search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ்"

    • அதி நவீன வானங்கள் என 1300- க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் மருத்துவ ரீதியிலான அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை 2008 -ம் ஆண்டு செப்டம்பர் 15 -ல் 198 வாகனங்களுடன் பெருநகரங்களில் தொடங்கி தற்போது இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு தற்போது தமிழகத்தில் பச்சிளங்குழந்தை வாகனங்கள், இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதி நவீன வானங்கள் என 1300- க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நாமக்கல் மாவட்டத்தில் 2 பச்சிளம் குழந்தை வாகனங்கள், 4 அதிநவீன வாகனங்கள் என மொத்தம் 29 வாகனங்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.

    3 லட்சம் பேர்

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டு நாள் முதல் இன்று வரை பிரசவத்திற்கு மட்டும் 52287 பேரும், சாலை விபத்திற்கு மட்டும் 66,769 பேரும் இதர அவசர தேவைகளுக்கு 192,106 பேரும் என மொத்தத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 662 பேரின் உயிர்களை காப்பாற்றி உயிர்காக்கும் தோழனாய் இன்று வரை வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது 108 ஆம்புலன்ஸ் சேவை.

    2008 -ம் ஆண்டு முதல் அவசரம் என்றால் 108 ஆம்புலன்ஸை அழைக்கனும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே 108 எவ்வாறு வந்தது என்பதை பற்றி பார்ப்போம்.

    சூரியன், நிலா, பூமி

    பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் 7926 மைல்கள். 

    • நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • அதி நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 லட்சத்துக்கும் மேலானவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று 108 ஆம்புலன்ஸ் மேலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது, 2008ம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது

    இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 15, 2 அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேவை துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 3 லட்சத்து 1132 பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 64,539 பேரும், சாலை விபத்துகளில் 50,761 பேரும் இதர மருத்துவ அவசர தேவைக்காக 1,85,732, பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 435 தாய்மார்களுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் அவசர ஊர்தியிலேயே பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 370 தாய்மார்கள் அவர்களது இல்லங்களிலேயே சேய் ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 132 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • ராஜபாளையம் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி பால் வியாபாரி பலியானார்.
    • ராஜபாளையம் ரெட்டியபட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கணபதி நாடார் தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 51). பால் வியாபாரி. இவர் தனது ஊரில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    தென்காசி மெயின் ரோட்டில் தளவாய்புரம் விலக்கு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் தர்மரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இந்தநிலையில் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் தர்மரின் அண்ணன் விஜயன் வந்தார். அவர் தர்மரை அங்கிருந்து மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தர்மர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், விபத்துக்கு காரணமான 108 ஆம்புலன்சின் டிரைவரான ராஜபாளையம் ரெட்டிய பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு காட்டுப் பகுதியில் உள்ள கொலஞ்சிமடம் என்ற பகுதியில் வசிப்பவர் நிஷாந்த். இவருக்கு அபிஷா (வயது 19) என்ற மனைவி உள்ளார்.

    இவர்கள் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் காட்டு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்கள். முதல் குழந்தை பிரசவ வலியால் அவதிபட்டு வந்தார். இவரின் கணவர் வெளியூர் சென்றிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இரவு 9.54 மணிக்கு பேச்சிப்பாறை ஆம்புலன்சிற்கு போன் செய்தார்கள்.

    உடனடியாக பேச்சிப்பாறை 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று அபிஷாவை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜீஸ் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார். அந்த பகுதியானது இருண்ட அடர்ந்த காட்டு பகுதியாகும். இரவில் மிருகங்கள் நடமாடும் பகுதி மற்றும் கரடுமுரடான பாதையாகவும் இருந்தது.

