search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி ஆல்டோ 800 மாடலை ஓமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் பயன்படுத்தி வருகிறார்.
    • பல சமயங்களில் மக்கள் தங்களின் கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடல் முழுக்க மாட்டு சாணம் பூசப்பட்ட நிலையில் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநில சாலைகளில் வலம்வரும் இந்த மாருதி ஆல்டோ 800 மாடலை ஓமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இவர் கார் முழுக்க மாட்டு சாணத்தை பூசியிருக்கிறார்.

    ஏற்கனவே இதேபோன்று பல சமயங்களில் மக்கள் தங்களின் கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு கோடை காலத்தில் மாருதி ஆம்னி காரில் அதன் உரிமையாளர் மாட்டு சாணம் பூசினார். இதுதவிர 2019 மே மாத வாக்கில் டொயோட்டா கொரோல்லா மாடலில் இதே போன்ற செயலை அதன் உரிமையாளர் செய்தார்.

     

    காரின் மின்விளக்குகள், பம்ப்பர் மற்றும் நம்பர் பிலேட் தவிர இதர பகுதிகள் முழுக்க மாட்டு சாணம் பூசப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. உண்மையில் காரில் மாட்டு சாணம் பூசினால், இண்டீரியர் குளிர்ச்சியாக இருக்குமா?

    மாட்டு சாணம் ஈரமாக இருக்கும் போது, காரின் உள்புறத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறையலாம். ஆனால், அடிக்கும் வெயிலுக்கு மாட்டு சாணம் எளிதில் காய்ந்து விடும். இவ்வாறு மாட்டும் சாணம் காய்ந்த நிலையில் இருக்கும் போது, கார் என்ஜின் வழக்கத்தைவிட அதிக சூடாகும் வாய்ப்புகள் உண்டு. மேலும் இது காரின் பெயிண்ட்-ஐ சேதப்படுத்திவிடும்.

    • புதிய எக்ஸ்டர் மாடலின் உற்பத்தி 2023 ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.
    • புதிய எக்ஸ்டர் மாடல் வித்தியாசமான முன்புறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டர் மாடலை அறிமுகம் செய்வதை கடந்த மாதம் சூசகமாக அறிவித்தது. இந்த வரிசையில், தற்போது புதிய எக்ஸ்டர் மாடல் வெளிப்புற தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் டீசரை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய எக்ஸ்டர் மாடலின் உற்பத்தி 2023 ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.

    மேலும் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மாடலின் வெளியீடு நடைபெறலாம். இந்தியாவுக்காக உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைகளிலும் எக்ஸ்டர் மாடல் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் எவ்வித ஹூண்டாய் மாடல்களிலும் இல்லாத அளவுக்கு புதிய எக்ஸ்டர் மாடல் வித்தியாசமான முன்புறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    சென்சுவஸ் ஸ்போர்டினஸ் டிசைன் மொழியை தழுவி புதிய எக்ஸ்டர் மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், H வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. இதேபோன்ற டிசைன் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் மேலும் சில ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய எக்ஸ்டர் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த காரின் பின்புறம் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், லைட் பார், ஃபௌக்ஸ் கிளாடிங், விசேஷமான வீல் ஆர்ச்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அளவில் 3.8 மீட்டர் நீளமாக இருக்கும் என தெரிகிறது.

    • பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது.
    • வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மாடல் 2023 நிதியாண்டில் மட்டும் விற்பனையில் 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2000-ம் ஆவது ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ மாடல் இதுவரை விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

    2021 மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது. இந்தியாவில் விற்பனையான டாப் 30 யுடிலிட்டி வாகனங்கள் பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் மொத்தத்தில் 1 லட்சத்து 577 யூனிட்கள் விற்பனையாகி ஏழாவது இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் இணைந்து மாதம் 8 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.

     

    இந்திய சந்தையில் பொலிரோ மாடல் B4, B6, மற்றும் B6 (O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 9 லட்சத்து 92 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 03 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதன் மூலம் பொலிரோ மாடல் எஸ்யுவி என்பதை கடந்து, இந்தியாவின் ஊரக மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் மிகவும் பிரபலமான பெயராகவும் மாறி இருக்கிறது. 2023 நிதியாண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் விற்பனை எங்களது வாடிக்கையாளர்களின் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது," என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைவர் வீஜே நக்ரா தெரிவித்துள்ளார்.

