என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன்"

    • 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார்.

     பல்லடம் : 

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் அந்தோணி,(வயது 40), பெயிண்டர்.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி புஷ்பா, மற்றும் மகளையும், மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது .இதில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில்,இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விளையாடச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களுக்கு பிறகு ஓரு குளத்தில் பிணமாக மிதந்தான்.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜிபு. இவரது மகன் ஆதில் (வயது 12).

    7-ம் வகுப்பு மாணவனான இவன், கடந்த மே மாதம் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். மே 6-ந் தேதி வீட்டில் இருந்து விளையாடச் சென்ற அவன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு மணத்திட்டை பகுதியில் உள்ள ஓரு குளத்தில் முகம து ஆதில் பிணமாக மிதந்தான். அவன் எப்படி இறந்தான்? என்பது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தாமதமானதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கேரள முதல்-மந்திரி பிணராய் விஜயனுக்கு, மாணவனி ன் தந்தை நிஜிபு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பிணராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து கைது செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் முகமது ஆதில் மரணம் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    • கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
    • உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

    தாமம்:

    மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

    தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். 

    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான்.
    • பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர்.

    இதனால் இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கி இருந்தனர். நேற்று சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இந்நிலையில், நேற்று மாலை இவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் 5ம் வகுப்பு படித்து வந்த நித்திஷ் (வயது10) என்ற சிறுவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

    இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சிறுவன் நித்திஷ் உயிருக்கு போராடினான். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தனியார் தங்கும் விடுதி காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விபத்து குறித்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    நேர்த்தி கடனை செலுத்த கோவிலுக்கு வந்த குடும்பத்தினரின் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் பெரியபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • திருமண நிகழ்ச்சியில் கமல் குமாருக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான்.

    உத்தரபிரதேச மாநிலம் பெரலி அருகே உள்ள ரத்னா நந்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரி சங்கர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கமல் குமார் (வயது 11) 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று இவன் பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான். பின்னர் சிறுவர்களுடன் சேர்ந்து நடனமாடினான். அப்போது அவனுக்கும் 12 வயது சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அவனை கமல் குமார் கீழே தள்ளினான். ஆத்திரம் அடைந்த சிறுவன் பழச்சாறு பாட்டிலை எடுத்து கமல்குமார் தலையில் அடித்தான். இதில் அவனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே கமல் குமார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே அவன் இறந்தான்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவன் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    • 15 அடி உயரத்தில் இருந்து அவன் திடீரென தவறி தலைகுப்புற விழுந்தான்.
    • மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தில் வசித்து வரும் 11 வயது சிறுவன் முகேஷ் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த முகேஷ் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு காற்றாடியை பறக்கவிட்டான். அப்போது 15 அடி உயரத்தில் இருந்து அவன் திடீரென தவறி தலைகுப்புற விழுந்தான்.

    இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தாடை கிழிந்து தொங்கி ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து சிறுவனின் சித்தப்பா சசிகுமார் உடனடியாக முகேசை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு 8 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ. 23 ஆயிரம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்தது
    • சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தற்போது தான் வெளியே வந்துள்ளார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள தலைநகர் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 27).

    இவர் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத் தன்று பிரபு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.மறு நாள் காலையில் கடைக்கு வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    கடை மேஜையில் வைத்திருந்த ரூ. 23 ஆயிரம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து பிரபு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். அந்த காட்சி களில் கொள்ளை யன் முக கவசம் அணிந்து கையுறை அணிந்து தொப்பி யுடன் திருடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    கடந்த 22-ந்தேதி மணக்குடி பகுதியில் ஒரு டாக்டர் வீட்டிலும் வாலி பர் ஒருவர் இதே போல் முககவசம், கையுறை அணிந்து கைவரிசை காட்டி யிருந்ததார். எனவே இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பது ஒரே கொள்ளையன் தான் என்பது உறுதி செய்யப்ப ட்டது. கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    அவரை ரகசிய இடத்தி ற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்த னர். அப்போது டாக்டர் வீட்டிலும் ஜவுளிக்கடை யிலும் திருடியதை ஒப்புக் கொண்டார். பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    17 வயதான அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தற்போது தான் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    • மளிகை கடையின் முன்பு அவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர்.
    • அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில், கோவை -திருச்சி தேசிய நெடு ஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த மளிகை கடையின் முன்பு அவர்களது மோ ட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ த்தன்று சுமார் 3 மணியளவில் கடைக்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்ததுடன், கடை யின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு திருடி சென்றார். இந்தநிலையில் கடையின் உரிமையாளர் வெளியில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த அந்த சிறுவன் மோட்டார் சைக்கி ளை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கி ளைத் திருடி சென்ற சிறுவன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • சிறுவன் மாயமானார்.
    • ஆலங்குளம் போலீசில் பண்டாரசாமி புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டி.கரிசல் குளத்தை சேர்ந்தவர் பண்டாரசாமி (வயது 54). இவரது பேரன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    அவன் வீட்டில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்து விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பண்டாரசாமி சிறுவனை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் சிறுவன் வீட்டில் இருந்து மாயமானார். அவன் எங்கு சென்றான் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பேரனை கண்டுபிடித்து தருமாறு ஆலங்குளம் போலீசில் பண்டாரசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமல்ல, அவர்களின் நல்ல செயல்கள் குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று விடும்.
    • மேம்பாலத்தின் மேல செல்ல சிறுவன் அவர்களை தள்ளுவது போலவும், அதை தனது பொறுப்பாக கருதி அந்த சிறுவன் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன.

    சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமல்ல, அவர்களின் நல்ல செயல்கள் குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று விடும். அந்த வகையில் அவனிஷ் ஷரன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், மேம்பாலத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதையும், அப்போது ஒரு குடும்பத்தினர் சைக்கிளில் செல்வது போன்றும் காட்சிகள் உள்ளது. அதில் மேம்பாலத்தில் சைக்கிளில் செல்வதற்கு பெற்றோருக்கு சிறுவன் உதவுகிறான். அதாவது பெற்றோரை சைக்கிளில் வைத்துக் கொண்டு மேம்பாலத்தின் மேல செல்ல சிறுவன் அவர்களை தள்ளுவது போலவும், அதை தனது பொறுப்பாக கருதி அந்த சிறுவன் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன.

    வாழ்நாள் முழுவதும் இதுபோன்று பெற்றோருக்கு ஆதரவாக இருங்கள் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால் சிலர் குழந்தையை இதுபோன்று கஷ்டப்படுத்தலாமா? என்று விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.
    • எதிர்பாராதவிதமாக கண்ணன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் கண்ணன் என்ற சரவணன் (வயது 10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாறனேரி குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.

    அங்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளான். இதனை கண்ட அவனது நண்பர்கள் , ஊருக்குள் சென்று பெரியோர்களை அழைத்து வருவதற்குள் கண்ணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×