search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • அன்னதானத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமாரராஜா தொடங்கி வைத்தார்.
    • திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் கெபித்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி புனித செபஸ்தியார் கெபி அலங்கரிக்கப்பட்டு பனிமயமாதா பேராலாய பங்கு தந்தை ஆசி வழங்கினார். பின்னர் 12 மணி அளவில் அன்னதானத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமாரராஜா தொடங்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ரவி, குருஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வின் பாண்டியன், ஸ்பெல்மன், சைலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. 40-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவருமான எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். குரூஸ் பர்னாந் நற்பணி மன்ற செயலாளர் சசிகுமார், வர்கிஸ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குருஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை புனித செபஸ்தியாரின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியை சேர்ந்த பிராங்ளின், டெரன்ஸ், சுரேஷ் , பிரவீன், பிரபாகர், சாமி வளன், ஸ்வீட்டஸ், மற்றும் வெர்ஜினியா உள்ளி ட்டோர் செய்திருந்தனர். வளன் நன்றி கூறினார்.

    • பார்வதி வீட்டில் இருந்த போது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • பெருமாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கீழசெக்கார குடியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி பார்வதி (வயது70). ஆதிமூலம் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகனும் மாயமானார். இதனால் பார்வதி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    தற்கொலை

    தன்னை கவனிக்க ஆள் இல்லை என மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று இரவு வீட்டில் இருந்த போது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    மற்றொரு சம்பவம்

    முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள் (55). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க . தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

    நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் வக்கீல் வாரியார் வரவேற்று பேசுகிறார். வக்கீல் சின்னத்தம்பி நன்றி கூறுகிறார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாநில சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் சதீஷ்ராஜா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் 50 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றி கிறிஸ்மஸ் விழா சிறப்பு பிரார்த்தனை செய்து விழாவை கொண்டாடு கின்றனர். தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

    • புதிய தமிழகம் கட்சியின் 25-வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறுகிறது.
    • வெள்ளி விழா மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் நிர்வாகிகள் செல்ல உள்ளனர்.

    தூத்துக்குடி:

    புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் பி.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது:-

    புதிய தமிழகம் கட்சியின் 25-வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (15-ந்தேதி) நடைபெறுகிறது.

    மாநாட்டிற்கு நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றி பேசுகிறார். ஸ்ரீவில்லி புத்தூரில் நடைபெறும் மாநாடு திருப்பு முனையாக அமையும்.

    500 வாகனங்களில்....

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சிக்கு செல்வாக்கு உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் கட்சிக்கு பெரும் எழுச்சி கிடைத்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகி களும், தொண்டர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    வெள்ளி விழா மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் நிர்வாகிகள் செல்ல உள்ளனர். எனவே அதில் மாவட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபிஷேகவிழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி கோவில் விமானகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபி ஷேகவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவகிரகஹோமம், துர்காஹோமம்,லட்சுமி பூஜைகள் நடைபெற்று தீபாராதனையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் விமானகோபுர கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை யடுத்து அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், செயலாளர்கள் சேகர் என்ற சந்திரசேகர், சின்னராஜ் என்ற ரகுபதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முள்ளக்காடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முனியத்தங்கம் நாடார், செயலாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர்கள் தங்கராஜ் நாடார், சிவாகர், முகேஷ் சண்முகவேல், ஞானவேலன், தி.மு.க. நிர்வாகிகள் பக்கிள்துரை, சில்வர்சிவா, ஒன்றிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரபாகர், செந்தில்குமார் ஜெய பாண்டியன்,அழகேசன் அருணாசல பாண்டியன், விஜய் கேபிள்பொன்ராஜ், அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சோலை குமார் உட்பட ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பாண்டிக்கு விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
    • ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி செல்லப்பாண்டி கீழே விழுந்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள் புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    செல்லபாண்டி தங்கம்மாள் புரத்தில் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மெயின் லைனில் சீரியல் செட் உரசி மின்சாரம் தாக்கியதில் செல்லப்பாண்டி மரத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இவரது மனைவி விஜயா சாயர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
    • மதியம் 12 மணிக்கு மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11 அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகா லிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    இங்கு பைரவரின் பிறந்த தினமும், மஹாதேவ காலபைரவாஷ்டமி நாளான வருகிற 16-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடும், 9மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜையும், காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவ-காலபைரவர் ஹோமமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபார தனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாரதனையுடன் நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழி பாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்ற னர்.

    • ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
    • முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் நாளை தொடங்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஊராட்சி செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகளான ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் சம்பளம் வழங்கிடவும், ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் 10 ஆயிரமாக உயர்த்திடவும், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஓய்வூதிய தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்திடவும், தூய்மை பணியாளர்களின் ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்களை அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் பணி செய்ய நிர்பந்திப்பது, இரவு நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் அவசரப் பணி என்ற பெயரில் பணிகளை செய்ய வைப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் நாளை தொடங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கசாலி மரக்காயர், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மாரிக்கனி, பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், வேலுச்சாமி, சிவபெருமாள், பாஸ்கர், முத்துராஜ், ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
    • தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க 2தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஜான் ராஜ். இவருடைய மகன் இம்மானுவேல் அப்துல்லா (வயது 32). கூலி தொழிலாளி.

    காதல் மனைவி கொலை

    இவருடைய மனைவி கன்னித்தாய் (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா (4), கதிஜா பிஸ்மி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இம்மானுவேல் அப்துல்லா, தனது மனைவியை அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இம்மானுவேல் அப்துல்லா சரிவர வேலைக்கு செல்லாமல், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்றும் கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர் கன்னித்தாயை கொன்றது தெரியவந்தது.

    இதற்கிடையே தப்பி ஓடிய இம்மானுவேல் அப்துல்லாவை பிடிக்க டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், முத்தையாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் விசாரணையில் அவர் தூத்துக்குடியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க, சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • கண் சிகிச்சை முகாமில் ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பிரேமலதாவின் வழிகாட்டுதலின்படியும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் கோவில்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

    விழாவில் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முனியசாமி, மறவன் மடம் ஊராட்சி தலைவர் மரிய புஷ்பலதா, திரேஸ்புரம் பகுதி செயலாளர் முத்து நகர் மு.சம்சுதீன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முல்லை கண்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முத்துமாரி, ஒன்றிய துணைச் செயலாளர் கர்ணன், 4-வது வார்டு செயலாளர் மைக்கேல் ராஜ், ஊராட்சி செயலாளர் அம்புரோஸ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகி பெரியசாமி மற்றும் மறவன்மடம் ஊராட்சி நிர்வாகிகள், திரவியபுரம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சாகுபுரத்தில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் நீரழிவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எக்கோ, கண் பரிசோதனை ஆகியவை நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரத்தில் டி.சி.டபிள்யூ. நிறுவனம், ஆன்மா தொண்டு நிறுவனம் மற்றும் சாகுபுரம் அரிமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர் அகமது யூசுப் தலைமையிலான 30 மருத்துவர்களை கொண்ட குழுவினர் முகாமை நடத்தினர்.டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். உற்பத்தி பிரிவு உதவி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    முகாமில் நீரழிவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எக்கோ, கண் பரிசோதனை, பல் சிகிச்சை ஆகியவை நடந்தன. இதில் 150 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முகாமில் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர், பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • திடீரென பணிகளை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
    • தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் 7,8,10,11 ஆகிய வார்டுகளின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் விதமாக பவுண்டு தொழு சந்திப்பில் உள்ள ஊராட்சி இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள வாட்டர் டேங்க் கட்டும் பணி துரிதமாக நடந்து வந்தது. தண்ணீர் தொட்டியின் தூண் 15 அடி உயரத்திற்குகட்டப்பட்ட நிலையில் திடீரென இப்பணியை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

    விரைவில் தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீண்டும் வாட்டர் டேங்க் பணியை தொடங்க வேண்டுமென இவ் வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×