search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CNG காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் ஆகும்.

    டொயோட்டா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் கிளான்சா மாடலின் CNG வேரியண்டை உருவாக்கி வருவகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா மாடல் டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய கிளான்சா CNG மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் கிலான்சா ஸ்டாண்டர்டு மாடலில் இதே என்ஜின் 90 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. டொயோட்டா தனது கிளான்சா மாடல் லிட்ருக்கு 25 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. மேலும் இந்த வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.


    டொயோட்டா கிளான்சா CNG ஆப்ஷன் G, S மற்றும் V வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. டாப் எண்ட் மாடலான V வேரியண்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் தொடுதிரை வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஆறு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மற்ற CNG கார்களை போன்றே கிளான்சா CNG விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே இருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா கிளான்சா CNG விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 75 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக இதே காரின் சில வேரியண்ட்கள் விலை குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு XUV700 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 20 ஆயிரத்து 072 துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரத்து 814 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV700 AX7 டீசல் AT லக்சரி பேக் 7 சீட்டர் வேரியண்ட் விலை அதிகளவாக ரூ. 36 ஆயிரத்து 814 உயர்த்தப்பட்டு இருக்கிறது. XUV700 AX3 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷ் 5 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரத்து 072 உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    விலை உயர்வின் படி மஹிந்திரா XUV700 மாடல் தற்போது ரூ. 13 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள் மற்றும் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா XUV700 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
    • ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்யுவி விலையை உயர்த்தி இருக்கிறது. புது மாற்றத்தின் படி எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வு எம்ஜி ஆஸ்டர் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    விலை உயர்வின் படி எம்ஜி ஆஸ்டர் தற்போது ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 23 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    எம்ஜி ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 138 ஹெச்பி பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பரீடு மேனுவல் மற்றும் CVT யூனிட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • மார்த்தாண்டம் அருகே சினிமா போல சம்பவம்
    • அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சி

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட உண்ணாமலைகடை பகுதியில் மார்த்தாண்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ்,தலைமை காவலர் ராஜகுமார் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அதனை நிறுத்தும் படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீ சார் பின்னர் சுதாரித்துக் கொண்டு காரை விரட்டிச் சென்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் காரை போலீசார் பின் தொடர்ந்த நிலையில் திக்குறிச்சி வழியாக சென்ற கார் பேரை பகுதியில் சாலை ஓரம் திடீரென நின்றது. அதில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் அந்தக் காரை சோதனை செய்த போது மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். பின்னர் காரை விளவங்கோடு தாலுகா அலு வலகத்திலும், அரி சியை காப்புக்காடு அரசு குடோ னிலும் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அரிசி கடத்தி யது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? தப்பியோடியவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் மாடல் டூயல் டோன் வேரியண்ட் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • புதிய ஹைரைடர் மாடல் லிட்டருக்கு 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் நான்கு டாப் எண்ட் வேரியண்ட் விலை விவரங்களை சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தது.

    அதன்படி 5 சீட்டர் S இ டிரைவ் 2WD ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்குகிறது. இதன் V AT 2WD நியோ டிரைவ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். ஹைரைடர் G இடிரைவ் 2WD ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம், V இடிரைவ் 2WD ஹைப்ரிட் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், நிசான் கிக்ஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் 11 நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த காரின் டூயல் டோன் வேரியண்ட்களின் ரூஃப் பிளாக் நிற பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் G இடிரைவ் 2WD ஹைப்ரிட் டூயல் டோன் விலை ரூ. 17 லட்சத்து 69 ஆயிரம் என்றும் V இடிரைவ் 2WD ஹைப்ரிட் விலை ரூ. 19 லட்சத்து 19 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவை சிங்கில் டோன் மாடல்கள் விலையை விட ரூ. 20 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் கர்நாடகாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த கார் உற்பத்தை ஆலையில் இருந்து வெளியாக இருக்கிறது. இந்த கார் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுடன் பிளாட்பார்மை பகிர்ந்து கொண்டிருக்கிறது.

    • போர்டு நிறுவனம் ஏழாம் தலைமுறை மஸ்டங் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய போர்டு மஸ்டங் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது பாரம்பரியம் மிக்க மஸ்டங் மாடலின் ஏழாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரில் புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர், சக்திவாய்ந்த வி8 சேர்த்து இருவித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    போர்டு வரலாற்றில் முதல் முறையாக மஸ்டங் டார்க் ஹார்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது டிராக் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். இதில் அதிக செயல்திறன் வழங்கும் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது.


    புதிய தலைமுறை மஸ்டங் மாடல் ஜிடி மற்றும் இகோபூஸ்ட் ட்ரிம் லெவல்களில் கூப் மற்றும் கன்வெர்டிபில் பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்டீரியர் டிசைன் 1960-க்களில் வெளிவந்த ஒரிஜினல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜிடி மற்றும் இகோபூஸ்ட் மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    ஒட்டுமொத்தத்தில் புதிய மஸ்டங் ஹெக்சகன் வடிவ கிரில், பெரிய ஏர் இன்லெட்கள், மூன்று பார் எல்இடி ஹெட்லைட்கள், எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட பூட், கூர்மையான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மொத்தத்தில் 11 நிறங்களில் கிடைக்கிறது. இதில் வேப்பர் புளூ மற்றும் எல்லோ ஸ்பிலாஷ் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    ஏழாம் தலைமுறை போர்டு மஸ்டங் மாடல் 5.0 லிட்டர் கோயோட் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் கோல்டு ஏர் இண்டேக், டூயல் திராட்டில் பாடி டிசைன் மற்றும் அதிக ஏர்-ஃபுளோ ரேட்களை வழங்குகிறது. இத்துடன் 2.3 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட ட்வின் ஸ்கிரால், இகோபூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இகோபூஸ்ட் வெர்ஷனில் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், வி8 என்ஜினில் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்களின் செயல்திறன் பற்றி போர்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
    • இந்த கார் சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

