search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    • அ.ம.மு.க. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஆலோசனைக்கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் 30ந்தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில், 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருநெல்வேலி, பாலன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் இன்று.
    • எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாக திகழ்ந்து, மன்னர், பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் அழகுமுத்துக்கோன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் இன்று. எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாக திகழ்ந்து, மன்னர், பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் அழகுமுத்துக்கோன்.

    அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என வீர முழக்கமிட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த இந்த நன்நாளில் அவரது விசுவாசம், அர்ப்பணிப்பு, தியாக உணர்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டை மலை சீனிவாசன்.
    • இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளில் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக்கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தென்னகத்தின் அம்பேத்கர் என போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்துகொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன்.

    பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டை மலை சீனிவாசன். அவரது பிறந்தநாளில் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக்கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சி உறுப்பினர் சேர்க்கை, பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
    • ஒன்றிய செயலாளர்கள், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் நடக்கிறது. கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

    கூட்டத்தில் துணை பொது செயலாளர் ஜி. செந்தமிழன், மாநில துணை தலைவர் எஸ்.அன்பழகன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.வேதாசலம் தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பி.ராஜன் பாபு, தி.நகர் வடக்கு பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஆர். சதீஷ்குமார், தி.நகர் தெற்கு பகுதி செயலாளர் வி.வி.விமல், விருகை வடக்கு பகுதி செயலாளர் எம்.குணசீலன், விருகை தெற்கு பகுதி செயலாளர் நா.ஹரி பாபு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கே.விதுபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் அன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
    • கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் டி.டி.வி. தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை இப்போதே தொடங்கி விட்டது.

    வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சரி பார்ப்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, வாக்கு சாவடி வாரியாக பி.எல்.ஏ. 2 முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி கூட்டணி குறித்தும் இப்போதே முடிவு செய்து அதற்கேற்ப தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 20-ந் தேதி கூட்டியுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் அன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன், சி.ஆர்.சரஸ்வதி, அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வான திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.வேதாசலம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் டி.டி.வி. தினகரனை சந்தித்த பிறகு நடைபெறும் செயற்குழு என்பதால் கட்சியின் எதிர்கால நிலவரம் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    அதே போல் முக்கிய நிர்வாகிகள் பலர் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு செல்வதால் அதை தடுத்து நிறுத்துவது பற்றியும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் டி.டி.வி. தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் டி.டி.வி. தினகரன் ஆலோசிக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அகில இந்திய அளவில் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
    • காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி .டி.வி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆளுமை, சாதனைகள் பற்றி எதுவும் தெரியாமல் அறியாமையில் பேசுகிறார். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல முக்கிய பா.ஜ.க தலைவர்கள் ஜெயலலிதாவுடன் அன்புடனும், நட்புடனும் இருந்தவர்கள். 1998-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தென் நாட்டில் காலூன்ற வாய்ப்பு கொடுத்தது ஜெயலலிதா தான். இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்.

    ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் உள்பட பல்வேறு நல்ல திட்டங்களை அன்னை தெரசாவே பாராட்டி உள்ளார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் செய்துள்ளார் . அந்த சாதனைகளை பொறுக்க முடியாமல் தான் சிலர் காழ்ப்புணர்ச்சியால் அவர் மீது வழக்கு தொடுத்தனர். 1996 ஆம் ஆண்டு மட்டும் அவர் மீது 49 வழக்குகள் போட்டனர் . அந்த வழக்கை எல்லாம் அவர் வென்றார். ஜெயலலிதாவின் மரணம் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை.

    அகில இந்திய அளவில் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
    • அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து, அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது.

    மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாகக் கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகள் பலவற்றை தி.மு.க. தொடுத்தது.

    எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.

    இந்தக் காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக் கூடிய பெருமைமிகு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா ஆவார் என்பதை அண்ணாமலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

    ஏழைகளைத் தேடி அரசு, ஏழைகளுக்கான அரசு என்பதை நிலைநாட்டியதோடு, தமிழகத்திற்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியவர் அம்மா. அதனால்தான், அவரது ஆட்சி முறையைப் பல்வேறு மாநில அரசுகள் இன்றும் பின்பற்றுகின்றன.

    உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.

    ஏன், இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் போயஸ் தோட்டத்தில் வந்து அம்மாவை சந்தித்து தனது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.

    உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அம்மா. இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தி.மு.க அரசின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை, அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல முடியுமா? வெறுமனே சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்.

    முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.
    • அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே அங்கீகரித்துள்ளன.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் அவரை முழுமனதோடு வரவேற்று அ.தி.மு.க.வின் 3-ம் தலைமுறையே என்று வர்ணித்து பின்னால் அணிவகுத்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாகவே மாறி இருக்கிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது அரசியல் களத்தில் மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனோடு கைகோர்த்துள்ள ஓ.பி.எஸ். சசிகலாவையும் சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.