    அவசர கால மருத்துவ நுட்புநர் சுஜின்ராஜ் அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயையும் சேயையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்தப் பணியை சிறப்பாக செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    • ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம்.
    • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, நேற்று நடைபெற்ற 49வது தேசிய மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் சிந்தியா மேலும் கூறியதாவது:-

    ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்கள் செயல்படத் தொடங்கும். அதன் முன்மொழிவுக்கான கோரிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அழைக்கப்படும். இதனால் விலைமதிப்பற்ற நேரத்தையும் உயிர்களையும் காப்பாற்ற ஹெலிகாப்டர்கள் சேவைக்கு ஒதுக்கப்படும்.

    ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம். சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எங்களிடம் உள்ள 'பொன்னான நேரம்', நெடுஞ்சாலைகளில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கும் அல்லது முதல் மையத்திற்கும் விரைவாக அழைத்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் அமைச்சகம் பகிர்ந்து கொண்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்போது 49 ஏர் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், இவை 19 ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    • வீட்டில் தனியே இருந்தவர் மேற்கூரை விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    • அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

     பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் செல்வகுமார்(வயது25). இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை வீட்டில் தனியே இருந்தவர் மேற்கூரை விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற அவரது பெற்றோர் திரும்ப வீடு வந்து பார்த்தபோது செல்வகுமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அடி-உதை விழுந்தது.
    • முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் மீது மோதியது.

    மதுரை

    மதுரை சித்தாலாட்சி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ், நேற்று மதியம் விராட்டிபத்துக்கு சென்றது. முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய டிரைவர் செந்தில்குமார், மருத்துவ உதவியாளர் சூர்யா ஆகியோர் காயமடைந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கி விட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்தியவர் அன்பு சூர்யா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • பணம் கொடுக்க முடியாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்டதாக உறவினர் குற்றச்சாட்டு
    • அந்தப் பெண் சாலையோரம் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில், 1000 ரூபாய் கொடுக்காததால் கர்ப்பிணி பெண்ணை அரசு ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹமிர்பூர் மாவட்டம் பந்தாரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், '1000 ரூபாய் கொடுத்திருந்தால் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் மருத்துவமனையில் இறக்கி விட்டிருப்பார். ஆனால் பணம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் இறக்கிவிட்டார்' என குற்றம்சாட்டினார்.

    வலியால் துடித்தபடி அந்த கர்ப்பிணி பெண் சாலையோரம் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆம்புலன்ஸ் வழியை மறைத்து நின்ற டாக்டரின் காரால் மூதாட்டி பரிதாப இறந்தார்.
    • தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    மதுரை புதூரை சேர்ந்தவர் பிரேமா (வயது 75). இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் புதூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டிக்கு நாடித்துடிப்பு குறைவாக உள்ளது.

    அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். இதையடுத்து மூதாட்டியை அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆஸ்பத்திரிக்குள் வரும் வழியில் டாக்டரின் கார் நின்று கொண்டு இருந்தது. ஊழியர்கள் ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மூதாட்டியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு அழைத்து வந்து 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

    இருந்த போதிலும் மூதாட்டி பிரேமா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மூதாட்டியின் மகள் சுப்புலட்சுமி கூறுகையில், என் தாயாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தோம். மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக என் தாயார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார் என்றார். மதுரை புதூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் நிற்க வேண்டிய இடத்தில் தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பெண் டாக்டரிடம் கேட்டபோது, "ஆம்புலன்சை இடம் மாற்றும் முடிவை நான் எடுக்கவில்லை. மாநகராட்சி நகர் நல சுகாதார அதிகாரி உத்தரவின் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோயாளி உயிரிழப்புக்கும், ஆம்புலன்ஸ் வெளியே நின்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

    மாநகராட்சி நகர்நல சுகாதார அதிகாரி வினோத் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் அமர்வதற்காக தான் அந்த இடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்காக, புதூர் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    • கொள்ளிடம் ஆற்றின் வலது கரையோரம் ஆய்வு செய்துவிட்டு அணைக்கரை பாலத்திற்குள் அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட கலெக்டரின் வாகனமும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புதுறை என அனைத்து துறை வாகனங்களும் நுழைந்தது.
    • அவசர ஊர்திக்கு வழி விடுவதுதான் அப்போதைய சிறந்த முடிவாக இருந்தது. அதன்படியே பாதுகாப்பு வாகனத்தின் பாதுகாவலர்கள் வழிகாட்டுதலுடன் அனைத்து துறை வாகனங்களும் அதே வழியாக வேகமாக சென்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழிவிடவில்லை என்னும் தலைப்பில் வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.

