search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள்"

    சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 1 முதல் 9 வரை படித்து வந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி பள்ளிகள் இன்றுகாலை பள்ளிகள் திறக்கப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் 1,110 தொடக்கப் பள்ளிகள், 366 நடுநிலைப் பள்ளிகள், 136 உயர்நிலைப்பள்ளிகள், 159 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1771அரசு பள்ளிகளும் 123 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 504 தனியார் சுயநிதி பள்ளிகள் எனவும் மொத்தமாக 2398 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டுகிறது. சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டன. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கும் 27-ந் தேதி பிளஸ்- 1 மாணவர் களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கி வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

    அவ்வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் இடைநின்ற மாணவ-மாணவிகளை சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • வகுப்பறைகளை தயார் செய்து மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    கோடை விடுமுறைக்கு பின்னர், தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவ, மாணவிகளை பள்ளிகளில் சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வகுப்பறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி தயார் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்பறைகளை தயார் செய்து மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த கல்வி ஆண்டுகளில் கோடை விடுமுறை 2 மாதம் இருந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு வாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் வர தயாராக உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடித்து மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. அந்த புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பும் பணி சில தினங்களாக துரிதமாக நடந்து வருகிறது.

    மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்படும் பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் சொந்த பொறுப்பில் எடுத்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை நடப்பு கல்வி ஆண்டிலும் தொடர்ந்து பின்பற்றும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அந்தந்த கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்கும் முயற்சியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • வாடிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச எழுது பலகை வழங்கப்பட்டது.
    • கருணை உள்ளங்கள் பவுண்டேசன் சார்பில் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் வாடிப்பட்டி வட்டார அளவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்பப்பள்ளிகள், அரசுஉதவி பெறும் பள்ளிகளில் முதல்வகுப்பு பயில உள்ள மாணவ-மாணவிகள் 1000 பேருக்கு கருணை உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக இலவச எழுது பலகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வட்டாரகல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி ஆகியோர் தலைமை தாங்கி எழுதுபலகைகளை வழங்கினர். வட்டார வளமைய (பொறுப்பு)மேற்பார்வையாளர் கலைச்செல்வி. ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் வரவேற்றார். இதில் வாடிப்பட்டி வட்டார அளவிலான அரசுபள்ளி 1-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச எழுது பலகை வழங்கப்பட்டது. இதில் கருணை உள்ளபவுண்டேசன் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் ஆர்த்தி நன்றிகூறினார்.

    • 12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் ‘கோர்பாவேக்ஸ்’ தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது.
    • பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது.

    திருப்பூர்,

    கோடை விடுமுறைக்கு பின் வருகிற 13-ந் தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரையும், பிளஸ் 2 மாணவருக்கு, 20-ந் தேதியும், பிளஸ் 1 மாணவருக்கு 27-ந்தேதியும் பள்ளி திறக்கப்படுகிறது.

    12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் 'கோர்பாவேக்ஸ்' தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் - சுகாதாரத்துறையினர் ஆலோசித்து, மேல்நிலை, உயர்நிலை பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 85 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    ஒரு சில மாவட்டங்களில் 65 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.இந்த வயது பிரிவில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக முன்கூட்டியே முகாம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குரிய தடுப்பூசியை 24.45 லட்சம் பேரும், 15 முதல் 17 வயதுக்குரிய தடுப்பூசியை, 43.48 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவது வழக்கமானது தான். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும்.

    திருப்பூர்:

    வரும் கல்வியாண்டில் 164 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, சமக்ர சிக் ஷா திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள164 அரசு உயர்நிலை பள்ளிகளின் விபரங்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் பிச்சம்பாளையம் புதூர், பாண்டியன் நகர், நெசவாளர் காலனி, முதலிபாளையம், கருவம்பாளையம், காரணம்பேட்டை, பூலுவப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள 7 உயர்நிலைப்பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

    இந்த பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்தாண்டு பிளஸ் -1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட அரசு பள்ளிகளை விட இந்த ஆண்டில் கூடுதலாக, 7 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும். மற்ற பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் அடிப்படையில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
    • பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள சுமார் 1118 பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு தயாராகி வருகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்த கங்களை பள்ளி திறப்ப தற்கு முன்னதாகவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தோவாளை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங் கப்படும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பள்ளிகள் திறப்பது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    பள்ளிகள் திறப்பதற்கு முன்பு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தற்போது கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில் என்னென்ன முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளிகளை திறந்து சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளன்று மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியா முழுவதும் உள்ள சுமார் 7.71 லட்சம் கிராமங்களில் 13 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #India #VillageSchools
    புதுடெல்லி:

    நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன. 

    பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. தொடர்ந்து  கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை , மத்திய பிரதேசம்  ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.



    தென்னிந்தியாவில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை. தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை. 

    தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. 
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது இனி கட்டாயமாக ஜெய் ஹிந்த் கூற வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேசியக்கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பிரசண்ட் என்பதற்கு பதிலாக இனி 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

    அதன்படி இந்த முறையானது சட்னா மாவட்டத்தில் முதன்முதலாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.



    இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை அதிகப்படுத்தலாம். ஜெய் ஹிந்த் என கூறுவது அனைத்து மத மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இது இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உதவும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணாக்கார்கள் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது தங்கள் பெயருக்கு பதிலாக கட்டாயமாக ஜெய் ஹிந்தி கூற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind



    ×