    ஆனால் அவரது இந்த அறிவிப்பை சசிகலா தரப்பினரோ ரசிக்கவில்லை. இதன் காரணமாகவே ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.

    இப்படி சசிகலாவிடமிருந்து 'கிரீன் சிக்னல்' கிடைக்காத நிலையில் எந்த வழியாக பயணிப்பது? என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவியாய் தவித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான சண்முகத்தில் தொடங்கி வைரமுத்து, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் என 6 பேர் வரை வழக்கு போட்டனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் பல்வேறு கால கட்டங்களில் 10 முறைக்கு மேல் கீழ்கோர்ட்டு முதல் மேல் கோர்ட்டு வரை விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் இதில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி 9 முறை நடைபெற்ற வழக்கு விசாரணைகள் அனைத்திலுமே எடப்பாடியே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஓ.பி.எஸ்.சின் சட்டப்போராட்டங்களை தவிடு பொடியாக்கியுள்ளார்.

    இதனால் ஓ.பி.எஸ்.சுக்கு அ.தி.மு.க. விவகாரத்தில் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து வந்துள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடிக்கு எதிரான கடைசி வாய்ப்பாக ஓ.பி.எஸ்.சுக்கு இருப்பது ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு மட்டுமேயாகும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கிலும் ஓ.பி.எஸ்.சை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்களுடன் அவர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தொடங்கி, ராயப்பேட்டையில் தலைமைக்கழகம் தாக்கப்பட்ட விவகாரம் வரை அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்று சாதித்து காட்டி இருக்கிறார்.

    அதே பாணியில் ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள இந்த கடைசி வழக்கிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். உடனான இறுதி மோதல் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்களில் தொடங்கி அனைத்து பொறுப்புகளிலும் அதிரடி மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம்.
    • துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர செய்வோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது :-

    மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம்.

    இந்த திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி என்றால், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய தினம் அனைவரும் ஒன்றாய் ஒரே கூரையின் கீழ் இணைந்துள்ளோம்.

    6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் துரோகத்தால், சுயநலத்தால் அ.ம.மு.க. என்ற கட்சி இயக்கத்தை தொடங்க வேண்டியதாகி இருந்தது. ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அ.ம.மு.க.வை தொடங்கினேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வத்துடன் பேசி ஒன்றாக செயல்படுவோம் என கூறினோம். அரசியலையும் தாண்டி எனக்கு அவருடன் நட்பு தொடர்ந்து வருகிறது.

    மீண்டும் மலர செய்வோம்..

    அதன்படி தற்போது அனைவரும் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். அ.தி.மு.க, அ.ம.மு.க இணைந்து கைகோர்த்து ஒன்றாக செயல்பட தொடங்கிவிட்டது.

    துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை அனுமதித்தால் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.

    மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவினால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாராளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முறையான வாக்குப்பதிவு நடைபெறும். பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் யார் இந்த நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும் என்பதை பொறுத்து தான் வாக்கு வங்கி அமையும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.

    தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒரேஅணியில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகத்தில் இருக்கிற மிகச் சிறந்த தலைவர் யார் என்று சொன்னால் இன்றைக்கு முதல் வரிசையில் இடம் பிடித்து இருப்பவர் பிரதமர் மோடி மட்டும் தான். எனவே இந்தியாவில் 3-வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பு ஏற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது.
    • ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அ.ம.மு.க. கொடியேற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொடநாடு கொள்ளை வழக்கில் அ.ம.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். தற்போது ஓ.பி. பன்னீர்செல்வமும் நம்மோடு இணைந்துள்ளார். நாங்கள் இருவரும் இணைந்து அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம்.

    4 ஆண்டுகளாக பதவி வகித்த பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபபட்டு தி.மு.க. திருந்தி இருக்கும் என வாக்களித்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு எதற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தீர்கள் என மக்களை வாட்டி வதைத்து தண்டிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது.

    ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் அவரது துறை மாற்றப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    • பெரியபாளையம், பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • தச்சூர் கூட்டுச் சாலையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தச்சூர் கூட்டுச் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

    இதே போன்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம், பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    சோழவரம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, எல்லாபுரம் கிழக்கு துணைச் செயலாளர் பூவரசன், கும்மிடிப்பூண்டி மத்திய ஒன்றிய செயலாளர் தமிழ் மணி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முனி ரத்தினம், ஆரணி பேரூராட்சி செயலாளர் தன்ராஜ், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு, மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, மீஞ்சூர் பேரூராட்சி செயலாளர் சதீஷ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராம்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கோடீஸ்வரன், பூண்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், வெங்கல் மணிமாறன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சி.என்.அன்பு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாலதி, கழக இணைச் செயலாளர் பானுமதி, கழகத் துணைச் செயலாளர் அங்கைய்யன், நத்தம், வாசு, எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ரேகா உள்ளிட்ட  அமமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×