search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168147"

    • பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    • இந்த அம்சம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய் கண்காணிப்பு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 'சிரோனா ஹைஜீன்' என்ற பெண்கள் சுகாதார நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோர்த்துள்ளது.

    இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இனி தங்கள் மாதவிடாய்களை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு ஆப் தனியாக தேவையில்லை. இதற்காக 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு முதல் 'ஹாய்' என மெசேஜ் அனுப்பவேண்டும்.

    பின்னர், பயனர்கள் தங்கள் விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கவேண்டும். மேலும் சிரோனா நிறுவனம் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.அந்த விவரங்களை கொடுத்தபின், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும்.

    செயற்கை நுண்ணறிவு மற்றும் உள்ளுணர்வு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த அம்சம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • தவறான மெசேஜ்களை 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகளுக்குள் அழித்துக் கொள்ளலாம் என்கிற கால அளவு தற்போது உள்ளது.
    • விரைவில் வர உள்ள அப்டேட்டில் இந்த கால அளவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    வாட்ஸ்அப்பில் எண்ணற்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2 புதிய அம்சங்களை அந்நிறுவனம் அதன் பயனர்களுக்கு விரைவில் வழங்க உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தவறாக அனுப்பிவிட்டாலோ, அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களில் எழுத்துப் பிழை இருந்தாலோ அதனை அழித்துவிடும் அம்சம் ஏற்கனவே உள்ளது.

    முதலில் தவறான மெசேஜ்களை 8 நிமிடங்களுக்குள் அழிக்க வேண்டும் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இதன் கால அளவு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் என நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த கால அளவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை 2 நாட்கள் 12 மணிநேரத்திற்குள் அழித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    இந்த காலக்கட்டத்திற்குள் ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் என நீங்கள் அனுப்பிய தரவுகள் எதுவாக இருந்தாலும் அழித்துக் கொள்ள முடியும். இதுதவிர பயனர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேறும் போது நீங்கள் வெளியேறியதற்கான மெசேஜ் குரூப் அட்மினுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் என்றும், இதன்மூலம் சத்தமின்றி வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேற முடியும். இந்த இரு அம்சங்களும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதுவரை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டின் புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் மற்றும் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அனைவரும் பார்க்கலாம்.

    சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது பயனர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறப்பம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

    அது என்னவென்றால், வாட்ஸ்அப்பில் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவற்றின் பிரைவசி ஆப்சனில் My contacts except.. என்கிற புதிய அம்சம் தான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டின் புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் மற்றும் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அனைவரும் பார்க்கலாம், காண்டாக்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், யாரும் பார்க்கக்கூடாது என்கிற 3 ஆப்சன்கள் மட்டுமே இருந்தது.


    ஆனால் தற்போது சேர்க்கப்பட்டுள்ள மை காண்டாக்ட் எக்சப்ட் என்கிற அம்சம் மூலம் உங்கள் காண்டாக்ட்டில் இருப்பவர்களில் யாருக்கெல்லாம் உங்களது ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவை காட்டப்பட வேண்டும் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
    • அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. இந்த போராட்டம் மற்றும் வன்முறைக்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

    இதற்கிடையே, அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

    மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமனம் செய்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #WhatsApp
    புதுடெல்லி :

    சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

    இதனால், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரி கிறிஸ் டேனியலுடன் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது கோரிக்கை வைத்தார். 

    மேலும், இந்தியாவுக்கென மையம் அமைத்து வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் அவர் வலியுறுத்தினார். 

    இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று கோமல் லகிரி என்பரை இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. #WhatsApp
    சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
    சண்டிகர்:

    சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி  அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.

    ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு,  அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.



    சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம்  பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ  உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
    வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். #WhatsApp #RaviShankarPrasad
    புதுடெல்லி :

    நாடுமுழுதும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பரவலாக வதந்திகள் பரவிவருகிறது, தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குழந்தை கடத்தல் பற்றி பரவிய வதந்தியை உண்மை என நம்பி  பொதுமக்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் அப்பாவிகள் சிலர் உயிரிழந்தனர்.

    அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராகவும் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற வழிவகுக்கிறது.

    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய  தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப  மந்திரி ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் குறிபிட்டுள்ளதாவது :-

    வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு  கடிதம் எழுதியுள்ளது. அதனபடி, ஒரே நேரத்தில் பார்வேர்டு செய்திகளை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும், அனுப்பப்படும் செய்தி பார்வேர்டு செய்தி தானா ? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    யாரேனும், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #WhatsApp #RaviShankarPrasad
    வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது. #Whatsapp #lynching
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

    குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக  பரிமாறப்படும் தவறான தகவல்களும் வதந்திகளும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

    இதனை அடுத்து, வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது. ‘வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக பல மாநிலங்களில் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது. 
    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-க்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய கிம்போ என்ற பெயரிலான ஆப் சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. #KimbhoApp
    புதுடெல்லி:

    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கிம்போ என்ற பெயரில் இன்று ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

    ஸ்வதேசி (உள்நாட்டு தயாரிப்பு) ஆப் என்ற பில்டப் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

    குறிப்பாக கிம்போ ஆப் இன்ஸ்டால் செய்ததும் ஒன் டைம் பாஸ்வேர்ட் மெசேஜ் உங்களது மொபைலுக்கு வரும். ஆனால், அந்த மெசேஜ்-ல் கூட போலோ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பலர் கிம்போ செயலியை கலாய்த்து வருகின்றனர்.

    போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதனால் போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே, கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து மாயமானது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன. 
    ×