கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் டெல்டா மற்றும் சீட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் சீட்டா மாடல் விலை ரூ. 14 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இது 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த காரின் CNG வெர்ஷன் லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் வரை செல்லும்.

    அம்சங்களை பொருத்தவரை மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG மாடலில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய CNG வேரியண்ட் மாதாந்திர சந்தா முறையிலும் கிடைக்கிறது. இதற்கான கட்டணம் மாதம் ரூ. 30 ஆயிரத்து 723 என துவங்குகிறது.

    • கியா இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கார்னிவல் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2020 வாக்கில் கியா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை கார்னிவல் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் நான்காம் தலைமுறை கியா கார்னிவல் மாடலுக்கு மாற்றாக புதிய கார்னிவல் மாடல் இருக்கும். இந்த மாடல் ஏற்கனவே நடைபெற்ற பயெனியல் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    சர்வதேச சந்தையில் 2020 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நான்காம் தலைமுறை கியா கார்னிவல் மாடல் டீசர்களில் ஏராளமான அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காரில், பிரஷ்டு சில்வர் இன்சர்ட்கள், கிரில் பகுதியில் இண்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புதிய செவ்வக வடிவம் கொண்ட ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி கலர் கிலாடிங், ராப்-அரவுண்ட் 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கியா கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையின் சில நாடுகளில் KA4 அல்லது செடோனா பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசரின் படி புதிய கார்னிவல் மாடல் புளூ நிறம் கொண்டிருக்கும் என்றும் சி பில்லரில் பிரஷ்டு சில்வர் இன்சர்ட்கள், ரூஃப், ORVM-கள், பில்லர் மற்றும் ரூஃப் ரெயில்களில் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய டிசைன் மட்டுமின்றி அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் டூயல் டோன் இண்டீரியர், டூயல் சன்ரூஃப், ADAS, Uvo டெலிமேடிக்ஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பவர்டு டெயில்கேட், ஸ்லைடிங் டோர்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்), 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12-ஸ்பீக்கர் போஸ் மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு, ஒன்பது மற்றும் பதினொரு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    • ரெனால்ட் இந்தியா நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவன கார்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 2023 மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இந்த சலுகைகள் தள்லுபடி, எக்சேன்ஜ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடுகிறது. கிடைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் மற்றும் ஊரக தள்ளுபடி உள்ளிட்டவைகளையும் பெற முடியும்.

    சலுகைகளை பொருத்தவரை ரெனால்ட் டிரைபர் வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்), ரூ. 25 ஆயிரம் வரை எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் பலன்கள் (தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது. இதுதவிர விவசாயிகள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ரூ. 5 ஆயிரம் வரை பலன்களை பெறலாம்.

    இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இது RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான சலுகைகளின் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கே அதிக பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 12 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது.

    இத்துடன் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான பலன்கள் மொத்தமாக வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடி (தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும்), ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ. 12 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை ஊரக பலன்கள் வழங்கப்படுகிறது. மேலும் க்விட் காரை வாங்குவோருக்கும் RELIVE ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • வாகன விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் கியா இந்தியா 47.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் 2022 ஆண்டு விற்பனையில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 619 யூனிட்களை பதிவு செய்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு விற்பனை 47.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இவற்றில் உள்நாட்டு விற்பனை 2 லட்சத்து 54 ஆயிரத்து 556 யூனிட்கள் அடங்கும். இது முந்தைய விற்பனையை விட 40.1 சதவீதம் அதிகம் ஆகும். 2022 ஆண்டு மட்டும் கியா இந்தியா நிறுவனம் 82 ஆயிரத்து 063 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கிய கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் எட்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி உள்ளது.

    இதுதவிர டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் கியா இந்தியா நிறுவனம் 15 ஆயிரத்து 184 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 94.7 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு புது மைல்கல் எட்டியதோடு இந்தியாவில் முன்னணி யுவி ஏற்றுமதியாளர் எனும் பெருமையை கியா இந்தியா எட்டியது. 2022 ஆண்டில் மட்டும் கியா இந்தியா 82 ஆயிரத்து 063 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    உள்நாட்டில் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி-க்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2022 ஆண்டில் இந்த எஸ்யுவி மாடல் 1 லட்சத்து 01 ஆயிரத்து 569 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சொனெட் மாடல் இதே ஆண்டு 86 ஆயிரத்து 251 யூனிட்கள் விறபனையாகி இருந்தது.

    கியா கரென்ஸ் மாடல் கடந்த ஆண்டு 62 ஆயிரத்து 756 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய எம்பிவி மாடல் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து கியா கார்னிவல் மற்றும் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் முறையே 3 ஆயிரத்து 550 மற்றும் 430 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா கார் புது வடிவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதில் உள்ள 1.4 லிட்டர் TSI என்ஜின் மற்றும் இ-மோட்டார் 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிருவனத்தின் ஆக்டேவியா RS மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிக சக்திவாய்ந்த RS மாடல் முற்றுலும் புது தோற்றத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்பை போன்றே இந்த கார் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

    முன்னதாக ஆக்டேவியா RS சீரிஸ் பெட்ரோல் என்ஜினுடன் மட்டும் கிடைத்தது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக ஆக்டேவியா RS மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த காரிலும் 1.4 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 245 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    புதிய ஆக்டேவியா பெட்ரோல் ஹைப்ரிட் கார் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 13 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிக்கப் பெருமளவு சரிவடைந்துள்ளது.

    ஸ்கோடா ஆக்டேவியா RS245 மாடல் தற்போதைய மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஆக்டேவியா மாடலின் விலை ரூ. 36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவன கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • சிட்ரோயன் C3 மாடல் புதிதாக டூயல் டோன் வேரியண்டில் கிடைக்கிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் மற்றும் C3 மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபரில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புது விலை உயர்வு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஷைன் டூயல் டோன் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    C3 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் NA பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு தவிர ஃபீல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், டூயல் டோன் எனும் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விலை உயர்வு தவிர சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் சிட்ரோயன் eC3 பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • டொயோட்டா நிறுவனத்தின் GR கொரோலா மாடல் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் இந்த கார் சிவிக் டைப் R மற்றும் கொல்ஃப் R மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் LC300 போன்ற மாடல்களை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளது. இரு மாடல்களும் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. எனினும், இரு கார்கள் மட்டுமின்றி டொயோட்டா நிறுவனம் தனது GR மாடலை முதல் முறையாக இந்தியாவில் காட்சிக்கு வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா GR கொரோலா மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கொரோலா ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் டொயோட்டா GR (கசூ ரேசிங்) பெர்ஃபார்மன்ஸ் பிரிவு மூலம் அதிகளவு மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கிறது. GR கொரோலா மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஹேச்பேக் மாடலில் 1.6 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட, சிங்கில் ஸ்கிரால் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 304 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் AMG A35 மாடலுக்கு இணையான செயல்திறன் ஆகும். எனினும், மெர்சிடிஸ் மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் உள்ளது.

    டொயோட்டா GR கொரோலா மாடலில் உள்ள என்ஜின் ட்ரிபில்-எக்சிட் எக்சாஸ்ட், மல்டி-ஆயிர் ஜெட் பிஸ்டன் கூலிங் சிஸ்டம், பெரிய எக்சாஸ்ட் வால்வுகள், பார்ட்-மெஷின்டு இண்டேக் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    ×