என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 159680
நீங்கள் தேடியது "கண்டக்டர்"
கோவை சூலூர் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாயகி.
சம்பவத்தன்று இவர் அலுவலக பணி காரணமாக பாப்பம்பட்டி பிரிவில் இருந்து கோவைக்கு செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து கோவைக்கு வந்த தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது லோகநாயகி தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயத்தை கண்டக்டரிடம் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார்.
நாணயத்தை கண்டக்டர் வாங்க மறுத்து பஸ்சில் இருந்து இறங்குமாறு தகராறு செய்துள்ளார். பஸ் சிங்காநல்லூர் அருகே வந்த போது டிக்கெட் பரிசோதகர் பஸ் சில் ஏறி உள்ளார். அவரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து லோகநாயகி செல்போன் மூலம் சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சித்தாவை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர் கண்டக்டரை எச்சரிதார். பின்னர் கண்டக்டர் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

திருவான்மியூர் அரசு பஸ் டிரைவரும், கண்டக்டரும் தங்கள் இருக்கைக்கு மேல் பகுதியில் குடை வைத்த படி வேலை பார்பதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
குடையை பிடித்தபடி ஓட்டினாலாவது ஓட்டையை சரி செய்றாங்களா... பார்ப்போம்...!
இப்படி ஒரு எண்ணம் மாநகர அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவரான ஜானகி ராமனுக்கும், நடத்துனர் சம்சுதீனுக்கும்.
அரசு பஸ் என்றாலே பராமரிப்பு இல்லாமல் ஓட்டை, உடைசலாகவும் குப்பை கூழங்களுடனும் தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
மழைக்காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. பஸ் முழுவதும் ஒழுகும். இருக்கையில் அமர முடியாது. ஜன்னல்களை பூட்ட முடியாதபடி சிக்கி இருக்கும்.
டிரைவர் ஜானகிராமன் ஓட்டிய திருவான்மியூர் பஸ்சும் இதே ரகம்தான். டிரைவர், கண்டக்டர் இருக்கையிலும் ஒழுகி இருக்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது அவருக்குள் தோன்றியது தான் இந்த எண்ணம்.
டிரைவரும், கண்டக்டரும் தங்கள் இருக்கைக்கு மேல் பகுதியில் குடையை விரித்து கட்டி வைத்திருந்தனர். அந்த குடைக்குள் அமர்ந்த படியே வேலை பார்த்தனர்.
பஸ் ஏற சென்ற பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் நேரடியாகவே கேட்பார்கள். அப்போது தான் அவர்கள் விவரத்தை கூறினார்கள்.
நாள் ஒன்றுக்கு பஸ் பராமரிப்புக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை செலவிடுவதாக கணக்கு சொல்கிறது. ஆனாலும் பராமரிப்பு....?
புது பஸ்கள் வந்தால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் புது பஸ்கள் வாங்கினாலும் ஓரிரு நாட்கள் சுத்தம் செய்யப்படும். அதன் பிறகு அந்த பஸ்களும் பராமரிப்பு இல்லாத இந்த நிலைக்கு ஆளாகிவிடுமே. அதன் பிறகும் இதே நிலைக்கு தானே வரும். #TNGovernment

அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்தது போக மீதிப்பணம் ரூ.75 தர மறுத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெண் பயணிக்கு ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
சென்னை:
பொன்னேரியை அடுத்த வெலூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி திருவெல்லிவாயலில் இருந்து தனது கிராமமான வெலூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் உறவினர்கள் 4 பேரும் சென்றனர்.
இவர்கள் பயணம் செய்த பஸ்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கண்டக்டரிடம் மலர்விழி 5 டிக்கெட் தரும்படி கேட்டார். அதற்காக ரூ.100 கொடுத்து டிக்கெட்டுக்கு தலா ரூ.5 வீதம் ரூ.25 போக மீதம் ரூ.75 தரும்படி கேட்டார்.
அப்போது பஸ்சில் இருந்த 2 பேர் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். எனவே டிக்கெட்டும், மீதிபணமும் தர கண்டக்டர் மறந்துவிட்டார்.
இதற்கிடையே அரசு பஸ்சில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது மலர்விழி, அவரது உறவினர்களிடம் டிக்கெட் இல்லை. எனவே நடந்த விவரங்களை அவரிடம் மலர்விழி கூறினார். அதை டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏற்கவில்லை.
மாறாக டிக்கெட்டுகளை கண்டக்டரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர்கள் தாங்கள் கூறியபடி எழுதி தரும்படி மலர்விழியிடம் கூறினர். பயம் காரணமாக அவரும் அப்படியே எழுதி கொடுத்தார். இதையடுத்து அபராதம் எதுவும் வசூலிக்கவில்லை.
இதற்கிடையே ஊர் வந்ததும் தான் கொடுத்த 100 ரூபாயில் டிக்கெட் கட்டணம் போக மீதி பணம் 75 ரூபாயை திரும்ப தரும்படி கண்டக்டரிடம் மலர்விழி கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாளரிடம் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி புகார் கடிதம் அனுப்பினார். அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அதே அலுவலகத்தின் பொது மேலாளருக்கும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி புகார் மனு அனுப்பினார்.
அவரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. எனவே திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு தரவேண்டிய மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மலர்விழிக்கு மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.
அதில் ரூ.2 ஆயிரம் கோர்ட்டு செலவுக்கும், ரூ.5 ஆயிரம் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொன்னேரியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த கண்டக்டரை தாக்கிய பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் இருந்து செங்குன்றம் நோக்கி அரசு பஸ் சென்றது. கண்டக்டராக கண்ணன் இருந்தார்.
பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். அவர்களை கண்டக்டர் கண்ணன் கண்டித்தார்.
பொன்னேரி பணிமனை அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென கண்டக்டர் கண்ணனை மாணவர் ஒருவர் சரமாரியாக தாக்கினார்.
இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி அரசு பள்ளியில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாததால் 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. #Bus #MTCBus
சென்னை:
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பெருநகர போக்குவரத்து கழகம் மூலம் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு 3 ஆயிரத்து 300 பஸ்கள் பெருநகர போக்குவரத்து கழகத்தில் உள்ளன.
ஆனால் இத்தனை பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது 2 ஆயிரத்து 900 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
பெருநகர போக்குவரத்து கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 ஊழியர்கள் பதவி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஊழியர் கூட நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது 1500 ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராமல் விடுமுறை எடுப்பதும் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களில் பலர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
தொழில் ரீதியான நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாசுவினால் ஏற்படும் நோய்கள், அதிக பணிச்சுமையால் ஏற்படும் பாதிப்புகள், முறையாக சாப்பிடாதது, தூங்க முடியாதது போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் விடுமுறை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வருவது குறைவாக இருப்பதால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. இதனால் முழுமையாக பஸ்களை இயக்க முடியாமல் அவற்றை நிறுத்தி உள்ளனர். மேலும் பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு பழுதாகி இருக்கின்றன. எனவே அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சென்னை சாலை போக்குவரத்து கழக இன்ஸ்டிடியூட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டர்களுக்கு உரிய பணியை வழங்காமல் அலுவலக வேலை, குடிநீர் பாட்டில் விற்பனை, காவலாளி வேலை போன்றவற்றை கொடுக்கப்படுவதாகவும் மற்றவர்களை மட்டுமே வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
அரசு விதிகள் படி ஒரு பஸ்சை முழுமையாக இயக்குவதற்கு 6.5 லிருந்து 7.5 சதவீதம் ஊழியர்கள் தேவை. ஆனால் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ளது.
நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் கூறும் போது, ஆள் பற்றாக்குறை, பணிக்கு வராமை போன்றவை மட்டும் பஸ்கள் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை. பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றன. இதனால் அவற்றை இயக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். பணிக்கு வரும் கண்டக்டர், டிரைவர்களை கூட பணி இல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை நிர்வாகம் மூடி மறைக்கிறது என்று கூறினார்.
ஆனால் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊழியர்கள் பணிக்கு வராததால் மட்டுமே தினமும் 250 பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.
மேலும் பஸ்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் நஷ்டமடைவதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும்போது சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த இடத்துக்குமே குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்ல முடிவதில்லை. பயணிகள் சிறிது நேரம் பஸ் வருகிறதா? என பார்த்து விட்டு வேறு வாகனங்களில் சென்றுவிடுகிறார்கள் என்று கூறினார்.
இதற்கிடையே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஏராளமான பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என்று போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறினார். #Bus#MTCBus

ஆள் பற்றாக்குறையால் இருக்கிற ஆட்களையே தொடர்ந்து வேலை செய்ய சொல்வதால் ஊழியர்கள் அதிக பணிச்சுமையை ஏற்க வேண்டியது இருப்பதாக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பிச்சை கூறினார்.
நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் கூறும் போது, ஆள் பற்றாக்குறை, பணிக்கு வராமை போன்றவை மட்டும் பஸ்கள் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை. பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றன. இதனால் அவற்றை இயக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். பணிக்கு வரும் கண்டக்டர், டிரைவர்களை கூட பணி இல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை நிர்வாகம் மூடி மறைக்கிறது என்று கூறினார்.
ஆனால் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊழியர்கள் பணிக்கு வராததால் மட்டுமே தினமும் 250 பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.
மேலும் பஸ்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் நஷ்டமடைவதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும்போது சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த இடத்துக்குமே குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்ல முடிவதில்லை. பயணிகள் சிறிது நேரம் பஸ் வருகிறதா? என பார்த்து விட்டு வேறு வாகனங்களில் சென்றுவிடுகிறார்கள் என்று கூறினார்.
இதற்கிடையே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஏராளமான பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என்று போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறினார். #Bus#MTCBus
×

X