என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவகிரி"
சிவகிரி:
சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.
தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.
இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.
இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன்ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.
அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி காமராஜர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிவசக்தி (23). இவர்களுக்கு 3 வயதில் துர்கேஷ் , ஒரு வயதில் யோகேஷ் ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.
மாரிமுத்து தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார். அங்கிருந்து நேற்று இரவு தனது மனைவி சிவசக்தி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
சிவகிரி அருகே உள்ளாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ், முன்னே சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றது. அப்போது பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்து உள்பட 4 பேரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். சிவசக்தி மற்றும் துர்கேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
மாரிமுத்து பலத்த காயமடைந்தார். யோகேஷ் லேசான காயம் அடைந்தான். தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாரிமுத்துவை மேல்சிகிச்சைக்காக ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். யோகேஷ் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது. விபத்து குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற விபத்து தருணங்களில் சிவகிரி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள டாக்டர் நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
விபத்தில் குழந்தையுடன் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மனைவி முத்தம்மாள். இவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருகில் இருந்த ஒரு கிணற்றில் விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் இதுகுறித்து சிவகிரி போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முத்தம்மாளை பிணமாக மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்