search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது.

    இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்தார். பின்னர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அந்த ஆஸ்பத்திரியின் கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதையடுத்து தமிழக முழுவதும் 708 ஆஸ்பத்திரிகளை கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே கோவை மாவட்டத்திற்கு 72 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த 708 ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில ஆஸ்பத்திரிகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சர் பிப்ரவரி 6-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக் காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 ஆஸ்பத்திரியில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.

    அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

    குட்கா மீதான தடையை கோர்ட்டு நீக்கி உள்ளது ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மாவட்டங்களில் சப்ளை செய்த நெல்லை வியாபாரி
    • கைதான 2 பேர் திடுக்கிடும் தகவல்கள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்ட மாக மாற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திய அவர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவதை தடுக்கும் வகையில் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி னார். இதில் ரெயில் மூலம் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கொரியர் மூலம் போதைப் பொருட்கள் வருவதை அறிந்து அவற்றை யும் கைப்பற்றினார். மேலும் போலீசாரின் நடவ டிக்கையை தீவிரப்படுத்தி யும் அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்ட புகையிலைப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் மகேஷ் ராஜ் மற்றும் போலீசார் ஆரல்வாய் மொழியை அடுத்த முப்பந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வைக்கோல் பாரம் ஏற்றிய மினி லாரி வந்தது.

    அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது லாரியின் டிரைவர் மற்றும் அதில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.இதனால் வைக்கோல் பாரத்தை போலீசார் சோதனை செய்தனர்.

    இதில் வைக்கோல்களுக்கு அடியில் 64 மூடைகள் இருப்பது தெரியவந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது. பழனியில் இருந்து அதனை கொண்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.அவற்றை தனிப் படையினர் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    இதனை தொடர்ந்து மினி லாரி டிரைவரான பழனி ரெட்டியார்பட்டி ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சித்திக் மகன் பீர்முகமது (வயது39) மற்றும் பழனி இறைநாயகன்பட்டி ராஜமாணிக்கம் மகன் மதன கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் வாரத்துக்கு ஒரு முறை வாகனங்களில் பழனியில் இருந்து மூடை முடையாக புகையிலை கொண்டு வருவதும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவற்றை கடைகளுக்கு விநியோ கிப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த வர் பழனியில் மளிகை கடை வைத்துள்ளதாகவும் அவர் தான், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து குட்காவை நேரடியாக கொள்முதல் செய்து, நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி குட்கா வியாபாரியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து உள்ள னர்.

    தற்போது பிடிபட்ட 64 மூடைகளில் சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது என்றும் அதன் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

    • சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம் :

    சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
    • கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் புனேவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளினர் அசுரப்பட்டி விராலிமலை அகர பட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன் ( வயது 25), ஆகிய இருவரும், நாமக்கல்லில் உள்ள லாரி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் ( வயது 23 )ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
    • இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.

    இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரியான குமார் தீபக்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயபாஸ்கர் பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவில் பணம் வாங்கியது தொடர்பாக விரிவான பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிமவள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் குட்கா வியாபாரிகளிடம் இருந்தும் விஜயபாஸ்கர் பணம் வாங்கியுள்ளார். அதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம். இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது.

    இப்படி பல்வேறு வழிகளில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சட்ட விரோத அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே சோதனை நடத்தி உரிய ஆவணங்களை கைப்பற்றினோம்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்ற போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்துரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களை தங்க வைத்தற்கான செலவு தொகையாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தையும் விஜயபாஸ்கர் ரிசார்ட்டுக்கு வழங்கி உள்ளார். இதற்கான ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

    இப்படி பல வழிகளில் அவர் பணம் வாங்கியதும், கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    இதற்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    • பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சேரன் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலாஜி(28) என்பதும், கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சப்ளை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தொழிலாளி கைது செய்யப்பட்டார்
    • குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீ சார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கஞ்சா குட்கா வழக்கு களில் சிக்குபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகி றார்கள். குட்கா கஞ்சா விற்ப னையை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மார்த் தாண்டம் இன்ஸ்பெக் டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது சாக்கு மூட்டை களில் குட்கா புகையிலை இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் சாக்கு மூட்டையில் இருந்து 110 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரித்த போது படந்தாலு மூட்டை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபரி டம் குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கி வரப் பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தனர்.
    • இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தவர்கள் குறித்த தகவல் அறிந்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்கா ராம்ஜி மகன் கீமா ராம் (வயது 28), தாபா ராம் மகன் ராஜேஷ் குமார் (25), ராஜாராம் மகன் ஜலராம் (38) ஆகிய 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சேலம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேச்சு
    • ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந் திர குற்ற தடுப்பு கூட்டம் நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு குற்ற வழக்கறிஞர்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகா ரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண் டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    கஞ்சா, குட்கா புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபரின் வங்கி கணக்குகள், மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டு வழக்குக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். கஞ்சா, குட்கா எங்கிருந்து பெற்றனர் போன்ற விவரங்கள் சேக ரிக்கப்பட வேண்டும்.

    ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபருக்கு சரித்திரபதிவேடு தொடங்கப்பட வேண்டும், ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

    போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.கந்து வட்டிதொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடு பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன் லைன் மற்றும் சைபர் மோசடி களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த போலீஸ் நிலை யங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அலுவல் செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடு களையும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைது செய்யப்படும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தாயரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடை களின் உரிமத்தை ரத்து செய்யவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 234 கடைகளுக்கு ரூ.11.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெட்டி கடைகளில் விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டால், அவர்கள் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கை பாயும். கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

    • போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    • பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    கோவை:

    கோவையில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கடைகளில் குட்கா பதுக்கி விற்பது தெரிந்தால் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சத்தி மெயின் ரோடு ஆம்னி பஸ் நிறுத்தம் அருகே ரத்தினபுரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில், குட்காவை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்கா வியாபாரிகளான கணபதி லட்சுமி நகரை சேர்ந்த சந்திரசேகர்(44), பிரதீப்குமார்(21), அழகுபாண்டி (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 190 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல், பாப்பநாயக் கன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 350 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் குட்கா விற்றதாக வியாபாரிகளான கோவை பாப்ப நாயக்கன்பாளையம் அசோகர் வீதியை சேர்ந்த கவுதம் (21) மற்றும் அண்ணாதுரை (50) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,400-யை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×