search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல் ஆகும்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடல் விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த மாடலின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. புதிய சிட்ரோயன் C3 மூலம் அதிக போட்டி நிறைந்த பிரிவில் களமிறங்குவதோடு, ஹேச்பேக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களையும் குறி வைக்க சிட்ரோயன் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.


    தற்போது சப்-4 மீட்டல் எஸ்.யு.வி. பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களும் இந்த பிரிவில் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.

    இந்த மாடல்கள் மட்டுமின்றி கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கும் புதிய சிட்ரோயன் C3 போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • விரைவில் மாருதி சுசுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் அரினா மற்றும் நெக்சா கார் மாடல்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    ஜூலை மாத சலுகைகளின் படி மாருதி சுசுகி செலரியோ மாடலுக்கு ரூ. 54 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 44 ஆயிரத்து 500 வரையிலான பலன்களும், 1.2 லிட்டர் வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 29 ஆயிரத்து 500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலை வாங்குவோருக்கும் ரூ. 29 ஆயிரத்து 500 மதிப்பிலான பலன்கள் கிடைக்கும்.


    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலை வாங்குவோருக்கும் ரூ. 29 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் கிடைக்கிறது. ஆல்டோ 800, ஈகோ மாடல்களை வாங்குவோருக்கும் ரூ. 29 ஆயிரத்து 500 மதிப்பிலான பலன்கள் கிடைக்கும். டிசையர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 19 ஆயிரத்து 500 வரை சேமிக்க முடியும்.

    நெக்சா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி எஸ் கிராஸ் மாடலுக்கு ரூ. 52 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இக்னிஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 37 ஆயிரம் வரையிலான பலன்களும், சியாஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 29 ஆயிரம் வரையிலான பலன்கள் வழஙஅகப்படுகிறது. XL6 மற்றும் பலேனோ மாடல்களுக்கு எந்த பலன்களும் அறிவிக்கப்படவில்லை.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இதன் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்கையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்க முடிவு செய்து இருக்கிறது. புதிய மாருதி கிராண்ட் விட்டாரா மூலம் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகி களமிறங்க இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    அதன்படி புதிய கிராண்ட் விட்டாரா மாடலின் பேஸ் வேரியண்ட் விலை வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாருதி சுசுகி நிறுவன வலைதளத்தில் சோர்ஸ் கோட் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் முதல் துவங்கும் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் புதிய மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    தற்போது ஹூண்டாய் கிரெட்டா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 44 ஆயிரம் என துவங்குகிறது. கியா செல்டோஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் ஆகும். அந்த வகையில், புதிய மாருதி கிராண்ட் விட்டாரா மாடல் விலை அடிப்படையில் போட்டி நிறுவன மாடல்களை விட விலை குறைவாகவே விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய டக்சன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல் நீண்ட வீல் பேஸ் கொண்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    தென் கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நான்காம் தலைமுறை டக்சன் எஸ்.யு.வி.-யை இந்கியி சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான விலை விவரங்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் நீண்ட வீல் பேஸ் கொண்டிருக்கிறது.

    நான்காம் தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் அதன் முந்தைய வேரியண்டை விட பெருமளவு வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. புதிய டக்சன் மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் சென்சுயல் ஸ்போர்டினஸ் டிசைன் பின்பற்றப்பட்டு இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.


    இத்துடன் ஹெட்லைட்கள் கிரில்-மீது இரு புறங்களின் ஓரத்தில் செங்குத்தாக உள்ளது. முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தற்போது 2.0 லிட்டர் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. இவை 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் நெக்சான்.
    • இந்திய சந்தையில் நெக்சான் மாடல்களின் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் XM+ (S) புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்சான் XM+ (S) மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் என துவங்குகிறது. புதிய நெக்சான் XM+ (S) வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த நெக்சான் XZ மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நெக்சான் XM+ (S) வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மேனுவல் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் என துவங்குகிறது. ஆட்டமேடிக் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். நெக்சான் XM+ (S) டீசல் மேனுவல் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 05 ஆயிரம் என துவங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.


    நெக்சான் XM+ (S) வேரியண்ட்டில் 7 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஷார்க் ஃபின் ஆண்டெனா, கூல்டு கிளவ் பாக்ஸ், ரியர் ஏ.சி. வெண்ட்கள், 12 வோல்ட் பவர் சாக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.

    வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து டாடா நெக்சான் XM+ (S) வேரியண்ட் தற்போது XE, XM, XM(S), XM+(S), XZ+, XZ+(HS), XZ+(O) மற்றும் XZ+(P) என மொத்தம் எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செல்டோஸ் மாடல் புசான் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதே மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    புசான் சர்வதேச மோட்டார் விழாவில் கியா நிறுவனத்தின் 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

    2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் புதிய ஹெட்லைட் மற்றும் ரிவைஸ்டு முன்புற கிரில், அதிக காற்றோட்டத்திற்கு வழி வகை செய்யும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளது. இதன் ஃபாக் லேம்ப் ஹவுசிங்கில் மட்டும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பக்கவாட்டில் 18 இன்ச் மெஷின் கட் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வேரியண்டில் 17 இன்ச் யூனிட்கள் வழங்கப்படலாம்.


    பின்புறம் முற்றிலும் புது டிசைன் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் புதிய பம்ப்பர் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. உள்புறத்தில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் UVO கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய கியா செல்டோஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் டொயோட்டா ஹைரைடர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக மேக்னைட் இருக்கிறது.
    • இந்தியாவில் நிசான் மேக்னைட் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான நிசான், இந்திய சந்தையில் புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் விலை ரூ. 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் XV வேரிண்டின் மூன்று ட்ரிம்களிலும் கிடைக்கிறது.

    நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் விலை விவரங்கள்:

    நிசான் மேக்னைட் MT XV ரெட் எடிஷன் ரூ. 7 லட்சத்து 86 ஆயிரத்து 500

    நிசான் மேக்னைட் டர்போ XV ரெட் எடிஷன் ரூ. 9 லட்சத்து 24 ஆயிரத்து 500

    நிசான் மேக்னைட் டர்போ CVT XV ரெட் எடிஷன் ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


    புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலின் கிரில், முன்புற பம்ப்பர் கிளாடிங், வீல் ஆர்ச், பக்கவாட்டில் பாடி கிளாடிங் உள்ளிட்டவைகளில் மீது ரெட் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாடி கிராபிக்ஸ், பின்புற டெயில்கேட்டில் குரோம் கார்னிஷ், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில்கள், ரெட் எடிஷன் பேட்ஜ் உள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நிசான் மேக்னைட் XV வேரியண்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஏர் பியூரிஃபயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஏராளமான ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., வெஹிகில் டைனமிக்ஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.


    நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மேனுவல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மற்றும் 999 சிசி, மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற லேண்ட் குரூயிசர் LC300 மாடல் உலக சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
    • இந்தியாவில் இந்த மாடலுக்கான முதற்கட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் குரூயிசர் LC300 மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது. சோதனையில் சிக்கிய யூனிட் லேண்ட் குரூயிசர் LC300 சகாரா ZX வேரியண்ட் ஆகும். இது வலது புற டிரைவ் வசதி கொண்டு இருக்கிறது.

    சோதனையில் சிக்கிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலில் நம்பர் பிளேட் எதுவும் இடம்பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் சோதனை யூனிட் அல்லது டெமோ வாகனமாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான். இந்த மாடலை தனி நபர் யாரேனும் வாங்கி இந்தியாவில் இறக்குமதி செய்து இருக்கலாம்.


    Photo Courtesy: Instagram | carcrazy.india

    இந்த எஸ்.யு.வி. மாடல் கோயம்புத்தூரில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்திகேயன் பிறந்த ஊர் தான் கோயம்புத்தூர் ஆகும். முன்னதாக டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டன. எனினும், அதிக வரவேற்பு காரணமாக இதன் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது.

    தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 முதற்கட்ட யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிகிறது. இந்தியா மட்டும் இன்றி டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கு சர்வதேச சந்தையிலும் அதிகளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. சில நாடுகளில் இந்த மாடலை டெலிவரி பெற அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

    • ஆடி நிறுவனத்தின் புதிய A8 L மாடல் சக்திவாய்ந்த வி6 என்ஜின் கொண்டு இருக்கிறது.
    • இந்த கார் ஹைப்ரிட் சிஸ்டம் வசதி கொண்டு இருக்கிறது.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய ஆடி A8 L மாடலின் விலை ரூ. 1 கோடியே 29 லட்சம் என துவங்குகிறது. இதன் டெக்னாலஜி எடிஷன் விலை ரூ. 1 கோடியே 57 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி A8 L ஃபிளாக்‌ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்திலேயே துவங்கி விட்டது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் தற்போது இந்தியாவில்ல் வெளியாகி இருக்கிறது.


    2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.

    இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.

    • கார் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகங்கை மாவட்டம் நென்மேனியை சேர்ந்த திவாகர் (வயது 26), அரவிந்த் (25), தினேஷ்குமார் (23), திருநாவுக்கரசு (22), சரத்குமார் (22) உள்பட 11 பேர் தூத்துக்குடியில் நடந்த வீரன் அழகுமுத்துகோன் குருபூஜைக்கு காரில் சென்றனர்.