    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மாடலை காட்சிக்கு வைத்தது.
    • மாருதி Fronx மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Fronx மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாருதி சுசுகி Fronx விலை ரூ. 7 லட்சத்து 47 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 14 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த ஆண்டு ஜவனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx கூப் கிராஸ்ஒவர் மாடலை காட்சிக்கு வைத்தது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய Fronx மாடல் துவக்க விலை பலேனோ மாடலை விட ரூ. 86 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

     

    புதிய மாருதி சுசுகி Fronx மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், காண்டிராஸ்ட் நிற ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், 360 டிகிரி கேமரா, HUD, 9 இன்ச் அளவில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், யுவி கிளாஸ் கட்-அவுட், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.

    மாருதி Fronx மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 147 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 22.89 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கார் மோதி வாலிபர் பலியானார்.
    • வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மதுரை

    மதுரை நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஆனந்தபாண்டி(19). இவர் நேற்று நள்ளிரவு புது நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். நாகனாகுளம் பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் ஆனந்த பாண்டி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய திருப்பாலை என்.ஓ.சி நகர், மார்கஸ் காபிரியேலிடம்(27) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2022 டைகுன் மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவன விற்பனையாளர்கள் டைகுன் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரமும், விர்டுஸ் செடான் மாடலுக்கு அதிகபட்சம் 1 லட்சத்து 03 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகின்றனர். இந்த சலுகைகள் 2022 மற்றும் 2023 மாடல் கார்கள் மற்றும் பிஎஸ்6 2 புகை விதகளுக்கு உட்பட்ட மாடல்களுக்கு பொருந்தும்.

    2022 டைகுன் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 65 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. டைகுன் டாப்லைன் மேனுவல் வேரியண்டிற்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டைகுன் கம்ஃபர்ட்லைன் மேனுவல் வேரியண்டிற்கு குறைந்தபட்ச சலுகை வழங்கப்படுகிறது.

     

    2023 டைகுன் மாடலுக்கு ரூ. 91 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் டைகுன் டாப்லைன் ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று 2023 டைகுன் பிஎஸ்6 2 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டைகுன் மாடலை போன்றே விர்டுஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2022 விர்டுஸ் GT பிளஸ் ஆட்டோமேடிக் வேரியண்டுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2023 விர்டுஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி ரூ. 65 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • போர்ஷே நிறுவனத்தின் புதிய கயென் மாடல் ஏராளமான டெக் அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய போர்ஷே கயென் மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 42 லட்சம் ஆகும்.

    போர்ஷே இந்தியா நிறுவனம் தனது கயென் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி 2024 போர்ஷே கயென் மாடல் விலை ரூ. 1 கோடியே 36 லட்சம் என்று துவங்குகிறது. புதிய போர்ஷே கயென் கூப் மாடல் விலை ரூ. 1 கோடியே 42 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரு கார்களில் எந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய போர்ஷே கயென் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்குகிறது. 2024 போர்ஷே கயென் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

     

    இதன் பொனெட் டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டெயில்கேட் முழுக்க லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 20 இன்ச் மற்றும் 22 இன்ச் என இருவித அளவுகளில் அலாய் வீல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய போர்ஷே கயென் மாடலில் 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 353 பிஎஸ் பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் கூப் மாடலிலும் இதே பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. எனினும், இதன் டர்போ வேரியண்டில் 4.0 லிட்டர் வி8 யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 659 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது. 

    • லெக்சஸ் நிறுவனத்தின் புதிய RX மாடல் இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய லெக்சஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய RX எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய RX மாடல் RX350h மற்றும் RX350h F ஸ்போர்ட் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 95.8 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 18 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் லெக்சஸ் அறிமுகம் செய்த முந்தைய தலைமுறை RX சீரிஸ், இந்தியாவில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை பெற்றது. புதிய பிளாட்ஃபார்ம் மூலம் காரில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஐந்தாவது தலைமுறை மாடலுக்காக லெக்சஸ் நிறுவனம் RX டிசைனை முழுமையாக மாற்றியுள்ளது.

     

    புதிய RX மாடலில் பிரமாண்ட முன்புற கிரில் ஹனிகொம்ப் மெஷ் ஆக ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், இதில் எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன. லெக்சஸ் RX மாடலில் அளவில் பெரிய 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இதில் உள்ள L வடிவ லைட் பார் லேம்ப் காரணமாக இந்த எஸ்யுவி பின்புறம் சற்றே அகலமாக காட்சியளிக்கிறது.

