search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169591"

    • கண்ணங்குடி ஒன்றியத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யூனியன் கூட்டத்தில் தீர்மானம் எழுந்துள்ளது.
    • பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி யூனியன்கூட்டம் தலைவர் மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திர போஸ், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப்பிரமணியன் வரவேற்றார். யூனியன் தலைவர் பேசுகையில், ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பால பணிகள் நடைபெறும் பொழுது அதிகாரிகள் முன்னிலையில் கான்கிரீட் போடப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

    சில மாதங்களாக தேவகோட்டை நகரில் இருந்து கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தலைவர் பேசுகையில், சித்தானூர், தாழையூர், கோடகுடி, தேரளப்பூர் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது வேதனையாக உள்ளது.

    கண்ணங்குடி ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் தற்போது பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    துணைத் தலைவர் சந்திர போஸ் பேசுகையில், கண்ணங்குடி ஒன்றியத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. இதுகுறித்து தலைவர் காவல்துறைக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை, பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது. மேலும் ஆண்கள் தற்பொழுது இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலைகளில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • மதுரை-சிவகங்கையில் ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சிலைமான், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் 7 பேரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்தது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சேதுபதி என்பவர் மகன் மவுலிகண்ணா (வயது21). இவர் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேைல முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அப்போது 3 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இதே போல் எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ஜாபர் ெஷரிப் என்பவர் சம்பவத்தன்று இரவு வெளியே வந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் மதுரை கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்த மகாதேவன் (24), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், கொந்தன்குளம் சதீஷ்குமார் (23) என்பதும், இவர்களது கூட்டாளி சிவா என்றும் தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிலைமான், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் 7 பேரை அரிவாளால் வெட்டி செல்போன் பறித்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கணபதி கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது49). இவர் தல்லா குளம் பெருமாள் கோவில் பின்புறம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 5 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து கிருஷ்ண மூர்த்தி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கருப்பாயூரணி ஒத்த வீடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மார்க்கண்டேயன் (30), செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த செல்வகுமார் (22), மீனாட்சிபுரம் சங்கர் லைன் 2-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற பிள்ளையார் (25), மீனாம்பாள்புரம் 5-வது தெரு மருதுபாண்டியன் நகரை சேர்ந்த விஜய் என்ற ஜின்கிளி (24) ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

    • பெண்- வாலிபரை வாளால் வெட்டி வழிப்பறி செய்த 4 பேரை கைது செய்தனர்.
    • இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி கரந்தம்மாள் (வயது 52). பால் வியாபாரியான இவர், நேற்று முன் தினம் மாலை வியாபாரம் முடிந்து சிவகாமிபுரம்-பெரியகாடு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் நீண்ட வாளை எடுத்து காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தன்னிடம் பணமில்லை என்று கரந்தம்மாள் கூறினார்.இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

    அப்போது அங்கு நடந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம்குமார் என்பவரையும் அந்த கும்பல் வாளால் வெட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் கரந்தம்மாளுக்கு தலையில் 6 இடங்கள், விக்ரம் குமாருக்கு தலையில் 8 இடங்களில் வெட்டு விழுந்தது.

    இது தொடர்பாக கீழக்கரை போலீசில் கரந்தம்மாள் புகார் அளித்தார். டி,எஸ்.பி, சுபாஷ் அறிவுறுத்தல்படி கீழக்கரை நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை புது கிழக்கு தெரு சீனி முஹமது மகன் (எ) முஹமது (30) , தட்டான்தோப்பு குணசேகரன் விஜய் (22), பிச்சை மகன் சஞ்சை நாதன் (20) , கிழக்கு நாடார் தெரு சங்கர் காந்தி மகன் அருண் (21) ஆகியோர் வாளால் வெட்டி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேைரயும் போலீசார் கைது செய்தது.

    • சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இவர் ரோந்து சென்றனர்.
    • உடலில் மறைத்து வைத்து இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்

    கோவை 

    கோவை செல்வபுரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இவர் ரோந்து சென்றனர். அப்போது சுண்டக்காமுத்தூர் ரோடு இடும்பன் கோவில் அருகே சென்ற போது அங்கு 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


    இதனையடுத்து அவர்கள் அருகில் சென்று போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடலில் மறைத்து வைத்து இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த மெக்கானிக் உமர் பாரூக் (வயது 22), கரும்புக்கடையை சேர்ந்த ஆசிக் (22), சாரமேட்டை சேர்ந்த பெயிண்டர் அனிஸ்ரகுமார் (20) என்பது தெரிய வந்தது. இவர்கள் வழிப்பறி செய்வதற்காக நின்று கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • தக்கலையில் கைதான 2 பேர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி வழிப்பறி சம்ப வங்கள் நடப்பதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    தக்கலை அழகிய மண்ட பம் பகுதியில் இன்ஸ் பெக்டர் நெப்போலி யன், சப் -இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமை யிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பல இடங்களில் திருட்டு, வழிப்ப றியில் ஈடுபட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் நவீன் ஆண்டனி ராஜ் (வயது 24), வினித் (20) என தெரிய வந்தது.

