search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு குறைதீர்க்கும் கூட்டம்.
    • சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நாளை (சனிக்கிழமை ) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    தோக்கமூர், எளார்மேடு, எடகண்டிகை ஆகிய 3 கிராமமக்களுக்கும் பொதுவானதாக அப்பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலும் கோவிலுக்கு சொந்தமான 2.94 ஏக்கர் அரசு நிலமும் உள்ளது.

    பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த இடத்தை நடை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பட்டியலின மக்கள் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாத வகையில் சுற்றிலும் 8 அடி உயரம் மற்றும் 90 மீட்டர் நீளத்தில் தீண்டாமை சுற்றுசுவர் கட்டப்பட்டது. மேலும் மீதமுள்ள இடத்தில் முள்வேலியை அமைத்தனர்.

    இதற்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இதற்கு மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தீண்டாமை சுவரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விடுதலை சிறுத்தை கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தோக்கமூர் கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அசம்பாவிதத்தை தடுக்க டி.எஸ்.பி.க்கள் கிரியாசக்தி, சாரதி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    நிலத்தை சுற்றி இருந்த முள்வேலி அகற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முள்வேலியை அகற்றுவதற்கு முறையாக மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த தீண்டாமை சுவர் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முள்வேலியையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
    • பனைஓலை மற்றும் தார்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரி மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முனபு பெய்த மழைக்கு பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு பின் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது.

    மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    • பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வினியோகம் செய்ய வேண்டாம்.
    • முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு.

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியுள்ளதாவது

    பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வினியோகம் செய்ய வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுத்தப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. தலைமையில் இரவு ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் உள்ள பள்ளிவாசல்கள், இந்து முன்னணி அலுவலகம், பா.ஜ.க அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகர் முழுவதும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை மாவட்ட சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    அந்த வழியாக மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். இதுதவிர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு காமிராவும் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

      கன்னியாகுமரி:

      குமரியின் வற்றா ஜீவநதியாக குழித்துறை தாமிரபரணியாறு உள்ளது. இந்த ஆற்றில் தான் கிள்ளியூர், விளவங்கோடு, கல்குளம் ஆகிய தாலுகா மக்களுக்கு மட்டுமின்றி, குமரியில் சுமார் 85 சதவீத மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய குழித்துறை குடிநீர் திட்டம், பைங்குளம் குடிநீர் திட்டம், கொல்லங்கோடு ஏழுதேசம் குடிநீர் திட்டம், சுனாமி கூட்டுக்குடி நீர்திட்டம், இப்படி 50-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது.

      இந்த குடிநீர் திட்டங் களுக்கான குடிநீர் கிணறு கள் இந்த ஆற்றங்கரை யோரங்களில்தான் உள்ளது. இந்த ஆறும் கடலும் சங்கமிக்கும் தேங்காப்பட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டது. இதன் பின்னர் கடல் நீர் எளிதில் ஆற்று நீருடன் புகுந்ததால் குடிநீர் கிணறுகளில் இருந்து மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு உப்பு கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

      குடிநீர் பைப்புகளும் உப்பு நீரால் சேதம் அடைந்து வந்தது. இதனால் பரக்காணியில் தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 16 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த பகுதியில் பருவ மழை காலங்களில் ஆண்டுக்கு 3-க்கும் மேற்பட்ட முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கை.

      இது போன்ற நேரங்களில் பரக்காணியின் மறு பகுதியில் உள்ள இடக்குடி, மரப்பாலம் வைக்கல்லூர் போன்ற கிராமங்களில் தண்ணீர் புகுந்து வீடுகள் சேதம் அடைவதும், வீடுகள் இடிந்து விழுவதும் தொடர்கதையாக நடந்து வந்தது. அதே நேரம் தடுப்பணை பணி முடிந்தால் இந்த பாதிப்பு இருக்காது என மக்கள் கருதுகின்றனர். ஆனால் தடுப்பணை பணியை முழுமையாக முடிக்காததால் மறுபகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தடுப்பணையின் ஒரு பகுதியில் மட்டும் மண் போட்டு நிரப்பி உள்ளனர். இந்த மண்ணும் வரும் மழைக் காலங்களில் தாக்குப் பிடிக்காமல் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது.