    லெக்சஸ் RX சீரிசில் அதிநவீன லெக்சஸ் சேஃப்டி சிஸ்டம் + 3.0 ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இதுதவிர இந்தியா மற்றும் ஆசியாாவிலேயே கனெக்டெட் அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சங்களாக பெறும் லெக்சஸ் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய லெக்சஸ் RX பெற்று இருக்கிறது.

     

    புதிய லெக்சஸ் RX350h மாடலில் 2.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார், சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 242 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது 4 வீல் டிரைவ் வசதி கொண்டுள்ளது.

    அதிவேக ஆப்ஷன் கொண்ட RX350h F ஸ்போர்ட் பிளஸ் மாடலில் 361 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் RX எஸ்யுவி மாடல் பிஎம்டபிள்யூ X5, மெர்சிடிஸ் பென்ஸ் GLE, லேண்ட் ரோவர் டிஸ்கவரி மற்றும் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட வால்வோ XC90 மற்றும் ஆடி Q7 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எக்ஸ்டர் எஸ்யுவி வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடல் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் டாடா பன்ச் மாடலுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வென்யூ, கிரெட்டா, அல்கசார், கோனா EV, டக்சன் மற்றும் ஐயோனிக் 5 வரிசையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடலாக எக்ஸ்டர் இணைகிறது.

    சர்வதேச நாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதவிர புதிய ஹூண்டாய் கார் சமீபத்தில் இந்தியாவிலும் டெஸ்டிங் செய்யப்பட்டது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் ஹூண்டாய் எஸ்யுவி மாடலில் பிளாக்டு-அவுட் பி-பில்லர், ரூஃப் ரெயில்கள், சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட ORVMகள் வழங்கப்படுகின்றன.

     

    பவர்டிரெயினை பொருத்தவரை புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ N மாடல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக ஸ்கார்பியோ N மாடல் விலை மாற்றப்பட்டு விட்டது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ஸ்கார்பியோ N விலை மாற்றப்படுவது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஸ்கார்பியோ N விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    தற்போதைய விலை உயர்வின் படி மஹிந்திரா ஸ்கார்பியோ N விலை ரூ. 13 லட்சத்து 06 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 51 ஆயிரம் என்று மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022-23 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்கார்பியோ சீரிஸ் மட்டும் 68 ஆயிரத்து 147 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

     

    பிப்ரவரி மாத நிலவரப்படி புதிய ஸ்கார்பியோ N மாடலை வாங்க அதிகபட்சம் 65 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 198 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 173 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இருவித என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4WD ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    • 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது.

    காங்கேயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், கார், பஸ்சை நிறுத்தி போதையில் அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயத்தில், திருப்பூர் செல்லும் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். போலீசாரிடம் திமிறிய போதை பெண், அங்கு வந்த காரை நிறுத்தி, சாவியை பறித்தார். அவ்வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டார். காங்கேயம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த பெண் திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது. அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஷைன் வேரியண்ட் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது.
    • புதிய C3 ஷைன் நான்கு வெர்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் C3 ஹேச்பேக் மாடலின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. C3 சீரிசில் டாப் எண்ட் மாடலாக அறிமுகமாகி இருக்கும் சிட்ரோயன் C3 ஷைன், ஷைன் வைப் பேக், ஷைன் டூயல் டோன் மற்றும் ஷைன் டூயல் டோன் மற்றும் வைப் பேக் என மொத்தத்தில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய சிட்ரோயன் C3 ஷைன் விலை ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஃபீல் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது புதிய சிட்ரோயன் C3 ஷைன் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள், ரியர் பார்கிங் கேமரா, டே/நைட் IRVM, 15 இன்ச் டைமண்ட் கட் அலாய்கள், ஃபாக் லைட்கள், ரியர் வைப்பர், வாஷர், ரியர் ஸ்கிட் பிளேட்கள், ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இத்துடன் 35 கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்ட மை சிட்ரோயன் கனெக்ட் ஆப் வசதியும் உள்ளது. புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 ஷைன் ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஷைன் வைப் பேக் ரூ. 7 லட்சத்து 72 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஷைன் டூயல் டோன் ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 7 லட்சத்து 87 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×