search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீ"

    கொளத்தூர் அருகே மாதிரி பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த 30 மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    கொளத்தூர்:

    கொளத்தூரை அடுத்த மாங்காடு பகுதியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 237 மாணவர்களும், 213 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று உலக கை கழுவும் தினம் என்பதால் அப்பள்ளி ஆசிரியர்கள் கை கழுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு சோப் வழங்கி கை கழுவ செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளியின் பின்புறம் இருந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்த மாணவ-மாணவிகளை கொட்டியது. இதில் மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்த 30 மாணவ- மாணவிகளும் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்களும் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். தேனீக்கள் கொட்டியதில் அதிகம் பாதிப்படைந்த குபேரன் என்ற 9-ம் வகுப்பு மாணவனும், அவனை பள்ளிக்கு அழைத்து வந்த அவனது தந்தை ராஜவேல் என்பவரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பாதிப்புக்குள்ளான மாணவ-மாணவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.
    நெல்லை டவுணில் தேனீக்களில் கொட்டி 30 மாணவ- மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை டவுண் தெற்கு மவுண்ட்ரோட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் எதிரே ஜவகர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ராட்சத மரத்தின் மீது 3 அடி உயரத்தில் பெரிய தேனீ கூடு இருந்தது.

    இந்நிலையில் இன்று வீசிய பலத்த காற்றில் அந்த தேனீ கூடு கீழே விழுந்தது. இதையடுத்து இதில் இருந்து ஏராளமான தேனீக்கள் வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் புகுந்தது. இதில் கல்லணை பள்ளியில் இருந்த சுமார் 25 மாணவிகளையும், ஆசிரியைகளையும் கொட்டியது. இதனால் அலறியடித்து கொண்டு மாணவிகள் வெளியேறினர்.

    இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனீக்கள் அருகில் உள்ள ஜவகர் பள்ளி மாணவர்கள் 5 பேரையும் தாக்கியது. மேலும் அவ்வழியாக வாகனத்தில் மற்றும் நடந்து சென்றவர்களையும் தாக்கியது. இதையறிந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து கல்லணை மற்றும் ஜவகர் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் டவுண் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×