search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் காரின் வேரியண்ட்களில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
    • டாடா டிகோர் புது வேரியண்ட் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    L மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் CNG சீரிசில் புது காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டிகோர் XM வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் வரை குறைவு ஆகும். இதன் விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டாடா டிகோர் XZ மற்றும் XZ+ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 7 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய XM வேரியண்ட் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இதில் ஹார்மன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர்கள், பவர் விண்டோக்கள், செண்ட்ரல் லாக்கிங் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்களை கொண்டுள்ளது.


    இந்த கார் டேடோனா கிரே, ஒபல் வைட், அரிசோனா புளூ மற்றும் டீப் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. டாடா டிகோர் CNG மாடலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. டாடா டிகோர் மாடல் லிட்டருக்கு 26.49 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    டாடா டிகோர் XZ மற்றும் XZ+ வேரியண்ட்களை வாங்குவோருக்கு தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டூயல் டோன் பிளாக் மற்றும் பெய்க் நிற தீம், ரியர் பார்க்கிங் கேமரா, முன்புறம் பாக் லேம்ப்கள், கூல்டு குளோவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

    • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இந்திய சந்தையில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா இருந்து வருகிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா, தனது எம்பிவி மாடல் இன்னோவா விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாடலின் விற்பனை சீராக இருந்ததோடு, எம்பிவி பிரிவில் அசைக்க முடியாத மாடலாகவும் விளங்குகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தனது பிரபல எம்பிவி மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து உள்ளது. இந்திய சந்தை விற்பனையில் இன்னோவா மாடல் பத்து லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    சில நாட்களுக்கு முன்பு தான் ஜூலை மாத விற்பனையில் 19 ஆயிரத்து 693 கார்களை விற்பனை செய்ததாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் வியாபாரத்தை துவங்கியதில் இருந்து இதுவரை ஒரே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் இத்தனை யூனிட்களை விற்பனை செய்ததே இல்லை. 2021 ஜூலை மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 13 ஆயிரத்து 105 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    அந்த வகையில் கடந்த மாதம் மட்டும் டொயோட்டா நிறுவன வருடாந்திர விற்பனை 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இதே போன்று ஜூன் 2022 மாத விற்பனையில் டொயோட்டா 16 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது 19 சதவீதம் அதிகம் ஆகும்.

    • ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • சலுகைகள் மூலம் பண்டிகை கால விற்பனை அதிகரிக்கும் என ரெனால்ட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாத சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் ரெனால்ட் க்விட், ரெனால்ட் டிரைபர் மற்றும் ரெனால்ட் கிகர் என மூன்று கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்களுமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இடம்பிடிக்க ரெனால்ட் நிறுவனம் தடுமாறி வந்த நிலையில் தான் ரெனால்ட் க்விட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எண்ட்ரி லெவல் பிரிவில் ரெனால்ட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியது.


    மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் ரெனால்ட் க்விட் காரை வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

    சப்-4 மீட்டர் எம்பிவி மாடலான ரெனால்ட் டிரைபர் வாங்குவோர் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இந்த சலுகை மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் குஜராத் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெறலாம். டிரைபர் லிமிடெட் எடிஷன் மாடலுக்கு மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்களை பெறலாம்.

    கேரளா மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 35 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெறலாம். மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. ரெனால்ட் கிகர் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. மற்ற மாடல்களை போன்று இல்லாமல் கிகர் மாடலுக்கு நாடு முழுக்க ஒரே மாதிரியான பலன்களே கிடைக்கின்றன.

    • கார் மோதி விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதர். இவரது மனைவி சாந்தா பானு (வயது 45). இவர்களது மகள் ரிஸ்வானா (19).

    நேற்று சாந்தாபானு தனது மகளுடன் மதுரைக்கு சென்றார். பின்னர் 2 பேரும் இரவு அரசு பஸ்சில் ஊர் திரும்பினர்.விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் தாய்- மகள் இறங்கினர்.

    பின்னர் இருவரும் 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர். அப்போது மதுரையில் இருந்து சிவகாசி சென்ற கார் எதிர்பாராத விதமாக சாந்தாபானு, ரிஸ்வானா ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மகள் கண் முன் சாந்தா பானு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய ரிஸ்வானாவை அப்பகுதி யினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியன் (57) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹூண்டாய் நிறுவன கார் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.
    • சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு மட்டும் பொருந்தும்.

    இந்தியாவில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும்.


    இதே காரின் 1.2 லிட்டர் வேரியண்ட் (ஆரா மட்டும்) ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா மற்றும் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் CNG வேரியண்ட் வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் i20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் வழங்கப்படும். ஹூண்டாய் கிரெட்டா, வென்யூ, வெர்னா, அல்கசார் மற்றும் i20 N லைன் போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. 

    • மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஆல்டோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஆல்டோ மாடலின் பல்வேறு விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆல்டோ கார் மாடலை ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், புது ஆல்டோ கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. முன்னதாக ஆல்டோ மாடலின் நிறம் பற்றிய விவரங்கள் வெளியான நிலையில், தற்போது இண்டீரியர் விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி புதிய ஆல்டோ காரின் கேபின் ஆல் பிளாக் தீம் மற்றும் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் யூனிட், இருபுறங்களிலும் செங்குத்தான சில்வர் இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் நடுவே ஏசி வெண்ட்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இத்துடன் பவர் விண்டோ பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஆல்டோ காரில் மேனுவல் ஏசி மற்றும் மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் உள்ளன.


    Photo Courtesy: Rushlane 

    இத்துடன் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. காரின் வெளிப்புறம் ஹார்டெக்ட் பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் சற்றே பெரிய முன்புற கிரில், ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், பெண்டரில் மவுண்ட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள் உள்ளன.

    புதிய மாருதி சுசுகி ஆல்டோ கார் Std, LXi, LXi (O), VXi, VXi (O), VXi+, மற்றும் VXi+ (O) வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 2022 மாருதி சுசுகி ஆல்டோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் 66 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

    • ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.

    விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.


    இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிக பலன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மட்டும் வழங்கப்படுகிறது. டாடா ஹேரியர், சபாரி போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    அல்ட்ரோஸ் மற்றும் டியாகோ போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஓனம் பண்டிகைக்காக கார் முன்பதிவு செய்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 95 சதவீதம் வரை ஆன்-ரோடு பைனான்ஸ் வசதியை வழங்குகிறது.

    இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் PSU-க்கள், தனியார் மற்றும் வட்டார நிதி வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான நிதி சலுகைகள் கிடைக்கிறது.


    "இந்த பகுதியில் வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள தலைசிறந்த வாய்ப்புகளை வழங்குவதால் கேரளா மிக முக்கிய சந்தை ஆகும். தொடர்ந்து வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை கொடுப்பதால், 72 சதவீத வாடிக்கையாளர்கள் வேறு பிராண்டிற்கு மாறாமல் உள்ளனர். இது நாட்டிலேயே மிகவும் அதிகம் ஆகும். நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுடன் ஓனம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக நாங்கள் புது சலுகைகளை அறிவித்து இருக்கிறோம்."

    "ஓனம் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் எங்களின் முற்றிலும் புதிய கார் மாடல்களுடன் புதிய தொடக்கத்திற்கு ஆயத்தமாவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஹேச் மற்றும் எஸ்யுவிக்களுக்கு கேரளா மிக சிறந்த சந்தை ஆகும். எங்களின் டியாகோ, பன்ச் மற்றும் நெக்சான் போன்ற மாடல்கள் கேரளாவில் அதிக விற்பனையாகும் டாப் 10 மாடல்களில் இடம்பிடித்துள்ளன," என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவி துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.

    • கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் மாடல் விலையை இந்திய சந்தையில் மாற்றி இருக்கிறது.
    • முன்னதாக இந்த காரின் விலை ஜனவரி மாத வாக்கில் முதல் முறையாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கியா இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி சொனெட் மாடலின் விலையை இந்திய சந்தையில் சத்தமின்றி உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி புதிய சொனெட் மாடல் விலை தற்போது ரூ. 34 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் சொனெட் மாடல் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+, மற்றும் ஆனிவர்சரி எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் பேஸ் வேரியண்டான HTE விலை ரூ. 34 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    ஏப்ரல் 2022 மாத வாக்கில் கியா நிறுவனம் சொனெட் 2022 வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புது மாடலில் அதிக ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மாணிட்டிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், இபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய கியா சொனெட் மா்டல் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Q3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக ஆடி நிறுவனம் தனது A8L மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆடி நிறுவனம் பிளாக்‌ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி விட்டன. புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் Q8 கார் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் கொண்ட ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புதிய அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய Q3 மாடல் அதிநவீன MQB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் புதிய இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 10 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் அல்லது 10.1 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மேலும் குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஆடி Q3 மாடல் பி.எம்.டபிள்யூ. X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடலின் இந்திய வெளியீட்டை திடீரென நிறுத்தி விட்டது.
    • இந்த காரின் புது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் வெளியீட்டை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மாற்றி இருக்கிறது. முன்னதாக இந்த கார் இன்று (ஆகஸ்ட் 04) அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இதன் டீசல் என்ஜினுடன் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.


    இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.

    முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • சமீபத்தில் தனது கார் மாடல்கள் விலையையும் டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், ஃபாக் லேம்ப்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டுள்ளன.


    காரின் உள்புறம் ஆல் பிளாக் தீம், 3.5 இன்ச் ஹார்மன் கார்டன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. பவர்டிரெயினை பொருத்தவரை டாடா டியாகோ NRG XT மாடலிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 84 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 

    ×