search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 172230"

    • கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    வல்லம்:

    சென்னை மதுரவாயில் காமாட்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் என்பவரின் மகன் வசந்த்சூர்யா (வயது 23). இவர் கால்நடை மருத்துவ படிப்பு படித்து உள்ளார். தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்தார்.

    இதற்காக அவர் கால்நடை மருத்துவமனையின் உள்ளே உள்ள அறையில் தங்கினார். மேலும் அவருடன் இரண்டு பயிற்சி டாக்டர்கள் தங்கி இருந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை வசந்த்சூர்யா கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் உள்ள மேல் இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வசந்த்சூர்யா உடலை மீட்டனர். அவரின் செல்போனை கைப்பற்றினர். ஆனால் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    தொடர்ந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், டாக்டர் வசந்த்சூர்யா மது அருந்தி இருந்ததும், விளையாட்டு வீரர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்த்சூர்யா தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் தாக்கி தூக்கில் தொங்க விட்டனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாக்கான செல்போனை செயல்பட வைத்த உடன் பல்வேறு விவரங்கள் கடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முகாமில் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
    • 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.

    உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம், முகாம் சேர்மன் கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவை திட்ட மாவட்ட தலைவர் வின்சென்ட் பிரபாகரன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நடைபெற்ற முகாமில் மருத்துவர்கள் சபீரா, பூஜா குழுவினர்கள் கலந்துகொண்டு சிறியவர் முதல் பெரியவர் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி கண்ணில் குறைபாடு உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.

    இம்முகாமில் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். 25 பேர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ராஜ், சாமிநாதன், சரவணன், செந்தில் நாதன், பக்ருதீன் அலி அகமது, விவேகானந்தன், சுப்பிரமணியன், வெங்கடேசன், கஸ்தூரி கணேசன், ரவிச்சந்திரன், செல்வகுமார், சுரேஷ், முருகவேலு, கணேசன், மோகன் பாபு, முருகானந்தம், அப்துல் ஆசிப், முகமது சித்திக், அதியமான், தமிமுன் அன்சாரி, சதீஸ், சக்திவேல், ஆபிதீன் பள்ளி பொறுப்பு தாளாளர் சித்ரார்த்தன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • நோயாளிகளுக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க வேண்டும்.
    • குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீராக வைத்திருக்க வேண்டும்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதி, மருந்துகள் இருப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பொது பிரிவுகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்.

    குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீராக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று மருத்து வர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை இன்புளுன்சா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை. ரூ.78 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் -கும்பகோணம் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம், பாபநாசம் தலைமை மருத்துவ அலுவலர் குமரவேல், தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுதா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாபட்டிணம் காவல்சரகம் தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 50) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் நேற்று அருகில் உள்ள சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வெங்கடாசலத்தை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சாலக்கடை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் வெங்கடாஜலம் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பொது மக்கள் கரியாபட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாஜலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கரியாபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது.
    • ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தாலுக்கா மருத்துவமனையாகவும், தலைமை மருத்துவ–மனையாகவும் செயல்பட்டு வருகிறது.

    இங்கு இறப்புக்குள்ளாகும் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களை பாதுகாக்க ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி, அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் முருகப்பா வரவேற்றார்.

    இந்த நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணைத் தலைவா் அறிவழகன், மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சுப்பையன், நகரச் செயலாளர் நமசிவாயம் உட்பட கட்சி நிர்வாகிகளும், முன்னாள், இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் கட்சி பிரமுகர்கள் மாரியப்பன், தோப்புத்துறை அமானுல்லா, அம்மா பேரவை ஜின்னாஅலி உட்பட மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது.
    • வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது

    கோத்தகிரி 

    கோத்தகிரியில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று அரசு மருத்துவமனை கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி, பெண்கள் மகப்பேறு பகுதி என பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு ரத்த வங்கி கட்டிடமும், பிணவறை கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டது. நாளுக்குநாள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளின் வருகையும், வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பழைய அவசர சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை போக்கும் விதமாக அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கட்டிட பணியானது மேலும் விரைவாக முடிக்க வேண்டி கடந்த சில வாரங்களாக இரவும், பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணி வேகமாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    • ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
    • டெல்டா பகுதியில் 2-வது முறையாக இந்த விருதை பெறும் ஆஸ்பத்திரி.

