search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஜீப் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய காரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
    • கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன.

    ஜீப் நிறுவனத்தின் இரண்டு ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மெரிடியன் X மற்றும் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய கார்களில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இவைதவிர கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன. புதிய ஜீப் மெரிடியன் X ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்கள் லிமிடெட் (O) வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஜீப் 4x4 செலக்-டெரைன் 4-வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

     

    இவைதவிர இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களிலும் சைடு ஸ்டெப், ஆம்பியண்ட் லைட்டிங், புதிய கால்மிதி, யு-கனெக்ட் 5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் தற்போது சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் பின்புறம் எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஜீப் மெரிடியன் X மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்களில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்துள்ளது.
    • நெக்சான் மாடல் அறிமுகமான ஏழே மாதங்களில் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தியது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவன உற்பத்தி ஆலையில் இருந்து நெக்சான் மாடலின் 5 லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டது. பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து டாடா நெக்சான் 5 லட்சமாவது யூனிட் வெளியானது. 2014 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் மாடல் 2017 வாக்கில் விற்பனைக்கு வந்தது.

    விற்பனைக்கு வந்ததில் இருந்தே நெக்சான் மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 35 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    அம்சங்களை பொருத்தவரை டாடா நெக்சான் மாடலில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏர் பியூரிஃபையர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா நெக்சான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிரான்ஸமிஷனுக்கு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனாக ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் மாடலில் தற்போது பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV400, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய காரில் இரண்டு அடுக்கு கிரில், டாடாவின் ரேடார் சார்ந்த ADAS மாட்யுல் வழங்கப்படுகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக நெக்சான் இருக்கிறது. கடந்த சில மாதங்களில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் பட்டியலில் முதலிடத்தை நெக்சான் இழந்தது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதனிடையே டாடா நெக்சான் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. அதில் புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெருமளவில் டாடா கர்வ் காம்பேக்ட் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரின் முன்புறத்தில் அகலமான எல்இடி லைட் பார்கள் உள்ளன. காரில் இரண்டு அடுக்கு கிரில், டாடாவின் ரேடார் சார்ந்த ADAS மாட்யுல் வழங்கப்படுகிறது.

    புதிய காரின் பக்கவாட்டு பகுதிகளில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் பாடி கிளாடிங்கில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். காரின் பின்புறத்தில் சஃபாரி மாடலில் உள்ளதை போன்ற அகலமான எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இவை நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள் வெளியானதை தொடர்ந்து புதிய காரின் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஜீப் நிறுவன கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • சமீபத்தில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி-க்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி இரு கார்களின் பேஸ் வேரியண்ட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை அப்டேட்களுடன் புதிய கார்கள் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

    விலை மாற்றத்தின் படி ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும். இதர பெட்ரோல் மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதர டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு விட்டது.

     

    புதிய அறிவிப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஜீப் மெரிடியன் மாடலை பொருத்தவரை மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஜீப் மெரிடியன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் நவம்பர் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய காருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வினியோக சிக்கல் காரணமாக முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

     

    இரு வேரியண்ட்கள் தவிர இன்னோவா ஹைகிராஸ் மாடலின் மற்ற வேரியண்ட்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. "வினியோக சிக்கல் காரணமாக இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முன்பதிவு நிறுத்தம் ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வருகிறது."

    "இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மாடலின் இதர வேரியண்ட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு நடைபெறும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வேரியண்ட்களுக்கு விரைவில் முன்பதிவை துவங்குவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்." என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய E கிளாஸ் மாடல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
    • புதிய E கிளாஸ் மாடலின் டிசைன், அம்சங்கள் S கிளாஸ் மாடலை தழுவி வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய E கிளாஸ் மாடல் ஏப்ரல் 25 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டதிலேயே தலைசிறந்த, தனிப்பட்ட E கிளாஸ் மாடலாக இது இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. W214 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் புதிய E கிளாஸ் மாடல், இந்த சீரிசில் ஆறாவது தலைமுறை மாடல் ஆகும்.

    இந்தியா மற்றும் சீனாவில் இந்த கார் லாங்-வீல்பேஸ் வடிவில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்டாண்டர்டு E கிளாஸ் மாடலுடனேயே அதன் லாங்-வீல்பேஸ் வேரியண்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய E கிளாஸ் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் E கிளாஸ் மாடலை விட சற்று பெரியதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

     

    புதிய E கிளாஸ் மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் S கிளாஸ் மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆடம்பர செடான் மாடலின் உள்புறம் MBUX சூப்பர் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று ஸ்கிரீன்கள் டேஷ்போர்டில் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கும். இது விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது.

