search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் XUV700 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • புதிய XUV700 யூனிட்களில் பிழை கண்டறியப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் நடவடிக்கை குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

    தற்போதைய தகவல்களின் படி ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட மஹிந்திரா XUV700 டீசல் வேரியண்ட் மட்டுமே ரிகால் செய்யப்படுகிறது. மஹிந்திரா XUV700 AT AWD 7 STR மற்றும் AX 7 AT AWD லக்சரி பேக் 7 STR வேரியண்ட்கள் மட்டும் ரிகால் செய்யப்பட்டு இருக்கிறது. ரிகால் செய்யப்படும் மாடல்களில் என்ஜினை பின்புற ஆக்சிலுடன் இணைக்கும் ப்ரோபெல்லர் ஷாப்ட்-இல் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


    பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் சென்று தங்களின் காரை சரி செய்து கொள்ள முடியும். இந்த பிரச்சினையில் எத்தனை மஹிந்திரா XUV700 யூனிட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.

    கடந்த மாதம் தான் மஹிந்திரா நிறுவனம் 30 ஆயிரம் மஹிந்திரா XUV700 யூனிட்களை வினியோகம் செய்தது. தற்போதைய சிப்செட் குறைபாடு காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் ஒரே மாதத்தில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இன்னும் 78 ஆயிரம் XUV700 யூனிட்களை வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை துறையில் களமிறங்கியது.
    • முதற்கட்டமாக பெங்களூரு நகரில் பயன்படுத்திய கார் விற்பனை மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து ஆட்டோமொபைல் சந்தை மெல்ல மீண்டு வருகிறது. பல்வேறு வாகன உற்பத்தியாளர்கள் பயன்படுத்திய கார் விற்பனை துறையில் கதவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்த வரிசையில், பயன்படுத்திய கார் விற்பனையில் இருந்து லாபம் ஈட்ட டொயோட்டா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.


    டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் கிர்லோஸ்கர் குழுமம் - டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கூட்டணி அமைந்து உள்ளன. இந்த கூட்டணியின் கீழ் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்ய டொயோட்டா நிறுவனம் முடிவு செய்து உள்ளது. முன்னதாக பயன்படுத்திய கார் விற்பனை பிரிவில் களமிறங்கு வதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    இந்த வரிசையில், தான் தற்போது பெங்களூரு நகரில் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட்-ஐ (TUCO) டொயோட்டா நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய விற்பனையகத்தின் மூலம் நாடு முழுக்க டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான மற்றும் நம்பத்தகுந்த பயன்படுத்திய கார் சந்தையை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • மாருதி சுசுசி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஜூலை 20 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது கிராண்ட் விட்டாரா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும். புதிய மாடலின் பெயர் அறிவித்தது மட்டும் இன்றி இதற்கான முன்பதிவுகளையும் மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது. அந்த வகையில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    புதிய எஸ்.யு.வி. மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் டொயோட்டா-சுசுகி கூட்டணியின் அங்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை தழுவி உருவாகி இருக்கும் மாருதி சுசுகி கார் ஆகும். இதன் தோற்றம் சற்றே வித்தியாசமாகவும், புதிய நிறங்களிலும் அறிமுகம் செய்யப்படலாம்.


    இதன் உற்பத்தி கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிடாடி ஆலையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலுடன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் இருக்கை கவர்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலில் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் e-CVT யூனிட் வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக், எம்.ஜி. ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காலாண்டு விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • இந்த விற்பனையில் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 443 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 250 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.


    இதில் பயணிகள் வாகன விற்பனை 2 லட்சத்து 12 ஆயிரத்து 914 யூனிட்கள் ஆகும். இது கடந்த ஆண்டு வெறும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 780 யூனிட்களாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சியை ஒட்டி ஏற்பட்ட மாற்றங்களை குறிக்கிறது.

    உள்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்து 197 தனியார் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 125 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் எஸ்.யு.வி.-க்கள் மட்டும் 68 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தன. இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 ஆயிரத்து 283 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    • நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலின் ரெட் எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கிறது.
    • இந்த கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடல் ஜூலை 18 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ரெட் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு ஏற்கனவே ஒரு லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது.

    புதிய மேக்னைட் ரெட் எடிஷன் XV வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மேனுவல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மற்றும் 1.0 டர்போ பெட்ரோல் CVT என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேக்னைட் மாடலின் முதல் ஸ்பெஷல் எடிஷன் இது ஆகும்.


    புதிய நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் மாடலின் கிரில், முன்புற பம்ப்பர் கிளாடிங், வீல் ஆர்ச், பக்கவாட்டில் பாடி கிளாடிங் உள்ளிட்டவைகளில் மீது ரெட் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாடி கிராபிக்ஸ், பின்புற டெயில்கேட்டில் குரோம் கார்னிஷ், இலுமினேட் செய்யப்பட்ட டோர் சில்கள், ரெட் எடிஷன் பேட்ஜ் உள்ளது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நிசான் மேக்னைட் XV வேரியண்டில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஏர் பியூரிஃபயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போது எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் தனது ஆல்டோ ஹேச்பேக் மாடலின் மூன்று வேரியண்ட்களை நிறுத்தியது. தற்போது இந்த வரிசையில் எஸ் பிரெஸ்ஸோ மாடலும் சேர்ந்து இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் ஆறு வேரியண்ட்களின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. புது மாற்றங்களை அடுத்து மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    எஸ் பிரெஸ்ஸோ மாடலின் LXi, VXi, VXi AMT, மற்றும் VXi CNG போன்ற வேரியண்ட்களின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் சத்தமின்றி நிறுத்திவிட்டது. தற்போது ரெகுலர் வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மாடல் 8 வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் ஆட்டோமேடிக் மாடல்களின் விலை ரூ. 5 லட்சத்து 19 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.


