search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை.
    • சைக்கிளில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மிதிவண்டி பயணம் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார்.

    பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மாணவர்களுக்கு உடல் நலன், சுற்றுச்சூழல் நலன், மிதிவண்டியில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் மற்றும் மிதிவண்டி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    இதில் கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், வட்டார வளமைய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், சுரேஷ், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முத்துலட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சி ராணி, வனிதா, செல்வக்குமார், சங்கீதா, விதைக்கும் கரங்கள் நந்தா ஜீவானந்தம், கலாம் கனவு இயக்க பொருளாளர் கிஷோர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    • சி.ஐ.டி.யூ. சார்பில் புது பஸ் ஸ்டாண்டு அருகே நடைபெற்றது
    • பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், பொது த்துறைகளை பாதுகா க்கவும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.பின்னர் குரும்பலூர், அம்மா பாளையம், நக்க சேலம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்கா நத்தம், சிறுவாச்சூர், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரம் இன்றும் நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ரெங்கராஜ், ஆறுமுகம். இன்பராஜ், பாபு, செல்லதுரை, கருணாநிதி, அருண், விவசாயி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செ ல்வராஜ், அர்ச்சுனன், விவசாயிகள் சங்க நிர்வா கிகள் கோவிந்தன், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் கடைவீதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்துக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம், தமிழ் அறிஞர்கள் முத்துசானகிராமன், விழிகள் சி.ராஜ்குமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியதாவது:-

    தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமை ப்படக்கூடிய ஒன்று அல்ல. அது நமக்கு தலைகுனிவு என்றார்.

    நமது அடையாளம் மற்றும் அன்னை தமிழை நாம் இழந்து விட்டோம் என்று அவர் பேசினார்.இக்கூட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, இளைஞரணி துணைத் தலைவர் விமல், மூத்த நிர்வாகிகள் குத்தாலம் கணேசன், தங்கஅய்யாசாமி, வக்கீல் சுரேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது.
    • சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஜூலியன் என்பவர் புதுவை கடற்கரை சாலையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அவரது கையில் வைத்திருந்த பேனரில், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் 10 நிமிடம் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற செய்து வேலை வழங்கி உணவு அளியுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மற்றொரு புறத்தில் நாம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது. சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    இதுதொடர்பாக கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நூதன பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 வாரமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, ஜி.கே.வாசன், அண்ணாமலை, உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

    பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதே போல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமான பேர் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இறுதி கட்ட பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தொகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.

    தொகுதி முழுவதும் மேளதாளம் முழங்க பிரசாரம் நடந்து வருகிறது.

    • தா.பழூர் போலீசார் சார்பில் நடந்தது
    • போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் தா.பழூர் போலீசார் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமை தாங்கி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்தும், சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல், வாங்கி பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விலக்கி பேசினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், (பயிற்சி)பெபின்செல்வபிரிட்டோ உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்." 

    • கோட்டை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரம்.
    • தடையை மீறி பிரசார பயணம் மேற்கொள்ளக் கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்து மக்கள் கட்சி சார்பில் வருகிற 29ஆம் தேதி கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொள்கிறார்.

    இந்த மாநாடு வெற்றி பெறுவதற்காகவும், வலு சேர்ப்பதற்காகவும் கோட்டை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி முடிவு செய்தார்.

    அதன்படி அவர் இன்று தஞ்சை பெரிய கோவில் முன்பு சோழன் சிலை அருகே இருந்து தனது இருசக்கர வாகன பிரசார பயணத்தை தொடங்க முயன்றார். இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தடையை மீறி பிரசார பயணம் மேற்கொள்ளக் கூடாது என கூறி கார்த்தியை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காளையார்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி னார். ஒன்றிய செயலா ளர்கள் சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு எதையும் செய்யவில்லை. ஊழல் செய்யவில்லை என தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்கள் சத்தியம் செய்ய தயாரா? அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சரவணன் மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட துணை செயலாளர் சதீஸ்பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, பாகனேரி சரவணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிவக்குமார், பூமி, கவுன்சிலர் பாண்டி கண்ணன் வழக்கறிஞர் நவநிதகிருஷ்ணன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மாவட்ட கலால் துறை சார்பில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.
    • அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பாக, நாடகக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானவர்களை மீட்டு நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பாக, நாடகக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பஸ் நிலை யம் அருகே, சேலம் வட்டாட்சியர் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையில், கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.

    கிராமிய பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், குடிப்பழக்கத்தினால் சமூக மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உயிரிழப்புகள், பொருளா தார பாதிப்புகள் குறித்து கிராமிய கலைஞர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பிர சாரத்தில், காலால் வருவாய் ஆய்வாளர் ஹன்சாரி கான், வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குஜராத் சட்டசபையின் முதற்கட்ட தேர்தலில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
    • ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.

    182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதி ( வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    2ம் கட்டமாக நாளை மறுநாள் (5ம் தேதி) மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர்.

    இந்த தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியாமை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு முகாமிட்டு அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ரோடு-ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொண்டார்.

    இதேபோல் காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் மூத்த தலைவர்கள் உச்ச கட்ட பிரசாரம் செய்தனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும். டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.

    வருகிற 8ம் தேதி (வியாழக்கிழமை) ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கட்டிலில் உள்ளது. பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் இம்முறை 7வது தடவையாக அக்கட்சி வெற்றி வாகை சூடுமா? என இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதற்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று கம்யூனிஸ்டு கட்சி சாதனை படைத்தது. இதனை சமமாக்கும் விதத்தில் குஜராத்தில் பாஜக சாதனை படைக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    • முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
    • ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி, 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.

    காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

    • போலீஸ் டி.எஸ்.பி.ராஜா அறிவுரை வழங்கினார்
    • இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் கொட்டாரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

    இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார்அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த100-க்கும்மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்த னர்.

    இதில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவது குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கன்னியாகுமரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாய்சன், முருகன், கன்னியாகுமரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஏட்டு மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கொட்டாரம் சந்திப்பு வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் சாலை விபத்தினை தடுக்ககூடிய சிறந்த அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினார்கள்.

    இது தவிர கடந்த 2 நாட்களில் கன்னியாகுமரி பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம்அபராதமும் விதிக்கப்பட்டது.

    ×