    பவர்டிரெயினை பொருத்தவரை புதிய E கிளாஸ் மாடல் அதிகபட்சம் 4 அல்லது 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் 4 சிலிண்டர் டீசல் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம், 6 சிலிண்டர் யூனிட்களுடன் பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் (PHEV) வழங்கப்பட இருக்கிறது. புதிய E கிளாஸ் PHEV மாடல் EV மோடில் அதிகபட்சம் 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் வினியோகம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் புதிய மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்கள், ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி ஜிம்னி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய மாருதி ஜிம்னி 5-டோர் வேரியண்டிற்கான முன்பதிவு துவங்கியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஜிம்னி மாடலை இந்தியாவில் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

    புதிய மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்கள் மற்றும் சிஸ்லிங் ரெட், கிராணைட் கிரே, நெக்சா புளூ, புளூயிஷ் பிளாக், பியல் ஆக்டிக் வைட், சிஸ்லிங் ரெட் மற்றும் புளூயிஷ் பிளாக் ரூஃப், கைனடிக் எல்லோ மற்றும் பிளாக் ரூஃப் என மொத்தத்தில் ஏழு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை 5-டோர் ஜிம்னி மாடலில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஆல்க்ரிப் ப்ரோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடலை வாங்க இதுவரை சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மாருதி ஜிம்னி மாடல் ஏற்கனவே விற்பனை மையங்களை வந்தடைய துவங்கிவிட்டன.

    • மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி மாடலின் 4-வீல் டிரைவ் வேரியண்டிற்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • மஹிந்திரா தார் தவிர மஹிந்திராவின் எம்பிவி கார் மராசோ மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார்களில் தேர்வு செய்யப்பட்ட எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 72 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் மராசோ, பொலிரோ, பொலிரோ நியோ, தார் 4 வீல் டிரைவ் மற்றும் XUV300 போன்ற மாடல்களை அசத்தல் சலுகைகளுடன் வாங்கிட முடியும். தற்போது அதிக பிரபலமாக இருக்கும் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, தார் 2 வீல் டிரைவ், XUV400 EV மற்றும் XUV700 போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த மாத சலுகைகளில் மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் M6 மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மிட் ரேஞ்ச் M4பிளஸ் மற்றும் பேஸ் M2 வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 34 ஆயிரம் மற்றும் ரூ. 58 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மராசோ மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 66 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டாப் எண்ட் B6 (O) வேரியண்டிற்கு ரூ. 51 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மிட் ரேஞ்ச் மற்றும் எண்ட்ரி லெவல் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ. 37 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    இதே போன்று XUV300 மாடலுக்கு ரூ. 52 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் W8 டீசல் வேரியண்டிற்கு ரூ. 42 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸீர்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. இதன் டாப் எண்ட் மாடல்களுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 12 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா தார் 4X4 மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்திய சந்தையில் தார் 4X4 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    • ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
    • வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.

    பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார்களின் விலையை உயர்த்தியது.
    • விலை உயர்வு பற்றிய தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்து இருந்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் கார்களில் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களின் விலையை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. கார் மாடல்கள் விலை உர்த்தப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதமே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஃபிளாக்ஷிப் செடான் மாடலான மெர்சிடிஸ் மேபேக் S கிளாஸ் விலை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து GLE கூப் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்றே S கிளாஸ் மாடல்களின் விலை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

     

    மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மாடலின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. C கிளாஸ் மற்றும் GLE எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 3 லட்சம் வரை உயர்ந்து இருக்கிறது. GLA மற்றும் A கிளாஸ் மாடல்களை வாங்குவோர் பழைய விலையை விட கூடுதலாக ரூ. 2 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.

    இதேபோன்று மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் செடான் விலை முன்பை விட ரூ. 4 லட்சம் அதிகரித்து இருக்கிறது. இந்த வரிசையில் GLA 35 AMG விலையும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் கிராஷ் டெஸ்டில் பெற்ற முடிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.
    • முற்றிலும் புதிய விதிகளுக்கு உட்பட்டு தற்போதைய டெஸ்டிங் செய்யப்பட்டு உள்ளன.

    குளோபல் NCAP நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லேவியா, மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ K10 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

     

    ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை மேம்பட்ட குளோபல் NCAP விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து நடசத்திர குறியீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு இந்த கார் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றது. பெரியவர்கள் பாதுகாப்புக்கு விர்டுஸ் மாடல் 34-க்கு 29.71 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    விர்டுஸ் செடான் மாடலுக்கான பாடி ஷெல் நிலையாக இருக்கிறது என சான்று பெற்றுள்ளது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், முன்புற சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லமிடர்கள், நான்கு கூடுதல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்கள், ஏபிஎஸ், ஏபிடி மற்றும் இஎஸ்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    • ராஜபாளையத்தில் காரை நிறுத்துவது தொடர்பாக இருதரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் வடக்கு மலையடிபட்டி காட்டுநாயக்கர் தெருவில் வசிப்பவர் ஈஸ்வரன் (வயது 25) இவர் தனது காரை நிறுத்த சென்றபோது வழியில் நின்ற ஆட்டோவை ஒதுக்கி விடுமாறு கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (35 )என்பவர் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனைக் கண்ட ஈஸ்வரனின் உறவினர் முனீஸ்வரன், சீனிவாசனை கண்டித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து சீனிவாசன், அவரது தம்பி முருகன் ஆகியோர் அரிவாளை எடுத்து வந்து முனீஸ்வரனை வெட்டி உள்ளனர். அப்போது ஈஸ்வரன் தரப்பை சேர்ந்த பார்த்திபன், மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகியோர் சீனிவாசனை தாக்கி உள்ளனர். இந்த மோதலில் முனீஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி ஈஸ்வரன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன், முருகன் ஆகியோர் மீதும், சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரன், பார்த்திபன், மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகிய 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×