    இந்திய சந்தையின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் பிரிவில் எஸ் பிரெஸ்ஸா மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். எஸ் பிரெஸ்ஸோ மாடலை சிறிய எஸ்யுவி-ஆக மாற்றுவதற்கு மாருதி சுசுகி நிறுவனம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டது. எனினும், இது எண்ட்ரி லெவல் பிரிவில் கிடைக்கும் மாருதி சுசுகி கார் தான்.

    எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 998சிசி K10B என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினின் பெட்ரோல் வேரியண்ட் 67 ஹெச்.பி. பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG பயன்படுத்தும் போது இந்த என்ஜின் 58 ஹெச்.பி. பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டக்சன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • வரும் வாரத்தில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது மேம்பட்ட டக்சன் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு இருக்கிறது. 30 நொடிகள் வீடியோ வடிவில் இந்த டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. டீசர் வீடியோவின் படி புதிய ஹூண்டாய் டக்சன் மாடலின் எக்ஸ்டீரியர் வெளியாகி உள்ளது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடலின் வெளியீடு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    சமீப ஆண்டுகளில் இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து புதிய தலைமுறை டக்சன் மாடல் அமோக வரவேற்பை பெறும் என ஹூண்டாய் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. புதிய டக்சன் மாடல் ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை தேடிக் கொடுத்து இருக்கிறது.


    உலகம் முழுக்க இதுவரை 7 லட்சம் மாடல்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஒருபுறம் ஐரோப்பா மறுபுறம் ஜப்பான் என இரண்டு புறங்களிலும் இந்த பிரிவு வாகனங்கள் விற்பனையில் ஹூண்டாய் இத்தகைய விற்பனையை பதிவு செய்து இருப்பதாக பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 417 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புது N பிராண்டு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல்களுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் ஜூலை 15, 2022 அன்று N தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த நாளில் மூன்று புதிய N மாடல்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. முன்னதாக மூன்று N மாடல்களுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.


    டீசர்களின் படி முதல் கார் லோ-ஸ்லங் ஸ்போர்ட்ஸ் கூப் மாடலாகவும், மற்றொரு மாடல் எலெக்ட்ரிக் வாகன ரேசிங் மாடலாகவும் மூன்றாவது மாடல் ஐயோனிக் 6N என்றும் தெரியவந்துள்ளது. லோ-ஸ்லங் ஸ்போர்ட்ஸ் கார் கூப் மாடல் போன்று காட்சி அளிக்கிறது.

    இரண்டாவது கார் ஐயோனிக் 5 ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த டீசரில் தெளிவற்ற படம் இடம்பெற்று உள்ளது. எனினும், இதில் நீள நிற N சிக்னேச்சர் மற்றும் பிளாக் அக்செண்ட்கள் மட்டும் தெரிகிறது. கடைசி டீசரில் இருப்பது மட்டும் ஐயோனிக் 6 மாடல் ஓரளவு தெளிவாக அறிய முடிகிறது. இது பற்றிய முழு விவரங்கள் ஜூலை 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • பலியான ஹரியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 44), ரோடு ரோலர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபிதா (40). இவர்களுக்கு சுஜன் (15) என்ற மகன் உள்ளார்.

    நேற்று காலை ஹரி வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தக்கலை பகுதியில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.

    நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று ஹரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஹரி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கடந்த ஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஹரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பலியான ஹரியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

    • ஹூண்டாய் அல்கசார் புது வேரியண்ட் விலை அதன் பிரெஸ்டிஜ் வேரியண்ட்-ஐ விட ரூ. 55 ஆயிரம் குறைவு ஆகும்.
    • இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அல்கசார் மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வேரியண்ட் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் என அழைக்கப்படுகிறது. புது வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டீசல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது தற்போதைய எக்சிக்யுடிவ் வேரியண்டை விட ரூ. 55 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.

    புதிய ஹூண்டாய் அல்கசார் விலை விவரங்கள்:

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம்

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம்

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் டீசல் ஆட்டோமேடிக் ரூ. 17 லட்சத்து 77 ஆயிரம்

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 6 சீட்டர் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய அல்கசார் வேரியண்டில் இன்போடெயின்மெண்ட் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீனுக்கு மாற்றாக அளவில் சிறிய 8 இன்ச் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே போன்ற யூனிட் தான் புதிய ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் புளூ லின்க் கனெக்டெட் அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன. இவை தவிர பெரும்பாலான இதர அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் பெட்ரோல் மாடல் 7 சீட்டர் வடிவிலும், டீசல் மாடல் 7 மற்றும் 6 சீட்டர் வடிவில் கிடைக்கிறது.

    • மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது
    • வினு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    தக்கலை மணலிக்கரை அடுத்த மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு (38). இவரது மனைவி மகேஷ்வரி (35). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் இரணியலில் இருந்து தக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். கண்ணாட்டுவிளையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. தூக்கி வீசப்பட்ட கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து மகேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் காரை ஓட்டி வந்த நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்த ஜெபவேல் ஒய்சிலின் என்ற வினு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெனால்ட் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து உள்ளனர்.
    • இவை இம்மமாத இறுதி வரை வழங்கப்பட உள்ளன.

    இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட ரெனால்ட் டீலர்ஷிப்களில் அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் இவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.


    அதன்படி ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ரூ. 44 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 55 ஆயிரம் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே காரின் 1.0 லிட்டர் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.

    ×