என் மலர்
நீங்கள் தேடியது "slug 166982"
- 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
- 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் ஆதார் எண் இணைப்பு பணியில் பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த சிறப்பு முகாம்களில் 2,01,830 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண் போன்ற விவரங்களை படிவம் 66-ல் பூர்த்தி செய்து வாக்கு சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.
8 சட்டமன்ற தொகுதிக ளில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
இந்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விடுபட்ட வாக்கா ள ர்களின் வசதிக்காக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் மீண்டும் நடைபெற உள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 5 பி வலங்க இயலாத வாக்காளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட ( voters helpline ) செயலியை பதிவிறக்கம் செய்தும், ( voters portal ) என்ற இணையதளத்தின் மூலமும் அவர்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்களில் 10 சதவீதம் சுழற்சி முறையில் ஆதார் சேவை விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி அணைக்கட்டில் இந்தமாதம் 9-ந் தேதி அடுத்த மாதம் 6-ந் தேதி, டிசம்பர் மாதம் 4-ந் தேதியும், குடியாத்தத்தில் இந்த மாதம் 16-ந் தேதி, அடுத்த மாதம் 13-ந் தேதி, டிசம்பர் மாதம் 11-ந் தேதியும், பேரணாம்பட்டில் இந்த மாதம் 23-ந் தேதி, அடுத்த மாதம் 11-ந் தேதி, டிசம்பர் மாதம் 18-ந் தேதியும், வேலூர் மற்றும் காட்பாடியில் இந்த மாதம் 30-ந் தேதி, அடுத்த மாதம் 27-ந் தேதி, டிசம்பர் மாதம் 25 -ந் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும்.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- கருணாஸ் நடிப்பில் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ஆதார்.
- இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'ஆதார்' திரைப்படம், சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதார் படக்குழு
இந்நிலையில் 'ஆதார்' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் இப்படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், இயக்குனர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
- சேலம் மாவட்டத்தில் ஆதார் விபரத்தை ேசகரித்து அதை வாக்கா ளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
- இந்த முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து அளித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகு திக்கு உட்பட்ட 3,254 ஓட்டுச்சாவடி மையங்க ளில் ஆதார் விபரத்தை ேசகரித்து அதை வாக்கா ளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களின் ஓட்டுச்சாவடிக்குட்பட்ட வீடு தோறும் சென்று வாக்காளர்களிடம் படிவம் 6-பி ஐ வழங்கி அவர்களின் சுய விருப்பத்தின்படி பூர்த்தி செய்து, அந்த படிவத்தை திரும்ப பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
அதன்படி கெங்கவல்லி தொகுதியில் 9,282, ஆத்தூர் 8,524, ஏற்காடு 13,617, ஓமலூர் 16,825, மேட்டூர் 13,576, எடப்பாடி 15,172, சங்ககிரி 12,189, சேலம் மேற்கு 14,821, சேலம் வடக்கு 9,622, சேலம் தெற்கு 9,952, வீரபாண்டி 13,499 என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 79 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விருப்பம் தெரிவித்து, படிவத்தை பூர்த்தி செய்து, வழங்கி உள்ளனர்.
அதில் அதிகபட்சமாக ஓமலூர் தொகுதி மக்கள், அதிகம் பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். 2-வது இடத்தில் எடப்பாடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 4-ந்தேதி நடந்த முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது .
- பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட்டுள்ளது . இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியினரின் இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.
- வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
- வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும்.
திருப்பூர் :
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதற்காக 6பி என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவு அலுவலரை அனுப்பி விவரங்களை பெற்று வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வீதம் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- பலரும் வங்கிக்கணக்கு, ஆதார் எண் இணைப்பது என தவறான புரிதலில் உள்ளனர்.சில வீடுகளில், எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க என்றும் கூறுகின்றனர்.எவ்வளவு பிரச்னை என்றாலும், வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்ணையும், மார்ச் 31-ந் தேதி 2023க்குள் இணைத்துவிட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் சுழற்சி முறையில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டி வரும்.இந்நிலையில், பாடக்குறிப்பேட்டை தயார் செய்ய வேண்டும். காலாண்டு தேர்வுக்கான பாடம் நடத்த வேண்டும். ஓராசிரியர், இரண்டு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாற்று ஆசிரியர் கற்பிக்கவும் வழியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 2 நாட்கள் ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் நடந்தது.
- கல்லுாரி மாணவர்கள் செல்போன் ஆப் சகிதமாக, சேவையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் :
தேர்தல் கமிஷன் எடுத்த அதிரடி முடிவால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. நீண்ட நாள் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரே வாக்காளர் பல தொகுதிகளில் இடம்பெறுவது இனி முற்றிலும் களையப்படும்.தேர்தல் கமிஷன் வாரத்தில் ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தியிருந்தது.
