search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 9 தாலுகாவில் ரேசன் பொருட்கள் வினியோக குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணை க்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் இ-சேவை மைய கட்டிடம், ராமேசுவரம் வட்டம் நடராஜபுரம் ரேஷன் கடை, திருவாடானை வட்டம் பதனக்குடி ரேஷன் கடை, பரமக்குடி வட்டம் மஞ்சக்கொல்லை இ-சேவை மைய கட்டிடம், முதுகுளத்தூர் வட்டம் கொழுந்துரை இ-சேவை மையக் கட்டிடம், கடலாடி வட்டம் நரிப்பையூர் ரேஷன் கடை, கமுதி வட்டம் கீழராமநதி ஊராட்சிமன்ற கட்டிடம், கீழக்கரை வட்டம் குத்துக்கல்வலசை ரேஷன் கடை (கலையரங்கம்), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் செங்குடி ரேஷன் கடை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாயவிலைக்க டைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (10-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி செலுத்துவோரின் நலனுக்காக பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

    அதன்படி விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசு சாா்பில் பரமக்குடி நகா் முழுதும் 70 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. காவல் துறை சாா்பில் பரமக்குடி நகா் மற்றும் சுற்றுப்புறங்களில் 75 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொ ள்ளப்படும்.

    பரமக்குடி நகா் முழு வதும் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் கண்காணிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடியில் உள்ள இமானுவேல்சேகரன் நினைவிடம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது.
    • தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அங்கு தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இரவு திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

    காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சிய ளித்தது.

    தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    • அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும்.

    திருப்பூர் :

    குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (டான்பெட்) அனுமதி அளித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்திட பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வாவிபாளையம் முத்தூர் வளாகத்தில் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிேலா ரூ.105.90 என்ற விலையில 6 சதவீதத்திற்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிலோ கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி கொப்பரையை கொண்டு வந்து வருகிற 30-ந்தேதி வரை விற்பனை செய்யலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    • ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
    • தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    சேலம் மாவட்டம் எடப்பா டி தாலுகா இருப்பாலி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன்(வயது 18), சேலம் ஜலகண்டபுரம் தினேஷ்குமார்(18) உள்பட 50 பேர் திருவாரூரில் தொடங்கிய இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கலந்து கொள்ள பஸ்சில் புறப்பட்டனர்.

    அந்த பஸ், தஞ்சை வழியாக சென்றபோது பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அப்போது தாமரை செல்வன், தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மட்டும் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளித்தனர்.

    இதில் ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தினேஷ்குமாரை மட்டும் உயிருடன் மீட்டனர்.

    ஆற்றில் அடுத்து செல்ல ப்பட்ட தாமரைச்செ ல்வனை தொடர்ந்து தேடி வந்தனர்.

    நேற்று இரவு வரை தேடினர். பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று மீண்டும் தேட முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் மேம்பாலம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள ஆற்றில் தாமரை செல்வன் உடல் பிணமாக மிதந்து வந்து கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைப்பற்றப்பட்ட சடலம் ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • மேலும், ஆற்றுத்தண்ணீரில் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர் - கொன்றைக்காடு இடையே கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதாக அப்பகுதி மக்கள் கொன்றைக்காடு கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகிக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு பேராவூரணி வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகி, கிராம உதவியாளர்கள் விஜயா, அம்பிகா ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

    தொடர்ந்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ரஜினி, சுப்பையன், நீலகண்டன், சந்தனகுமார், கொன்றைக்காடு சமூக ஆர்வலர்கள் கணேசன், கர்ணன் ஆகியோர் ஆற்றில் இறங்கி சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர், கைப்பற்ற ப்பட்ட சடலம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீட்கப்பட்டது சுமார் 35 வயதுடைய ஆண் சடலம் என்பது தெரியவந்தது.

    மேலும் ஆற்றுத் தண்ணீரில் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

    அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மதுரை மாவட்டத்தில் சிறு, குறுதொழில் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி வருகிறது.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது. இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தி யை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிக்கு அப்பாற்பட்டு, தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் தொடர்பான விளக்கங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. தொடர்பான சந்தேங்களுக்கான விளக்கங்கள் ஆகியவை பெற உதவுதல் போன்ற தொழில்முறை சிரமங்களை களைவதற்கும் உறுதுணை யாக உள்ளது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நேற்று (17-ந்தேதி) முதல் வருகிற 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதியான தொழில்க ளுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய- மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை.
    • ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் நடுவூர் கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 17 கால்நடைகள் வருகின்ற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.

    அரசின் விதிமுறைகளின் படி பகிரங்கமாக அலுவலக வளாகத்தில் ஏலம் நடத்தப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள நபர்கள் தனித்தனியாக ஏல டேவணி தொகை / முன்வைப்புத் தொகை ரூ.20 ஆயிரம் டெப்டி டைரக்டர் ஆப் அனிமல் ஹஸ்பண்டரி, மாவட்ட லைவ்ஸ்டாக் பார்ம் நடுவூர் என்ற பெயரில் வங்கி வரைவோலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரத்தநாடு மாற்றத்தக்க வகையில் வங்கி வரை ஓலை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    வங்கி வரை ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பெயர்கள் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டு அந்த நபர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    வைப்புத் தொகை செலுத்தப்படும் வங்கி வரை ஓலைகள் அனைத்தும் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பெறப்பட்ட வங்கி வரை ஓலையாக இருக்க வேண்டும்.

