search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164462"

    • ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்
    • காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க முடியாத நிலை உள்ளது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரிலிருந்து அசாம் மாநிலத்தின் திப்ருக ருக்கு இயக்கப்படும் ரெயில் இந்தியாவிலேயே அதிக தூரம் இயக்கப்படும் ரெயில் ஆகும். இந்த ரெயில் 4273 கி.மீ தூரம் பயணம் செய்கிறது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தின் கேரளா வழியாக இந்த ரெயில் இயக்கப்படுவதால் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    வாரத்துக்கு 2 நாள் இயங்கி வந்த இந்த ரெயில் இனி 4 நாள் ரெயிலாக வருகிற மே மாதம் முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் இந்த ரெயில் கன்னியாகுமரி வந்து விட்டு காலி பெட்டிகள் நாகர்கோவில் ரெயில் நிலை யம் கொண்டு வரப்பட்டு பராமரிப்பு செய்யப்படும்.

    பகல் நேரத்தில் பிட்லைன் பராமரிப்பு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் நலனுக்காக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி புதிய ரெயில்கள் இயக்க முடியாமல் போகும்.

    மேலும் 2 ஆயிரம் கி.மீ க்கு மேல் இயங்க கூடிய ரெயில்களான கன்னியா குமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹவுரா ரெயில் போன்றவற்றை தினசரி ரெயிலாக இயக்கு தல் போன்ற கோரிக்கை களை நிறை வேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தின் இட நெருக்க டியை சமாளிப்பதற்காக நெல்லை, குமரி ரெயில் நிலை யங்கள் கேரளாவுக்கு ஒடும் ரெயில்களை சுத்தம் செய்யும் நிலையங் களாக மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என்பது வேதனை யானது.

    நாகர்கோவில்-திருவ னந்தபுரம் வழித்தடத்தில் அளவுக்கு அதிகமாக ரெயில்கள் இயக்குவதால் டிராக் நெருக்கடி மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிலும் பிரச்சினை உள்ளது.

    இந்த நிலையை மாற்ற கன்னியாகுமரி- திப்ரூகர் ரெயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ஓர் தினசரி ரெயில் சேவை கூடுதலாக கிடைக்கும்.

    அது மட்டுமல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லவும் வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல வும் நேரடி ரெயில் சேவை கிடைக்கும்.

    கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் தினசரி ரெயிலாக மாற்றப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாரணாசிக்கு அறிவிக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க முடியாத நிலை உள்ளது. தற்போது வாராந்திர ரெயில் தான் இயக்கப்பட உள்ளது.

    இது போன்று குமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ள பல்வேறு ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.

    இந்த விஷயத்தில் கன்னியாகுமரி எம்.பி., உடன டியாக தலையீட்டு மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து, கன்னியாகுமரி –-திப்ரூகர் ரெயிலை வழித்தடம் மாற்றம் செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காப்பகத்தில் ஒப்படைப்பு
    • ஆசாரிபள்ளம் போலீசார் கேரளா சென்று மீட்டு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 28).

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவின ரான கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கிருஷ்ணகுமார் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரி கிறது.

    கவிதாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் கவிதா வுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே கவிதா தனது 6 வயது மகனுடன் திடீரென மாயமானார்.அவரை உறவினர் வீடு களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரி பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா கேரளாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் ஏட்டு விஜி கலா ஆகியோர் கேரளா சென்று கவிதாவை மீட்டு ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு கவிதாவும், அவரது மகனும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்ததில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அருகே ததேயபுரம் பகுதியை சேர்ந்த அனீஷ் மற்றும் நீரோடி பகுதியை சேர்ந்த நபர் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 5, பேர் என மொத்தம் 7 பேர் லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    படகு 30 நாட்டிங்கல் தொலைவில் சென்றபோது படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்தது. இதில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். இதை பக்கத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்கள் கண்டனர் .உடனடியாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அனீஸ் மற்றும் உடன் சென்ற நபர் நேற்று சொந்த ஊர் வந்தடைந்தனர்.

    • ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
    • மக்களை பயமுறுத்தினாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது என ராகுல் காந்தி பேச்சு

    திருவனந்தபுரம்:

    கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆவணப்படத்தை டுவிட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், இன்று அந்த ஆவணப்படத்தை கேரளாவில் மக்களுக்கு திரையிட்டு காட்டி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில், மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று இரவு ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான டெல்லி, தெலுங்கனா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ சார்பில் சண்டிகரில் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரளாவில் இன்று திரையிடப்பட்டிருக்கிறது.

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆவணப்படம் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பினார். "உண்மை பிரகாசமாக ஒளிர்கிறது. தடையோ, அடக்குமுறை மற்றும் மக்களை பயமுறுத்தினாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது" என்றார் ராகுல் காந்தி.

    கேரளாவில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி, காங்கிரசின் நிலைப்பாட்டை மீறி, ஆவணப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை
    • பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் பயிற்சி சப் - இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஜோசப் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    வாணியக்குடி பகுதியில் செல்லும்போது அங்கு மீன் கடை அருகில் ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் மூடைகளில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 40 மூடைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.உடனே போலீசார் அரிசி மூடைகளை மீட்டு வாடகை வாகனம் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.தொடர்ந்து போலீசார் அங்கு அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கை.
    • கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக தேங்காய் ஏற்றி மினி டெம்போ ஒன்று வந்துக்கொண்டிருந்தது. வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் சுமார்1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது.

    இதையடுத்து போலீசார் டெம்போ டிரைவரை கைது செய்தனர்.அவர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

      கன்னியாகுமரி:

      ஐரேனிபுரம் பகுதியில் வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
      • கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

      கன்னியாகுமரி:

      களியக்காவிளை வட்ட வழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வா ளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஐரேனிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

      அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருந்தும் அந்த கார் நிறுத்தப்படாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

      காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

      பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலு வலகத்திலும் ஒப்படைக் கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
      • போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.

      கன்னியாகுமரி:

      தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

      இந்நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      தொடர்ந்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலசிங்கம் என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து காரையும், ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

      ரேசன்அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

      போலீசார் அதிரடி நடவடிக்கை

      கன்னியாகுமரி:

      கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குலசேகரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

      அதன் அடிப்படையில் குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் குலசேகரம் அரசுமூடு பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதி வேகமாக சொகுசு கார் வந்தது. உடனே போலீசார் காரை தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

      இதனைத்தொடர்ந்து காரை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

      தொடர்ந்து கார் டிரைவரிடம்நடத்திய விசாரணையில் அவர் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 23) என்பதும், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் குறைந்த விலை கொடுத்து ரேசன் அரசி வாங்கி கார் மூலம் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

      இது குறித்து உடனே உணவு பாதுகாப்பு தடுப் பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம்,
      • களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனை

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

      இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

      சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

      அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

      இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து
      • பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும் வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.

      இதைதொடர்ந்து களியக்கா விளை சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்கும ரன் தலைமை யில்போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

      அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியும் கார் நிறுத்தாமல் சென்றுவிட்டது. தொடர்ந்து போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று அதங் கோடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டிவந்த டிரைவர் தப்பி யோடிவிட்டார்.

      மேலும் காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

      மேலும் பறிமுதல் செய்த காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காரில் இருந்து பறிமுதல் செய்த அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×