என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டீசல்"
- ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிய உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- டீசல் இல்லாததால் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சை நோயாளி உறவினர்கள் தள்ளிச் சென்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் தனப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேஜ்யா (40). நேற்று வீட்டில் இருந்தபோது இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து 108 தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்த ஆம்புலன்சில் தேஜ்யாவை ஏற்றிய உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தனப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது. டீசல் தீர்ந்ததால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீழே இறங்கி ஆம்புலன்சை தள்ளிக்கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் மயக்க நிலையில் இருந்த தேஜ்யா ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டீசல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடு வழியில் நின்றதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்றதால் ஆம்புலன்சில் நோயாளி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
சிவகிரி:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற கோரியும், ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகச்சாமி மற்றும் தென்காசி மாவட்ட நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமர், சேத்தூர் நகர செயலாளர் அருண்குமார், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாரிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டது.
- டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது மகாராஷ்டிரா அரசு.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மக்களின் நலன் மீது அரசுக்கு உள்ள அக்கறையின் ஒரு பகுதி இது என தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 ஆக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் தற்போது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புதான் இதற்கு காரணம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலை இருந்து வருகிறது.
எனவே பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கக்கூடாது. 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறைதான் சுங்கவரி வசூலிக்க வேண்டும்.
உயர்த்தப்பட்ட வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு தொகையை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வருகிற 17-ந் தேதி டெல்லியில் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் எப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு சண்முகப்பா கூறினார். #petrol #diesel #lorrystrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்