    அவர்கள் குலசேகரம், திருவட்டார் பகுதிகளிலும் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வழிப் பறியில் ஈடுபட்டால் போலீ சில் சிக்கி விடு வோம் எனக் கருதிய கொள்ளையர்கள் அடிக்கடி மோட்டார் சைக்கிள்களை மாற்றி உள்ளனர்.

    இதற்காக மோட்டார் சைக்கிள்களையும் திருடி உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருமங்கலம், நெல்லை உள்பட பல பகுதிகளில் இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மதுரையில் 2 பெண்களிடம் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரை

    மதுரை ராஜகம்பீரம், ராஜேஸ்வரி நகர், பாரதி கண்ணன் மனைவி சுஜித்ரா (வயது 32). இவர் சம்பவ த்தன்று மதியம் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார்.அப்போது அம்மாபட்டி அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மர்ம கும்பல், சுஜித்ராவிடம் 3.5 பவுன் தங்கச்நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.

    இது தொடர்பாக சுசித்ரா ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பசுமலை, தியாகராஜர் காலனியைச் சேர்ந்தவர் ராஜாமுகமது உசேன் (வயது 45). இவர் சமூகத்தன்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன், மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது திருமங்கலம்-மதுரை ரோட்டில், தோப்பூர் அருகே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல், ராஜா முஹம்மது மனைவியிடம் கைப்பையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டது. அந்த கைப்பையில் செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்தது. இது தொடர்பாக ராஜாமுகமதுஉசேன் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் சங்கீதாவிடம் நைசாக பேச்சுகொடுத்து கவனத்தை திசைதிருப்பினார்.
    • சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருப்பனந் தாழ்வார் தெருவை சேர்ந்த–வர் செங்குட்டுவன். அவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர் நேற்று இரவு சிதம்பரம் வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சங்கீதா–விடம் நைசாக பேச்சு–கொடுத்து கவனத்தை திசை–திருப்பினார். உடனே அந்த வாலிபர் சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கி–ருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சங்கீதா புகார் செய்தார். கை பையில் 2 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம், ஏலச்சீட்டுக்கு உரிய ரசீது–கள் இருந்ததாக தெரிவித்தார். போலீசார் வழக்கு––பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    • நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
    • கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை புட்டு தோப்பு சொக்கன்பட்டறை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 45). இவர் அங்குள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜன் தூத்துக்குடியில் இருந்து 6 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு நள்ளிரவில் மதுரைக்கு திரும்பினார்.

    அவர் புட்டுத்தோப்பு மெயின் ரோடு ஒயின்ஷாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக பாண்டியராஜன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மதுரை

    செல்லூர் மணவாளநகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த ரவி மகன் செல்வகுமார் (23). இவர் நேற்று தத்தனேரி களத்துப் பொட்டல் காமராஜர் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1200-ஐ பறித்து தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு கணேசன் மகன் வினோத்குமார் (22) என்பவரை கைது செய்தனர்.

    பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (47). இவர் நேற்று சுந்தரராஜபுரம் அம்மா மெஸ் அருகில் நடந்து சென்றார். அப்போது சோலை அழகுபுரம், பகவதி அம்மன் கோவில் தெரு, மணிகண்டன் என்ற புழுக்கை மணி (36) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300-ஐ பறித்து தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புழுக்கை மணியை கைது செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த அமிர்தபாண்டியன் மகன் ஹரி பிரசாத் (23). சம்பவத்தன்று காலை இவர், பூமி உருண்டை தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம், முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற வசந்தராஜன் (34) என்பவரை கைது செய்தனர்.

    வண்டியூர் ஏஞ்சல் நகர் வாணி முத்து மகன் வஜித்பாலா (24). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32) என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

    தென்பரங்குன்றம், விஸ்வகர்மா தெருவை சேர்ந்த அலிகான் மகன் ஷாருக்கான் (24). சம்பவத்தன்று இரவு இவர் கிரிவலப் பாதையில் நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக், பாலா, சுறா ஆகியோரை கைது செய்தனர்.

    • மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,450-ஐ பறித்துச் சென்றார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 28). இவர் நேற்று ராமையா தெருவில் உள்ள டீக்கடைக்குச் சென்றார்.

    அப்போது இதே பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,450-ஐ பறித்துச் சென்றார்.

    இதுகுறித்து வீரபாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரபாண்டியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×