    இந்நேரத்தில் இந்த அறிக்கையின் மூலம் உண்மை நிலையை கீழ்க்கண்டவாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினையும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

    கடந்த 5-ம் தேதி மட்டும் கல்லணை முதல் அணைக்கரை மதகுசாலை வரை கொள்ளிடம் ஆற்றின் கரையில் பயணம், 81 கி.மீ தூரத்தினை காலை முதல் மாலை வரை சுமார் 12 மணி நேரம் பயணம் செய்து மக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

    பின்னர் தஞ்சாவூர் மாவட்டம். அணைக்கரை (கீழணை)- ஆய்வு மாளிகையில் அரசு அலுவலர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்ததினால் அணைக்கரை பாலம் வழியாக ஆய்வு மாளிகைக்கு சென்றார்.

    அணைக்கரை பாலத்தின் பாலம் என்பது ஒரு வழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம். ஒரு வழியாக வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும். மறுபுறத்தில் வாகனங்களை அனுமதிக்கும் போது, அந்தப் பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். இதுதான் அன்றும் நடந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் வலது கரையோரம் ஆய்வு செய்துவிட்டு அணைக்கரை பாலத்திற்குள் அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட கலெக்டரின் வாகனமும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புதுறை என அனைத்து துறை வாகனங்களும் நுழைந்தது.

    கிட்டத்தட்ட 1 கி.மீ தூரம் கொண்ட பாலத்தின் மைய பகுதியில் துறை அலுவலர்களின் வாகனங்கள் செல்லும் போதுதான் மறுபுறம் அவசர ஊர்தி வந்துள்ளது. அந்நேரத்தில் வாகனங்கள் பின்னோக்கி செல்வதை விட முன்னோக்கி வேகமாக சென்று அவசர ஊர்திக்கு வழி விடுவதுதான் அப்போதைய சிறந்த முடிவாக இருந்தது. அதன்படியே பாதுகாப்பு வாகனத்தின் பாதுகாவலர்கள் வழிகாட்டு தலுடன் அனைத்து துறை வாகனங்களும் அதே வழியாக வேகமாக சென்றுள்ளது. பாதுகாப்பு அலுவலர்களின் துரிதமான முடிவினால் அவசர ஊர்திக்கான வழி விரைவில் கிடைத்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வானூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    • மேல் தளம் சேதம டைந்துள்ளதால் மழை நீர் மருத்துவமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றகர். பொம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை காலங்களில் மேல் தளம் சேதம டைந்து ள்ளதால் மழை நீர் மருத்து வமனை முழுவதும் ஒழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது.இதனால் நோயாளிகள் அவதி ப்படுகி ன்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை இதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு வந்த போது மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் ஆஸ்ப த்திரிக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அந்த கர்ப்பிணி பெண் மரணம் அடைந்து உள்ளார். எனவே பொம்பூர் மருத்து வமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • ஆம்புலன்ஸ் மோதி பணியாளர் இறந்தார்.
    • நேற்று இரவு குமலத்திலிருந்து அனுமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    விழுப்புரம் :

    வானூர் தாலுகா குமளம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் பசுபதி (வயது 26) இவர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அனுமந்தை அருகே உள்ள பால் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு குமலத்திலிருந்து அனுமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மஞ்சக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிரே சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் இவர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாப மாக இருந்தார். இது குறித்த கோட்டகுப்பம் போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×