search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 167928"

    • செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஓபிஎஸ் கூறினார்.
    • இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். ஆனால் பாஜக இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

    அதிமுக என கூறிக்கொண்டு இரு தரப்பினரும் வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்ததால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சின்னம் முடக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம், ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவதை எடப்பாடி உறுதி செய்திருக்கிறார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்பாளரை அறிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் தொண்டர் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்த அவர், செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார். அதேசமயம் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை திரும்ப பெறுவதாகவும் கூறியிருக்கிறார்.

    அதிமுகவின் சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார். சின்னம் முடங்கினால் தனி சின்னத்தில் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    • பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வும் காங்கிரசுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அமைத்துள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரையில் த.மா.கா. ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் த.மா.கா. போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அ.தி.மு.க. இ.பி.எஸ். அணி போட்டியிட விரும்பியதால் அதனை த.மா.கா. ஏற்றுக்கொண்டது.

    பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது என தெரிவித்தார்.

    • ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை 8ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நன்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்கிறார்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நன்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனி விமானம் மூலம் இன்று நன்பகல் 12 மணியளவில் அகமதாபாத் புறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது.
    • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

    அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்த சூழ்நிலையில், சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் ஈபிஎஸ்க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    • சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
    • அதிமுகவில் நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தவே இந்த கூட்டம்.

    மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    எனக்கு ஏற்பட்ட சோதனையின்போது என்னை தாங்கி பிடித்து நின்று, எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி.

    நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ரே்வு செய்யப்பட்டேன்.

    எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா. கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்திய அவர், அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர்.

    மனிதாபிமானம் கூட இல்லாமல், சர்வாதிகார போக்கில் ஒருவர் செயல்படுகிறார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை நீக்கியவர்களை நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், அதை யாராலும் மாற்ற முடியாது.

    திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்த்த ஏராளமான தியாகங்களை செய்தவர் எம்ஜிஆர். தலைமை பதவிக்கு வருபவர்களை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறியவர் எம்ஜிஆர். அவர் கொண்டு வந்த சட்ட விதிகளை யாராலும் மாற்ற முடியாது.

    அதிமுகவில் நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தவே இந்த கூட்டம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பார்க்கட்டும். அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. எம்ஜிஆரை நேரில் பார்த்து ஈபிஎஸ் பேசியது உண்டா?

    பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விமாம் தடுக்க சதி நடந்தது. பொதுக்குழுவில் என்னை கண்டுகொள்ளாமல் ஈபிஎஸ் சென்றார்.

    அதிமுக வங்கி கணக்கில் ரூ.256 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டியில்தான் கட்சி நடக்கிறது. கட்சி நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடியை என்னிடம் கேட்டு பெற்று திரும்பி கொடுத்தார் ஜெயலலிதா.

    தினகரன் கட்சியை உடைத்தபோது ஆட்சியை நான்தான் காப்பாற்றினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

    புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    இந்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது

    சென்னை:

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். அனைத்து சார்பு அணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். நியமனம் முடிவடைந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது.
    • தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ்.- அமித் ஷா சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியயோருக்கிடையே உள்ள மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக கூறி வருகிறது. கட்சியின் நலன் கருதி இரு தலைவர்களும் சமாதானமாக போகவேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. எனவே, பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

    நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்தனர். அப்போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

    இந்நிலையில், தனியார் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தனிப்பட்ட முறையில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபின்னர் அமித் ஷா, பாஜக அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் இருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

    • மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது.
    • ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார்.

    திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர்.

    தொடர்ந்து இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு அவர் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணிவரை அங்கிருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    • வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ்.
    • இன்னும் சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும்.

    சூளகிரி:

    அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கிளை செயலாளராக இருந்து தற்போது பொறுப்பிற்கு வந்து உள்ளேன். அதனால் ஒரு ஒரு பொறுப்பாளருக்கு என்ன கஷ்டம் என்பது எனக்கு நன்கு புரியும். 10 முறை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். சட்டமன்றத்தின் வெளியில் வந்து சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் சாலையில் அமர்ந்தார். அவர் சட்டையை யாரும் தொடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

    அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ்., எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும்.

    நாம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதிகளை வென்றுள்ளோம். ஒரு சில மாவட்டத்தில் வென்று இருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்து இருக்கும். சற்று உழைப்பு குறைவாக இருந்த காரணத்தால் இன்று ஸ்டாலின் முதல்வராகிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கீழ் தளத்தின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர்.
    • மாடியில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு காவலாளி போலீசில் புகார்

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. நேற்று இரவு இந்த வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டின் கீழ் தளத்தின் கதவை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை.

    இதனால் படிக்கட்டு வழியாக கொள்ளையர்கள் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒர் அறையில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்த டி.வி‌யை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர். இன்று காலை காவலாளி வீட்டில் சென்று பார்த்த போது மாடியில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தென்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தேனியில் இருந்து மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது.

    மேலும் கைரேகை நிபுணரும் வந்து கைரேகைகளை பதிவு செய்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியகுளத்திற்கு வரும் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பதுடன்,அங்கு அடிக்கடி கட்சி ஆலோசனை கூட்டங்களும் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×