      இந்நிலையில் தடுப் பணை மறுபகுதியை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேஷ் பாபு, பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் குமார், யூனியன் கவுன்சிலர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் பாரதிய ஜனதாவினர் தடுப்பணையை பார்வை யிட்டனர்.

      அதன்பின்னர் வரும் நவம்பர் மாதம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தடுப்பணை மறுபகுதியில் மண் போட்டு நிரப்புவது மட்டுமின்றி, ஆற்றங்கரை ஓரத்தில் பக்கச்சுவர் கட்டும் பணியை உடனடி யாக தொடங்க வேண்டும் எனவும், இல்லையேல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், உட்பட பல கலந்து கொண்டனர்.

      • சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும்.
      • நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

      தஞ்சாவூர்:

      தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

      அப்போது கலெக்டர் பேசியதாவது:-

      தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

      அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார்- ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

      மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைத்திட வேண்டும்.வருவாய்த்துறையினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நியமித்து ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      மேலும் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் , கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்பு துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும் நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

      இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், நீர்வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      • சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு
      • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

      நாகர்கோவில்:

      தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :-

      ரெயில்வே தேர்வு வாரி யம் லெவல் 1 (முந்தைய குரூப் D) ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையி லான தேர்வை நடத்துவதற்கு புகழ்பெற்ற நிறுவனத்தை நியமித்துள்ளது.

      இதில் 1.1 கோடிக்கும் அதிகமான விண்ணப்ப தாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். 12 மண்டல ரெயில்வேகளை உள்ளடக்கிய தேர்வு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிக்கப் பட்டுள்ளன. நான்காவது கட்டம் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியுள்ளது. எந்தவிதமான முறைகே டுகளையும் தடுக்க மற்றும் அகற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்புகள் கட்ட மைக்கப்பட்டுள்ளன.

      விண்ணப்பதாரர்களுக்கு மையத்தின் ஒதுக்கீடு கணினியில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படுகிறது மேலும், தேர்வர்கள் தேர்வுமையத்தில் அறிக்கை செய்து தங்களைப் பதிவு செய்த வுடன், ஆய்வகம் மற்றும் இருக்கைகள் ஒதுக்கீடும் ரேண்டமாக இருக்கும். வினாத்தாள் மிகவும் பாது காக்கப்பட்ட வடிவத்தில் உள்ளது விண்ணப்பதாரரைத் தவிர வேறு யாரும் வினாத்தாளை அணுக முடியாது.

      தேர்வர்களுக்குக் கிடைக்கப்பெறும் வினாத் தாளில் உள்ள வினாக்க ளின் வரிசையும் ரேண்ட மாக மாற்றப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு விண்ணப்பதார ருக்கும் தனிப்பட்ட வினாத் தாள் உள்ளது. எனவே, முதன்மை வினாத்தாளில் உள்ள கேள்வி வரிசையி லிருந்து வரிசை முற்றிலும் வேறுபட்டது.

      தேர்வுகள் சி.சி.டி.வி. கேமராக்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ், ஒவ்வொரு தேர்வரின் முழுப் பதிவும் நடத்தப்படுகின்றன. இது தவிர, தேர்வர்கனின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் ரெயில்வே தனது சொந்த ஊழியர்களையும், தேர்வுகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக தேர்வு நடத்தும் ஏஜென்சி ஊழியர்களையும் நியமித்துள்ளது.

      விண்ணப்பதாரர்கள், சட்ட விரோதமான முறை யில் பணி நியமனம் என்ற போலி வாக்குறுதிகளை, தவறான செய்திகளைக்கவ னத்தில் கொள்ளாமல், தவ றான வழியில் வழிநடத்த முயல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

      29-ந் தேதி அன்று ரயில்வே தேர்வு வாரியம் இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் ஏற்கனவே தேர்வர்களுக்கு இந்த விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.
      • ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வலபாதை முழுவதும் 110 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

      முத்துப்பேட்டை:

      திருவாரூர் மாவட்டம், முத்துப்பே ட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

      இந்து முன்னணி சார்பில் நடக்கும் 30-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

      இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசுகிறார்.

      அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

      சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிரு ஷ்ணன் ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார்.

      இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன், இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொள்கிறனர்.

      ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

      முன்னதாக பிற்பகல் தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இன்று மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

      ஊர்வலத்தை முன்னிட்டு ஊர்வல பாதை முழுவதும் 110 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

      மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுரங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

      அசம்பா விதம் ஏதும் ஏற்ப்பட்டால் தடுக்க ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், தண்ணீர் பீச்சடிக்கும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டள்ளது.

      ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி.சந்தோஷ் குமார், திருச்சி டி.ஐஜி சரவணக்குமார், தஞ்சை டி.ஐ.ஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்குமார், ரவளிபிரியா, சுந்தரவதனம், சீனிவாசன், ஜவகர், துரை, ஜெயசந்திரன், புரோஸ் அப்துல்லா, வஞ்சிதா பாண்டி, நிஷா, 10 ஏ.டி.எஸ்பி, 37 டி.எஸ்பி.கள், 38 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

      கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள் மற்றும் அலையாத்திக்காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      பாதுக்காப்பு பணிகளை திருச்சி மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.

      இந்தநிலையில் முத்துப்பே ட்டை சுற்று பகுதியில் உள்ள 14 டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

      அதேபோல் முத்துப்பேட்டை நகர் பகுதி மற்றும் அருகே உள்ள பகுதியில் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

      • ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
      • வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

      தஞ்சாவூர்:

      தஞ்சை மாவட்டம் அணைக்கரை ஆய்வு மாளிகையில் கொள்ளிட கரையோர பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

      அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

      காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

      தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

      பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

      பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளது.

      இலவச அழைப்பு எண்-1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 மற்றும் 94458-69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் மழை, வெள்ள சேதம் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      முன்னதாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

      • தொண்டி அருகே விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
      • அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

      தொண்டி

      ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது.

      இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் நல இயக்கத்தின் தலைவர் இளையராஜா சார்பில் பக்தர்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைக்கு சேதம் ஏற்படாமலும், அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

      2 தினங்களில் பாகம்பிரியாள் அம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து திருவெற்றியூர் கண்மாயில் இந்த சிலை கரைக்கப்படுகிறது.

      • 1அடி முதல் 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
      • விநாயகருக்கு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

      திருப்பூர் :

      விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டசிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

      திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி,விஷ்வ இந்து பரிஷத்,இந்து மக்கள் கட்சி, இந்து முன்னேற்ற கழகம், சிவசேனா என பல்வேறு அமைப்புகள் மற்றும்பொதுமக்கள் சார்பில்,தங்கள் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்யஉள்ளனர்.இதில் முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகளை இன்றுபிரதிஷ்டை செய்துள்ளனர். வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கிசெல்வது போல், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர், யானை வாகனம்,ஆஞ்சநேய விநாயகர்,கருட விநாயகர் என 1அடி முதல் 10 அடிஉயரங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள விநாயகருக்கு பூஜைகள் நடத்தி தினசரி பொதுமக்களுக்கு அன்னதானமும்வழங்கப்படுகிறது.

      பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளவிநாயகர் சிலைகளை கரைக்கமாவட்டம் முழுவதும் 7இடங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.நாளை, குன்னத்தூர், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கயம்,குண்டடம் பகுதியில் வைக்கப்படும் விநாயகர்சிலைகள், 2-ந் தேதி, அவிநாசி, தாராபுரம், வெள்ளகோவில்,பல்லடம்,மூலனூர்,உடுமலை,3-ந்தேதி மடத்துக்குளம், திருப்பூர் மாநகரம்ஆகிய நாட்களில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜனம்ஊர்வலம் நடக்கிறது.சிலைகளின்பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறுஅறிவுரைகளை இந்து அமைப்பினருக்குபோலீசார் வழங்கி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின், விசர்ஜனம்ஊர்வலம் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

      ×