search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா மாடலை நான்கு வேரியண்ட்கள், ஒன்பது விதமான நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலை ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்தது. புதிய பிரெஸ்ஸா மாடலை வாங்க இதுவரை சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது. புதிய மேம்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நான்கு வேரியண்ட்கள், ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2022 பிரெஸ்ஸா மாடலில் டூயல் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள், மெல்லிய ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் பின் ஆண்டெனா, 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்களை சுற்றி பிளாஸ்டிக் கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஒன்பது இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் பாயிண்ட்கள் உள்ளன.

    புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் மேம்பட்ட மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடல் கியா சொனெட், டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யு, நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    • மின்கம்பம் 2 துண்டாக முறிந்தது
    • போலீசார் காரை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நேற்று இரவு 9 மணி அளவில் காரில் புறப்பட்டுள் ளார். அவர் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்றார். நாகர்கோவில் நோக்கி அந்தக் கார் சென்றுள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார், மேல சங்கரன்குழி சந்திப்பில் இருந்த மின்கம்ப த்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் 2 துண்டாக முறிந்து சேத மடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டது. இதற்கிடையில் காரை ஒட்டி வந்தவர் சிறுகா யங்களுடன் தப்பி ஒடி விட்டார். போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் சிட்டி ஹைப்ரிட் மாடல் விலையை முதல் முறையாக உயர்த்தி இருக்கிறது.
    • இது மட்டுமின்றி மேலும் சில மாடல்கள் விலையும் மாற்றப்பட்டு உள்ளது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஆகஸ்ட் மாதத்தில் அமலுக்கு வந்தது. முற்றிலும் புதிய சிட்டி, சிட்டி eHEV, ஜாஸ் மற்றும் WR-V போன்ற மாடல்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 39 ஆயிரத்து 100 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது சிட்டி eHEV ZX வேரியண்டிற்கு மட்டும் பொருந்தும்.


    இதைத் தொடர்ந்து ஜாஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு ரூ. 11 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    ஹோண்டா WR-V டீசல் வேரியண்ட்களுக்கும் ரூ. 11 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை.

    ஹோண்டா அமேஸ் E MT வேரியண்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. மற்ற அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 6 ஆயிரத்து 300-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜூலை மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • அதன் படி டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 57 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 2022 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன் படி டாடா வாகன விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்து இருக்கிறது. ஜூலை 2022 மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 47 ஆயிரத்து 505 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே மாதத்தில் டாடா நிறுவனம் 30 ஆயிரத்து 184 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் டாடா நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 57 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக நெக்சான் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தொடர்ந்து நீடிக்கிறது.


    ஒட்டுமொத்த சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களின் முதல் ஐந்து மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் தவிர பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களும் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன. ஜூலை 2022 மாத விற்பனையில் 64 சதவீதம் எஸ்யுவி-க்கள் மட்டும் அடங்கும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 105 சதவீதம் அதிகம் ஆகும்.

    டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி மாடல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் ஆல்பா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். இந்த கார் மட்டும் 11 ஆயிரத்து 007 யூனிட்கள் விற்பனையானது. 

    • வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிசரவணன் பெற்றுக் கொண்டார்.
    • முதல்-அமைச்சர் கைகளால் அரசு வாகனத்தின் சாவியை பெற்றது மிகவும் மகிழ்வான தருணம் என்று உமா மகேஸ்வரி சரவணன் கூறினார்.

    சங்கரன்கோவில்:

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சி தலைவர் மற்றும் பொறியாளர்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது.

    சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர்களுக்கான வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிசரவணன் பெற்றுக் கொண்டார்.

    அப்போது உடன் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

    இதுகுறித்து பேசிய உமா மகேஸ்வரி சரவணன், தான் முதல்-அமைச்சர் கைகளால் அரசு வாகனத்தின் சாவியை பெற்றது தனக்கு மிகவும் மகிழ்வான தருணம். இந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார் மற்றும் வேரியண்ட்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் ஹேச்பேக் மாடலாக டியாகோ இருக்கிறது

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேச்பேக் மூலம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுத்தது. இந்த கார் தொடர் அப்டேட் மற்றும் குறைந்த விலை போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் NRG மாடல்களுக்கு அதிக அம்சங்களை வழங்க இருக்கிறது.

    இரு கார்களின் XT வேரியண்டில் டாடா மோட்டார்ஸ் ஓட்டுனர் இருக்கையில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, 14 இன்ச் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், ரியர் பார்சல் ஷெல்ஃப், வேணிட்டி மிரர், பிளாக்டு-அவுட் பி-பில்லர் போன்ற வசதிகளை வழங்க முடிவு செய்து இருக்கிறது. டியாகோ மாடலின் XT வேரியண்டில் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது. NRG மாடலில் புதிதாக XT வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இதே என்ஜின் பெட்ரோல்-CNG வடிவிலும் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 72 ஹெச்.பி. பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியாகோ மாடல் 1.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைத்தது. எனினும், டீசல் என்ஜின் வேரியண்ட் அதிக வரவேற்பு இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டு விட்டது. டாடா டியாகோ மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 39 ஆயிரம் முதல் துவங்குகிறது.

    டாடா டியாகோ மாடல் XE, XT, XT (O), XZ மற்றும் XZ+ போன்ற வேரியண்ட்களிலும், டாடா NRG மாடல் XZ+ எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. 

    • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கிய ஒரே நிமிடத்தில் புதிய ஸ்கார்பியோ N காரை வாங்க 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுக்க 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து விட மஹிந்திரா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    வினியோகத்தில் ஸ்கார்பியோ N Z8L வேரியண்டிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் வினியோகம் பற்றிய தகவல்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N வேரியண்ட்களின் விலை முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.


    முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த நிறம் மற்றும் வேரியண்ட் போன்ற விவரங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்படும் வேரியண்ட் மற்றும் நிறம் இறுதியானது ஆகும். இந்த தேதிக்கு பின் வேரியண்ட் மற்றும் நிறங்களை மாற்றிக் கொள்ள முடியாது.

    புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலை வாங்குவோர் 6.99 சதவீத வட்டியில் மாதாந்திர தவணையை பெறலாம். இத்துடன் காரின் ஆன் ரோடு கட்டணத்தில் 100 சதவீதம் வரை நிதி சலுகை வழங்கப்படுகிறது.

    • 4 கார்களில் கண்ணாடியை உடைத்து பணம்-லேப்டாப் திருட்டப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலக்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகபூபதிராஜா (வயது 49). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், வேதியல் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் காரில் குடும்பத்துடன் சென்றார். காளவாசல் அம்மன் கோவில் அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு முருகபூபதிராஜாசென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் முன்கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், ஐ-பேட், ஹார்டு டிரைவ், ஆப்பிள் பென்சில், திட்ட ஆவணங்கள், லேசர் பாய்ண்டர் உள்பட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக முருக பூபதிராஜா கரிமேடு குற்ற பலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஸ்வநாதபுரம், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் அஜித் (36). சம்பவத்தன்று இரவு இவர் காரில் ராஜா முத்தையா மன்றத்துக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். ஓட்டல் வாசலில் காரை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் காரின் முன் கதவு கண்ணாடியை உடைத்து, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜித் காருக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கார் கண்ணாடி யையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் திருடு போனது.

    ராமநாதபுரம் மாவட்டம், குருவடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). சம்பவத்தன்று இரவு இவர் பாண்டி கோவில் ரோட்டில் உள்ள மதுபான கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புது ஸ்கார்பியோ N மாடல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான முன்பதிவு இன்று தான் துவங்கி இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை விவரங்கள் முதலில் முன்பதிவு செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்குகிறது.


    அந்த வகையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ N காரை முன்பதிவு செய்வோர் காரின் வேரியண்ட் மற்றும் நிற ஆப்ஷன்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்படும் வேரியண்ட் மற்றும் நிறம் இறுதியானது ஆகும்.

    புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலை வாங்குவோர் 6.99 சதவீத வட்டியில் மாதாந்திர தவணையை பெறலாம். இத்துடன் காரின் ஆன் ரோடு கட்டணத்தில் 100 சதவீதம் வரை நிதி சலுகை வழங்கப்படுகிறது. 

    • லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருந்தது.
    • இந்தியாவில் இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    லேண்ட் ரோவர் நிறுவனம் 2023 டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை இந்தியாவில் வினியோகம் செய்து வருகிறது. புதிய எஸ்யுவி மாடலின் விலை ரூ. 71 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஆர் டைனமிக் SE என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLC, வால்வோ XC60 மற்றும் பி.எம்.டபிள்யூ. X3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    இரண்டு என்ஜின்களும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட்கள் ஆகும். இவற்றுடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 250 பி.எஸ். பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டு நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

    இதன் டீசல் என்ஜின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது 200 பி.எஸ். பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 209 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தை ஒன்பது நொடிகளில் எட்டிவிடும். 

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் தனது 3 சீரிஸ் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • சமீபத்தில் பி.எம்.டபிள்யூ. X5 350d M ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் திடீரென உயர்த்தி இருக்கிறது. இம்முறை பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்களை மாற்றியமைத்து, தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் விலையை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பி.எம்.டபிள்யூ. 330Li M ஸ்போர்ட் ஃபர்ஸ்ட் எடிஷன் மற்றும் 330Li லக்சரி லைன் மாடல்கள் விலை முறையே ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பி.எம்.டபிள்யூ. 320Ld லக்சரி லைன் மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 740Li M ஸ்போர்ட் எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    முன்னதாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில், X5 சீரிசில் மாற்றம் செய்து, புதிதாக X5 எக்ஸ்-டிரவை் 30d M ஸ்போ்ட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இது ஸ்போர்ட் X வேரியண்டின் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் வேகன்ஆர் இடம்பெற்று இருக்கிறது.
    • 2023 முதல் காலாண்டில் மட்டும் மாருதி நிறுவனம் மூன்று கார்களை அறிமுகம் செய்துள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் 2023 முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 494 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 3 லட்சத்து 08 ஆயிரத்து 095 யூனிட்களையே விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


    2023 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 69 ஆயிரத்து 437 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 45 ஆயிரத்து 519 யூனிட்களையே ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2023 முதல் காலாண்டில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 931 யூனிட்கள் ஆகும். இது முந்தைய ஆண்டில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 614 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய சந்தையில் XL6, எர்டிகா மற்றும் மாருதி பிரெஸ்ஸா என மூன்று புது வாகனங்களை அறிமுகம் செய்து இருப்பதே விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும், மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து சிப்செட் குறைபாடு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 51 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

    ×