    வங்கி வரைவோலை துணை இயக்குனர் அலுவலகத்தில் 16-ந் தேதி காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏலம் முடிந்தவுடன் அதிக தொகைக்கு ஏலம் கோரியவரை தவிர இதர ஏலதாரார்களின் வரை ஓலை திருப்பி வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை.

    ஏலம் கேட்பு செய்யப்பட்ட தொகையானது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் குறைவாக இருந்தாலோ அல்லது நிர்வாக காரணங்களினால் தடைபட்டாலோ அல்லது இயற்கை இடர்பாடுகளினால் காலதாமதம் ஏற்பட்டாலோ இந்நிகழ்வை தள்ளி வைக்கவும், ரத்து செய்யவும் அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய தரவு தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

    இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கி ணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்"

    (National Data Base for UnorganizedWorkers - eSuRAM - NDUW) என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கி உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பணியாளர்கள், சிறு, குறு விவசாயிகள், விவசாயக்கூலிகள். குத்தகைதாரர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள், தேசிய ஊரக வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், லேபிள் மற்றும் பேக்கிங் செய்வோர், கட்டுமான தொழிலாளர்கள், தச்சு வேலை செய்வோர், டீக்கடை ஊழியர்கள். கல்குவாரி தொழிலாளர்கள், உள்ளுர்கூலி தொழிலா ளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள். செய்தித்தாள் போடுப வர்கள்.

    ஆட்டோ டிரைவர்கள். பட்டுவளர்ப்பு தொழிலா ளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் ஊற்றும் பணியாளர்கள், நெசவாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற 379 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் விவ ரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இத்தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார்அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் (eSuRAM Portal) அனைவரும் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த 20 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.


    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்டக்கலை மன்றத்தின் சார்பில் 2018-2019, 2021-2022-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்த 20 கலைஞர்கள் விருதுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கத்திலும், கலைஞர்களை சிறப்பிக்கும் வகையிலும் கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக 2002-2003-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சிறந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    2018-2019, 2021- 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் கடந்த 23-ந் தேதி நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் பதவி வழி மற்றும் பதவி சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர்.

    மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கீழ்க்காணும் கலைஞர்களை தேர்வு செய்தனர்.

    2018-19-ம் ஆண்டு விருதாளர்கள் 1.கலைஇளமணி-விஜய துர்கா, பரத நாட்டியம், 2.கலைவளர்மணி-ராஜேஸ்வரி, தேவாரம், 3.கலைச்சுடர்மணி- தமிழரசி, கைவினை, 4.கலைநன்மணி-துரைபாண்டி, வீதிநாடகம், 5.கலைமுதுமணி-முருகதாஸ், நாதஸ்வரம்.

    2021-22-ம் ஆண்டு விருதாளர்கள் 1.கலைஇளமணி-ஹரிணி, சிலம்பம் சிவானி அக் ஷதா, ஓவியம், அப்துல் பெரோஜ், சிலம்பம், 2.கலைவளர்மணி- மணிகண்டன், சிற்பம், மேத்யு இம்மானுவேல், சிலம்பம், ஹர்ஷிதா, வீணை, 3.கலைச்சுடர்மணி- செய்யது இப்ராஹீம், கைவினை, வசந்தகுமார், கிராமிய பாடகர், இளங்கோ, குரலிசை, 4.கலைநன்மணி- சாத்தன், ஜிம்ளாமேளம், கருணாகரன், நாடகம், நாகராஜ், ஒயிலாட்டம், 5.கலைமுதுமணி- மகாலிங்கம், தவில், பாலு, பம்பை, அர்சுனன் சிலம்பம்.

    மேற்கண்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு ராமநா–தபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலெக்டர் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிப்பார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.187.94லட்சம் மதிப்பீட்டில் நூலகம்-அறிவு சார் மையம் அமைய உள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக் குமார், மேலாளர் சங்கர் கணேஷ், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, முன்னாள் நகர் மன்ற தலைவரும் கவுன்சிலருமான சிவப்பிரகாசம் மற்றும் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.187.94 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி 1-வது தெருவில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் கட்டப்பட உள்ளது

    சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானம் புதுப்பிக்கப்பட உள்ளது. புளியம்பட்டி மேற்கு பகுதியில் புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது. சின்ன புளியம்பட்டி காந்தி மைதானத்தில் மினி மார்க்கெட் ஏற்படுத்தவும், நகரில் 8 கிலோ மீட்டருக்கு மண் சாலைகளை மாற்றி தார்சாலைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதார கேடாக இருந்தால் உடனுக்குடன் தூய்மை செய்ய வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி முதல் ''மொபைல் கிளினிக் டீம்'' அமைக்கப்பட உள்ளது. 36 வார்டுகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.26-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முருகானந்தம் பேசுகையில், எனது வார்டுகளில் 10 தெருக்கள் உள்ளன. 10 தெருக்களிலும் இருந்து கழிவு நீர் சரியாக வெளியே செல்வதில்லை. இதனால் தெருப்பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றார்.

    இதற்கு தலைவர் சுந்தர லட்சுமி பதிலளிக்கையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் 1-வது வார்டில் கவுன்சிலர் தனலட்சுமி, 7 வது வார்டில் கவுன்சிலர் கோகுல் ஆகியோர் தங்கள் வார்டுகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தியது

    • மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு 29-ந் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

     மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    ரெயில் இயக்கம், தகவல், Train operation, information,

    மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் செல்லும். மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும். கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்கும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×