    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்தியா சுகாதார வழங்குநர்கள் சங்கம் சார்பில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.

    இந்தியா முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.

    அந்தந்த மருத்தவ மனைகள் ஆற்றிய சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் சிறந்த செவிலியர் சேவைக்கான விருது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஏ.எச்.பி.ஐ சார்பில் இந்த விருது வழங்கப்பட்டன.

    டெல்டா பகுதியில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறும் முதல் மற்றும் ஒரே மருத்துவமனை மீனாட்சி மருத்துவமனை என்பது குறிப்பிடதக்கது.

    இந்த விருதை மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், செவிலியர் பிரிவின் கண்காணிப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் மருத்துவமனையின் சார்பில் பெற்று கொண்டனர்.

    • கொலை வழக்காக மாற்றம்
    • ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே சீதப்பால் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ செபஸ்தியான் (வயது 50).

    இவர் சீதப்பால் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிபண்ணையில் இருந்த தார்ப்பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.இது தொடர்பாக சீதப்பால் மேற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணிய பிள்ளை (50) அவரது மகன் சங்கர் (30) ஆகியோருக்கும் ஆன்றோ செபஸ்டியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 17-ந்தேதி தந்தை-மகன் இருவரும் ஆன்றோ செபஸ்தியானிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் ஆன்றோ செபஸ்தியானை சரமாரியாக தாக்கினார்கள். காயமடைந்த ஆன்றோ செபஸ்தியானை சங்கர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆன்றோ செபஸ்தியன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சங்கர், சிவசுப்பிரமணிய பிள்ளை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.சங்கரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆன்றோ செபஸ்தியான் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான ஆன்றோ செபஸ்தியான் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பரபரப்பு
    • அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22).

    இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயத்தில் மாணவியிடம் திடீரென காதலை அபிஷேக் வெளிப்படுத்தி உள்ளார்.

    ஆனால் மாணவி அதனை ஏற்கவில்லை. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக், அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். இதனை குடித்த சற்று நேரத்தில் மாணவி மயங்கிய தாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி மாணவியை அபிஷேக் பலாத்காரம் செய்து உள்ளார்.

    அந்த காட்சியை அவர் வீடியோவாகவும் எடுத்து உள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலை தளத்தில் பரப்பி விடுவேன் என அபிஷேக், மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதனால் நடந்த விஷ யத்தை மாணவி வெளியே தெரிவிக்க வில்லை. கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அபிஷேக் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்து உள்ளார். எனவே வேறு வழியின்றி மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே படிப்பை முடித்த அபிஷேக், மாணவி புகார் கொடுத்ததை அறிந்த தும் துபாய் நாட்டுக்கு சென்று தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    மேலும் இந்த விவகா ரம் தெரிந்து தான், அபிஷேக்கை, அவருடைய தந்தை வில்சன்குமார் வெளிநாட்டுக்கு அனுப்பி யது போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீதும், அபிஷேக்கின் செய லுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரை பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிஷேக் கூறி னார்.

    இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

    இவர் கடந்த 1-ம் தேதி இரவு திருமருகல் முடிக்கொண்டான் ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
    • உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் கரையங்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது41).

    விவசாயி. இவருக்கு தொடர்ச்சியாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த ஆண்டும் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை எப்படி கட்டுவது?

    என்று விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடைய மனைவி தேவசேனா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தட்டி கேட்டவருக்கு அடி-உதை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வெள்ளை யம்பலம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. சம்பவ தினம் இரவு இங்கு ஐரேனி புரம் எட்வின் ஜேக்கப் (வயது 32) என்பவர் பணி யில் இருந்துள்ளார்.

    அப்போது முஞ்சிறை பகுதி ராஜு மகன் ரீகன், அவரது சகோதரர் ரெஜின், நெடுமானி வயலங்கரை பாபு மகன் மனோஜ் உள்பட 4 பேர் உடல் நிலை பாதித்த ரீகனின் தாயாரை மருந்து வாங்க அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது அங்குள்ள நர்சு களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்ட எட்வின் ஜேக்கப்பை ரீகன், ரெஜின், பாபு உள்ளிட்ட 4 பேரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    இது போன்று ரெஜின் அளித்துள்ள புகாரில் உடல் நிலை பாதித்த எனது தாயாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள பணியாளர் எட்வின் ஜேக்கப் மற்றும் மேலும் 3 பேர் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.

    இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×