    அங்கு பூஜையில் பங்கேற்ற இவர்கள் இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை விக்னேஷ்கண்ணன் என்பவர் ஓட்டினார். இரவு 11 மணியளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை விக்னேஷ்கண்ணன் முந்த முயன்றார்.

    இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியினர் காரில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த 11 பேரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக வாங்க முடியாத கார் மாடல்கள் பட்டியலை பார்ப்போம்.
    • இவற்றை பயன்படுத்திய கார் சந்தையில் மட்டுமே வாங்கிட முடியும்.

    கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தலைசிறந்த கார் மாடல்களின் விற்பனை சத்தமின்றி நிறுத்தப்பட்டு விட்டன. இன்றும் அமோக வரவேற்பை பெறக் கூடிய சில மாடல்கள் பல்வேறு காரணங்களால் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சமீபத்திய புகை விதிகள், உற்பத்தியாளரால் தொடர்ந்து விற்பனை செய்ய முடியாத நிலை என ஏராளமான காரணங்கள் இதற்கு உள்ளன. அந்த வகையில், தற்போது பயன்படுத்திய கார் சந்தையில் மட்டுமே கிடைக்கும் டாப் 5 மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா டீசல்: இந்த மாடல் இந்திய சந்தையில் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி.-யாக இருந்தது. இதில் வழங்கப்பட்டு இருந்து 1.3 லிட்டர் DDIS என்ஜின் இந்த மாடல் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷில் மட்டுமே கிடைக்கிறது.


    ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி: பட்ஜெட் விலையில் அதிக பெர்பார்மன்ஸ் கொண்ட கார் வேண்டுமெனில் சிந்திக்காமல் தேர்வு செய்யக் கூடிய மாடல் இது. இந்த மாடல் DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. தற்போதைய புது மாடல்களில் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா சிவிக்: பழைய தலைமுறை சிவிக் மாடல் பயன்படுத்திய கார் மாடல்கள் சந்தையில் பிரபலமான மாடல்களில் ஒன்று ஆகும். புது தலைமுறை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், ஹோண்டா நிறுவனத்தின் ப்ரோடக்‌ஷன் யுத்தி காரணமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.


    ரெனால்ட் டஸ்டர் டீசல்: தற்போது பயன்படுத்திய கார் மாடல்கள் சந்தையில் கிடைக்கும் சிறந்த காம்பேக்ட் டீசல் எஸ்.யு.வி. மாடல்களில் ரெனால்ட் டஸ்டர் ஒன்றாகும். இதில் உள்ள என்ஜின் 84 ஹெச்.பி. மற்றும் 108 ஹெச்.பி. என இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது.

    மாருதி எஸ் கிராஸ் 1.6: காம்பேக்ட் கிராஸ்ஓவர் அல்லது எஸ்.யு.வி. பிரிவில் ராசியற்ற மாடலாக இது குறிப்பிட முடியும். இதில் உள்ள 1.6 லிட்டர் DDIS 320 டீசல் என்ஜின் தலைசிறந்த செயல்திறன் கொண்டது ஆகும். மேலும் இந்த மாடலின் விலை ரூ. 5.5 லட்சத்தில் இருந்தே கிடைக்கிறது.

    • ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.
    • புதிய ரேன்ஜ் ரோவர் மொத்தம் 25 ட்ரிம்களில் கிடைக்கிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் மொத்தம் 25 ட்ரிம்களில் கிடைக்கிறது.ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் ஐந்து இருக்கைகளுடன் ஸ்டாண்டர்டு மற்றும் நீண்ட வீல்பேஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதிக இடவசதி விரும்புவோருக்கு மூன்றாம் அடுக்கு கொண்ட பகுதியில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் வழங்கப்படுகிறது.

    புதிய ரேன்ஜ் ரோவர் SE, HSE மற்றும் ஆட்டோபயோகிராபி மாடல்களின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் மொத்தத்தில் 25 ட்ரிம்களில் பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 2 கோடியே 39 லட்சம் என துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 கோடியே 01 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    "புதிய ரேன்ஜ் ரோவர் தனித்துவம் மற்றும் அதிநவீன ஆடம்பரத்தின் உச்ச நிலையை வெளிப்படுத்தி, சமரசம் இல்லா தொழில்நுட்ப நுனுக்கங்களை சீராக கொண்ட மாடல் ஆகும். இந்த வாகனம் தனித்துவம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையை சேர்ந்தது ஆகும்," என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்து உள்ளார்.

    புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட், 4.4 லிட்டர் வி8 என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதன் 3 லிட்டர் டீசல் என்ஜின் 243 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 4.4 லிட்டர் வி8 என்ஜின் 516 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சர்வதேச சந்தையில் 389 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது.

    ×