தொழிலாளர் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் நடந்தது.8 சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முகாம் நடந்தது. ஆதார் இணைப்புக்காக, 'படிவம் -6 பி' யுடன் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் காத்திருந்தனர்.
கல்லுாரி மாணவர்கள் செல்போன் ஆப் சகிதமாக, சேவையில் ஈடுபட்டனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் படிவம் வைத்திருந்தாலும், இளம் வாக்காளர் நேரடியாக ஆன்லைன் வாயிலாக இணைக்கவே ஆர்வம் காட்டினர். அதற்காகவே ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வசம் உள்ள, கருடா ஆப் இம்முறை எதிர்பாராத வகையில் கைகொடுத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் தலா 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஆதார் இணைப்பு நடந்துள்ளது. அவற்றில் 90 சதவீதம் 'கருடா ஆப்' வாயிலாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வளவு நாட்களாக ஆர்வம் காட்டாமல் இருந்த இளம் வாக்காளர் சிறப்பு முகாமை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஒரு மாதமாக ஆதார் இணைப்பு நடந்தும் திருப்பூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. கடந்த, 2ந் தேதி மொத்த வாக்காளரில் 16.45 சதவீதம் பேர் ஆதார் இணைப்பு செய்திருந்தனர். சிறப்பு முகாமின் முதல் நாளான 3-ந் தேதி மாலை நிலவரப்படி 19 சதவீதம் பேர் ஆதார் விவரத்தை இணைத்திருந்தனர்.இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 8 தொகுதிகளிலும், 2 நாட்கள் நடந்த முகாமை வாக்காளர்கள் அதிகம் பயன்படுத்திக்கொண்டனர். முதல் நாளில் 47 ஆயிரத்து, 895 பேரும், இரண்டாம் நாளில் 42 ஆயிரத்து 472 பேரும் ஆதார் இணைத்திருந்தனர்.2 நாட்களில் 90 ஆயிரத்து 367 பேர் ஆதார் இணைத்துள்ளனர் என்றனர்.
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
- கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு உதவி யாக மாவட்டம் முழுவதும் இன்று 2,718 மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஏராளமான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in இணையதளம் வாயிலாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.
இதுதவிர வாக்குச்சாவடி பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கும் சென்று படிவம் 6பி மற்றும் கருடா கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரை வாக்கு பதிவு மையங்களில் ஆதார் கார்டு எண் இணைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
- வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், பெரிய பேராலி சாலையில் உள்ள குலோபல் பாலிபேக்ஸில் வாக்காளரது விபரங்களுடன் ஆதார் எண்ணைப் பெற்று இணைக்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிநடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை https://www.nvsp.in/என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்-6பி –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.
வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண் பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்ப–டமாட்டாது.
ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6பி–ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆதார் எண்ணுடன் இணைக்க மதுரையில் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
வாக்காளர்கள் www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை நேரடியாக இணைத்துக் கொள்ளலாம். வாக்குச்சாவடி பணியாளர்கள், பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று படிவம் 6B அல்லது கருடா கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம், நாளை (21-ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
பொதுமக்கள் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை விபரங்களுடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பயன்பெறலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
- சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்.
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம்.
திருப்பூர் :
இந்திய தேர்தல் ஆணையமானது 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தம் செய்யப்பட்டு 17-6-2022 அரசிதழ் பிரசுரிப்பின்படி எதிர்வரும் 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் விவரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1-8-2022 முதல் 31-3-2023-க்குள் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் என்பது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மைபடுத்துவதற்கும், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்காவும் ஆகும். வாக்காளர்கள் இணையதளத்தில் என்.வி.எஸ்.பி. போர்டல் மற்றும் வோடர் போர்டல் மூலமாகவும், வோடர் ஹெல்ப் லைன் ஆப் செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6பி என்ற விண்ணப்பத்தினை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட தனி அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றியை சமர்ப்பிக்கலாம்.
எனவே வருகிற 31-3-2023க்குள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இணைக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, தெற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் தாசில்தார் கலைவாணி மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 500க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய ஆதார் கார்டு எடுத்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்து தரப்பட்டது.
- ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் இந்திய அஞ்சல் துறை,கோடங்கிபாளையம் ஊராட்சி நிர்வாகம், இணைக்கும் கரங்கள் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய ஆதார் கார்டு எடுத்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்து தரப்பட்டது. கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் காவி.பழனிச்சாமி, இணைக்கும் கரங்கள் அமைப்பு தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஈஸ்வரன், அஞ்சல் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.