    ஜீப் நிறுவனம் தனது புது செரோக்கி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய ஜீப் செரோக்கி மாடல் அம்சங்கள் மற்றும் சில விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் ஸ்டைலிங் வேகனீர் மற்றும் கிராண்ட் வேகனீர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. காரின் உள்புறம் மூன்று டிஸ்ப்ளேக்கள்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் முன்புற பயணிகளுக்காக பிரத்யேக டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.


    கிராண்ட் செரோக்கி மாடல் 5 சீட்டர் மற்றும், மூன்று அடுக்கு இருக்கை கொண்ட கிராண்ட் செரோக்கி L என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 5-சீட்டர் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் வெண்டிலேடெட் சீட்கள், பானரோமிக் சன்ரூப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிராண்ட் செரோக்கி மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைகும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிராண்ட் செரோக்கி மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    Photo Courtesy: Motor Beam

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் இரண்டு மற்றும் நான்கு கதவுகள் கொண்ட வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    லேண்ட் ரோவர் நிறுவனம் டிபெண்டர் 75th லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 1948 முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதை கொண்டாடும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் இரு கதவுகள் கொண்ட 90 மற்றும் நான்கு கதவுகள் கொண்ட 110 ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 90 மாடலின் விலை 85 ஆயிரத்து 995 யூரோக்கள் என்றும் 110 மாடல் விலை 89 ஆயிரத்து 995 யூரோக்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிபெண்டர் லிமிடெட் எடிஷன் காரின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. சந்தையில் விற்பனையாகும் சிறந்த ஆப்ரோடர் மாடல்களில் ஒன்றாக டிபெண்டர் விளங்கி வருகிறது.

    லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் HSE வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், மூன்று ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், மெமரி சீட்கள், 11.4 இன்ச் பிவி ப்ரோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் என்ஜின் ஆப்ஷ்கள் லேண்ட் ரோவர் டிபெண்டர் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வால்வோ கார் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பேஸ்லிப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் வரை அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய XC40 மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட பிக்சல் ஹெட்லைட்கள், புதிய வீல் டிசைன் மற்றும் ரிவைஸ்டு பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பரில் பாக் லைட் சரவுண்ட்கள், ரியர் பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட ட்ரிம் எலிமண்ட் உள்ளது. இத்துடன் ஜோர்ட் புளூ, சேஜ் கிரீன், தண்டர் கிரே மற்றும் பிரைட் டஸ்க் என அதிக நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    காரின் டேஷ்போர்டு பகுதியில் மட்டும் புதிதாக மரத்தால் ஆன ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் போர்டிரெயிட் ஸ்டைல் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஒஎஸ், பானரோமிக் சன்ரூப், PM 2.5 கேபின் ஏர் பில்ட்ரேஷன் சிஸ்டம் மற்றும் 13 ஸ்பீக்கர்கள் கொண்ட டிராக் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    மேம்பட்ட வால்வோ XC40 மாடலிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இது 13 பிஎஸ் பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் 197 பிஎஸ் பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் லிட்டருக்கு 15 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் காரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சிட்ரோயன் கார் C3 பிளஸ் எனும் பெயரில் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் குறைந்த விலையில் C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்தியாவில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் ஆகும். ஐந்து பேர் பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது C3 ஏர்கிராஸ் மாடலை ஏழு பேர் பயணிக்கும் வகையிலும் அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு பேர் பயணிக்கும் வகையில் இருக்கை அமைப்பு கொண்ட சிட்ரோயன் C3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. எனினும், இது பற்றி சிட்ரோயன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


    மூன்று அடுக்கு முறையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு சோதனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களும் ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டுவதில்லை என்ற அடிப்படையில், இது உண்மையில் விற்பனைக்கு வருமா என்பது தற்போதைக்கு சந்தேகம் தான்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய C3 மாடலை கொண்டு டாடா பன்ச், மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ள முடிவு செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கும் நிலையில், சிட்ரோயன் C3 விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியாகி இருந்தன.

    Photo Courtesy: Cartoq / The Car Show

    • மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், காரை வாங்க பல ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

    மாருதி சுசுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா மாடலின் விலையை சில தினங்களுக்கு முன் அறிவித்தது. தற்போது இந்த காரை வாங்க சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது.

    ஜூலை 11 ஆம் தேதி புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது .புதிய கிராண்ட் விட்டாரா மாடலின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்டை வாங்க 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


    இந்த காரை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் மைல்டு ஹைப்ரிட் வேரியண்டையே தேர்வு செய்துள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கிராண்ட் விட்டாரா பெயர் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடல் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் 101 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இந்த மாத சலுகைகள் ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இந்த சலுகைகள் நாடு முழுக்க பெரும்பாலான ஹூண்டாய் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.


    அதன் படி ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் மற்ற வேரியண்ட்கள் மற்றும் ஆரா மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் i20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இவை தவிர ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, வெர்னா, கிரெட்டா, அல்கசார், கோனா, i20 N லைன் மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    ×